Sunday, June 29, 2008

சும்மா (இது தமிழ் இல்லை ஹிந்தி சும்மா)


அண்மையில் நம்ம எந்தன் வானம், வழிப்போக்கன் ஹிந்தி சும்மா பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தாரு... அதப்படிச்சதில இருந்து நம்மலால சும்மா இருக்கவே முடியலைங்க அப்படி ஒரு வில்லத்தனம் மனசுல என்னங்க செய்யுறது?? manufacture defect, சரி அப்படி என்னு அந்த வில்லத்தனத்த செயல்ப்படுத்த ஆரம்பித்தேன்...

அது என்ன என்னா நம்ம friend ஒருத்தன் ஒரு ஹிந்திப்பொண்ண லவ்வுறாங்க... அவ இவன்கிட்ட நான் வேற ஒரு பையன லவ் பண்ணுறேன் என்னு சொல்லியும் இவன் கேக்குற மாதிரி தெரியல்ல... நாங்களும் எவ்வளவோ சொல்லியும் பார்த்திட்டோம் கேக்காம அவ பின்னுக்கே போய்க்கிட்டே இருந்தாங்க... இவனுக்கு சொன்னா சரி வராது அடிவாங்கினாத்தான் திருந்துவான் என்று அப்படியே நாங்களும் விட்டுட்டோம் நாங்களும் எவ்வளவு நாள்தான் கீறல் விழுந்த கஸட் மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கிறது வெறுத்துப்போச்சுதுங்க...



இவனுக்கு ஹிந்தி நஹி மாலும்...(நமக்கும்தான்) அவளுக்கு தமிழ் நஹி மாலும்... இவன் அவ பின்னுக்கே போய்க்கிட்டு இருந்தாங்க... இப்படி இருக்கிற சந்தர்ப்பத்திலதான் நான் வழிப்போக்கனின் ஹிந்தி சும்மா பற்றி வாசிச்சேன்....
வாசிச்ச உடனேயே என்ன செஞ்சேன் என்னா நம்ம friendகிட்ட போய் "மச்சி நான் உன் வாழ்க்கையில விளக்கு ஏற்றி வைக்கலாம் என்று இருக்கேன், நீ நான் சொல்லுற மாதிரி செஞ்சா உன் வாழ்க்கை வெளிச்சமா இருக்கும்டா" என்று சொன்ன நம்ம பயபுள்ள அடுத்து அவன் சொல்லப்போற வார்த்தை அவனுக்கு அவனே வெட்டிக்க போற குழி என்னு தெரிஞ்சுக்காம "மச்சி பிளீஸ்டா நீ மட்டும் அப்படி ஒரு வெளிச்சம் ஏற்றி வைச்சா வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்டா" என்னு சனியனைத்துக்கி பனியனுக்குள்ள போட்டுக்கிட்டான்.... உடனே நான் சொன்னேன் "மச்சி நீ நான் சொல்லுற மாதிரி போய் உன் பிகர்கிட்ட சொல்லு அதுக்கப்பறம் பாரு உன் வாழ்க்கை விளக்கே சும்மா ஜெக ஜோதியா எரியும்" அப்படி என்னேன்....எரியப்போறது அவன்தான் எங்குறது தெரியாம அவனும் "சரி மாமா" என்னான்.... எனக்கா பயங்கர கடுப்பு லவ்க்கு உதவி செய்ய வந்தா மாமா என்னா சொல்லுற இருடீ அப்படி மனசில கருவிக்கிட்டே அவன்கிட்ட சொன்னேன் மச்சி நீ போய் அந்த பொண்ணுகிட்ட "I Need a Chumma" அப்படி என்னு போய் சொல்லு அதுவும் அவளும் அவ friendsம் அவ ஒருத்தன லவ் பண்ணுறேன் என்னு சொல்லுறா இல்ல, அவனுமிருக்கிற நேரம் போய் சொல்லு அதோட அவனும் ஓடிருவான் அவளும் அவன விட்டுட்டு உன்கிட்ட ஓடி வந்திடுவா அப்படின்னேன்.... அதுக்கு அவன் என்கிட்ட அதுக்கு என்ன அர்த்தம் அது இது என்னு ஆயிரம் கேள்வி கேட்டான்.... நமக்கு சமாளிக்கவா தெரியாது.... ஒரு மாதிரி சமாளிச்சு அனுப்பி வைச்சேன்... ஏதோ நம்மளால முடிந்தது. பையனும் அந்த பொண்ணு தனிய இருக்கிற நேரம் போய் கேட்காம மத்த பொண்ணுங்களும் அவ boyfriendம் கூட இருக்கிற நேரம் பார்த்து போய் கேட்டு இருக்கிறான் (இந்த அளவுக்கா அவன் என்னை எல்லாம் நம்பி இருக்கிறான்) அவங்களும் பாரபட்சம் இல்லாம ஆளுக்கு ஒரு 10, 20 அடி என்னு ஒரு 5, 6 பேர் சும்மா சுத்தி சுத்தி அடிச்சு சும்மா பொரிச்சு எடுத்து இருக்காங்க

