Tuesday, June 17, 2008

வலையுலகிற்கு புது வருகை

அனைவரையும் போல் நானும் பதிவெழுத நினைத்து பலதடவை கைவிட்டுவிட்டேன்... அதற்கு ஒழுங்கான வலைப்பதிவு Design கிடைக்காமை உபகாரணமானலும் வெட்டிப்பயல் பாலாஜி, வசந்தன் அண்ணா போல் வரவேற்பு கிடைக்குமா என்பதே முக்கிய காரணமாக அமைந்தது..... எனக்கு அவர்களைப்போல் எழுத வராது என்பது வேறு விடயம் :p... சரி எழுதித்தான் பார்ப்போமே என்று ஒரு பேனா சில பேப்பர்த்துண்டு சகிதம் எழுத இருந்துவிட்டேன்..... எப்போது பதிவேற்றுகிறேனோ அது அந்த சிவலிங்கத்துக்கே தெரியுமோ தெரியாது....(சிவலிங்கம் என்று என் அப்பாவைச்சொன்னேன்). எது எப்படியோ இதுவரை பேசிப்பேசியே நண்பர்களைத்துன்புருத்தி துன்புறுத்தி வந்த இவன் இனி கொஞ்சம் வலையுலக நண்பர்களையும் இம்சிக்கலாமென்று வந்திருக்கிறான் இந்த 548764ம் இம்சையரசன்........ இனி உங்களுக்கும் கெட்டகாலம்தான்......

22 பதிலகள்:

கிரி said...

வலையுலகிற்கு வரவேற்கிறேன்.

//மனதோடு பேசுகிறேன் //

அப்படியே மறக்காம எங்களோடும் பேசுங்கள்..:-))))

//வலையுலக நண்பர்களையும் இம்சிக்கலாமென்று வந்திருக்கிறான் இந்த 548764ம் இம்சையரசன்........ //

வலையுலகில் உங்கள் இம்சையை விட பெரிய இம்சைகளாக நிறைய பேர் இருக்கிறார்கள் எனவே, தைரியமாக களத்தில் இறங்குங்கள்.

இவன் said...

நன்றி கிரி,
//அப்படியே மறக்காம எங்களோடும் பேசுங்கள்..:-))))//

உங்களோடு பேசாமலா?? பேசிட்டா போச்சுது.... ஆனா என்ன பேச?? எப்படிப்பேச?? வாயாலதான் என்னெல்லாம் மொக்கை ஜோக் அடிக்ககூடாது ஆமா.....

//வலையுலகில் உங்கள் இம்சையை விட பெரிய இம்சைகளாக நிறைய பேர் இருக்கிறார்கள் எனவே, தைரியமாக களத்தில் இறங்குங்கள்.//

இறங்கீட்டா போச்சுது....

துளசி கோபால் said...

இவனே வாங்க இப்படி.

ஆமாம்....548764 ?

கைதி எண்?

ச்சும்மா.......:-)))))

வலைக்கு வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.

இவன் said...

//இவனே வாங்க இப்படி.

ஆமாம்....548764 ?

கைதி எண்?

ச்சும்மா.......:-)))))

வலைக்கு வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.//

548764 என்பது இம்சை "எண்" அய்யா... வாழ்த்துக்கு நன்றி துளசி கோபால்

FunScribbler said...

நிறைய புது வலைப்பதிவர்கள் வருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள். வந்த கலக்குங்க!

இவன் said...

//நிறைய புது வலைப்பதிவர்கள் வருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள். வந்த கலக்குங்க!//

நன்றி தமிழ்மாங்கனி
கலக்கீட்டாப்போச்சுது....

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வாங்க,சும்மா அடிச்சு ஆடுங்க..
எல்லோரும் முதலில் தயக்கத்துடனேயேதான் வருவார்கள்;பிறகு தூள் கிளப்புவார்கள்.

//நண்பர்களைத்துன்புருத்தி //

துன்புறுத்தி

தவறாக நினைக்காமல் திருத்தி விடுங்கள்.

இவன் said...

//வாங்க,சும்மா அடிச்சு ஆடுங்க..
எல்லோரும் முதலில் தயக்கத்துடனேயேதான் வருவார்கள்;பிறகு தூள் கிளப்புவார்கள்.//
நன்றி அறிவன்
////நண்பர்களைத்துன்புருத்தி //

துன்புறுத்தி

தவறாக நினைக்காமல் திருத்தி விடுங்கள்.//

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அறிவன்....
இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது?? நிச்சயமாக திருத்துகிறேன்....

துளசி கோபால் said...

