Friday, August 29, 2008

நண்பனுக்காக

கொஞ்சநாட்களுக்கு முன் என்னைப்பிரிந்த என் நண்பன் ராகவனுக்காக மனம்போன போக்கில் எழுதியது.....


தொலைந்து போன நாட்கள்
தொலையாத நினைவுகள்
மரணத்தைத்தேடிக்கொண்டு
வலிகளை எமக்குத்தந்தவனே
மரணம் கண்டு மரத்துப்போன
எங்களையும் கலங்க வைத்தவன் நீ
வளர்த்த பெரியதாயின்
மரணம் கூட கலங்கவைத்ததில்லை
என்னை-கண்ணீர் விட்டழுகிறேன்
உந்தன் பிரிவு கண்டு
ஜீரணம் அடையவில்லையடா-நீ
நேற்று ஊட்டிய உணவுகூட
எப்படி உன் பிரிவு ஜீரணித்து
கொள்ளப்போகிறேன்-கொஞ்சமாவது நினைத்தாயா?
நான் உனக்காக அழுவேன் என்று
எத்தனை சண்டைகள் பிடித்திருப்போம்
நானும் நீயும்
உங்கள் மகனுக்கு நான்
பொறுப்பு-அவன் உங்கள் மகனல்ல
என் நண்பன் என நான் கூறிய
நம் தாய்க்கு என்னடா
பதில் சொல்வேன் நான்...??
நாட்கள் தொலையட்டும்
நம் நினைவுகள் நிலைக்கட்டும்
நானும் இறந்து வருவேன் -ஒருநாள்
உனைக்காண-அன்று சொல்கிறேன்
உன்னால் உடைந்த இதயங்கள்
எத்தனை எத்தனை என்பதை


அதுவரை நினைவுடன்
ஆதவன்

Tuesday, August 26, 2008

ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

வணக்கம் மக்களே.... இவ்வளவு நாள் படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்லி ஊரை ஏமாற்றி உலகை ஏமாற்றி.... அப்பாவ ஏமாத்தி அம்மாவ ஏமாத்தி பொண்ணுங்க பின்னாடி போய்க்கீட்டு ப்லொக் எழுதி அப்பா காசில காலத்த தள்ளிக்கிட்டு இருந்தேன்... இப்படியே போனால் எனக்கு தம் தண்ணி வாங்க கூட கையில காசு இருக்காது எங்கிறது கண நேரத்தில் என் மனதில் தோன்றிய காரணத்தால் வேற வழி இல்லாம வேலை ஒன்றை தேடிக்கொள்ள வேண்டும் எங்கிற எண்ணம் மனதில் தோன்றியது. அதனால ஏதவது ஒரு part-time work தேடிக்கொள்ளுறது எங்கிற முடிவுக்கு வந்து சரி என்னு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்... முயற்சியின் முடிவில் ஒரு வேலைக்கு interviewக்கு கூப்பிட்டனுங்க நானும் நமக்கு இருக்க திறமைக்கு microsoftல வேலைக்கு கூப்பிடுவாங்க எங்கிற எண்ணம் இருந்தாலும் இப்போதைக்கு இந்த வேலைய பார்ப்போம் என்னு அந்த interviewக்கு போனேன். வேலையும் கிடைச்சிருச்சு அதுவும் melbourne airportல சரி நமக்கு வேற வழி இல்ல எங்கிறதாலயும் தம்மும் தண்ணியும் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நின்றதன் காரணத்தாலும் அந்த வேலைக்கு போகலாம் எங்கிற முடிவுக்கு வந்திருக்கேன்...சரிடா லூசுப்பையலே அதில என்னடா ஆஸ்திரேலியா வர்ரவங்களுக்கு எச்சரிக்கை வேண்டி இருக்கு என்னு கேக்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க என் வேலைக்கு சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $20000..... அவ்வளவு சம்பளம் தர்ர அளவுக்கு என்னடா வேலை எங்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க melbourne airportல நிக்கிற flightக்கு பிக்கப் பிரச்சனை இருந்திச்சுன்னா நான்தான் flightஅ தள்ளி start பண்ணனும்... மற்றது flight இறங்கிற நேரம் ஏதாவது landing problems இருந்திச்சுன்னா நான்தான் flightஅ பிடிச்சு நிறுத்தனும். தப்பித்தவறியும் flight வானத்தில போகும் போது ஏதாவது எஞ்சின் பிரச்சனை வந்திச்சுன்னா நான்தான் இறங்கி தள்ளி விடனும்... இப்போ சொல்லுங்க இது ஒரு எச்சரிக்கைப்பதிவுதானே?? அதையும் பார்க்க முக்கியமான எச்சரிக்கை நீங்க வந்து ஆஸ்திரேலியா மெல்பொர்னில் இறங்கும் போது முதல்ல பார்க்கும் தமிழ் முகம் நானாக இருக்கவும் சாத்தியங்கள் இருக்கு அதனால நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கிறதும் நல்லது... ஏன்னா நீங்க அப்படி என்னைப்பார்த்தா பாக்கிற முதல் முகம் ஒரு நல்ல முகம் இல்ல நொள்ள முகம் ஞாபகம் இருக்கட்டும்... வேலைக்கு நேரமாகுது நான் வர்ட்டா...

