Friday, July 4, 2008

யாஹுவில் தமிழில் chat செய்யலாம்

வணக்கம் வலையுலக மக்களே... என் நண்பர்கள் பலர் யாஹு மெசஞ்சரை உபயோக்கிறார்கள் ஆனாலும் அதில் யுனிகோட் தமிழில் அரட்டை அடிக்க முடியவில்லை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.... நானும் வெகு காலமாக முயன்று பார்த்தேன் முடியவில்லை... பின் ஏதோ வலைத்தளத்தில் அது முடியும் என வாசித்தேன் முயன்றும் பார்த்தேன் சரியாக வந்தது. சரி என்று அதனை bookmark செய்தும் வைத்தேன்... பின் எனது கணனியினை format செய்யும்போது அந்த bookmarkகளை save செய்யாமல் அழித்துவிட்டேன்... பின் இன்று ஏதோ நினைவு வர திரும்பவும் அதனை முயன்று பார்த்து சரி வந்துவிட்டது.... தெரிந்ததை நான் மட்டும் வைத்திருந்தால் நல்லதல்ல என்பதால் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்



முதலில் உங்கள் கணனியில் e-கலப்பை போன்றதொன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.(நான் உபயோகிப்பது e-கலப்பை. அதற்கு மட்டும்தான் சரி வருகிறதோ தெரியவில்லை அதோடு நான் எனது Operating System XP, vistaவில் வேலை செய்கிறதா என்னவோ தெரியவில்லை) e-கலப்பையை நிறுவியபின் யாஹு மசெஞ்சரில் log in ஆகி அதில் preferenceய் தெரிவு செய்யவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற ஒரு புதிய window திறக்கும்..







அதில் appearanceய் தெரிவு செய்யவும் அதில் change font & colors என்பதைத்தெரிவு செய்யவும்.... அப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டிருப்பது போல் ஒரு புதிய window திறக்கும்..





அதில் fontஇல் TSCu_Paranar.ttf என்னும் fontஇனை தெரிவு செய்து okவினை கிளிக் செய்யவும்.... பின் preferanceல் okவினை கிளிக் செய்து சாதாரணமா யாஹூ மெசெஞ்சரில் அரட்டை அடிக்கும்போது யுனிகோடினை தெரிவு செய்து தமிழி டைப்பண்ணினால் கீழே உள்ளது போல் தமிழில் அழகாக வரும்







font தேவையானவர்கள் இங்கே download பண்ணிக்கொள்ளுங்கள்



16 பதிலகள்:

ஆ.கோகுலன் said...

தகவலுக்கு நன்றி..!

இவன் said...

//தகவலுக்கு நன்றி..!//

முதலதடவையாக வந்திருக்கிறீங்க வருகைக்கு நன்றி கோகுலன்

....$Vignesh said...

பயனுள்ள தகவல், மிக்க நன்றி

இவன் said...

//பயனுள்ள தகவல், மிக்க நன்றி//

வாங்க விக்னேஷ் நீங்களும் முதல் தடவையா வந்திருக்கீங்க வருக வருக

Divya said...

thanks for sharing :))

இவன் said...

//thanks for sharing :))//
வாங்க திவ்யா வருக வருக

Selva Kumar said...

தகவலுக்கு நன்றி..

அப்படியே சாட்டர்ஸ் லிஸ்ட் ஒன்னு போட்ருங்க...

இவன் said...

//பகிர்வுக்கு நன்றி...//

வாங்க தமிழன்

இவன் said...

//தகவலுக்கு நன்றி..

அப்படியே சாட்டர்ஸ் லிஸ்ட் ஒன்னு போட்ருங்க...//


ங்ண்ணா என்னாங்ண்ணா நீங்க கேட்டு போடாமலா??? போட்டுட்டா போச்சு ஆனா அதில முழுக்க முழுக்க ஆம்புளை பசங்க addressஆத்தான் போடுவேன் பரவாயில்லையா??

Selva Kumar said...

//ஆனா அதில முழுக்க முழுக்க ஆம்புளை பசங்க addressஆத்தான் போடுவேன் பரவாயில்லையா??
//


சரிங்கண்ணா....உங்கள மாதிரி 4 நல்ல நண்பர்கள் போதுங்ண்ணா....

நம்மால முடிஞ்ச தத்துவம்ஸ்...

பெண் நண்பர்கள் - Nice to Have
ஆண் நண்பர்கள் - Necessary to Have.

கயல்விழி said...

தமிழுலகுக்கு நீங்கள் செய்யும் சேவையை ரொம்ப பாராட்டுகிறேன் இவன். :) :)

இவன் said...

//தமிழுலகுக்கு நீங்கள் செய்யும் சேவையை ரொம்ப பாராட்டுகிறேன் இவன். :) :)//

வாங்க கயல்விழி ஏதோ என்னால முடிஞ்சது.... அடுத்தவங்களுக்கு அநியாயம் பண்ணுறதென்றால் யோசிக்கவே கூடாது

இவன் said...

//சரிங்கண்ணா....உங்கள மாதிரி 4 நல்ல நண்பர்கள் போதுங்ண்ணா.....//

அது சரி இதத்தான் பட்டும் திருந்தாதவங்க என்னு சொல்லுறது

//நம்மால முடிஞ்ச தத்துவம்ஸ்...

பெண் நண்பர்கள் - Nice to Have
ஆண் நண்பர்கள் - Necessary to Have.//


அடடா என்ன தத்துவம் என்ன தத்துவம் ங்கண்ணா இது உங்க எத்தனையாவது தத்துவம்??

கயல்விழி said...

//வாங்க கயல்விழி ஏதோ என்னால முடிஞ்சது.... அடுத்தவங்களுக்கு அநியாயம் பண்ணுறதென்றால் யோசிக்கவே கூடாது//

அருமையான பொன் மொழி "அடுத்தவர்களுக்கு அநியாயம் பண்ண யோசிக்கவே கூடாது" இதை நினைவு வைத்திருந்து வேறு எங்கேயாவது யூஸ் பண்ணிக்கட்டா?

கயல்விழி said...

//வாங்க கயல்விழி ஏதோ என்னால முடிஞ்சது.... அடுத்தவங்களுக்கு அநியாயம் பண்ணுறதென்றால் யோசிக்கவே கூடாது//

அருமையான பொன் மொழி "அடுத்தவர்களுக்கு அநியாயம் பண்ண யோசிக்கவே கூடாது" இதை நினைவு வைத்திருந்து வேறு எங்கேயாவது யூஸ் பண்ணிக்கட்டா?

இவன் said...

//அருமையான பொன் மொழி "அடுத்தவர்களுக்கு அநியாயம் பண்ண யோசிக்கவே கூடாது" இதை நினைவு வைத்திருந்து வேறு எங்கேயாவது யூஸ் பண்ணிக்கட்டா?//

இதெல்லாம் copyright பொன்மொழிகள் அதிகமா யூஸ் பண்ணாம அளவா யூஸ் பண்ணிக்குகுங்க