Monday, June 22, 2009

நடிகர் விஜய் ஒரு வலையறிமுகம்

வணக்கம் மக்களே.....
இன்னைக்கு நம்ம இளைய தலவலி sorry தளபதி விஜய்க்கு பிறந்த நாளாம்.... சரி அவருக்கு ஏதாவது பரிசு(ஆப்பு) கொடுக்கலாம் என்னு யோசிச்சு பார்த்ததில ஞாபகத்தில வந்ததுதான் இந்த குழுமம்...

நான் அடிக்கடி facebook என்ற நண்பர்கள் வலைப்பதிவுக்கு போறதுண்டு.... அப்படி போய் ஒருமுறை விஜய் என்னு தேடிப்பார்த்ததில வந்ததுதான் இந்த குழுமம் சும்மா சொல்லக்கூடாது சும்மா வைச்சு வாங்கி இருக்காங்க...  இப்படி பல குழுமங்கள் உள்ளது

1.விஜய்க்கு வெடி வைப்போர் வலையமைப்பு [V.V.V.V]
2.கோமாளி நாயகன் விஜயின் சிரிப்புமன்றம்
3.ஏய்....! சைலன்ஸ்.....!! (by இளைய தளபதி)
4."வில்லு" பார்த்து நொந்தவர்கள் சங்கம்
5.Hate vijay 


இப்படி நீண்டுகொண்டே போகுது... அதில உள்ள படங்களில் சில கீழே... பார்த்து நீங்களும் ஏதாவது சொல்ல இருந்தா சொல்லீட்டு போங்க.....

அம்மா என்னது குருவி part-2வா?? டேய் உனக்கு ஏண்டா இந்த கொலைவெறி??

நீ மகேஷ்பாபு படத்தான் copy அடிக்கிற என்கிறது தெரியும் அதுக்காக இப்படி பிச்சையெடுத்தா அடிப்பாய்??
டேய் நீ மாகேஷ் பாபுவ மட்டும்தான் அடிக்கிறாய் என்னு நினைச்சிருந்தேன்... இந்த இத்துப்போன மண்டையனையுமாடா??

ஆஹா உனக்கு மனசாட்சியே இல்லையா??



 
கடைசியா ஒண்ணே ஒன்னு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.....

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்...
இனியாவது நம்ம தலைவர் ஜே.கே.ரித்தீஷ் இல்லாட்டி உலக நடிப்பு புயல் சாம் அண்டசன் மாதிரி நல்ல படங்களா தேடி நடிங்க.....

Wednesday, June 10, 2009

தோரணை என்னைப்பிடித்த 7-1/2

என்ன கொடுமைய்யா இது நானும் மொக்கைப்படங்களே பார்க்க கூடாது என்னு எவ்வளாவுதான் நினைச்சாலும் இது விதி இருக்கே விதி அது ரொம்ப வலியது என்னு நிறுபிச்சிடுச்சு... யம்மே முடியல்ல சும்மா சொல்லக்கூடாது... ரொம்ப நல்லாவே மொக்கையப்போட்டிருக்கானுங்க.......

கதை இதுதான்.... ஆரம்பத்திலேயே 2 பெரிய ரவுடிங்க ஒருத்தர் பிரகாஷ்ராஜ் (ஏன் ஏன் பிரகாஷ்?? மொக்கை படத்தில நடிங்க ஆனா இவ்வளவு மொக்கைப்படத்தில வேனாமே நாங்க கொஞ்சம் பாவம் இல்ல??) மத்தவரு படிக்காதவன் கிஷோர் (ஏன்ய்யா நல்லாத்தானே இருந்தீங்க நீங்க ஏன் இந்த படத்தில??) 2 பேரும் சேர்ந்து மாறி மாறி கொலை பண்ணுறானுங்க படத்திலதான்.... நம்மல கொலை பண்ண இன்னும் விஷால் வரல அவசரப்படாதீங்க....
அப்போ கிஷோர் பண்ணுற கொலையை ஊருக்கு புதுசா வர்ர விஷால் பாத்துர்ராரு.... அப்போ ஒரு கொசுவர்த்தி(flashback) திருவிழால சண்ட போட வந்து அதில ஒரு பில்டப்ப போட்டு பிறகு பஞ்சாயத்தாயி அதில........ வேணாங்க முடியல..... சிம்பிளா சொல்லீர்ரேன் தொலைஞ்ச அண்ணன தேடி தம்பி சென்னை வந்து அங்க லவ் ஆகி அண்ணன கண்டுபிடிச்சு பிறகு அங்க இருந்து எப்படி அவர் சொந்த ஊருக்கு கூட்டீடு போறார் என்கிறத கொஞ்சம் சாமி, சிவகாசி, ரன்,மலைக்கோட்டை, தூள், கரகாட்டகாரன், அழகியதமிழ் மகன் என்னு பல படங்கள கலந்தடிச்சு ஒருமாதிரி கொஞ்சம் பஞ்ச் லயலாக் அடிச்சு எங்களையும் பஞ்சாரக்கி வெளிய அனுப்புறானுங்க