Sunday, August 24, 2008

கைபேசி கேட்குதடி


உன் முத்தம்
பெற்றே
விலைமதிப்பற்றுப்போன-என்
கைபேசி கேட்குதடி...
உன் தேன்
முத்தங்களையும்
உன் குயில்
குரலையும்
எப்படிச்சொல்வேன் - என்
காதல் மரித்ததையும்....!! - நீ
காதல் மறந்ததையும்....!!


Monday, August 18, 2008

என் முதல் சிறுகதை முயற்சி

இதுவரைக்கும் உங்க எல்லோரையும் மொக்கை போட்டு கொடுமைப்படுத்தி இருக்குறேன், கவுஜ எழுதி கொடுமைப்படுத்தி இருக்குறேன். இன்னைக்கு கொஞ்சம் கொலைவெறி அதிகமா இருக்கதால சிறுகதை எழுதி கொடுமைப்படுத்த போறேன். வாசிச்சா பிறகு நீங்க உயிரோட இருந்தாலோ இல்ல, உங்க computerஅ உடைக்காம வைச்சிருந்தாலோ பின்னுட்டம் போடுங்க.

ஒரு காதல்கதை

இன்று ஆதி ஆஸ்திரேலியா பறக்கத்தயாராகிறான். ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு விமானநிலையம் நோக்கி பெற்றோர் மற்று சகோதரியுடன் அவந்து அப்பா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் பயணம், அவன் மனமோ அவளின் சிந்தனையில் லயித்திருக்கிறது. அவள் அழகான ரோஜா, எரியாத தீ, பூமியின் தேவதை... "ப்ரியா" அவள் பெயரை அவன் மனம் ஓயாமல் உச்சரிக்கிறது. அவளின் பிரிவு கண்களில் கண்ணீராய் எட்டிப்பார்த்தது அவன் மனமோ கவிதை பாடியது

என்றும்
எனைப்பிரியாய்
என்பதால்-உன்
பெயர் ப்ரியாவோ??

அவன் கண்களில் கண்ணீர் கண்டு தங்கள் மேல் இவனுக்கு இவ்வளவு பாசமா என அவன் குடும்பமும் கண்ணீருடன் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.

