Wednesday, June 25, 2008

விஜயின் நல்லகாரியம்-Hats off Surya, Jothikka, Vijay and Maathavan

என்ன மக்களே கொஞ்ச நாளைக்கு முதல் விஜயைப்போட்டு தாக்குதாக்கு என்று தாக்கிய நான் இன்னைக்கு என்ன இந்த மாதிரி விஜயை புகழ்ந்து சொல்லி இருக்கிறேன் என்னு பார்க்கிறீங்களா?? வேற ஒன்னும் இல்லிங்க இன்னைக்கு MSN chatல இருந்த போது நியூசிலாந்தில இருந்து என் friend ஒருத்தி கூட பேசிக்கிட்டு இருந்தேன்.... அவ பெரிய்யயய விஜய் fan. முதல்ல விஜய தாக்கி எழுதினதுக்கே என்ன கோபத்தில இருக்கிறளோ தெரியல்ல... அவ இன்னைக்கு நான் பல நாட்களாக நிச்சயமாக பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த video clipஅ பார்த்துக்கொண்டிருப்பதாக கூறி சொல்ல லிங்க் வாங்கி நானும் பார்த்தேன்..... நான் விஜய்க்கு எதிரி அல்ல அவர் மசாலாத்தனமான மக்களை முட்டள் ஆக்குகிற தவறான ரீமேக் திரைப்படங்களுக்கே எதிரி... அதே நேரத்தில் அவர் செய்த ஒரு நல்ல காரியத்தை முதலில் பாராட்டுபவன் நானாகத்தான் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப்பதிவு அதை உங்களுக்காக இங்கே.... கற்றுக்கொள்வதும் கற்றுக்கொடுப்பதும் அன்றி வேறென்ன வாழ்க்கை



இந்த பதிவு அறிவுக்கண்ணைத்திறப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த குறும் படத்தை எடுத்தை பாரட்டுவதற்காக மட்டுமே எழுதுகிறேன்.... முதலில் சூரியா, ஜோதிகா, விஜய், மாதவன் ஆகியோருக்கு என் பாரட்டு இவ்வளவு busyயிலும் இந்த குறும் படத்தில் நடித்ததற்கு விஜய், மாதவன் மற்றும் சூரியாவிற்கும் (குருவி படத்தில நடிக்கிறத்துக்கு இதில நடிக்கலாம் என்று நீங்க சொல்லுறது எனக்கு புரியுது சரி விடுங்க விடுங்க) கல்யாணம் முடிந்த பின் இதுவரை காலமும் எந்த படத்திலும் நடிக்காத ஜோதிகா (சூரியா குடும்பத்தினர் விடவில்லை என்பதுதான் உண்மைக்காரணம் என்று கேள்வி இருந்தாலும் இதில் நடிப்பதற்காக அனுமதித்த அவர்களுக்கும்) ஜோதிகாவுக்கும் என் பாரட்டு... அதுமட்டும் இல்லாமல் இதை இயக்கிய மணிரத்னம் பிரியா(கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா இயக்குனர்) , ஒளிப்பதிவு செய்த ரஜீவ்மேனன் மற்றும் இதனை உருவாக்க பிண்ணனியில் இருந்த அனைவருக்கும் என் பாரட்டுக்கள்... இதில் இவர்கள் அனைவரும் பணம் எதுவும் பெறாமல் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்கண்ணைப்பறிக்கும் நயவஞ்சகரே எதிர்கால சமூகத்தை அழிக்கும் மானுடரே இது உங்களுக்கு முதல் சவுக்கடியாக இருக்கட்டும்.....

கண்ணைத்திறக்க விடுங்கள் எங்கள் எதிர்கால சமுதாயத்தை

6 பதிலகள்:

FunScribbler said...

//இதை இயக்கிய மணிரத்னம்,//

இதை இயக்கியது மணிரத்னம் இல்ல.. வி.பிரியா (கண்ணாமூச்சி ஏன்னடா படத்தை இயக்கியவர்). மணிரத்னத்தின் assistant director வேலையில் இருந்தவர்.

இவன் said...

////இதை இயக்கிய மணிரத்னம்,//

இதை இயக்கியது மணிரத்னம் இல்ல.. வி.பிரியா (கண்ணாமூச்சி ஏன்னடா படத்தை இயக்கியவர்). மணிரத்னத்தின் assistant director வேலையில் இருந்தவர்.//
பாருங்க விஜய் என்ன உடனேயே தமிழ் மாங்கனி ஓடி வந்திட்டாங்க... நன்றி தமிழ் மாங்கனி திருத்தி விடுகிறேன்

Anonymous said...

Produced by Saravanan & family for their charitable trust.....


Saravanan = Surya

இவன் said...

//Produced by Saravanan & family for their charitable trust.....


Saravanan = Surya//

இது ஒரு புதுதகவல்.... நன்றி அனானி பாரட்டுக்கள் சிவகுமார் குடும்பத்தினருக்கு

குள்ளமணி said...

பணம் சம்பாதிக்க இது இல்லை இதுக்கு மேலயும் செய்வாணுங்க இவனுங்க

இவன் said...

//பணம் சம்பாதிக்க இது இல்லை இதுக்கு மேலயும் செய்வாணுங்க இவனுங்க//
என்ன ஒரு வில்லத்தனம்??