Monday, December 8, 2008

ஆஸ்திரேலியா என் கனவு தேசம்......-1

வணக்கம் நண்பரகளே... கொஞ்ச நாளா என் தொல்லை இல்லாம இருந்திருப்பீங்க... ஆனா இப்போ மறுபடியும் ஆரம்பிச்சிட்டேன்... ரொம்ப நாளா வருண் மற்றும் கயல்விழி எழுதுவது (காதல் கல்வெட்டு) போல் ஒரு தொடர் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் அதிகமா flight தள்ளுறவேலை இருந்ததால(இது புரியாத்வர்கள் இந்த லிங்கில் போல் பார்க்கவும் - http://manathoodu.blogspot.com/2008/08/blog-post_26.html)) பதிவு எழுதவே முடியல வேலைவில இருக்க நேரம் இந்த பதிவு நினைப்பிலேயே போய் flightஐ மோதி அதன் indicator, மற்றும் propellerஐ உடைத்த சம்பவங்களும் உண்டு... அதைப்பற்றி பிறகு விபரமா இன்னொரு பதிவில சொல்லுறேன்.... இப்போ இந்த பதிவுக்கு வர்ரேன்....


இந்த பதிவில்(தொடரில்) நான் எழுதப்போவது இந்த ஆஸ்திரேலியா எனக்கு கனவு தேசமானது என்பதைப்பற்றியும் அதை நான் நிறைவேற்றிக்கொண்டேன் என்பதைப்பற்றியும்.... எல்லா மகன்கள் மாதிரியே எனக்கும் என் அப்பாதான் ஹீரோ என்றைக்கும் எப்பவும் அவர்தான் எனக்கு ஹீரோ... நான் 5ம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த போது நாங்கள் வசித்த ஊரின் பெயர் தலவாக்கொலை. எனது school vice principalஆக இருந்த அப்பாவுக்கு கல்விப்பணிப்பாளராக பதவி உயர்வு. இந்த பதவி உயர்வும் கயாஸ் தியரியாய் மாறி என் கனவுக்கு வித்திட்ட ஒன்றாக இருக்கலாம்... அந்த நேரத்தில் ரண்பிம றோயல் கல்லூரி என்ற schoolக்கு தேர்வு பரிட்சை எழுத என்னை அம்மா கண்டி நகருக்கு அழைத்து போனார். அது ஆண்கள் பாடசாலை என்பதால் நானும் எனது நண்பர்களும் பரிட்சை எழுதப்போய் எனது பாடசாலையில் நான் மட்டும் தெரிவானேன். அந்த நேரத்தில் நான் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் ஏற்கனவே மாவட்ட ரீதியில் முதல் மாணவனாக வந்திருந்த காரணத்தால் அம்மாவுக்கு என்னை வேறு ஒரு பாடசாலையில் சேர்த்து நான் படிப்பில் இன்னும் அதிகமாக முன்னேற வேண்டுமென ஆசை, அப்பாவுக்கும்தான் ஆனாலும் அவருக்கு என்னை வேறு பாடசாலைக்கு அனுப்புவதில் விருப்பமில்லை.

1996 மார்ச் மாதம் புது பாடசாலை புது நண்பர்கள் hostel வாழ்க்கை என புது வாழ்க்கை ஆரம்பம். முதல் நாள் அப்பா என்னை கூட்டி வந்து hostelலில் விட்டு திரும்ப வீட்டுக்கு அதாவது தலவாக்கொலை செல்லும் போது என் அப்பா என்னை விட்டு அதிக தூரம் விலகிப்போவது போல் இருந்தாலும் மனதளவில் அருகில் மிக அருகிலேயே இருந்தார். வாரத்தில் 5 நாள் வேலை இருந்தாலும் சனிக்கிழமையானால் அதிகாலை 3 மணிக்கு எழுந்து hostelக்கு வந்து எனது உடைகளை துவைத்து தருவது போன்று ஒவ்வொரு சிறு சிறு விடயங்களையும் பார்த்து பார்த்து செய்தவர் என் அப்பா. 
 அது ‘96 செப்டெம்பர் மாத ஆரம்பம் என் அப்பா எங்கள் எல்லோரையும் விட்டு முதன்முதலில் கடல் கடந்து வேறு வழியின்றி பிரிந்து செல்லப்போகும் மாதம். ஆஸ்திரேலியா என்னுடன் கிரிக்கட் தாண்டி உறவினை வலுப்படுத்திக்கொள்ள இந்த முதல் பிரிவு வழி அமைத்துக்கொடுத்தது.....


தேசக்கனவுகள் தொடரும்