Monday, October 27, 2008

உறவுகளுக்காக........(ஈழம்)

உறவுகள் அழியும் நேரம்
உணர்வின்றி நாமிருந்தால்
உடமைகள் மட்டுமன்றி
உயிர்களும் தொலைந்து போகும்
உலகமோ பாராமுகமாய்
நம் உறவுமோ
உலர்ந்த நிலையாய்-அங்கு
உயிர்களும் அழிந்து போகும்
உரத்து நாம் குரல் கொடுப்போம்
இன்றேல் - நம்
இனத்தினை நாமே
இன்று அழித்திட்டோம் என்று
நாளை சரித்திரம்
சான்று கூறும்......

முத்தம்



சோர்ந்திருக்கும் போது
ஆயிரம் யானை
பலம் தருகிறதடி...!!
கைபேசி வழியே
நீ தந்த
முத்தம்...!!


RED BULL
நிறுவன
சொந்தக்காரி
நீயோ....??

Friday, October 24, 2008

பாபாவுக்கு ஒரு "ஓ" பொலிஸ்காரருக்கு ஒரு "ஓ"

என்னை சினிமாத்தொடருக்கு அழைத்த வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தலைவி ராப் அவர்களுக்கு மீண்டும் நன்றி ஏன் என்னா என்னோட பழைய ஞாபகம் ஒன்றையும் கிளறிவிட்டது... அதைப்பற்றித்தான் இந்த பதிவு....

நான் அப்போழுது இலங்கையில் இருந்த நேரம்... இலங்கையில் படித்த ஒரு சாதாரண மாணவன் 3 பெரும் பரிட்சைகளை முகம் கொடுத்தாகவேண்டும். முதலாவது 5ம் ஆண்டில் ஒரு பரிட்சை இது 5ம் ஆண்டு புலமைப்பரிசில் எனப்படும். 2வது 11ம் ஆண்டு முடிவில் G.C.E Ordinary level எனப்படுகிற கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரிட்சை, இந்த பரிட்சை செய்து இதில் சித்தி அடைந்தால் மட்டுமே G.C.E Advance Level எனப்படுகிற உயர்கல்விப்பொதுத்தராதரம் எனப்படுகிற அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்படுவர் அதன் பின் கல்விபொதுத்தராதர உயர்தரப்பரிட்சையில் சித்தி அடைந்து உயர் பெறுபேறு எடுத்தால் மட்டுமே பல்கலைகழக அனுமதி கிடைக்கும். அப்படிக்கிடைக்காதவர்கள் என்னைப்போல் வெளிநாட்டில் வந்துதான் பல்கலைக்கழகத்தில் படித்தாகவேண்டும். அதில் சிலர் போதிய பெறுபேறு பெற்றவர்களாகவும் இருக்கலாம் அல்லது அதி உயர் பெறுபேறு பெற்றவர்களாகவும் இருக்கலாம். இலங்கை மாணவர்கள் அநேகர் வெளிநாடுகளில் வந்து இளங்கலைப்பட்டப்படிப்பு கற்பதற்கும் இதுவே காரணம். இனி கதைக்கு வருவோம்


அப்படி நான் G.C.E A/L ஆரம்பித்து கொஞ்ச நாளின்பின்தான் "பாபா" எனப்படுகிற தலைவர் ரஜினியின் அழியாக்காவியம் வெளிவந்தது. "படையப்பா" வெற்றிக்குப்பின் வெளிவர்ர ரஜினியின் படம் சரியாக 3 ஆண்டுகள் இடைவெளியின் பின் வெளிவரும் படம் அதனால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால ஒரு 15 முதல் 20 நண்பர்கள் சேர்ந்து படம் பார்க்க school cut அடித்து படத்துக்கு போக முடிவெடுத்தோம்... ticket கிடைக்குமா என்கிற சந்தேகத்தில் முதல் நாள் இரவு ஒரு 12, 1 மணிபோல போய் வரிசையில நிக்கிற இடத்தில ஒரு பாயைப்போட்டு அதில ஒரு மனிதன் படுத்திருப்பதுபோல் தயார்செய்து வைத்துவிட்டு வந்திட்டோம். அடுத்தநாள் காலை எதுக்கும் என்று 10.30 காட்சிக்கு ஒரு 8 மணிக்கே எல்லோரும் போய் வரிசையில நிற்க ஆரம்பித்தோம் பார்த்தால் 9 மணிவரைக்கும் எங்கள் கூட்ட்த்தைதவிர ஒரு ஈ,காக்காவைக்கூட காணவில்லை... அட தியட்டர்க்காரனே 9 மணிபோலதான் வந்தான்.... பின் கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வர ஆரம்பித்தது.... அப்பத்தான் எங்களைப்போல எவ்வளவுபேர் வேலைவெட்டி இல்லாம இருக்கனுங்க எங்கிறதே புரிந்தது.... சரி வந்திட்டனுங்க என்னு அவனுங்களையும் ஜோதில சேர்த்துக்கிட்டோம். நாங்க பண்ணின அலப்பரை பஸ்ஸில போறவங்க எல்லாம் ஜன்னலால எட்டிப்பார்த்து ஏதாவது கட்சிக்கூட்டமா என்னு பார்க்கிற அளவுக்கு இருந்தது.