விமானத்தினுள்ளே, மேக்கப்பால் அழகாய் சிரிக்கும் விமானபணிப்பெண்கள், அறியா வயதுடனே மகிழ்வாய்க்குதிக்கும் சிறு குழந்தைகள், அவன் தோளில் உலகம் மறந்து உறக்கம் அணைக்கும் காதலி, அவள் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா என கிறங்கிக்கிடக்கும் காதலன், என்றும் மாறா அன்புடன் இன்றும் அணைத்திருக்கும் உடலில் வயதாய் உள்ளத்தில் இளமையாய் ஒரு காதல் ஜோடி என பலவகை உவகைகள் நிறைந்திருக்க உணர்ச்சியற்ற ஜடமாய் தாய்நாடு பிரிவது, தாயைப்பிரிவது மறந்து காதலி நினைவில ஆதி, ஜன்னலூடே இருளை வெறித்தபடி பழையவைகளை அசை போட ஆரம்பித்தான்.

Smsல் நட்பு புதிதாய் அறிமுகப்படுத்தியது அந்த வார இதழ், நண்பன்தான் இதழின் ஆசிரியன் என்பதால் போட்டுத்தொலைத்தான் ஆதியின் விபரங்களை

Name-Aathi
Sex-Male
Phone # - **********

பெண்களுடன் அதிகம் பழகாத ஆதிக்கு அடுத்தடுத்து பெண்களிடம் இருந்து smsகள் பெரிதாய் எதற்குமே பதிலளிக்காமல் இருந்தவனை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்தது அந்த sms


"Hi aathi, this is Priya, Juz saw ur # on paper. Felt like smsing u , wanna be ma friend? -priya-"


ஏதோ ஒன்று அவனை ஈர்க்க நட்பானார்கள் இருவரும், காலம் செல்ல ஆதி காதல் சொன்னான், அவளோ தன் படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா செல்லப்போவதாக சொல்ல, தானும் வருவதாய் ஆதியும் சொல்ல காதல் ஆஸ்திரேலியாவினால் உறுதியானது.

படிப்பதாய் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை மறந்து காதலிக்காய் ஆஸ்திரேலிய வாக்கை காப்பாற்ற தயாரானான் ஆதி. "இப்போதெல்லாம் மகன் இரவெல்லாம் கண்விழித்து படிக்கிறான்" என அம்மா அப்பவிடம் சொன்னதை சுரணை கெட்ட ஜென்மமாய் இரவில் அலைபேசியில் மொழிந்தான் ஆதி. நிலவினாலும் புறாவினாலும் வளர்க்கப்பட்ட புராண காதல்களை விட அலைபேசிகளினால் வளர்க்கும் தன் காதல் உயர்ந்ததென்றான் ஆதி. பள்ளி முடியுமுன்பே யாரும் அறியாவண்ணம் மதிலேறி பாய்ந்து காதலி பள்ளி முன்பு தவம் கிடந்தான். 10 மணிவரை கண்கள் திறக்காதவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து walking போவதாய் காதலி வீட்டின் முன் கொக்காய் ஒற்றைக்காலில் நின்றான். அவன் பள்ளி வாழ்க்கை முடியும் வேளை நண்பர்கள் பிரிவை மறந்து காதலி எப்போழுதும் பார்க்கலாம் என பறந்தோடித்திரிந்தான்

பள்ளி வாழ்க்கையும் முடிந்தது, அவளுக்கு கொடுத்த வாக்கைக்காப்பற்ற பெற்றோரிடம் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா போக போவதாய் கூறி ஏற்பாடுகளும் செய்தான். அவளுக்கு அவள் பள்ளியிலே சில பாதுகாப்புக்காய் அவளது பள்ளியில் படிக்கும் தன் நண்பன் பாரத்தை அவளுக்கு அறிமுகப்படுத்து வைத்து அவர்களையும் நண்பர்கள் ஆக்கினான் ஆதி.

"what whould u like to have sir?"

விமானப்பனிப்பெண்ணின் குரல் கேட்டு நினைவுகள் மீண்டும் உலகம் வந்தது.