புது ஆளைப் பயமுறுத்த வேணாமுன்னுக் கொஞ்சம் இருந்துட்டேன்.

அறிவனுக்கு அfடுத்ததாக...

பதிவோட தலைப்பு:

வலையுலக்கிற்கு= வலையுலகிற்கு:-)

இவன் said...

//புது ஆளைப் பயமுறுத்த வேணாமுன்னுக் கொஞ்சம் இருந்துட்டேன்.

அறிவனுக்கு அfடுத்ததாக...

பதிவோட தலைப்பு:

வலையுலக்கிற்கு= வலையுலகிற்கு:-)// ஆஹா தலைப்பே பிழையா??
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி துளசி கோபால்.....

அறிவன், துளசி கோபால் நீங்கள் இருவரும் ஆசிரியரகளோ??

துளசி கோபால் said...

இவனே,

நாந்தான் இங்கே டீச்சர்.

இவன் said...

//இவனே,

நாந்தான் இங்கே டீச்சர்.//
ஆஹா தெரியாம பிழை விட்டுடேன் டீச்சர் அடுத்தமுறை பிழைவிடாமல் எழுதப்பார்க்கிறேன்....
இந்த முறை மன்னிப்பிர்களாக

மங்களூர் சிவா said...

வருக! வருக!!
இனிய பதிவு பல
தருக! தருக!!

ஏற்கனவே டீச்சர் உங்களை ஓட்டீட்டதால நான் இப்ப சும்மா விட்டுட்டு போறேன்!!

ஆனா திரும்ப
வருவேன் :))))))))))))))

இவன் said...

//வருக! வருக!!
இனிய பதிவு பல
தருக! தருக!!

ஏற்கனவே டீச்சர் உங்களை ஓட்டீட்டதால நான் இப்ப சும்மா விட்டுட்டு போறேன்!!

ஆனா திரும்ப
வருவேன் :))))))))))))))//

ஆஹா சிவா ஒரு முடிவிலதான் இருக்கிறீங்க எல்லோரும்..... மொத்ததில இவனுக்கு சங்கு ஊதிட்டுதான் விடுவீங்க போல இருக்கே

இறக்குவானை நிர்ஷன் said...

கலக்குங்க!
திறந்த வெளியில் திசையெங்கும் மணம் பரப்புங்கள்.
சாதிக்க ஏராளமானவை இருக்கின்றன.
உங்கள் வருகை சாதனைகளை எட்டட்டும்.

தமிழ் வலைப்பதிவர்கள் நாம் தமிழோடு பயணிப்போம்.

இவன் said...

//கலக்குங்க!
திறந்த வெளியில் திசையெங்கும் மணம் பரப்புங்கள்.
சாதிக்க ஏராளமானவை இருக்கின்றன.
உங்கள் வருகை சாதனைகளை எட்டட்டும்.

தமிழ் வலைப்பதிவர்கள் நாம் தமிழோடு பயணிப்போம்.//

நன்றி நிர்ஷன்!! இந்த தசாவதாரம் பதிவு எழுதவே இங்க செத்துப்பிழைக்கிறேன் இதில சாதனை வேறையா?? ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு இருந்தாலும் try பண்ணித்தான் பார்ப்பமே....

King... said...

வரவேற்கிறோம்...

வாழ்த்துக்கள்...

இவன் said...

//வரவேற்கிறோம்...

வாழ்த்துக்கள்...//


நன்றி கிங்

குள்ளமணி said...

வாங்க இவன் ஆரம்பியுங்கள் உங்கள் வலைப்பதிவு

இவன் said...

//வாங்க இவன் ஆரம்பியுங்கள் உங்கள் வலைப்பதிவு//

குள்ளமணி அண்ணா ரொம்ப நன்றிங்கண்ணா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//அறிவன், துளசி கோபால் நீங்கள் இருவரும் ஆசிரியரகளோ??
//

//இவனே,

நாந்தான் இங்கே டீச்சர்.
//

துளசியம்மா,நமக்குள்ள மியூஸிகல் சேர்-அதாங்க நாற்காலி சண்டை- வச்சுடுவாங்க போலிருக்கே..
:(

இவன் said...

//அறிவன், துளசி கோபால் நீங்கள் இருவரும் ஆசிரியரகளோ??
//

//இவனே,

நாந்தான் இங்கே டீச்சர்.
//

துளசியம்மா,நமக்குள்ள மியூஸிகல் சேர்-அதாங்க நாற்காலி சண்டை- வச்சுடுவாங்க போலிருக்கே..
:(


வாங்க அறிவன் என்ன வரவேற்றதோட சரியா அதற்கு பிறகு உங்களை இந்த பக்கமே காணோமே???