இப்போ பய என்னைத்தேடிக்கிட்டு இருக்கிறதா கேள்வி.... நானும் அவன் கண்ணுல மாட்டாம ஓடிக்கிட்டு இருக்கிறேன்.... என்னைக்கு மாட்டுறனோ அன்னைக்கு இவனுக்கு சங்குதானுங்கோ..... அவனுக்கு வைச்ச ஆப்பு மாறி எனக்கு வந்திடுமோ???


டிஸ்கி- ஹிந்தி தெரியாதவர்களுக்காகவும் வழிப்போக்கனின் பதிவு வாசிக்காதவர்களுக்காகவும் ஹிந்தியில் "Chumma" என்றால் முத்தம் என்று அர்த்தம்.... மேலே நான் எழுதின எதுவுமே இன்னமும் நடக்கவில்லை இனி நடக்கப்போகிறது.... எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் நாங்க பதிவு எழுதி பண்ணுவோம் இல்ல

Friday, June 27, 2008

சமையல் குறிப்பு

வணக்கம் மக்களே....!! ஏதாவது ஒரு புதுப்பதிவு போடலாம் என்னா என்னத்த பத்தி எழுதுறது என்னு யோசிக்கவே தாவு தீருது(அப்படி என்னா என்ன அர்த்தம் எங்குறது இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல்ல யாருப்பா அந்த புண்ணியவான் இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியது) "வெட்டிப்பயல்" மாதிரி எழுதலாமா, இல்ல "ஜீ" மாதிரி ஏதாவது எழுதலாமா, இல்ல "கிரி" மாதிரி கலாச்சாரத்தைப்பற்றி எழுதலாமா இல்லாட்டி பதிவு போடுறது எப்படி என்னு பதிவு போடலாமா?? ஒன்னுமே தோனுதில்ல மக்களே நீங்கள் எல்லாம் எப்படித்தான் இப்படிப்பதிவு போடுறீங்களோ தெரியல்ல....
கடைசீல ஒரு முடிவுக்கு வந்து துளசி டீச்சர் மாதிரி ஒரு சமையல் குறிப்பு போடலாம் எங்குறதுதான் அந்த பயமுறுத்துற முடிவு..... என்ன டீச்சர் உங்களுக்கு போட்டியா வந்துட்டென் என்னு பயப்படுறீங்களா? இதுமட்டும்தான் சமையல் குறிப்பு திரும்ப இன்னொரு சமையல் குறிப்பு போட எனக்கு வேற ஒன்னுமே சமைக்கத்தெரியாது என்றதுதான் அதுக்கான காரணம்.... சரி மக்களே இனி சமையல் குறிப்புக்கு போவோமா? தயாராகுங்கள் புது சமையலுக்கு

டிஸ்கி - என்ன சமையல் என்கிறது கடைசீலதான் சொல்லுவேன் சரியா......
நான் சமையலுக்கு புதியவன் இன்னும் பழகிக்கொண்டு இருப்பவன்
என்பதால் அளவுகள் சரியா தெரியாது... அதனால் உங்களுக்கு பிடித்த
அளவுகளில் போட்டுக்கொள்ளுங்கள்....