படத்தில ஒரு பஞ்சாயத்துசீன்ல பெரியகருப்புத்தேவர் ஏதோ சொல்ல அதுக்கு விஷால் "பெரிசு லாஜிக்கே இல்லாம பேசுது"ன்னு அடிக்க போறாரு... ஏண்டா டேய் நீ லாஜிக் இல்லாத படத்தில நடிக்கும்போது அந்தாள் லாஜிக் இல்லாம பேச கூடாதா??
அது என்னங்கடா படத்தோட breakக்கு அப்பறம் எல்லோருமே தோரணை தோரணை என்னு கத்திக்கிட்டே இருக்கீங்க.... அப்படி தோரணை தோரணை என்னு சொல்லிக்கிட்டு இருந்தாத்தான் படம் பேர் ஞாபகம் இருக்கும் எங்கிறத்துக்காகவா?? ஆரம்பத்தில "புரட்சித்தளபதி" என்னு போடும் போதே நான் escape ஆகியிருக்கனும்.... என் விதி மாட்டிக்கிட்டேன்..... படத்தில அடிக்கடி சந்தானம் வேற "ஊருக்கு போ ஊருக்கு போ"என்னு விஷால சொல்லும் போதே எனக்கு புரியல அது எங்களுக்குத்தான் படத்த நிறுத்தீட்டு போ சொல்லுறார் என்னு.... படத்தில பிரகாஷ்ராஜ் விஷால மிரட்டீத்து போனப்பிறகு கிஷோர் வந்து மிரட்டுவார்... அப்போ சொல்லுவார் "அந்த குரு பார்த்தா நல்லது, இந்த குருவ பார்க்காம இருக்கதுதான் நல்லது" என்னு அப்போ புரியல படத்த பார்க்காம இருக்கதுதான் நல்லது எங்கிறதத்தான் symbolicஆ அப்படி சொல்லுறானுங்க என்னு பிறகு  படம் முடியும் போதுதான் புரிஞ்சுது.... டேய் நீங்க செஞ்ச இவ்வளவு செஞ்சதக்கூட தாங்கியிருப்பேன் ஆனா அந்த இத்துபோன மண்டையன் விஜய் நடிச்ச இத்துப்போன படம் "அழகியதமிழ் மகன்" அதக்கூட பார்த்து திரும்ப எடுத்திருக்கியேடா வெண்ணை..... உன்னை என்னன்னு சொல்லுறது......



பஞ்சாயத்து சீன்ல பஞ்சாயத்து தலைவர் "எல்லா செலவையும் கூட்டி கழிச்சு 7-1/2 வருது" என்னு சொல்லுவாரு அந்த 7-1/2 இந்த படம்தான் எங்கிறத முதல்லயே அவனுங்க சொல்லியும் நான் தொடர்ந்து பார்த்தேன் பாருங்க என்ன சொல்லனும்.....  





சத்தியம் படத்திலதான் இப்படி ஒரு 7-1/2 அனுபவிச்சியே பிறகு ஏண்டா இந்த படத்தை பார்த்த என்னு நீங்க கேட்கிறது புரியுது என்ன செய்ய ஷ்ரயாவுக்காக இந்த படத்த பார்க்க வேண்டி வந்திருச்சு... சந்தானம், பறவை முனியம்மா comedy கொஞ்சம் நல்லா இருந்திச்சு...
மொத்தத்தில படத்தில comedy மட்டும் பார்த்துட்டு escape ஆகுறது உங்க உடம்புக்கும் மனசுக்கும் நல்லது.... கடைசியா விஷால்கிட்ட ஒரே ஒரே கேள்வி "விஷால் அண்ணா விஷால் அண்ணா உங்க சம்பளம் எவ்வளவுங்கண்ணா??" டேய் ஒழுங்கு மரியாதையா அதில 1/4 தந்திடு இல்ல மவனே அவ்வளவுதான்.... எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படத்த பார்த்திருக்கேன் அதுக்காகவாவது தந்திடுடா டேய்....



படங்கள் - நன்றி indiaglitz

Tuesday, June 9, 2009

இவ்வளவு நாள் என்ன செய்தேன்....??

சரியா 6 மாதம் ஆச்சுது... இன்னைக்குத்தான் என் மோகம் லைட்டா குறைஞ்சிருக்கு என்னு நினைக்குறேன்..... பதிவுலம் பக்கம் வரவிடாம செஞ்ச அந்த மாய மோகினிதான் கீழ படத்தில இருக்கிறா....





இவள வாங்கினதில இருந்து சும்மா 1 மாசத்திலேயே 1000km ஓடி முடிச்சிட்டேன்... இப்போ ஒரு 5000kmக்கு மேலே ஓடியிருப்பேன்... இப்பத்தான் மோகம் குறைஞ்சு மத்த வேலையெல்லாம் கொஞ்சம் ஒழுங்கா பார்த்துக்கிட்டு இருக்கேன்.... 6 மாத வேலை இருக்கு நம்மக்கு என்ன வேலை படிக்கிறதுதான்.... அத முதல்ல மட்டும் ஏதோ ஒழுங்கா படிச்சுக்கித்து இருந்தமாதிரி என்னு நீங்க கேட்டுகிறது புரியுது.... ஆனா என்ன செய்ய அப்படி சொல்லித்தானே ஊரை இவ்வளவு நாள் ஏமாத்திக்கிட்டு இருக்கேன்.... 

அதுதான் போனியே அப்படியே போயிருக்க கூடாதா என்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது இருந்தாலும்..... உங்கள எல்லாம் பழிவாங்கிறத விட எனக்கு வேற என்ன முக்கிய கடமை எனக்கு இருக்குது?? அதனால நான் சொல்ல வாரது என்னான்னா இனிமே மாதத்தில குறைந்தது ஒரு 3 இல்லாட்டி 4 பதிவு நிச்சயமாக உங்களை இம்சைப்படுத்தும்.... வரட்டா??