தியட்டர்க்காரனும் எவ்வளவு நேரம்தான் பொறுமை இருப்பான்... சரி வராம ஒரு ஒரு 10 மணி போல பொலிஸ்காரர்களை கூப்பிட்டான்.... பொலிஸகாரர்களும் வந்து இறங்க அனைவரும் கப்சிப் அவ்வளவு பேரும் அமைதியானோம்.... வந்து இறங்கின பொலிஸ் அப்படியே பேசாம வெளியவே இருந்திருந்தால் இந்த பதிவு எழுதவேண்டிய அவசியமே வந்து இருக்காது.வந்தவங்க நேரா தியட்டர் உள்ளவே போனார்கள். அட இவனுங்க ஒன்னும் செய்ய மாட்டானுங்க எங்கிற ஒரு தைரியத்தில மீண்டும் கத்த ஆரம்பித்தோம். சரியா 10.15க்கு எனக்கு அப்போதான் ராகு காலம் ஆரம்பித்தது என்னு நினைக்கிறேன். சனி வந்து நாக்கில குடியிருந்த நேரமும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். சும்மா இருக்க முடியாம எல்லோரும் அமைதியான நேரம் நான் பலமா "பாபாவுக்கு ஒரு ஓப்போடு" என்று கத்த அங்க இருந்து வந்த பொலிஸ்காரன் நேர என்கிட்டவே வந்து விட்டன் ஒரு அடி சும்மா கிண் என்னு ஒரு 10 பிரியாணி ஒன்னா சாப்பிட்ட மாதிரியே இருந்திச்சு...  அதுக்கு பிறகுதான் மத்தவங்கள கவனிக்க ஆரம்பிச்சான். அதில ஒருத்தன் செருப்ப எடுக்க போக அவன அடிக்க வந்த பொலிஸிட்ட வீர வசனம் பேச அவனுக்கு அடி.... இப்படியெல்லாம் அடிவாங்கி கடைசியா படத்த பார்த்துவெறுத்துப்போய் வெளிய வந்தோம்

வந்த நேரம் எங்க கூட்டத்தில இருந்த ஒருத்தன்கிட்ட போய் தெரியாத்தனமா "படம் எப்படி இருந்திச்சு மச்சி??" என்னு கேட்டுட்ட்டேன்... அதுக்கு அவன் சொன்னான் ஒரு பதில் பாருங்க அதுதான் வாழ்க்கையில எனக்கு மறக்க முடியாதது... என்ன பதில் என்னு கேக்குறீங்களா??

"படம் சூப்பர் மச்சி...படையப்பாவ விட நல்லா இருந்திச்சு..... "

எப்படி இருந்திருக்கும் எனக்கு???

Monday, October 20, 2008

உயிர் வாழ வழி தேடி

வன்னியில் வாழ்வா சாவா என வாழ்க்கைக்கே போராடிக்கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்காய் நாம் தான் என்ன செய்யமுடியும்? ஆனாலும் எங்கள் நாட்டு மக்கள் இப்படியே அழிவதை பார்த்துக்கொண்டிருக்க போகிறோமா?

ஓர் ஈழத்தமிழனாய் என் இதயமும் ........

Friday, October 17, 2008

சினிமாத்தொடர்

தெரியாத்தனமா என்னை இந்த தொடருக்கு அழைத்த வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தலைவி ராப் அவர்களுக்கு நன்றி

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

in 1956 சே சே நான் முதல் சினிமா பார்த்தது நான் நினைக்கிற மாதிரிக்கு 1987ல நான் முதல்முதல்ல பார்த்த படம் M.G.Rன் "ரிகஷா மாமா" என்னு நினைக்குறேன்...