முக்கிய குறிப்பு - உங்கள் நாக்குக்கோ இன்ன பிற பின் விளைவுகளுக்கோ நான் பொறுப்பல்ல

முதலில் தேவையான பொருட்கள் -
ஒரு அடுப்பு
வெங்காயம்
கோதுமை மா
பால்
தேங்காய்ப்பூ துருவல்
கிழங்கு
இஞ்சி
கடுகு
மிளகாய்த்தூள்
வெந்தயம்
சொம்பு
அப்பறம் ஒரு லீட்டர் தண்ணீர்


செய்முறை - முதலில் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி
கொள்ளவும், அப்படியே தேங்கய்ப்பூத்துருவல், இஞ்சி
இரண்டையும் தயாராக ஒரு சிறு Dishல் போட்டு வைத்திருக்கவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதனுள் தண்ணீரை
ஊற்றவும், அதனை நன்றாக சூடாக விடவும், அது கொதிக்கும்
வேளையில் மாவை எடுத்து ரொட்டி தயாரிப்பது போல் தயார்
படுத்திக்கொள்ளவும். என்ன செய்தாகி விட்டதா? சரி இனி அடுப்பில்
சரி இனி அடுப்பில் நீர் நன்றாக கொதித்து விட்டதா எனப்பார்க்கவும்.
அதற்காக தண்ணீரில் கையை வைத்து கையை சுட்டுக்கொண்டால்
அதற்கும் நான் பொறுப்பல்ல.....
கொதித்து இருப்பின் அதை இறக்கி வைத்தீர்கள் என்றால் சூடான
வெந்நீர் ரெடி.....

இதுதாங்க என் சமையல் குறிப்பு அப்போ எதுக்குடா இந்த வெங்காயம், கோதுமை மா மற்ற லொட்டு லொடுக்கு என்னு கேக்குறீங்களா?? அது வேற ஒன்னும் இல்லைங்க அடுத்த சமையலுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளத்தான்......
யம்மே...... யாரோ அடிக்க வராங்களே Me the escapeuuuuuu.........

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... ஸ்ஸ்ஸ்ப்பா கடைசீல ஒரு மொக்கைப்பதிவு போட்டாச்சு
any comments??

Wednesday, June 25, 2008

விஜயின் நல்லகாரியம்-Hats off Surya, Jothikka, Vijay and Maathavan

என்ன மக்களே கொஞ்ச நாளைக்கு முதல் விஜயைப்போட்டு தாக்குதாக்கு என்று தாக்கிய நான் இன்னைக்கு என்ன இந்த மாதிரி விஜயை புகழ்ந்து சொல்லி இருக்கிறேன் என்னு பார்க்கிறீங்களா?? வேற ஒன்னும் இல்லிங்க இன்னைக்கு MSN chatல இருந்த போது நியூசிலாந்தில இருந்து என் friend ஒருத்தி கூட பேசிக்கிட்டு இருந்தேன்.... அவ பெரிய்யயய விஜய் fan. முதல்ல விஜய தாக்கி எழுதினதுக்கே என்ன கோபத்தில இருக்கிறளோ தெரியல்ல... அவ இன்னைக்கு நான் பல நாட்களாக நிச்சயமாக பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த video clipஅ பார்த்துக்கொண்டிருப்பதாக கூறி சொல்ல லிங்க் வாங்கி நானும் பார்த்தேன்..... நான் விஜய்க்கு எதிரி அல்ல அவர் மசாலாத்தனமான மக்களை முட்டள் ஆக்குகிற தவறான ரீமேக் திரைப்படங்களுக்கே எதிரி... அதே நேரத்தில் அவர் செய்த ஒரு நல்ல காரியத்தை முதலில் பாராட்டுபவன் நானாகத்தான் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப்பதிவு அதை உங்களுக்காக இங்கே.... கற்றுக்கொள்வதும் கற்றுக்கொடுப்பதும் அன்றி வேறென்ன வாழ்க்கை



