Monday, July 28, 2008

ராப் styleலில் ஒரு கவுஜை முயற்சி

வணக்கம் மக்களே நான் கவுஜாயினி ராப் கவுஜைகளை வாசிச்சதில இருந்து எனக்குள்ளயும் கவுஜ எழுதனும் என்னு ஒரு நெருப்பு எரிஞ்சிகிட்டே இருந்திச்சு. நானும் முயற்சி செஞ்சி பார்த்திட்டேன் சரியா வரவே இல்ல. எனக்கு கொஞ்சம் கவிதை எழுதவரும்(அப்படி என்னு சொல்லிக்கிறது) ஆனா எனக்கு கவுஜ எழுத வராது(நீ கவிதை என்னு எழுதிறது எழுதிற எல்லமே கவுஜ மாதிரித்தான் இருக்குது என்னு இந்த பச்ச பிள்ள மனச காயப்படுத்தி அழவைக்கக்கூடாது சொல்லீட்டேன்) அப்படி கவிதை எங்கிற பேரில எழுதின எல்லாத்தையும் என் நண்பர்களை கொடுமைப்படுத்தனும் எங்கிறத்துக்காக hi5 போடுறது உண்டு. நம்ம பசங்களும் அத வாசிச்சிட்டு அவனுங்க லேசா கொலைவெறிப்பிடிச்சுப்போய் அவனுங்க மப்பில இருக்க நேரம் என்னைக்கவிஞர் என்னு சொல்லியும் வைரமுத்து என்னு சொல்லியும் கவிதை சொல்ல சொல்லியும் அவனுங்க மப்புக்கு என்னை ஊறுகாய் அக்குறதும் உண்டு.

இப்படி இருக்கிறப்போ போன சனிக்கிழமை நம்ம பசங்கள்ல ஒருத்தன் ஏதோ பார்ட்டி என்னு சொன்னான், நாமதான் பார்ட்டி என்னா எங்கடா என்னு பார்த்திகிட்டு இருக்கிறவனுங்களாச்சே விடுவமா?? அந்த ஒரு சொல்ல நம்பி நானும் இவனுங்க சூழ்ச்சி தெரியாம புறப்பட்டு போனேன். நான் அங்க போகும் போதே வாசலில வைச்சு ஒருத்தன் வந்து மச்சி சிப்ஸ் முடிஞ்சி போச்சிது போய் வாங்கீட்டு வருவோம் என்னான்.

அட சிப்ஸ் வாங்கி கொடுத்திட்டா நம்மல அவனுங்க மப்புக்கு ஊறுகாய் ஆக்க மாட்டானுங்க என்ன ஒரு நம்பிக்கையில நானும் அவன் கூட போய் சிப்ஸ் வாங்கீட்டு வந்திட்டேன், வாங்கும் போதே ஏதோ ஒன்னு அடிமனசு கதவைத்தட்டி வேகமா என் தொண்டையையும் தாண்டி என் வாய் நோக்கி வந்து என் வாயில நின்னுச்சு என்ன என்னு பார்த்தா அது ஒரு கவுஜ... அடடா எனக்கும் கவுஜ வருமோ என்னு என்ன கவுஜ என்னு பார்த்தா அது இதுதான்

ஒரு சைட் டிஸ்ஸேசைட் டிஸ் வாங்குகிறதேஅப்படின்னு ஒரு கவுஜ சரி விட்டுத்தொலைப்போம் என்னு அவன் வீட்டுக்கு போனா அவனுங்க ஒரு 10 பேரு கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம எல்லோருமே ஒன்னா சேர்ந்து சொன்னானுங்க "டேய் அதுதான் நீ வாரியே பிறகு ஏன்டா சைட் டிஸ் வாங்கினா" என்னானுங்க அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சுது அன்னைக்கு அவனுங்க மப்புக்கு சிப்ஸ் இல்ல நான் தான் சைட் டிஸ் என்னு... சரி இஅவனுங்ககிட்ட இருந்து தப்பலாம் என்னு வேற ஒரு ரூம்க்கு போய் இருப்போம் என்னு புறப்படப்போனா ஒருத்தன் கதவ மூடிட்டு சொன்னான் "டேய் மச்சி நீ ஒரு கவிதை சொன்னத்தான் விடுவோம்" என்னு நானும் என்னத்த சொல்ல என்னு நம்ம ஜெயராஜ் அதுதாங்க கரிஸ் ஜெயராஜ் ஸ்டைலில கன்னத்தில கைய வைச்சு யோசிச்சிக்கிட்டு இருக்கிறப்போ அவனுங்க பேசிகிட்டு இருந்த டாப்பிக் அப்படியே ரஜினி பக்கம் போச்சிதுஅதில ஒருத்தன்ரஜினி கறுப்பு, வைரமுத்து கறுப்பு ஏன் எங்க இவனே கறுப்பு அப்படி என்னு சொல்லுறப்போதான் நம்ம ராப் ஸ்டையிலில ஒரு கவுஜ எனக்கு தோனிச்சு அத சொன்னா அவனுங்க விட்டுடுவணுங்க என்ன ஒரு தைரியத்தில நானும் அந்த கவுஜய ரெடி பண்ணீ வைச்சுக்கிட்டேன். அப்போ ஒரு நல்லவன் என்கிட்ட "டேய் இவனை விட்டுட்டமே.... டேய் இவனே இரு கவிதை ஒன்னு சொல்லுடா" என்னான் அடடா இவ்வளவு நல்லவனா இருக்கானே என்னு நானும் என் கவுஜய எடுத்து விட்டேன்.... அந்த கவுஜ இதுதான்

ரஜினி கறுப்புநானும் கறுப்பு-கவிதைகேட்கும் நீ ஒரு பருப்பு


என்னேன் அதோட அவனுங்க அடங்கினவனுங்கதான்... அப்படியே புறப்பட்டு அடுத்த ரூமில போய் இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன்.... எப்படி ராப் உங்க கவுஜ லெவலுக்கு இருக்கா??

Thursday, July 24, 2008

விஜய் பற்றி சில,விஜயகாந் styleல் ஒரு புள்ளிவிபரம்

வணக்கம் மக்களே நானும் கொஞ்ச நாளுக்கு இளைய தளபதி டாக்டர் விஜய் பத்தி எழுதாம இருக்கலாம் என்னு பார்க்கிறேன் ஆனா அந்தாள் எனக்கு போன ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சானோ தெரியல.. அவனப்பத்தியே இன்னைக்கும் பதிவு எழுத வேண்டியதாப்போச்சுது... சரி என்னு ஒரு சின்ன புள்ளி விபரம் நம்ம விஜய் பத்தி நம்ம விஜயகாந் ஸ்டைலில

விஜய் மொத்தம் நடிச்ச படம் 47


அதில ரீமேக் 20 படம்


அதில 5 படம் தெலுகு படம் 5 copy paste


கதை மட்டுமே copy பண்ணினது 8 படம்


பேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy(இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ??)


மலையாளம் ரீமேக் 5 படம்


39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில


வெறும் 8 படம்தான் ஒரிஜினல் scriptடோட வந்திருக்குது அதில 5 படம் சூப்பர் FLOP


அவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் ,


இதில இவனுக்கு டாக்டர் பட்டம் வேற....


இளைய தலவலி சாரி இளைய தளபதி விஜய்....


மக்களே தமிழ் சினிமாபவ காப்பத்த உங்களாலயும் முடியும் இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ்சினிமா பொளச்சிக்கும் ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??


