Thursday, June 19, 2008

சமர்ப்பணம

இறந்து போன என் அக்கா "சூட்டி" என்றழைக்கப்படும் தேவி உதயதாரணி நினைவாக என் அப்பா எழுதியது இது.... எனது மனது கனத்திருந்தவேளை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இதனைப்பதிவேற்றுகிறேன்....

சமர்ப்பணம்

உதயத்து வெள்ளியாக
உதித்த எம் குல விளக்கே!
இதயத்தை வென்ற தேவீ
உதய தாரணியே தாயே
உன்னை......
அழகு மகுடமாக "சூட்டியே"
மகிழ்த்திருந்தோம்
மழலையாய், மகளாய் செல்வக்
குழந்தயாய்க் குதுகலிப்பாய்
இனியொரு நாள் வாராதா.......
இனித்திடும் மழலை கேட்க......
அனைத்தையும் இழந்தோம்...... அம்மா
அர்ப்பணம் செய்தோம்! - இந்த
மலரதனை உனது செல்வ
மலர்ப் பதம் வைத்தோம்! தேவீ
மார்க்கண்டேய மகளே! போற்றி

4 பதிலகள்:

துளசி கோபால் said...

என்ன இவனே,

புது ஆளைக் கொஞ்சம் கலாய்க்கலாமுன்னு பார்த்தால்.......
இப்படி மனசு......

ஹூம்....(-:

இவன் said...

//என்ன இவனே,

புது ஆளைக் கொஞ்சம் கலாய்க்கலாமுன்னு பார்த்தால்.......
இப்படி மனசு......

ஹூம்....(-://

இது மட்டும்தான் சோகமா வரும் இனி அடிச்சு ஆட தொடங்குவோமில்ல.....

FunScribbler said...

கவிதை மனதை தொட்டுவிட்டது.

//இது மட்டும்தான் சோகமா வரும் இனி அடிச்சு ஆட தொடங்குவோமில்ல.....//

மிக்க மகிழ்ச்சி:))

இவன் said...

//கவிதை மனதை தொட்டுவிட்டது.

//இது மட்டும்தான் சோகமா வரும் இனி அடிச்சு ஆட தொடங்குவோமில்ல.....//

மிக்க மகிழ்ச்சி:))//

நன்றி தமிழ்மாங்கனி