"no thanks plz"

என்றவாறு வேறு பல நினைவுகளோடு ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தான். முதல் வேலையாய் part-time வேலை ஒன்றைத்தேடிக்கொண்டு ஆஸ்திரேலிய டாலர்களை அலைபேசியில் வீணடித்தான். ஆஸ்திரேலியாவில் அவனும் அவள் நாட்டில் அவளும் Sms மூலமும் அலைபேசி மூலமும் முத்தங்களையும், கண்ணீரையும், காதலையும் பரிமாறிக்கொண்டனர்

ஆதி ஆஸ்திரேலியா வந்து 6 மாதங்களின் பின் ஒருநாள் அலைபேசியில் அவளைத்தொடர்பு கொள்ள அவள் அலைபேசி off செய்யப்பட்டிருந்தது. Land Lineல் தொடர்பு கொண்டு அவளுடன் பேச முயன்றான். நீண்ட முயற்சியின் பின் அவள் தொலைபேசியில் சொல்கிறாள் " நான் பாரத்தைக்காதலிக்கிறேன். அவரும் என்னைக்காதலிக்கிறார்" இங்கு ஆதியின் இதயம் சுக்குநூறாய் உடையும் சத்தம் பெரிதாய் அவனுக்கு மட்டும் கேட்கிறது சிறிது நேரத்தில் சுக்குநூறான அலைபேசி போலவே

Thursday, August 14, 2008

தீயாக நீ

தீ சுடுமென யாரோ சொல்ல
தீண்டினேன் உனை
தீ சுடுவதோடு
சிலிர்க்கவும் செய்கிறது
நல்லவேளை ஆதிகாலத்தில்
நீயில்லை- தீயின் தன்மை
நிமிடத்துக்கு நிமிடம் மாறுமென
இன்று நான் படித்துக்கொண்டிருப்பேன்

தீயின் தன்மை எரிப்பதாம்
எதனையும் எரிக்காதா தீ-நீ
தீ தீண்டி எரிந்திருப்போர் பலரிருக்க
எரியாமல் நான்
தீயின் மேல் நீர்த்துளிகள்
உன்மேல் பூத்திருக்கும்
வியர்வைத்துளிகள்
பார்வைக்கு கண்கள் மட்டும்தான்
தீயாகத்தெரிகிறது-தீண்டினால்
உடலெங்கும் தீயாய்ச்சுடுகிறது
உள்ளம் உருகிப்போகிறேன்
உன்னைப்பார்க்கும் போதெல்லாம்
நானும் மெழுகுதானோ??

Monday, August 11, 2008

நம்ம தலைவர (J.K.ரித்தீஷ்) ஆடி ஜெயிக்க ஆள் உண்டா??

பாருங்க மக்களே நம்ம தலைவர் ரித்தீஷ் மன்னிக்கவும் J.K.ரித்தீஷ் ஆட்டத்துக்கு முன்னுக்கு யார் இருக்கது?? நாயகன் பட டிரெயிலர் இதுதான் சும்மா கலக்குறார் தலைவர் பாருங்க. J.K.ரித்தீஷ் ரசிகமணிகளே தலைவரின் ஆட்டத்தைப்பாரீர் ஜென்ம சபல்யம் அடைவீர்
நம்ம தலைவர் ஆட்டத்துக்கு முன்னுக்கு விஜய்யாவது சொஜய்யாவது... பாருங்கைய்யா தலைவர் ஜீன்ஸ் கலர எப்படி சும்மா கண்ண கூசுது சா சா எப்படி கண்ண கவருது என்னு... அந்த கண்ணாடி(என்ன பாவம் பண்ணிச்சோ) எப்படி நம்ம தலைவருக்கு பொருந்துது என்னு. என்ன ஒரு டான்ஸ் என்ன ஒரு மூவ்மெண்ட்?? மத்தவங்க இந்த மூவ்மன்ட் செஞ்சா "மூவ்" மூட்டு வலி தைலம் போட வேண்டியதுதான். பாருங்கைய்யா என்ன மாதிரி பாடல் வரிகள் என்னு இந்த பாட்ட சின்ன வயசில படிச்சா பிறகு எல்லோரும் மறந்திருப்போம். நமக்கு அந்த பாட்டை புதிய வடிவில் தந்ததுக்காகவே நம்ம தலைவருக்கு ஒரு சிலை வைக்கலாமய்யா... வாரீர் ரசிக மணிகளே வந்து இன்பம் பெறுவீர்