பின்குறிப்பு- இதுவும் ஒரு ரீமேக்தான் இது இங்கிலிசுபிஸில வந்திச்சு அத அப்படியே தமிழ ரீமேக் செஞ்சிட்டேன்... ஹி ஹி ஹி ஹி ஹி
விடுங்க விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

Sunday, July 20, 2008

கவுண்டர் styleல் S.A.சந்திரசேகருடன்

வணக்கம் மக்களே.... நானும் கொஞ்ச நாளுக்கு உங்களை எல்லாம் கொடுமைப்படுத்தாம இருக்கலாம் என்னு பார்த்தா நம்ம வழிப்போக்கன் வந்து பதிவுலக இளவரசன் அது இது என்னு என் முதல் பதிவு பின்னுட்டத்தில போட்டு உசுப்பேத்தி விட்டுட்டாரு, நானும் யோசிச்சு யோசிச்சு பாத்துட்டேன் எதுவுமே தோணல என்னத்த பத்தி எழுத ஒண்ணூமே புரியல.... அப்போத்தான் பார்த்தே நம்ம விகடன்ல நம்ம இளைய தளபதி டாக்டர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த பேட்டிய பார்த்த உடனேயே நம்ம பதிவர் மூளை சும்மா இருக்குமா?? அதுதான் நம்ம கவுண்டமணி styleல அவர் பேட்டிக்கு நம்ம comments சில.... இனி பேட்டிய பார்ப்போமா??

''ஒரு காலத்தில் தொண்டர்களாக இருந்தவர்கள்தான் இன்று தலைவர்களாக இருக்கிறார்கள். இன்று நீங்கள் தொண்டர்களாக இருக்கிறீர்கள். நாளை..!?'' (பாடையாக இருப்பீர்கள்.... ஏண்டா இத்துப்போன மண்டையா டேய் நீங்க நாசமாப்போனது இல்லாம மத்தவங்களையும் நாசமாக்கிறது என்னு இருக்கிறீங்களா?? அவங்களாவது நல்லா இருக்கட்டும் விட்டுத்தொலையுங்கடா ) என நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் சின்ன இடைவெளிவிட, புரிந்தும் புரியாத (புரிஞ்சிருந்தா எப்பவோ உங்கள அடிச்சு கொன்னிருப்பானுங்க டேய் டேய் பாவம்டா மக்கள்) ரசிகர்கள் கூட்டம் அரங்கம் அதிரத் தடதடக்கிறது!

தனக்கெனத் தனிக் கொடி உயர்த்தி இருக்கிற விஜய், ''நான் எல்லாருக்கும் பொதுவானவனா இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனாலும், உங்க
வேண்டுகோளுக்கு இணங்க (டேய் தேங்காமூடி மண்டையா உன்னை கொடி அறிமுகப்படுத்த சொல்லி யார்ரா கேட்டது?? நீயெல்லாம் கொடி அறிமுகப்படுத்தி என்ன கொடுமை செய்யப்போற என்னு எல்லோருக்குமே தெரியும்டா மக்களே இந்த கொடுமை எல்லாம் கேக்கமாட்டீங்களா???) இப்போ மன்றக் கொடியை மட்டும் அறிமுகப்படுத்துறேன். மக்களுக்குச் சேவை செய்ய நல்ல எண்ணம் இருந்தாலே போதும்.(இருக்கனுமே , ஏண்டா மண்டையா டேய் நீ சேவை செய்யப்போறியா?? எப்படிடா இந்த டகாலடி வேலையெல்லாம் வருது) அந்த எண்ணம் எனக்கும் என் ரசிகர்களுக்கும் நிறையவே இருக்கு!'' என்று சூசகமாக முடிக்க, படபடக்கிறது விஜய் கொடி!

கோடம்பாக்கம் டு கோட்டை... விஜய் ராக்கெட் ரெடியா?

''என்னதான் நடக்குது?'' என்று எஸ்.ஏ.சந்திரசேகர னிடம் கேட்டால்.. ''விஜய் சார் (அப்படித்தான் சொல் கிறார்!)(ஏண்டா S.A.மண்டையா நீ உன் மகன சார் போட்டு கூப்பிடுற அப்ப உங்க அப்பன் என்ன உன்ன S.A.சார் S.A.சார் என்னா கூப்பீட்டான்?? ஏண்டா மத்தவனுங்களும் இப்படித்தான் கூப்பிடனும் என்னா சொல்லித்தொலைடா ஏண்டா எப்படி சூசகமா சொல்லி எங்கள கொடுமைப்படுத்திற??) 'என் மகன்' என்கிற சின்னப் புள்ளியில் ஆரம்பிச்சு,( மண்டையா அப்படி ஆரம்பிச்சதுதான்டா பிரச்சனையே நீ அப்பவே இப்படி செய்யாம இருந்திருந்தா இந்த இன்னைக்கு இந்த பதிவுக்கு வேலை இல்லையேடா) இன்னிக்கு கோடானுகோடி ரசிகர்களின் தலைவன் என்கிற இடத்துக்கு வந்திருக்கார்.(இந்த நினைப்பு வேற இருக்காடா உனக்கு??) ஒரு நாள் அவர் 'நடிக்கணும்'னு(டேய் அப்பவே எங்களப்பத்தி யோசிச்சிருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமாடா மாங்கா மண்டையா??) சொன்னார். அந்த நிமிஷத்தில் இருந்தே நான்தான் அவரை டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். (தெரியும்டா நீதான் இந்த பிரச்சனைக்கேல்லாம் காரணம் என்னு) எங்க முதல் முயற்சி 'நாளைய தீர்ப்பு' எதிர்பார்த்த வெற்றியைத் தரலை.(மக்கள் கொஞ்சம் தெளிவா இருந்ததாலதான் அப்படி) விஜய் சோர்ந்து போனார். எல்லோருக்கும் விஜய் மேல இருந்த நம்பிக்கை போயிருச்சு.(திரும்ப நடிக்கிறன் எங்கிற பெயரில வந்து இந்தப்பாடு படுத்திறான்) ஆனா, நான் ஒருத்தன் முழு உறுதியோடு இருந்தேன்.(டேய் டேய் முக்கா மண்டையா இதுக்கெல்லாம் முழுக்காரணமும் நீயா) படிப்படியா அவரை மேலே, மேலே கொண்டு வந்தேன். 20 வருஷ உழைப்புக்குப் பிறகு இப்போ எல்லாமே நான் எதிர்பார்த்த திசையில் போகுது.(20 வருஷ உழைப்பால பாரு நாங்க படுற பாட்டா சரிடா மண்டையா நீ அந்த குருவி படம் பாத்தியா அதப்பத்தாபிறகும் நீயே சொல்லு நாங்க என்ன பாடுபடுறோம் என்னு)

இன்னிக்கு, அவர் பின்னாடி திரண்டு வர்ற ரசிகர் களை எப்படி ஒருங்கிணைப்பது என்பதில்தான் என் முழுக் கவனமும் இருக்கு. எங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு(தெரியுதுடா நீ என்ன சொல்ல வர்ரா என்னு) விமர்சனங்கள் பலமாக இருக்கும்னு தெரியும். இந்தியாவில் வக்கீல்கள், டாக்டர்கள், இன்ஜினீயர்கள், வாத்தியார்கள்னு எல்லோரும் அரசியலுக்கு வரலாம். நடிகர்களுக்கு மட்டும் ஏன் விமர்சனம்?''(மொத்தத்தில நீ இதுக்குத்தான் அடிபோடுறா என்னு புரியுதுடா மண்டையா)

''அப்போ விஜய்யின் அடுத்த இலக்கு அரசியல்தானா..?''