1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா

நினைவு தெரிஞ்சு பார்த்த படம் எது என்னு கூட எனக்கு ஞாபகம் இல்ல... ஹி  ஹி ஹி என்ன செய்ய என் ஞாபகசக்தி அப்படி....

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

ஞாபகமே இல்ல எங்குறேன் இதில என்ன உணர இருக்குது??

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ஆஹா அந்த ஞாபகப்படுத்திர மாதிரி இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நான் அழுதிடுவேன்.... ஆமா அப்படி என்ன படம் என்னு கேக்குறீங்களா?? வேற என்ன "குருவி"தான் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அதுவும் கொடுமைதான் வேற என்ன "துரை, துரை" என்னு அர்ஜுன் நடிச்ச படம்தான் என்ன செய்ய என் நிலைமை அப்படி....


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

ஆங் அதுவா நம்ம தலைவரோட "பாபா" வேற ஒன்னும் இல்லைங்க "பாபா" படம் பார்க்க போன போது தலைவர் படமாச்சே என்னு சொல்லி முதல் showக்கேஒரு 20 பசங்க சேர்ந்து போய் பார்த்தோம்... 10.30 மணிக்கு showக்கு 8 மணிக்கே போய் லைன்ல நின்னுட்டோம்... கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் சேர  கொஞ்சம் கொஞ்சமா உற்சாகம் அதிகமாகி  நானும் ஒரு 10 மணி போல வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாம "பாபாவுக்கு ஒரு ஓ போடு" என்னு கத்த பசங்களும் "ஓ" கத்தி வைச்சானுங்க.... அதுவரைக்கும் சும்மா இருந்த போலிஸ்காரன் அதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாம வந்து எனக்கு விட்டான் பாருங்க ஒரு அடி அதுதான் என்னைத்தாக்கிய தமிழ்சினிமா


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க.... அரசியலுக்கும் எனக்கு சம்பந்தமே இல்லைங்க...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

அபூர்வசகோதரர்கள்தான்...வேற ஒன்னுமே ஞாபகமே வரலிங்க என்ன செய்ய ஹி ஹி ஹி

6-தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஆங் நிறைய வாசிக்கிறதுண்டு... தமிழ்சினிமா.com, tamil.cinesouth.com,thatstamil.com அப்பறம் விகடன் அவ்வளவுதான்

7. தமிழ்ச்சினிமா இசை?

அது கேட்க நல்லாத்தாங்க இருக்குது... ஆனா என்ன செய்ய முக்காவாசிப்பேர் வேற மொழிகளில் இருந்துதான் சுட்டு போடுறாங்க... அதப்பற்றி முதல்லயே ஒரு பதிவு போட்டிருக்கேன், இங்க பாருங்க


8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஆங் பார்க்கிறதுண்டு... தெலுகு படம் பார்ப்பேன்... ஆங்கிலப்படம் பார்ப்பேன்.... இருந்திட்டு இருந்திட்டு பதிவுலகத்தில நல்லா இருக்கு என்னு சொல்லுற வேற்று மொழிப்படங்களும் பார்ப்பதுண்டு...

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

city of god, பொம்மரிலு,My Sassy Girl, oldboy, தாரே ஸமீன் பர் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆஹா அப்படி எல்லாம் ஒரு சம்பந்தமும் இல்ல...


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கு என்ன நல்லாதான் இருக்கும்... இப்ப எல்லாம் அனேகமானவர்கள் யார் நடிகர்கள் என்னு பார்த்து படம் பார்க்கிறத விட்டு இப்பல்லாம் யார் டைரக்ட்ர் என்னு பார்த்து படம் பார்க்கிறாங்க... அதோட "பாலா, அமீர், சசி, வெற்றிமாறன், கெளதம் மேனன்" என்னு பலபேர் இருக்காங்க தமிழ்சினிமாவ காப்பாத்த...



11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழன் திருந்திடுவான் என்னு நினைச்சா தப்பு... மறுபடியும் பக்கத்துவீட்டு சமாச்சாரம், மற்றும் வேற் பல கிசு கிசுல மூழ்கிடுவான். அப்படி பேசுறதில நானும் இருப்பேன்... அதாவது நானும் பேசிக்கிட்டு இருப்பேன் ஹி ஹி ஹி

நான் இதைத் தொடர அழைப்பது,
யாரைங்க அழைக்க பில்கேட்ஸ்யோ இல்ல, புஸ்ஸையோ அழைக்கலாம் என்னா அவங்களுக்கு தமிழ் தெரியாதே. அதனால

சரவண குமார் MSK
புனிதா கைலாஷ்
கிரி
திவ்யா
வருண் இல்லாட்டி கயல்விழி
தயா

அவ்வளவுதாங்க

Thursday, October 16, 2008

ஒரு புகைப்பிடிப்பாளனின் வயிற்றெரிச்சல் இது....