Saturday, August 9, 2008

பிறந்த நாள் பரிசு

வணக்கம் மக்களே,

கொஞ்ச நாள்ல நம்ம friend ஒருத்தனுக்கு பிறந்த நாள் வருது. இந்த பிறந்த நாளில் நான் அவனுக்கு கொடுக்குற பரிசில அவன் என்னை வாழ்க்கையில மறக்கவே கூடாது எங்கிறத்துக்காக ஏதாவது பரிசு வாங்கனும் என்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்... அவன் மேல லைட்டா கோபமும் இருக்கதால கொஞ்சம் பழிவாங்கிற விதமா சில பரிசுகளை கொடுக்க விரும்பினேன்..... சில ideas வந்திச்சு, இந்த பரிசெல்லாம் கொடுத்தா அவன் என்ன மறப்பானா இல்லையா நீங்களே பார்த்து சொல்லுங்க மக்களேபரிசு நொ-1 - என் கையாலேயே அவனுக்கு அவன் பிறந்த நாளில் இருந்து ஒரு 10 நாட்களுக்கு சமைச்சு போடனும். என் சமையல் திறமையை அறிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்பரிசு நொ-2 - நான் கவிதை எங்கிற பேரில எழுதின சில மொக்கை வரிகளை அவனை ஒரு நாட்காலியில் கட்டிப்போட்டுட்டு வாசித்துக்காட்டுதல். கவிதை சாம்பிளுக்கு இங்கே கிளிக் பண்ணவும்பரிசு நொ-3 - அவனை நான் ஒரு manual supra carல ஏத்திக்கிட்டு நானே drive பண்ணி எங்கையாவது கொண்டுபோய் சேர்க்கனும். (எனக்கு manual drive பண்ணத்தெரியாது என்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச ரகசியமாச்சே. எனக்கு லைசன்ஸ் இல்ல என்கிறத மட்டும் அவன் கிட்ட சொல்லிடாதீங்க)பரிசு நொ-4 - சாம் அண்டர்சனை சந்திக்க வைத்து அவரிடம் சில dance moves கற்றுக்கொள்ள ஒழுங்கு செய்து தரப்போகிறேன். அவரது dance movesஐ கீழே போய் பார்த்துக்கொள்ளுங்கள்பரிசு நொ-5 - ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் சேர்த்து விடல்... (எனக்காக தலைவி ராப் அனுமதிப்பார் என எதிர்பார்க்கிறேன். மற்ற மன்ற உறுப்பினர்களும் அனுமதிப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன்) J.K.R பற்றிய மற்ற விபரங்கள் தெரிய வழிப்போக்கனை அணுகவும்பரிசு நொ-6 - குசேலன் படத்துக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து birthday boy மட்டும் தனியாக இருந்து பார்த்த ஒழுங்கு படுத்திக்கொடுத்தல் (கிரி அதற்கான ஏற்பாடுகளை செய்வார்)
பரிசு நொ-7 - கடைசியாக லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் ஒரு பெரிய பழிவாங்கல் பரிசாக இளையதளபதி டாக்குத்தர் விஜய் படமான "அழகிய தமிழ்மகன்", "குருவி" தலைவர் ஜே.கே.ரித்திஷின் "காணல் நீர்", சாம் அண்டசனின் படம் மற்றும் விஜய T.Rன் "வீரசாமி" ஆகிய படங்களின் ஒரிஜினல் பட DVDக்களை கொடுத்தல்.
சாம்பிளுக்கு இந்த clip

என்ன மக்களே இன்னைக்கு இந்த மொக்கை போதுமா??