''விஜய்யின் இப்போதைய வளர்ச்சி ஒரே நாளில் வந்ததில்லை.(பின்ன கொஞ்ச நாளாவா கொடுமைப்படுத்திறான் அவன்?? அதுவும் அழகிய தமிழ் மகன், குருவி, திருப்பாச்சி என்னு விடாம அடிக்கிறானே... எவ்வளவு அடிச்சாலும் தாங்க நாங்க என்ன வடிவேலு என்னு நினைச்சியாடா) அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு இன்னும் அதிகக் கவனம் தேவைப்படுது. கடலில் இறங்குவதற்கு முன் அதன் ஆழத்தை அளந்து தெரிஞ்சுக்கணும்.(டேய் டேய் டுபாக்கூர் மண்டையா அதுக்கு முன்னுக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கனும்டா வெண்ணை) விஜய்யின் ரசிகர்களுக்கும் ஒரு நீண்ட பயணத்துக்கான ஆயத்தம் தேவைப்படுது.

அவர்களுக்கு அரசியல் உணர்வை இப்போ இருந்தே ஊட்டிப் பக்குவப்படுத்தணும். விஜய் சாரிடம் இருக்கிற சமூக உணர்வுதான் என்னைக் கவர்ந்திருக்கு.(ஏன்டா டேய் குருவி, அழகிய தமிழ்மகன் என்னு படம் பன்னுறது, மத்தது ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறது, நடிப்பு என்ன பேரில ஏதேதோ செய்யுறது எல்லாம் சமூக சேவையாடா) மற்றவர்கள் கஷ்டப்படுவதை அவரால் தாங்கிக்க முடியாது.(டேய் அப்போ முதல்ல படம் பன்னுறத நிறுத்தச்சொல்லுடா அதுதான் எங்களுக்கிருக்கிற பெரிய கஷ்டமே... ஒரு வேளை அதுதான் நடிச்சு கொடுமைப்படுத்த வேணாம் என்னு அரசியலுக்கு அனுப்பிறியா) தன்னை நேசிக்கிற ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்கிற எண்ணம் அவரிடம் இருக்கு.

ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டு இருந்த விஜயகாந்த்தை நான்தான் பெரிய அளவில் கொண்டு வந்தேன். விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன்...(டேய் டேய் கொஞ்சம் இரு கொஞ்சம் இரு அந்தக்க்கொடுமைக்கும் காரணம் நீதானாடா.... ஏண்டா டேய் கோழிக்கூட்டு மண்டையா ஏண்டா இப்படி மக்கள தொடர்ந்து கொடுமைப்படுத்தனும் என்னே இருக்கியா??) அதே மாதிரி சினிமாவில் விஜய்யையும் பெரிய அளவுக்குக் கொண்டு வந்திருக்கேன். இனி அடுத்தடுத்த எல்லைகளுக்கான பயணங்களில்தான் எங்கள் முழுக் கவனமும். விஜய்யும் அரசியலுக்கு வருவார்!''(அடங்கொக்கமக்கா நீ இப்படியெல்லாம் plan வைச்சிருப்ப என்னு தெரிஞ்சுதாண்டா மக்கள் அவன் முதல் படத்தையே தோற்க வைச்சாங்க அதுக்கு பிறகு நீங்க ஓட வைச்சதுதான்டா மத்த படம் எல்லாம்)

''விஜய்க்கு அரசியல் பிடிக்குமா..?''

''விஜய் அரசியலைக் கவனிப்பார். இப்போ அவருக்கு இருக்கிறது சமூக அக்கறைதான்.(எதுடா சமூக அக்கறை?? ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறதா?? அப்படி அக்கறை இருக்கவன் நடிக்கவே அவன அனுப்பி இருக்கக்கூடாது) இப்பதான் ரசிகர்களிடம் விதை விதைச்சிருக்கோம். அது சிறு செடியாகி, மரமாகி, காய் காய்க்கணும். பொறுமையாகக் காத்திருந்தவர்கள்தானே அரசியலில் பலன் அடைந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் விஜய் அரசியலுக்கு வருவார். எப்ப வருவார்னு தெரியாது.. (இப்படி ச்சொல்லிச்சொல்லித்தாண்டா ஒருத்தர் இவ்வளவு நாளா ஓட்டிக்கிட்டு இருக்காரு) ஆனா, நிச்சயம் வருவார். அப்படி ஒரு கட்டம் அவர் வாழ்க்கையில் வரும். இதை விஜய் சொல்லலை. நான்தான் சொல்றேன். பெரிய எழுத்தில் போடுங்க. விஜய் அரசியலுக்கு வருவார்!''(டேய் டேய் வேணாம் நாங்க பாவம் இப்படி இன்னொரு கொடுமை செய்யாத சரியா) - நிச்சயமான குரலில் முடிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.


மக்களே இந்த விஜய் அரசியலுக்கு வர்ரதப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க??

Monday, July 14, 2008

கதவைத்தட்டிய கெட்ட காலம்

வணக்கம் மக்களே... இன்னைக்கு என் கெட்ட காலம் கதவத்தட்டிக்கிட்டே வந்திச்சு. என்னன்னே தெரியல எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்னு மட்டும் எனக்கு புரியல... நான் இருக்கது ஆஸ்திரேலியாங்க இங்க ஒரு 3 பசங்க ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கோம். நாங்க 3 பேரும் ஒருத்தனுக்கு ஒருநாள் என்னு turn வைச்சு சமைக்கிறதுண்டு இன்னைக்கு வேற ஒருத்தன்ட turn அவனும் சமைக்கிறேன் என்னு சொல்லீட்டு காலையிலேயே புறப்பட்டு இன்னொரு நண்பன்கூட வெளிய போயிட்டான். நானும் சரி evening வந்து சமைப்பான் என்னு நானும் சமைக்காம இருந்திட்டேன் சமைக்கிறதென்னாலும் நம்மளுக்கு வெந்நீர் வைக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியாது... அதப்பற்றித்தான் சமையல் குறிப்பு என்னு ஒரு பதிவா ஏற்கனவே ஒரு பதிவா போட்டு இருக்கிறேன். அதனால நானும் அவன் வரும் வரைக்கும் காத்திருக்க ஆரம்பித்தேன். அவனும் சதீஸ் எங்குற மற்ற ஒரு நண்பனும் வந்தானுங்க... வந்து காரை பார்க் செஞ்சிட்டு உள்ள வந்து படம் ஒண்ண போட்டு பார்க்க தொடங்கீட்டனுங்க.. அப்பத்தான் என் கெட்டகாலம் கதவைத்தட்டிக்கிட்டே வந்திச்சு அவன் பேரு சுரேஷ் வந்து அவனும் படம் பார்க்கத்தொடங்கினான்.... நானும் எவ்வளவு நேரம்தான் பசிக்காத மாதிரியே நடிக்கிறது?? இருந்த பசில சதீஷ்கிட்ட நான் சொன்னேன்

மச்சி பசிக்குதுடா வா Mcdonalds போயிட்டு சாப்பிட்டு வருவோம்

என்னேன் அப்பவாவது அடடா பய இன்னும் சாப்பிடலயே இப்பவாவது போய் சமைப்போம் எங்கிற எண்ணம் என் வீட்டு நண்பனுக்கு வரக்கூடதா எங்கிற ஒரு நப்பாசைதான்... அவனும் கண்டுக்கிற மாதிரி இல்ல.... அப்ப சதீஷ் சொன்னான்

மச்சி என்னால drive பண்ண முடியாது அதனால நீயே போயிட்டு வா

என்னான்... எனக்குத்தான் drive பண்ணவே தெரியாதே அப்ப நான் யோசிச்சிகிட்டு இருக்க சுரேஷ் சொன்னான்

மச்சி நான் வேணும் என்னா drive பண்ணுறேன்

என்னு நானும் இவன் என்ன இவ்வளவு பெருந்தன்மையா கேக்குறானே என்னு கொஞ்சம் யோசிச்சிட்டு கேட்டேன்