இந்த பதிவு அறிவுக்கண்ணைத்திறப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த குறும் படத்தை எடுத்தை பாரட்டுவதற்காக மட்டுமே எழுதுகிறேன்.... முதலில் சூரியா, ஜோதிகா, விஜய், மாதவன் ஆகியோருக்கு என் பாரட்டு இவ்வளவு busyயிலும் இந்த குறும் படத்தில் நடித்ததற்கு விஜய், மாதவன் மற்றும் சூரியாவிற்கும் (குருவி படத்தில நடிக்கிறத்துக்கு இதில நடிக்கலாம் என்று நீங்க சொல்லுறது எனக்கு புரியுது சரி விடுங்க விடுங்க) கல்யாணம் முடிந்த பின் இதுவரை காலமும் எந்த படத்திலும் நடிக்காத ஜோதிகா (சூரியா குடும்பத்தினர் விடவில்லை என்பதுதான் உண்மைக்காரணம் என்று கேள்வி இருந்தாலும் இதில் நடிப்பதற்காக அனுமதித்த அவர்களுக்கும்) ஜோதிகாவுக்கும் என் பாரட்டு... அதுமட்டும் இல்லாமல் இதை இயக்கிய மணிரத்னம் பிரியா(கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா இயக்குனர்) , ஒளிப்பதிவு செய்த ரஜீவ்மேனன் மற்றும் இதனை உருவாக்க பிண்ணனியில் இருந்த அனைவருக்கும் என் பாரட்டுக்கள்... இதில் இவர்கள் அனைவரும் பணம் எதுவும் பெறாமல் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்கண்ணைப்பறிக்கும் நயவஞ்சகரே எதிர்கால சமூகத்தை அழிக்கும் மானுடரே இது உங்களுக்கு முதல் சவுக்கடியாக இருக்கட்டும்.....

கண்ணைத்திறக்க விடுங்கள் எங்கள் எதிர்கால சமுதாயத்தை

Monday, June 23, 2008

நம்ம கமல் எவ்வளவோ பரவாயில்லை

இன்னைக்கு youtub.com பக்கம் போனபோது முதல்ல ஒரு கொடுமையை அனுபவிச்சேன்.... இன்னைக்கு நாம அவ்வளவுதான் என்ற் நினைத்து இருந்த நேரம் இது கொஞ்சம் சிரிக்க வைக்க ஆறுதலா இருந்திச்சிது... வலையுலக மக்களே நீங்கள் தசாவதாரம் படத்தில கமல் புஷ்ஷைப்போட்டு கலாய்த்ததைப்பார்த்தீர்கள்.... அதனால் புஷ்க்கு தசாவதாரத்தை போட்டு காண்பிப்பது எல்லாம் வதந்தி என்ற் வேற யாரோ எழுதி இருந்ததாக ஞாபகம்.... முதலில் இந்த video clipஅ பாருங்க





இப்படி ஒரு கலாய்ப்பையே புஷ் தாங்கிக்கொள்ளும் போது நம் கமலின் கலாய்ப்பையா தாங்கிக்கொள்ள மாட்டாரு?? இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் சில நேரங்களில் புஷ் "தசாவதாரம்" படம் பார்க்ககூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.....
இந்த புஷ் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் போல இருக்குதே

என்ன கொடுமை இது மக்களே??

மக்களே இன்னைக்கு காலையிலேயே எனக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சுருச்சு போல.... அன்னைக்கு என்ன என்னா எனக்கு கெட்டகாலம் என் phoneல june போனா july காற்றே என்னு பாடிக்கிட்டே வந்திச்சுது இன்னைக்கு இப்படி.... இன்னைக்கு நான் தெரியாத்தனமா youtube.com பக்கம் போனா அங்க கொடுமைங்க அப்படி ஒரு கொடுமை என்னைக்கேட்டா விஜய் கொடி அறிமுகப்படுத்தியதையும் பார்க்க கொடும்மையா இருந்திச்சுது... நான் மட்டும் அந்த கொடுமையை அனுபவிச்சா போதாது நம்ம வலையுலக மக்களும் அனுபவிக்கனும் எங்கிற ஒரே நல்லெண்ணத்தில் இதை இங்கே பதிவேற்றுகிறேன்.....