Friday, August 8, 2008

இது ஒரு தன்னிலை விளக்கம்

வணக்கம் வலையுலகமே, சில நாட்களில் என்னுள் ஏற்பட்ட குழப்பம், நண்பர்கள் சிலர் நான் எழுதுவது பற்றி என்னிடம் நேரில் கூறிய சில கருத்துக்கள் என்னை சற்றே பாதித்தமையால் இந்த பதிவு எழுதும் வம்பே வேண்டாம் என ஒதுங்கியே இருந்தேன். இருந்தாலும் அடிக்கடி தமிழ்மணம் வாசல்வரை வந்து பின் திரும்பிச்சொன்றதுமுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பதிவர் நண்பர் ஒருவருடன் ஜீ talkல் பேசியவேளை அவர் " இப்படி எல்லாம் நான் யோசித்திருந்தால் எப்போதோ நான் நிறுத்தியிருப்பேன்" எனக்கூறிய வேளை நடு மண்டையில் "நொங்" எனக்கொட்டியது போல் இருந்தது.

அதேவேளை இந்தப்பதிவின் மூலம் என் பதிவினை வாசித்து தன் கருத்துக்களைக்கூறிய அந்த நண்பர்களுக்கு என் நன்றியைக்கூறிக்கொண்டு என்னைப்பற்றி சிறு விளக்கமளிக்கவிழைகிறேன்.

நண்பரே, முதலாவதாக நான் உங்களைப்போல் எழுத்துக்களில் தேர்ந்த எழுத்தாளன் கிடையாது, எனக்கு எழுத்து நடை தெரியாது "Practice makes perfect" எனப்படுவது போல் நான் தொடர்ந்து எழுதினால் சற்றே ஒழுங்காக எழுதுவேன் என நினைக்குறேன். நான் எழுதுவது இலங்கைத்தமிழையும் சாராமல் இலங்கைத்தமிழையும் சாராமல் ஆங்காங்கே இந்தியத்தமிழும் இலங்கைத்தமிழும் பரவிக்கிடப்பதாக கூறி இருந்தீரகள். நண்பரே நம் தமிழை எத்தனை பேர் எத்தனை விதமாக பேசுவார்கள் தெரியுமா? இலங்கையிலேயே மட்டக்களப்புத்தமிழ், யாழ்ப்பாணத்தமிழ், கொழும்புத்தமிழ் என பலவிதமான accent எனப்படுகிற பேச்சுவழக்குகள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், கோவைத்தமிழ், திருநெல்வேலித்தமிழ் எனப்பல வகை உண்டு. மலேசியாவில் மலேசியத்தமிழ், சிங்கப்பூரில் சிங்கப்பூர்த்தமிழ் இப்படித்தமிழையே எத்தனையோ விதமான பேச்சுவழக்கு உள்ளது, எனக்கு பலதரப்பட்ட பகுதிகளில் இருந்தும் பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் என்னுடன் பேசும்போது அவர்களின் தாக்கம் என்னில் பிரதிபலிக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. முக்கியமான ஒன்று நான் என்னை இந்தியத்தமிழன் என்றோ இலங்கைத்தமிழன் என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் தமிழன் அவ்வளவே... எனக்குத்தெரியும் நான் உங்களோடு பேசி ஜெயிக்க முடியாது என்பது அதனால்தான் எனது விளக்கத்தை ஒரு பதிவின் மூலமே எழுதியிருக்கிறேன். நீங்கள் என்னிடம் கூறியதை ஒரு பதிவின் மூல வெளிப்படுத்தியது ஒரு அநாகரிகமான செயலாகவோ அல்லது தவறாகவோ உங்களுக்கு தெரிந்தால் அதற்காகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

நான் இந்தப்பதிவில் எழுதியதிலோ அல்லது இதற்கு முந்திய பதிவுகளில் எழுதியதிலோ தவறுகள் இருப்பின் நற்றமிழ் கூறும் எழுத்துலக பிரம்மாக்கள் என்னை மன்னிக்கட்டும்


அன்புடன்
இவன்