டேய் நீ இன்னமும் Learner permitலயே இருக்கிற பிறகு எப்படி drive பண்ணுவ என்னேன்

ஏன்னா ஏதோ ஒன்னு அப்பவே என்னை எச்சரிச்சுகிட்டே இருந்திச்சு


அப்போ சதீஷ் சொன்னான்

மச்சி அவன் நல்லா drive பண்ணுவான்டா யோசிக்காத அவன் கூட போயிட்டு வா
என்னான் ஏதோ அவன் தந்த ஒரு நம்பிக்கையும் அந்த Mcdonalds Double Quarter Pounder மேல இருந்த ஆசையும் பசியும் சேர்ந்து சதி பண்ணீரிச்சுது.... நானும் போய் Double Quarter Pounder சாப்பிடுற ஆசையில எழும்பி அவன நம்பி போய் காரில ஏறினேன்... அவன் எங்க வீட்டு compoundல இருந்து காரை எடுக்கும் போதே எனக்கு புரிஞ்சிரிச்சு அவன் எவ்வளவு நல்ல driver என்னு இன்னையோட நான் சரி ஏனுதான் நினைச்சேன்..... அவன் drive பண்ணுற நேரமே எனக்கு பாதி உசுரு போயிடிச்சு.. நானும் சரி பரவாயில்லை Mcdonaldsல யாராவது பொண்ணு இருக்கும் எங்கிற ஒரே ஆசையில அங்க போனா என் turn வரும் வரைக்கும் ஒரு பொண்ணு இருந்திட்டு நான் வந்த உடனேயே shift மாறி ஒரு போண்டா பையன் வர்ரான் அப்பவே எனக்கு இருந்த பசி எல்லாமே பறந்து போயிடுச்சு ஒரு மாதிரி Mcdonalds double quarter pounderர வாங்கிகிட்டு போய் காரில ஏறினா அங்க சுரேஷ் காரை start பண்ணி குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கான்... அது ஒரு manual car அதில ஒழுங்கா கியர் போடாட்டி கார் குதிரை மாதிரி டொக்கு டொக்கு என்னு அடிக்கும்... எனக்கு பயத்திலயே உயிர் போயிடுச்சு அந்த நேரம் பார்த்தா அழகான பொண்ணூங்க எல்லாம் எங்க காரை கடந்து போகனும்?? எல்லாம் என் விதி சரி விடுங்க. அங்க இருந்து புறப்பட்டு நாங்களும் வீட்டுக்கு வந்தா வர்ர வழில ஒரு ambulance லைட்ட போட்டுகிட்டு வந்தா சுரேஷ் அதப்பார்த்து police என்னு நினைச்சு பயந்து காரை கன்னாபின்னா என்னு ஓட தொடங்கினான் எனக்கு உயிர் பயம் உச்சத்தில இருந்திச்சு... என்னா Learner permitல drive பண்ணி பிடி பட்டா லைசன்ஸ் அவ்வளவுதான்... ஒரு மாதிரி பிறகு எப்படியோ வீட்டுக்கு வந்து சேத்திட்டான்... பாருங்கைய்யா இப்படித்தான் நான் ஒவ்வொருமுறையும் போய் எதிலயாவது மாட்டிக்குவேன்... இன்னைக்கு ஒரு Double Quarter Pounder க்கு ஆசைப்பட்டி உசிர விடப்பார்த்தேன்... மக்களே இனி நீங்க யாராவது drive பண்ண போறேன் என்னு சொன்னா தயவு செய்து லைசன்ஸ் இருக்கா என்னு கேட்டு வாங்கி பாத்திட்டு காரில ஏறுங்க பிறகு என்ன மாதிரி ஒரு Double Quarter Pounderகோ இல்லாட்டி ஒரு Big Macக்கோ ஆசைப்பட்டு உசிர விட்டிடாதிங்க சொல்லீட்டேன்

கவுஜை எழுதும் கவுஜர்கள் மற்றும் கவுஜாயினிகளுக்க

கவிஞர்களே கவிதாயினிகளே நீங்க எத்தனையோ கவிதை எழுதி இருப்பீங்க, ஆனா இப்படி ஒரு பொருள் பொதிந்த ஒரு கவிதை இயற்றி இசை அமைத்து பாடி இருக்கீங்களா?? இனியாவது கத்துக்குங்கப்பா எப்படி பாட்டு எழுதிறது என்னு..... முக்கியமா பாட்டு எழுதிறேன் என்னு சொல்லிக்கிட்டு அலையிற வைரமுத்து, பா.விஜய், வாலி மற்றும் நா.முத்துக்குமார் வேற யாரெல்லாம் இருக்கீங்களோ அவங்க அவ்வளவு பேரும் இனி இந்த மாதிரி பாட்டு எழுத கத்துக்கிங்க.... கவிதை எழுதும் பதிவர்களும் பார்த்து தெரிஞ்சுக்கிங்கஎன்ன ஒரு வரி பாருங்க

ஈரமாச்சுன்னா காய வையுங்க
காயாப்போன பழுக்க வையுங்க
கிழிங்சு போனா தச்சுப்பாருங்க
காணம போனா தேடிபாருங்க
கலையில தண்ணி ஊத்தி குளிச்சுக்கோ
வாளிக்குள்ள பைப்பு தண்ணி பிடிச்சுக்கோ
டை கட்டு வேலை செஞ்சு கைகட்ட கூடாது


இப்ப்டி ஒரு பாட்டு யாரலங்க எழுத முடியும்?? சூப்பர் கலக்கல் ஆனா என்னதான் இருந்தாலும் நம்ம கவுஜாயினி ராப் லெவெலுக்கு இல்ல அதன்னால இவங்கள அடுத்த முறை அவங்கள வைச்சு பாட்டு எழுதச்சொல்லனும்... கவிதாயினி ராப் நீங்க எப்போ பாட்டு எழுதப்போறீங்க??

Sunday, July 13, 2008

பீனிக்ஸ்

கவிதை கவிதை என்னு சொல்லுறத கொஞ்சம் எழுதிப்பார்போமே என்னுதான் இந்தப்பதிவு இது கவிதை என்னுதான் நினைக்கிறேன்படத்தின் மேல் கிளிக்கினால் பெரிதாகும்

Friday, July 11, 2008

நான் படம் பார்த்த கதை

கொஞ்ச நாள் பதிவு எழுதி நம்ம மக்கள மொக்கை போடாம இருக்கலாம் என்னு இருந்தேன்.... ஆனா இன்னைக்குத்தாங்க இந்த விதி இருகில்ல விதி அது எவ்வளவு வலியது என்னு புரிஞ்சுகிட்டேன்.... நம்ம ரிலாக்ஸ் பிளீஸ் கயல்விழி மற்றும் நம்ம எந்தன் வானம் வழிப்போக்கன் வந்து அடுத்த பதிவு எப்போ என்னு கேட்ட போது சரி நாம அனுபவிச்ச கொடுமையை நம்ம மக்கள்கிட்ட சொல்லி ஆறுதல் படலாம் என்னுதான் இந்தப்பதிவு