மக்களே இவனுங்கள வைச்செல்லாம் படம் எடுக்க சொல்லியும் Remix பண்ண சொல்லியும் யார் அழுதது?? இது என் கெட்ட காலமா இல்லை என்றால் வேற ஏதாவது சதி முயற்சியா நீங்கலே சொல்லுங்கள்.....

Friday, June 20, 2008

விஜய்யும் புதுக்கட்சியும்

இருக்குற கொடுமை போதாது என்னு புதுக்கொடுமை, என்ன கொடுமை என்னு பார்க்கிறீங்களா??? நான் இன்னைக்கு என் நண்பர் ஒருத்தர் கொடுமை ஒண்ணு அரங்கேறி இருக்குது சும்மா ஒருதடவை தமிழ்சினிமா.comக்கு போ என்னு சொல்ல உடனே தமிழ்சினிமா.comக்கு போனா அங்க அந்த கொடுமையான செய்தியை வாசிச்சு மண்டையில இடியை வாங்கி மயங்கி விழுந்துட்டேன்.... அதாவது அந்த செய்தி என்ன சொல்லுதின்னா நம்ம விஜய் இருக்காரில்ல அதுதாங்க நம்ம இளையதளபதி டாக்டரு விஜய் அட நம்ம தோனி கூட யார்ரா நீ என்னு IPLல கேட்டாரே அவரேதாங்க.... அவர் என்ன பண்றாருன்னா புதுசா freshஆ தன் மன்றத்துக்கு கொடி அறிமுகப்படுத்தப்போறாராம்... ஏன்யா விஜய் இப்பத்தானே 2 படம் சூப்பர் ப்ளொப் கொடுத்தீங்க அதுக்குள்ள கட்சி ஆரம்பிச்சு தொடர்ந்து வர்ற எல்லாப்படத்தையுமே விஜயகாந் மாதிரி ப்ளொப் ஆக்கனுமா?? முதல்ல ஒழுங்கா ஒரு படத்தில நடிங்க அய்யா..... வெறும் Dance ஆடிட்டு Fight பண்ணிட்டு போற மாதிரி உங்க கட்சியையும் அப்படியே ஒப்பேற்றி விடலாம் என்று பார்க்கிறீர்களா??



மக்களே எல்லாமே உங்க கையில்தான் இருக்கு இப்படியே விஜய விட்டீங்க என்னா அவ்வளவுதான். ஏதோ நான் சொல்லுறத சொல்லீட்டேன் நீங்களே பாத்துக்குங்க.... நீங்களும் படிச்சு தெரிஞ்சுக்கனும் எங்குறத்துக்காக அந்த செய்தியை அப்படியே Copy-Paste செய்கிறேன்




"'வரவேண்டிய நேரத்தில் வருவேன்' என்று சொல்லியே வருடங்களை கடத்தி வரும் ரஜினிக்காக காத்திருக்காமல், விஜயகாந்த் கட்சியிலும், சரத்குமார் கட்சியிலும் தன்னை இணைத்து வருகிறார்கள் ரஜினி மன்றத்தை சேர்ந்த சில குட்டி தலைவர்கள். இந்த நேரத்தில், தனது மன்றத்துக்கும் ஒரு கொடியை உருவாக்கி, அதை அறிமுகம் செய்கிற விழாவையும் சென்னையில் நடத்த தீர்மானித்திருக்கிறார் விஜய்.

இவரது பிறந்த நாள் விழாவும் கொடி அறிமுக விழாவும் ஒரே தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் என்ற வாசங்களோடு உருவாக்கப்பட்டிருக்கும் அந்த கொடியில் விஜயின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. நீலம் வெள்ளை கலரில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த கொடி.