இவனே தம் அடிக்கிற மொள்ளமாரி இவனுக்கென்ன feelings என்னு பாக்குறீங்களா?? என்னங்க செய்ய என் நிலமை அப்படி....



இவ்வளவு நாள் நான் உண்டு என் Dunhill blue உண்டு என்று நிம்மதியா இருந்தேன்.... கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு friend ஒருத்தி கிடைச்சா... ஏதோ ஒரு தடவை தம் அடிக்கிற் நேரம் அவ phoneல "என்ன செய்யுறா" என்னு யதார்த்தமா கேக்க நானும் தெரியாத்தனமா "தம்மடிச்சுகிட்டு இருக்கிறேன்" என்னு சொல்லிட்டேன்... அன்னையில இருந்து "நீ ஒரு தமிழ் பொண்ண தம் அடிக்க வைக்க பாக்கிறா... அதனால தம்மடிக்கிறத நிறுத்தீடு இல்லன்னா நானும் ஆரம்பிச்சிடுவேன்" என்னு சொல்லி மிரட்ட ஆரம்பிச்சா...



வேற வழி இல்லாம நானும் சரி வர்ர October 12 அன்னைக்கு தம்மடிக்கிறத நிறுத்துறேன் என்னு சொல்லிட்டேன்... அது என்ன October 12th என்ன நல்ல நாளா என்னு கேக்குறீங்களா?? வேற ஒன்னும் இல்லைங்க என் அப்பாவோட பிறந்த நாள் அதுதான்... நாங்கல்லாம் யாரு வேலுநாயக்கர் மாதிரியாக்கும்... கொடுத்த வாக்க மீற மாட்டமாக்கும் அதனால வேற வழி இல்லாம October 12 வரைக்கு கொஞ்சம் கொஞ்சமா தம்மடிக்கிறத குறைச்சு குறைச்சு ஒரு மாதிரி October 12 அன்னைக்கு முழுசா நிறுத்தீட்டேன்... அதனால இனி யாருமே எனக்கு முன்னாடி தம்மடிச்சோ இல்ல என்கிட்ட தம்ம பத்தி பேசியோ என் வயித்தெரிச்சல கொட்டிகொள்ளக்கூடாது என்பதை 2 தம்மடிச்சு முடிச்ச சந்தோஷத்தோட சொல்லிக்கொள்கிறேன் அம்புட்டுத்தான்..

Monday, October 13, 2008

முதலிரவு 16+

கொஞ்ச நாளா நான் பதிவே எழுதல... இப்படியே விட்டா போன மாதம் மாதிரி வெறும் 3 பதிவோட போயிடும் அதனால என் நண்பன் ஒருத்தன் எழுதின கவிதை எடுத்து சுட்டு போட்டிடலாம் என்னு முடிவு செஞ்சு இன்னைக்கு பதிவேற்றுகிறேன்... அதாவது அவன் கவிதையை சுட்டு இங்க போடுறேன்



முதலிரவு என்றதால்
நெஞ்சில் படபடப்பு;
கொஞ்சம் பரபரப்பு.


எத்தனையோ பாதிநாட்களை
படுக்கையில் கழித்த எனக்கு,
அன்று ஏனோ
அரை அவுன்ஸ் ஏக்கம்
மனதில் மகுடி வாசித்தது.


விளக்கணைத்து -இருளின்
விரல் பிடித்து ஏதோ
போருக்கு போவது போல
போர்வைக்குள் போனேன்.


சாய்ந்த மாத்திரத்திலேயே
காதுக்குள் அவள் சொன்ன
சிருங்கார மொழியும்
சிக்கன சிணுங்கலும்
புரியாமல் தலையசைத்தேன்.


ஓயாத அவள் பசிக்கு
ஓவ்வாத ஜென்மமாக
சுருண்டு விட்டேன்.


ஆனால்,
அவளோ விடவில்லை.


போர்வைக்குள் நீச்சலடித்தேன்;
கைகளோ படபடத்தன;
கால்களோ துடிதுடித்தன;
என் கை நகங்களே
என்னை பிராண்டின.