இன்னைக்கு ரொம்ப போர் அடிக்குது என்னு நம்ம நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு போவோமே என்னு முடிவு பண்ணி இன்னொருத்தன் கூட கடைக்கு போய் தெரியாத்தனமா ஒரு DVD வேற எடுத்துகிட்டு போனேன்.... நம்ம நண்பன் கூட படம் நல்ல படம்டா என்னு பரிந்துரை வேற.... சரி என்னு படதத எடுத்துகிட்டு போனா பார்ப்பியா இனி இப்படி படம் பார்ப்பியா என்னு என்னை நானே கேட்டு கேட்டு செருப்பால அடிச்சுக்கனும் போல இருந்திச்சு... அவன் வீட்டில போய் அந்த படத்த பார்த்ததன் விளைவுதான் இந்தப்பதிவு.... இன்னைக்கு "வேதா" என்னு ஒரு படம் அருண்குமார் நடிச்சது கடைசியா அருண்குமார் நடிச்சு நான் பார்த்த படம் எதுன்னா ஒரு படத்தில அந்த பொண்ணு முகத்த பார்க்காமலே லவ் பண்ணுவாரே அந்தப்படம்தான்.... (ஞாபகம் வரலயா வழிப்போக்கன் மற்றும் நமக்கல் சிபி) அட நம்ம ரம்பா கூட நடிச்சிருப்பங்களே(இப்போ ஞாபகம் வருமே) "கம்பன் எங்கே எங்கே" பாட்டுக்கூட இருக்கே அந்தப்படம்தாங்க.... அந்தப்படம் ஏதோ கொஞ்சம் நல்லா இருந்ததால(சில பல வருஷங்களுக்கு முன்னுக்கு பார்த்ததால அப்படித்தோணிச்சோ என்னவோ) நம்பி இந்தப்படத்தையும் பாத்தேங்க... சும்மா சொல்லக்கூடாது சும்மா ரத்தம் வர வர ஈவு இரக்கம் இல்லாம கொடுமைப்படுத்தினாங்கைய்யா... யாரவது இந்த படத்தை முழுசா பார்த்தவங்க இருக்காங்களா?? பார்த்து 2ND half சேது ஆகாம இருக்கவங்க வாங்கைய்யா உங்க காலைத்தொட்டு கும்பிடனும்( இன்னேரத்துக்கு கயல்விழி இல்லாட்டி ராப் நாங்க முழுப்படமும் பார்த்திடோம்ம் என்னு arrive ஆகி இருக்கனுமே நல்லா ஞாபகம் இருக்கட்டும் 2ND half சேது effectல இல்லாதவங்க கால்ல விழுவேன்) சர்ரி இனி என்ன நடந்திச்சு என்னு சொல்லுறேன்
அருண் (கயல்விழி இது வருண் இல்ல அருண்) அண்ணனாம் அவருக்கு ஒரு தம்பியாம் தம்பி ரேஸ்ல ஜெயிக்கனும் எங்குறத்துக்காக ரேஸ்ல ஓடுற மத்த எல்லாரையும் தோற்க சொல்லி அருண் கேட்டு எல்லோரு தோத்துப்போறாங்களாம்... இதில யாருய்யா கேணயன் விட்டு கொடுத்த அவங்களா இல்ல படம் பாக்கிற நாங்களா?? கஷ்டபட்டு practice கடைசீல தோத்துப்போறாங்க அந்த athletes அவ்வளவு கேவலமா போச்சு athletes என்னா இல்ல?? சரி திரும்பவும் கதைக்கு வருவோம் அந்த ஊரில பெரிய underground தாதாவாம் அவன் தம்பி college electionல நிற்க, அருண்குமார் தம்பியும் அந்த electionல நிக்கிராறாம்.. அப்போ தாதா தம்பி அருண் தம்பிய மிரட்ட, அருண் போலீஸ் வேஷம் போட்டு அந்த தாதாவ ஏமாத்தி தன் தம்பிய ஜெயிக்க வைக்க, வந்தது போலீஸ் இல்ல தன் தம்பி கூட படிக்கிறவன்ட அண்ணன் என்னு தெரிய வர அந்த வில்லன் ஒரு நடிப்பு நடிப்பாரு பாருங்க நம்ம சிவாஜி வந்து அவர்கிட்ட நடிப்பு கத்துக்கணும் அவ்வளவு கொடுமையா இருக்கும் i mean அப்படி ஒரு நடிப்பு.... சரி சரி அதசரி மன்னிச்சு விடுட்டுடலாம் சிவாஜிய விட நல்லா நடிச்சிருக்கார் இல்ல அதுக்காகவாவது விட்டுடலாம்.... ஆனா அதுக்கு பிறகு ஒரு கொடுமை வந்திச்சே அதுதான் பயங்கரம் ஒரு அப்பாவும் மகளும் அருண் வீட்டுக்கு வந்து அருண்கிட்ட அந்த பொண்ண யாரோ நக்கல் பசங்க நக்கல் பண்ணுறதா சொல்லி அவங்களுக்கு help பண்ண சொல்லி கேட்க அருண் தன் அம்மாக்கிட்ட நல்ல பேர் எடுக்க அவங்களை விரட்டி விட அவங்க திரும்பி போற வழியில அந்த பொண்ண அதே பசங்க நக்கல் பண்ண அப்ப வருவாரு பாருங்க நம்ம ஹீரோ வந்து அடிக்கவும் இல்ல வந்து வேணாம் என்னு சொல்ல அவரைத்தள்ளி விடுவாங்க டேய் டேய் எததனை படத்திலடா இப்படியே எடுப்பீங்க என்னு கொலைவெறிதான் வந்திச்சு கீழே விழுந்த ஹீரோ styleஆ எழும்பி பக்கத்தில சும்மா இருந்த பெஞ்ச வெறும் கையாலேயே அடிச்சு உடைப்பாரு பாருங்க சும்மா சூப்பரா இருக்கும் (யம்மே முடியல) அதுகூட பரவாயில்லை பெஞ்சை உடைச்ச கையோட பக்கத்தில எவனோ வீடு கட்ட வாங்கி வைச்சிருந்த செங்கட்டிய உடைப்பாரு பாருங்க எனக்கு T.Vய உடைக்கலாம் போல இருந்திச்சு friend வீட்டு T.V என்னதால விட்டு வைச்சேன்... அதுக்கு பிறகு அருண் பக்கத்தில இருந்த ஒரு இரும்பு பைப்ப காலால அடிச்சு உடைப்பாரு பாருங்க எனக்கு ஒரு தெலுகு படத்தில ஒரு comedian கையுலயும் காலிலயும் இரும்பு plate வச்சு இதே மாதிரி உடைச்சதுதான் ஞாபகம் வந்திச்சு

இதுக்கு மேலயும் இந்தப்படத்த நான் பார்க்கணுமா என்னு நான் யோசிச்சுகிட்டே நான் திரும்பி பார்த்தா அங்க எனக்கு இது நல்ல படம் என்னு பரிந்துரைச்சானே ஒரு லூசுப்பய அவன் நான் இங்க இவ்வளவு பெரிய ஒரு தண்டனையை அனுபவிக்கிறது தெரியாம நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்தான் எனக்கா கொலைவெறி வந்த கடுப்புல எழும்பி போய் அந்த DVDய உடைச்சிட்டுத்தான் வந்து இருந்தேன்.... என்ன மாதிரி இந்த படத்த இன்னோரு மனிஷன் பாத்து சித்திரவதைப்படக்கூடாது பாருங்க அதுதான்..... இந்த புத்தி முதல்லயே இருந்திருக்கனும் எங்குறீங்களா அதுவும் சரிதான்...