விஜய்க்கு தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மன்றங்கள் இருக்கிறதாம். ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தது 25 பேர் இருக்கிறார்கள். இவர்கள் பற்றிய விபரங்களை கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கிறது தலைமை மன்றம். இப்படியெல்லாம் முறையாக செயல்படும் இவர்களின் எதிர்கால நோக்கம் என்னவாக இருக்கும்?

கேள்விக்கு விளக்கம் சொல்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. இன்று சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இளைஞர்கள் நாளை ஒரு அமைப்பாக உருவாகி, அரசியலுக்கு வந்து சமூக அந்தஸ்தை பெற நினைத்தால் அதுவும் இயற்கையான வளர்ச்சியாக இருக்கும்! இந்த பதிலில் மேலோட்டமாக கூட அல்ல, தெளிவாகவே புரிகிறது உண்மை! இனியென்ன... வட்டம், மாவட்டம் என்ற நினைப்போடு நடைபோட வேண்டியதுதானே விஜய் ரசிகர்களே...! "


இப்பத்தான் குமரன் குடில இளையதளபதி ஜோக்குகள் கலாய்ச்சாரு அதையும் பார்க்க சூப்பர் ஜோக் இல்ல இது?? இதுக்கெல்லாம் காரணம் விஜய் அப்பாதன்யாம் "எவ்வளவோ பேர தூக்குல போடுறீங்க இந்தாள போடுங்கைய்யா தூக்குல"
எப்படிங்கண்ணா உங்க அழுகிய sorry அழகிய தமிழ்மகன் பஞ்ச் மாதிரியே இருக்குடுங்களாண்ணா?? பின்னுட்டம் இடும் மக்கள்ஸ் இனி உங்கள் கையில்......

தமிழ்சினிமா.comல் காண இங்கே கிளிக்குங்கள்

புகைப்படத்துக்கு நன்றி சினிமா நிருபரே.....

Thursday, June 19, 2008

சமர்ப்பணம

இறந்து போன என் அக்கா "சூட்டி" என்றழைக்கப்படும் தேவி உதயதாரணி நினைவாக என் அப்பா எழுதியது இது.... எனது மனது கனத்திருந்தவேளை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இதனைப்பதிவேற்றுகிறேன்....

சமர்ப்பணம்

உதயத்து வெள்ளியாக
உதித்த எம் குல விளக்கே!
இதயத்தை வென்ற தேவீ
உதய தாரணியே தாயே
உன்னை......
அழகு மகுடமாக "சூட்டியே"
மகிழ்த்திருந்தோம்
மழலையாய், மகளாய் செல்வக்
குழந்தயாய்க் குதுகலிப்பாய்
இனியொரு நாள் வாராதா.......
இனித்திடும் மழலை கேட்க......
அனைத்தையும் இழந்தோம்...... அம்மா
அர்ப்பணம் செய்தோம்! - இந்த
மலரதனை உனது செல்வ
மலர்ப் பதம் வைத்தோம்! தேவீ
மார்க்கண்டேய மகளே! போற்றி