முடிந்தளவு போராட்டம்
விடிய விடிய நடந்தது.


போரின் உச்சத்தில்
போர்வையே கிழிந்தும்விட்டது.


காலையில் பார்த்தபோது
ஓரத்தில் சிறு ரத்தக்கறை.


என்னவிரசமான வர்ணனையா?


வெளிநாடொன்றில்,
நான் கழித்த முதலிரவில்,
எனையழித்த *நுளம்பின் தொல்லையை
இதற்கு மேல் எப்படி சொல்ல?


-தெய்வீகன்-


*நுளம்பு=கொசு=mosquito

Sunday, October 5, 2008

ஹே வந்திடுச்சு வந்திடுச்சு வந்திடுச்சு

ஆஹா இன்னைக்குத்தான் பிறவிப்பலனை அடைந்தமாதிரி இருக்குது... கடைசீல என் பதிவும் தமிழ்மணத்தின் சூடான இடுகையில வந்திடுச்சு.... ஹி ஹி ஹி ஹி


அதுக்குத்தான் இந்த மொக்கைஸ் வேற ஒண்ணும் இல்ல ஹி ஹி ஹி ஹி ஹி... அது சரி இந்த பதிவ எப்படி வகைப்படுத்திறது?? நக்கல் நையாண்டியா...?? பதிவர் வட்டமா?? பொதுவானவையா?? இல்ல அறிவியல் நுட்பம் அப்படி ஏதாவதா??

Saturday, October 4, 2008

A.R.ரஹ்மான் copy அடித்தால் சரியா??

வணக்கம் நண்பர்களே....

இசைத்துறையில் பாடல்களை காப்பி அடிப்பது என்பது சகஜமாகிவிட்டது... நேற்று இந்த வார தமிழ்மண நட்ச்சத்திரம் அலெக்ஸ்சாண்டர் மனோகரன் அவர்கள் எழுதிய காதலில் விழுந்தேன் - "உனக்கென நான்" ஒரு டப்பிங் பாடல் எங்கிற பதிவைப்பார்த்தவுடன் இந்த பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியது.

அனைவருக்கும் தெரிந்தவரை "தேவா"தான் பாடல் டியூங்களை காப்பி அடிப்பதில் மன்னன். ஆசை படத்தில் இருக்கும் "புல்வெளி புல்வெளி தன்னில்" என்னும் பாட்டிடலிருந்து பஞ்சதந்திரம் படத்தில் இருக்கும் "மேரே ஜான்" பாடல்வரை ஏராளமான பாடல்களைச்சொல்லலாம்...

அடுத்து நம் இளையராஜாவின் புத்திரன் அவர் பெயருக்கு கொஞ்சம் களங்கம் வரும்படி செய்தவர் என்றுகூட சொல்லலாம்.... அவர் அடித்த காப்பி கீழே யூடியூபில் பாருங்கள்

பாலா படத்தில் உள்ள "தீண்டித்தீண்டி" பாடல் Rimjhim rimjhim எங்கிற படத்தின் காப்பி இப்படி பல பாடல்கள் காப்பி அடித்திருக்கிறார் இது ஒரு சின்ன உதாரணம் அவ்வளவுதான்....

அடுத்து நான் சொல்ல வருவது நம்ம A.R.ரஹ்மான் அடிச்ச காப்பி பற்றி முதல்ல Hello Mr. எதிர்க்கட்சி என்னும் பாடல் Memphis Stomp என்னும் ஒரு ஆங்கில பாடலின் தழுவல்... அண்மையில் வெளிவந்த சக்கரைக்கட்டி படத்தில் உள்ள Taxi Taxi பாடலும் DADDY YANKEEயின் GASOLINA என்னும் பாடலின் தழுவல் என்பதாக தெரிகிறது... கீழே சக்கரைக்கட்டி பாடலையும் DADDY YANKEEயின் GASOLINA பாடலையும் யூடியூபில் இருந்து எடுத்து போட்டிருக்கிறேன் நீங்களே கேட்டுப்பாருங்கள்... கேட்டுப்பார்த்திட்டு சொல்லுங்கள்

முதல் சக்கரைக்கட்டி பாடல்


அடுத்து DADDY YANKEEயின் GASOLINA


விஜய் அன்டனி காப்பி அடிச்சா தப்பு... A.R.ரஹ்மான் copy அடித்தால் சரியா??