Monday, July 7, 2008

5ம் classல் ஒரு லவ் லெட்டர்

நானும் நாலு நாளா யோசிக்கிறேன் யோசிக்கிறேன் sorry மூணு நாளா யோசிக்கிறேன் என்னத்த பத்தி எழுதுறது என்னே தெரியல்ல.... சரி ஏதாவது ரூம் போட்டு யோசிக்கலாம் என்னா அதுக்கும் கையில காசு இல்ல... சரி என்னதான் செய்யலாம் எதைப்பற்றி எழுதலாம் யோசிச்சு வெறுத்துப்போச்சுதுய்யா வெறுத்துப்போச்சு. கடைசீல நம்ம வழிப்போக்கன் நான் எழுதி இருந்த இவனும் ஒரு சூப்பர் ஹீரோதான் பதிவுக்கு போட்டிருந்த ஒரு பின்னுட்டத்தைப்பார்த்த போது அட இதப்பற்றி எழுதலாமே என்னு தோனிச்சு.. சரி என்னு அதப்பத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன்... மக்களே இதுவும் இவனின் வீர பிரதாபங்களில் ஒன்று... நம்ம வீர வாழ்க்கையில எவ்வளவோ இருக்கு அதில ஒன்னுதான் இன்னைக்கு நான் எழுதப்போறது.... சரி ஆரம்பிப்போமா
அதாவது அப்போ நான் 5ம் class படிச்சுக்கிட்டு இருந்தேன்... (இப்பவரைக்கும் அதுவரைக்கும்தானேடா படிச்சிருக்க என்னு மொக்கைக்கமெடி அடிக்க கூடாது ஆமா) அப்போ நான் படிச்சுக்கிட்டு இருந்தது ஒரு co-education school..... அந்த schoolக்கு என் அப்பாதான் principal, அம்மா அதே schoolல teacher, அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்கனும் இந்த "இவன்" எப்படி திமிரு பிடிச்சு அலைஞ்சிருப்பான் என்னு... அந்த நேரத்திலயே எனக்கு என்னு ஒரு செட் பசஙகங்கள சேர்த்துக்கிட்டு அலைஞ்சவன்தான் இந்த இவன்.... இப்படி இருக்குற நேரம் என் classல இருந்த ஒரு பையன் ஒருத்தன் அவன் எங்க classல படிச்ச ஒரு பொண்ண love பண்ணினான்ங்க... அந்த பொண்ணும் love பண்ணினா, அட ஆமாங்க சத்தியமா love பண்ணினாங்கப்பா.... ஆனா இன்னைக்கு இந்த பதிவ எழுதிறத்துக்கு முன்னுக்கு அவளுக்கு call பண்ணி அந்த பையன் பேர சொல்லி அதப்பற்றி எழுதட்டா என்னு கேட்டபோது அவ அவன் யாரு என்னு கேட்டா... என்ன ஒரு ஞாபக சக்தி... ஞாபகம் வந்தா பிறகு எனக்கு அவகிட்ட இருந்து கொலை மிரட்டல் வேற, இப்போ அந்த பையன் எங்க எப்படி இருக்குறானோ?? சரி அவங்க கதைய இன்னொரு பதிவா போடலாம் என்னு இருக்குறேன்.... சரி அந்த பையன்கிட்ட பேசினியா என்னு கேக்குறிங்களா?? பசங்களோட கடலை போடுற பழக்கம் எல்லாம் நம்மகிட்ட இல்லிங்கண்ணோவ்..... சரி கதைக்கு வாரேன்

இப்படி இவங்க love பண்ணிக்கிட்டு இருக்கிற நேரம். அந்த செட் leader(என்னதான் gang leaderஆ இருந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்த முதல் ஆள escape ஆகுறது நான்தான் அப்பவே இந்த மாதிரி விஷயத்தில நாங்க எல்லாம் சிங்கய்யா) நான் lover இல்லாம இருக்கிறது என் கெளரவத்தை பாதிக்கிறதா இருந்திச்சு... சரி நாமளும் சும்மா இருக்க முடியாம சொல்லப்போனா அந்த நேரத்தில எல்லாம் லவ் பண்ணினா என்ன செய்வாங்க என்னு கூட தெரியாதுங்க அப்படி அப்பாவி ஆனா சொல்லிக்கீறது ஒரு gang leader என்னு.... இப்படி இருக்கிற நேரம் நம்ம பசங்களும் சும்மா இருக்க முடியாம அவனுங்களும் நம்மள ஏத்திவிட சரி நானும் யாரையாவது love பண்ணுறது என்னு முடிவு பண்ணி என் உயிர் நண்பர்கள் இருக்கானுங்க இல்ல அதுதானுங்க என்ன உசுப்பேத்தி வேடிக்கை பாத்தாணுங்களே அதே புண்ணியவானுங்கதான் அவனுங்கள கூப்பிட்டு பெரிய பாரதிராஜா மாதிரி என் இனிய நண்பர்க்ளே என்னு ஆரம்பிச்சி யாரை love பண்ணலாம் என்னு ஆலோசனை நடத்திப்பாத்தேன்.... அப்பத்தான் தெரிஞ்சுது நம்ம பசங்கள் எல்லாம் எவ்வளவு நல்லவனுங்கா என்னு... என்ன நடந்துது என்னு கேக்குறீங்களா?? நான் உள்ளதிலேயே அந்த நேரத்தில பாக்கிற மாதிரி இருந்த பொண்ணுங்கள்ல கொஞ்ச பேர செலெக்ட் பண்ணி அவனுங்களுட்ட சொல்ல செலெக்ட் பண்ணின 10 பொண்ணுங்கள்ல மூணே மூணு பொண்ணுங்கதான் மிச்சமா இருந்திச்சு... மத்த 7 பொண்ணுங்களும் ஒவ்வொருத்தனும் மச்சி நான் அவள லவ் பண்ணூறேன் என்னு சொல்லி சொல்லியே வெட்டிக்கிட்டு வந்த கடைசியா 3 பொண்ணுங்க இருந்தாங்க.. யரு என்னு பார்த்தா அவங்களும் நல்ல பொண்ணுங்கதான்..... சரி என்னு அதில ஒருத்திய நான் செலெட் பண்ணிக்கிட்டேன்ல்... (அவ பேரு ஏதாவது இப்போ வைக்கனுமே சரி அனு என்னு வைச்சுக்கலாமா எல்லாம் தசாவதாரம் பண்ணுற வேலை) சரி என்னு அன்னையில இருந்து நான் அனுவ love பண்ணத்தொடங்கினேங்க... இப்படி இருக்கிற நேரம் என் வீட்டுக்கிட்ட இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு friendஆனா (அவளுக்கு ஒரு பெயர் வைக்கனுமே சரி மேரி என்னு வைச்சிக்கலாம் "சரி, மேரி "ஆஹா என்ன ஒரு ரைமிங் இவன் நீ எங்கயோ போயிட்ட)அவ அறிமுகம் ஆனா பிறகு அவகூடதான் நான் school முடிஞ்சா பிறகு வீட்டுக்கு போனேன்... அவளும் நானும் மட்டும் இல்லிங்க அவ அண்ணனும் எங்க கூட வருவான்.... நாங்களும் பேசிக்கிட்டே போவோம்... இப்படியே ஒவ்வொரு நாளும் போகிற நேரம் ஒரு நான் அந்த பொண்ணு (ஆங் என்ன பேர் வைச்சோம்??) மேரி கேட்டா "டேய் இவனே நீ யாரையாவது லவ் பண்ணுறியா" என்னு நானும் "இல்ல" என்னு சொல்ல அவ "டேய் பொய் சொல்லாத" என்னு சொல்லி "நீ லவ் பண்ணுற என்னு தெரியும் ஆனா யார என்னுதான் தெரியல" என்னு சொல்ல நானும் ஏதோ இதில "நான் யார லவ் பண்ணுறேன் என்னு நீ நினைக்குற" என்னு கேட்க அவளும் நான் முதல்ல filter பண்ணி வச்சிருந்த பொண்ணுங்க மூனு பேர் முதல் எழுத்தையும் சொல்லி யார் என்னு கேட்டா நானும் அந்த பொண்ணு முதல் எழுத்த சொல்ல சரி என்னு போய்ட்டா..... நானும் வீட்டுக்கு போய்ட்டேன்... அடுத்த நாள்.............