Tuesday, June 17, 2008

நாங்களும் பார்த்துட்டமில்ல தசாவதரம்

கடந்த வெள்ளி மெல்போர்னில் Greater Unionல் தசாவதாரம் படமாம் சரி பார்க்கலாம் என்று ஒரு 7 பேர் சேர்ந்து புதன்கிழமையே முன் பதிவு செய்து வெள்ளிக்கிழமை போனோம்.... படம் பார்க்க ஒரு மக்கள் வெள்ளமே வந்திருந்தது. எதுக்கு வர்ராங்களோ இல்லையோ இதுக்கு மட்டும் எக்கச்சக்க கூட்டம். முடியல்லப்பா சாமி ஒரு பக்கம் மல்லூஸ் ஒரு பக்கம் தெலுகு இன்னொரு பக்கம் ஹிந்திக்காரங்க வேற தமிழ்படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பா ஒரு உலக ஒருமைப்பாட்டையே அங்க பார்த்தேன் இது போதாது என்னு ஒரு வெள்ளைக்கரன் வேற ஏதோ அவன்கிட்டத்தான் camara இருக்குது என்னு மேல இருந்து கிளிக்கிகிட்டே இருந்தாம்பா.... நாளைக்கு நம்ம படம் பேப்பர்ல வந்து நம்மல தேடி மெல்போர்ன் பிகருங்க வந்து நிக்கக்கூடாது என்ற பயத்திலேயே முகத்தை மறைச்சுக்கிட்டு நின்னோம்.... நின்னது கூட தமிழ் கலாச்சாரப்படி முண்டி அடிச்சுக்கிறே நின்னோமில்ல..... மெல்போர்ன் வந்தாலும் தமிழன் தமிழந்தான் இந்த விஷயத்தில நம்ம தமிழனை அடிச்சுக்க ஆளே இல்லையே..... உள்ள போய் உக்கர்ந்தா அங்க ஒருத்தன் சீட் பிடிக்குறத்துக்காக சீட்டை கழற்றிக்கிட்டே போய்ட்டான்.... இதில கூட தமிழன் எங்குறத நிரூபிக்க வேணுமா? அந்த கொடுமை போதது என்னு இன்னொரு OLD பிகரு [வயசான ஒரு பா(ர்)ட்டி] எங்களுக்கு முன் rawவில் இருந்து விசில் எல்லாம் அடிப்பீங்களா அப்படி அடிக்கிறதா இருந்தா இப்பவே சொல்லுங்க முன்னுக்கு போயிடுறேன் என்னு சொல்ல OLD பிகருக்கு ஒரு பேத்தி இருக்காதா என்ற ஒரு நப்பாசையில அடக்கி வாசிச்சோம்.....சரி மொக்கை போதும் படத்துக்கு வா என்னு நீங்க சொல்லுறது எனக்கு புரியுது. சரி படத்துக்கு வர்றேன்.

படம் போட ஆரம்பிச்சா தொடக்கத்திலேயே பயங்கர கூச்சல் ஒன்னுமே கேக்கல போக போக கூச்சல் அடங்கி கொஞ்சம் கொஞ்சமா படம் எங்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது....ஆரம்பத்திலேயே வானத்தில் இருந்து ஒரு ஆங்கிள்ல கமரா இறங்கி கொஞ்சம் ஊரைச்சுத்தி காட்டி அப்படியே ஒரு உள்விளையாட்டரங்கத்தில இறங்கிச்சுது அங்க கமலின் கம்பீர குரலோடு ஆரம்பிக்கிறது தசாவதாரம்....! ஏற்கனவே பலபேர் தசாவதாரத்தை அக்குவேறா ஆணிவேறா எழுதி முடிச்சுட்டாங்க இருந்தாலும் நம்ம பங்குக்கு கொஞ்சம்..... அமெரிக்காவில் கோவிந்த் குழுவினரால் தயாரிக்கப்படும் ஒரு அந்திராக்ஸ் போன்ற BIO Weapon அக்குழுத்தலைவரினால் தவறனவர்களின் கைகளுக்கு போவதை தடுப்பதற்காக கோவிந் அந்த BIO Weaponனுடன் ஓட ஆரம்பிக்க வில்லன் கமல் துரத்த அது தமிழ்நாட்டில் போய் சுனாமியுடன் முடிவதே கதை இடையில் ஊறுகாயாய் கொஞ்சம் அசின் கொஞ்சம் ஜெயபிரதா கொஞ்சம் மல்லிகா செராவத் அப்படியே மற்ற 8 கமல்...! மற்றப்படி அப்படியே கொஞ்சம் மணல் கொள்ளையும் தொட்டுவிட்டு போயிருக்கிறார் கமல். கமல் உங்களுக்கு இந்த கதாசிரியர் வேடமும் நன்றாகத்தான் இருக்க்கிறது... ஆரம்பம் முதலே அசத்தல் என்றே சொல்லலாம் தசாவதாரம் என்று பெயர் வைத்ததுக்கு அசத்தல் என்றே வைத்திருக்கலாம். எங்கு பார்த்தாலும் கமல் எப்பவுமே கமல்.... அதில் மனதில் பதிந்தது என்னவோ பூவராகவனும் அந்த தெலுகு கமலும் மட்டுமே.... எனக்கு என்னவோ ஆரம்பத்தில் அந்த நதியில் படகு மூலம் நம்பியைக்கொண்டு சென்றது, சுனாமி மற்றும் High Wayல் வெள்ளைக்கார கமல் விஞ்ஞானி கமலை துரத்துவது போன்றவற்றில் வரும் கிரபிக்ஸ் மனதில் ஒட்டவே இல்லை அதிகமாக Hollywood படம் பார்த்ததின் விளைவுதான் இது....! இடையில் கோவிந்தை வெள்ளைக்கார வில்லன் பைக்கில் துரத்துவது என்னவோ ஆளவந்தானை ஞாபகப்படுத்தியது.... ஆனாலும் எமது மொழியில் வரும் மற்ற படங்களின் தரத்திற்கு இது எவ்வளவோ மேல் ( உதாரணம் - குருவி, அழகிய தமிழ்மகன்).....(குருவி, அழகிய தமிழ்மகன் ஏற்படுத்திய கொலைவெறி இன்னமும் அடங்கவில்லை)