அடுத்த நாள் என்ன ஆச்சுதுன்னா நான் school போக அங்க என் மேசையில "i love you இவன்" அது இது என்னு இருந்திடுச்சா எனக்கா பயங்கர கடுப்பு எல்லாத்தையும் கொண்டுபோய் principalகிட்ட கொடுக்கலாம் என்னா அதுதான் என் அப்பாவாச்சே அவரு என்னை அன்பா கவனிப்பாரு என்ன ஒரே பயத்தில vice principalகிட்ட கொண்டு போய் கொடுத்திட்டேன்... பிறகு ஏதோ தைரியத்தில நானும் "i love u அனு" என்னு எழுதி அதக்கொண்டு போய் நான் லவ் பண்ணின அந்த பொண்ணுகிட்ட கொடுக்க அவளுக்க்கு பயங்கரமா கடுப்பாயிடுச்சி... இதைப்போயி எவனோ ஒரு நல்லவன் எங்க அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் பத்தி வைக்க... அப்பா என்னை அன்பா கவனிச்சதோட இல்லாம அம்மா இவன் இப்படியே இந்த schoolல படிச்சா schoolல நாசமாக்கீடுவான் என்னு வேற school மாத்தீட்டாங்க... அதுக்கு பிறகு என்னுடய வரலாற்றில் 5ம் class படிக்கும் போது இருந்த அவ்வளவு பேரிலும் இரண்டே 2 பொண்ணுங்க மட்டும் contactல இருக்காங்க..... ஆங் சொல்ல மறந்திட்டேனே நான் அந்த schoolல விட்டு வந்தா பிறகு அந்த schoolல கண்ணடி உடைக்க, மேசை, நாட்காலி உடைக்க ஆளில்லாம அந்த எவ்வளவோ முன்னேறிட்டதா கேள்விப்பட்டேன்... ஆனாலும் ஒரு ஆசை மீண்டும் ஒரு தடவை அந்த schoolக்க்கு போய் பாக்கணும் என்னோடு படிச்ச நண்பர்கள(மேரி உட்பட) ஒரு தடவை பார்க்கனும் என்னு.... அதிலயும் என்ன உசுப்பேத்தி ரணகளப்படுத்தினானுங்களே அவனுங்களையும் ஒரு தடவை மிதிக்கனுய்யா.......

Friday, July 4, 2008

யாஹுவில் தமிழில் chat செய்யலாம்

வணக்கம் வலையுலக மக்களே... என் நண்பர்கள் பலர் யாஹு மெசஞ்சரை உபயோக்கிறார்கள் ஆனாலும் அதில் யுனிகோட் தமிழில் அரட்டை அடிக்க முடியவில்லை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.... நானும் வெகு காலமாக முயன்று பார்த்தேன் முடியவில்லை... பின் ஏதோ வலைத்தளத்தில் அது முடியும் என வாசித்தேன் முயன்றும் பார்த்தேன் சரியாக வந்தது. சரி என்று அதனை bookmark செய்தும் வைத்தேன்... பின் எனது கணனியினை format செய்யும்போது அந்த bookmarkகளை save செய்யாமல் அழித்துவிட்டேன்... பின் இன்று ஏதோ நினைவு வர திரும்பவும் அதனை முயன்று பார்த்து சரி வந்துவிட்டது.... தெரிந்ததை நான் மட்டும் வைத்திருந்தால் நல்லதல்ல என்பதால் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்முதலில் உங்கள் கணனியில் e-கலப்பை போன்றதொன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.(நான் உபயோகிப்பது e-கலப்பை. அதற்கு மட்டும்தான் சரி வருகிறதோ தெரியவில்லை அதோடு நான் எனது Operating System XP, vistaவில் வேலை செய்கிறதா என்னவோ தெரியவில்லை) e-கலப்பையை நிறுவியபின் யாஹு மசெஞ்சரில் log in ஆகி அதில் preferenceய் தெரிவு செய்யவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற ஒரு புதிய window திறக்கும்..அதில் appearanceய் தெரிவு செய்யவும் அதில் change font & colors என்பதைத்தெரிவு செய்யவும்.... அப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டிருப்பது போல் ஒரு புதிய window திறக்கும்..

அதில் fontஇல் TSCu_Paranar.ttf என்னும் fontஇனை தெரிவு செய்து okவினை கிளிக் செய்யவும்.... பின் preferanceல் okவினை கிளிக் செய்து சாதாரணமா யாஹூ மெசெஞ்சரில் அரட்டை அடிக்கும்போது யுனிகோடினை தெரிவு செய்து தமிழி டைப்பண்ணினால் கீழே உள்ளது போல் தமிழில் அழகாக வரும்font தேவையானவர்கள் இங்கே download பண்ணிக்கொள்ளுங்கள்Wednesday, July 2, 2008

இவனும் ஒரு சூப்பர் ஹீரோதான்

ஒவ்வொரு முறையும் என்ன எழுதிறது என்னு think பண்ணி பண்ணியே இந்த "இவன்" (என்னத்தான் சொன்னேன்) தலை வெடிச்சுடும் போல இருக்கே... சரி இன்னைக்கு என்ன எழுதிறது?? நேத்து ராத்திரியே(ராத்திரி என்னா விடிய காலையில 5 மணி) யோசிச்சிட்டு சரி நம்ம சின்ன வயசில அடிச்ச கூத்தப்பத்தியும் நம்ம வீர வரலாற்றப்பற்றியும் கொசுவர்த்தி சுத்தலாம் என்னு முடிவு பண்ணி தூங்கீட்டேன், காலையில எந்திரிச்சா எந்த கூத்தப்பற்றி எழுதிறது என்னு ஒரே குழப்பம்(1, 2 கூத்தா பண்ணி இருக்கிறோம் ஆயிரக்கணக்கில இல்ல செஞ்சிருக்கோம்). எதப்பத்தி எழுத? 5ம் class படிக்கும் போது ஒரு பொண்ணுகிட்ட love letter கொடுத்தத எழுதுவோமா? இல்ல சீனியர் பையங்களையே ராகிங் செஞ்சத எழுதுவோமா? எதைப்பற்றி எழுதிறது?? சரி என்னு கடைசீல கூரையப்பிரிச்சிக்கிட்டு நடு வீட்டில இறங்கி் supar hero ஆனதப்பற்றி எழுதுவோம் என்று முடிவு செஞ்சாச்சு எழுதவும் ஆரம்பிச்சாச்சு....


நான் சின்ன வயசில பயங்கர வால்... நம்ம வால்பையன் அளவுக்கு இல்லை என்னாலும் ஓரளவுக்கு வால், என் வீடு மட்டுமில்லாம பக்கத்து வீடுகளும் அதகளப்படும்.... அப்போ எனக்கு ஒரு 7 வயசு இருக்கும்... எனக்கு என்னா என்னா சின்ன வயசிலேயே நினைப்புங்க பெரிய இவன் என்னு(அதுதான் என் பேரு இவன்) அது மட்டுமில்லாம பெரிய cricket player brain lara என்னு நினைப்பு காரணம் நானும் கறுப்பு அவரும் கறுப்பு அப்படி ஒரு ஒற்றுமைங்க கலர்ல.... எங்கையாவது எங்க ஏரியாவில cricket விளையாண்டா நிச்சயமா இவன் அங்க இருப்பான் (ball பொறுக்கி போட) அப்படி ஒரு அன்பு cricket மேல... அன்னைக்கு அப்படித்தான் என் வயசு பசங்களோட cricket விளையாட போகலாம் என்னு இருந்தா, இவன் அங்க போய் ஏதாவது வம்பு சண்டை இழுத்திடுவான் இல்லாட்டி எவன் மண்டையாவது உடைச்சிட்டு வந்திடுவான் என்னு அம்மா வீட்டிலேயே இருக்க சொல்லீட்டாங்க...

நமக்குத்தான் கையும் காலும் சும்மா (வழிப்போக்கன் இது தமிழ் சும்மா) இருக்காதே அதனால வீட்டில இருக்கிறவங்கள பார்த்தேன்... யாருமே என்
கூட விளையாட வரமாட்டங்க... என்ன செய்ய என்னு யோசிச்சநேரம் அக்கா வந்தா.... நம்மகிட்ட ஒரு ஆள் மாட்டினா விட மாட்டமே... அக்காவ வீட்டுக்கு முன்னுக்கு cricket விளையாடலாம் வாரியா என்னு கேக்க அக்காவும் சரி என்னா... எப்பவுமே cricket விளையாண்டா நான்தான் 1st batting அது நானே வைச்சிக்கிட்ட rule யாரா இருந்தாலும் பின் பற்றித்தான் ஆகனும்... அன்னைக்கும் அப்படித்தான் நான்தான் முதல் batting ஒழுங்கா அடிச்சிக்கிட்டு இருந்தேன்... அப்போ லாரா மாதிரி அடி பார்ப்போம் என்னு பக்கத்தில பார்த்திக்கிடு இருந்த தங்கச்சி உசுப்பேத்த நாமலும் right hand version lara மாதிரி bat பண்ணத்தொடங்கினேன்... முதல் ballலே அடிச்சேன் பாருங்க அது போய் எதிர்வீட்டு கூரை மேல விழுந்திருச்சு... வேற ball எடுத்து விளையாடலாம் என்னா அம்மா தரமாட்டேன் என்னுட்டாங்க...

சரி இப்போ cricket விளையாடனுமே என்ன செய்ய யோசிச்சு எதிர் வீட்டுக்கு போனா அங்க யாருமே இல்லை சரி கூரைமேல ஏறி நாமே எடுக்கலாம் என்னு சொல்லி மேலே ஏறி மெதுவா மெதுவா போய் ballஅ தொட்டதுதான் அப்படியே கூரைய பிச்சுக்கிட்டு balloda உள்ள போய்ட்டேன் கீழே விழுந்த இடத்தில ஒண்ணுமே இல்ல என்னதால நேர நிலத்திலேயே land ஆகிட்டேன் எனக்கும் ஒரு சேதமும் இல்லை அங்க பொருட்களுக்கும் ஒரு சேதமும் இல்லை சரி இப்போ என்ன செய்ய என்னு யோசிச்சு ஒருதடவை வீட்ட சுத்தி வந்தேன் அப்படியே சமையலறைக்கு போய் என்ன இருக்கு என்னு பாத்திட்டு பிறகு அங்க இருந்த பிஸ்கட்ட எடுத்து கடிச்சுக்கிட்டே(என்ன ஒரு வில்லத்தனம்) மெதுவா வீட்ட சுத்தி சுத்தி வந்தேன்.... அப்பத்தாங்க பார்த்தேன் பின் கதவுக்கு உள்பக்கமா lock போட்டிருந்தாங்க அத அப்படியே திறந்திட்டு வெளியே வந்திட்டேன், வந்து கதவை மூடாம அப்பாகிட்ட போய் சொல்ல, அதுக்கு பிறகு அப்பா வந்து எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு... அவங்க போன நேரம் அவங்க வீட்டு kryய எங்க வீட்டில கொடுத்திட்டு போனதால அத use பண்ணி முன்கதவைத்திறந்து அப்படியே உள்ளுக்கு போய் பின் கதவை மூடி பிறகு கூரையையும் fix பண்ணீட்டு முன்கதவையும் மூடி வச்சிட்டு பிறகு அவங்களுக்கு call பண்ணி சொல்லீட்டார்.... அவரும் என் அப்பாட friend, அவர் கூட படிச்சவர் என்னதால பெருந்தன்மையா சரி பரவயில்லை freeயா விடு என்னு சொல்ல, எனக்கு நிம்மதி அதுக்கு பிறகாவது என் அப்பா பெருந்தனமையா விட்டிருக்கலாம்... வீட்டுக்கு வர்ர எல்லார்கிட்டையுமா இத சொல்லி என்னை அவமானப்படுத்தனும்?? ( மானம் என்கிறது இருந்தாத்தானே அவமானப்படுத்த எங்குறீங்களா?? அதுவும் சரிதான்)

Tuesday, July 1, 2008

மனதோரம் சில கீறல்கள்

வணக்கம் வலையுலகமே...!! கடந்த சில பதிவுகளில் இருந்த மொக்கை, லொள்ளு, கிண்டல் என்பன் இந்த பதிவில் இருக்காது... இன்று நான் எழுதும் இந்தப்பதிவு என்னுள் எழுந்த சில கேள்விகளுக்கு நண்பர்களாகிய நீங்கள் சற்றேனும் விளக்கமாக பதிலளிப்பீர்கள் என்பதற்காய், எனக்கு வந்த இந்த சந்தேகம் உங்களில் பலருக்கும் இருக்கலாம்.இன்று, 01 july 2008, இந்த வருடம் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 7 மரணங்களை சந்தித்துவிட்டேன்... அதில் 5 மரணங்கள் cancer நோயினால் சம்பவித்தவை. இது போன்ற மரணங்கள் சாதாரணம் என்றாலும் என்னுள் சில கேள்விகள் தோன்றத்தான் செய்கின்றன. கேள்விகளுக்கு முன் இவ்வுலகைப்பிரிந்தவர்களில் இந்த கேள்விகள் தோன்றக்காரணமானவர்கள் பற்றி சில விடயங்கள் சொல்லிவிட்டு கேள்விகளுக்கு போகலாம் என்று இருக்கிறேன்...

முதலில் என் நண்பனின் சித்தி 34 வயதான இவருக்கு 2 குழந்தைகள் ஒரு குழந்தைக்கு வயது 2, இவர் cancer நோயினால் காலமானார். அடுத்து என் அக்கா வயது 35 இவருக்கு மணமாகவில்லை, சற்றே abnormal ஆனவர் அதாவது சிறுவயது முதலே இவருக்கு சரியாக பேச வராது.இவரும் cancer நோய் காரணமாக காலமானார். அடுத்து என் நண்பர் ஒருவர் வயது 30 இவருக்கும் 2 குழந்தைகள் ஒரு குழந்தைக்கு வயது 1. அடுத்து என் உற்ற நண்பர்களில் ஒருவனெனக்கு தெரிந்து எல்லா வசதிகளும் எந்த வித குறைகளும் இல்லாத ஒருவன் இந்த மரணம் திடீரென நடந்தது. அடுத்து என் இன்னொரு நண்பன் இவனுக்கும் cancer நோயே. அவன் தந்தைக்கும் இந்த நோய் இருந்துதான் அவரும் காலமானார். கடைசியாய் சொன்ன இருவருக்கும் வயது 22 மட்டுமே.

இனி என் கேள்விகள்

இவர்களது மரணத்தை தீர்மானித்தது யார்??

தீர்மானித்தது கடவுள் எனில் இந்த சிறுவயதில் இவர்களை இறக்கச்செய்ய காரணம் என்ன??

நோய் எனில் இந்த நோய் உருவாக காரணம் என்ன??

அந்த சிறு குழந்தைகளின் எதிர்காலம் பற்றி உங்கள் கடவுளின் நிலைப்பாடு என்ன??

நல்லவர்களை கடவுள் சீக்கிரமே அழைத்துக்கொள்வார் எனில் எதற்காக இவர்களாய் படைத்தார்??என்னய்யா system இது எனக்கு சிறிது புரியவில்லை புரிந்தவர்கள் தயவுசெய்து விளக்குவீர்களா??