அதிகமாக Technical அம்சங்களையும் கமலையும் மட்டுமே சார்ந்தே முழுப்படமும் உண்மையைச்சொல்வதென்றால் அசின் பேசிப்பேசி எங்களை எரிச்சல்படுத்தும்போது எமக்குள் எழும் கோபமே காட்டிக்கொடுக்கிறது நாம் படத்தோடு எவ்வளவு ஒன்றிப்போய் இருக்கிறோம் என்பது இதுவே கதையின் வெற்றி..... இந்த படத்துக்காக வழக்கு போட்டதென்னமோ ஓவராத்தான் தெரியுது என்னங்கண்ணா நான் சொல்லுறது....??? மொத்தத்தில் கமலுக்கு தசாவதாரத்தில் 10 வேடம் மட்டுமல்ல கதை, திரைக்கதை வசனம் எல்லாவற்றையும் சேர்த்து 13 வேடம் செய்துள்ளார் ஆனாலும் 13 அவதாரம் என்று சொல்ல முடியாது அல்லவா அதனால்தான் தசாவதாரம்.....

டிஸ்கி : ஒரு பதிவு எழுதவே மனுசனுக்கு வெறுத்துப்போகுது நீங்க எல்லாம் எப்படிங்கண்ணா இவ்வளவு பதிவு எழுதுறீங்க? இதுதான் நான் முதல் முதலில் எழுதின மிகப்பெரிய பதிவு தவறு ஏதாவது இருந்தா மன்னிப்பீர்களாக.....!!

இதயத்தில் ஓட்டையாம்

இனிப்பு

வலையுலகிற்கு புது வருகை

அனைவரையும் போல் நானும் பதிவெழுத நினைத்து பலதடவை கைவிட்டுவிட்டேன்... அதற்கு ஒழுங்கான வலைப்பதிவு Design கிடைக்காமை உபகாரணமானலும் வெட்டிப்பயல் பாலாஜி, வசந்தன் அண்ணா போல் வரவேற்பு கிடைக்குமா என்பதே முக்கிய காரணமாக அமைந்தது..... எனக்கு அவர்களைப்போல் எழுத வராது என்பது வேறு விடயம் :p... சரி எழுதித்தான் பார்ப்போமே என்று ஒரு பேனா சில பேப்பர்த்துண்டு சகிதம் எழுத இருந்துவிட்டேன்..... எப்போது பதிவேற்றுகிறேனோ அது அந்த சிவலிங்கத்துக்கே தெரியுமோ தெரியாது....(சிவலிங்கம் என்று என் அப்பாவைச்சொன்னேன்). எது எப்படியோ இதுவரை பேசிப்பேசியே நண்பர்களைத்துன்புருத்தி துன்புறுத்தி வந்த இவன் இனி கொஞ்சம் வலையுலக நண்பர்களையும் இம்சிக்கலாமென்று வந்திருக்கிறான் இந்த 548764ம் இம்சையரசன்........ இனி உங்களுக்கும் கெட்டகாலம்தான்......