Friday, August 8, 2008

இது ஒரு தன்னிலை விளக்கம்

வணக்கம் வலையுலகமே, சில நாட்களில் என்னுள் ஏற்பட்ட குழப்பம், நண்பர்கள் சிலர் நான் எழுதுவது பற்றி என்னிடம் நேரில் கூறிய சில கருத்துக்கள் என்னை சற்றே பாதித்தமையால் இந்த பதிவு எழுதும் வம்பே வேண்டாம் என ஒதுங்கியே இருந்தேன். இருந்தாலும் அடிக்கடி தமிழ்மணம் வாசல்வரை வந்து பின் திரும்பிச்சொன்றதுமுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பதிவர் நண்பர் ஒருவருடன் ஜீ talkல் பேசியவேளை அவர் " இப்படி எல்லாம் நான் யோசித்திருந்தால் எப்போதோ நான் நிறுத்தியிருப்பேன்" எனக்கூறிய வேளை நடு மண்டையில் "நொங்" எனக்கொட்டியது போல் இருந்தது.

அதேவேளை இந்தப்பதிவின் மூலம் என் பதிவினை வாசித்து தன் கருத்துக்களைக்கூறிய அந்த நண்பர்களுக்கு என் நன்றியைக்கூறிக்கொண்டு என்னைப்பற்றி சிறு விளக்கமளிக்கவிழைகிறேன்.

நண்பரே, முதலாவதாக நான் உங்களைப்போல் எழுத்துக்களில் தேர்ந்த எழுத்தாளன் கிடையாது, எனக்கு எழுத்து நடை தெரியாது "Practice makes perfect" எனப்படுவது போல் நான் தொடர்ந்து எழுதினால் சற்றே ஒழுங்காக எழுதுவேன் என நினைக்குறேன். நான் எழுதுவது இலங்கைத்தமிழையும் சாராமல் இலங்கைத்தமிழையும் சாராமல் ஆங்காங்கே இந்தியத்தமிழும் இலங்கைத்தமிழும் பரவிக்கிடப்பதாக கூறி இருந்தீரகள். நண்பரே நம் தமிழை எத்தனை பேர் எத்தனை விதமாக பேசுவார்கள் தெரியுமா? இலங்கையிலேயே மட்டக்களப்புத்தமிழ், யாழ்ப்பாணத்தமிழ், கொழும்புத்தமிழ் என பலவிதமான accent எனப்படுகிற பேச்சுவழக்குகள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், கோவைத்தமிழ், திருநெல்வேலித்தமிழ் எனப்பல வகை உண்டு. மலேசியாவில் மலேசியத்தமிழ், சிங்கப்பூரில் சிங்கப்பூர்த்தமிழ் இப்படித்தமிழையே எத்தனையோ விதமான பேச்சுவழக்கு உள்ளது, எனக்கு பலதரப்பட்ட பகுதிகளில் இருந்தும் பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் என்னுடன் பேசும்போது அவர்களின் தாக்கம் என்னில் பிரதிபலிக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. முக்கியமான ஒன்று நான் என்னை இந்தியத்தமிழன் என்றோ இலங்கைத்தமிழன் என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் தமிழன் அவ்வளவே... எனக்குத்தெரியும் நான் உங்களோடு பேசி ஜெயிக்க முடியாது என்பது அதனால்தான் எனது விளக்கத்தை ஒரு பதிவின் மூலமே எழுதியிருக்கிறேன். நீங்கள் என்னிடம் கூறியதை ஒரு பதிவின் மூல வெளிப்படுத்தியது ஒரு அநாகரிகமான செயலாகவோ அல்லது தவறாகவோ உங்களுக்கு தெரிந்தால் அதற்காகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

நான் இந்தப்பதிவில் எழுதியதிலோ அல்லது இதற்கு முந்திய பதிவுகளில் எழுதியதிலோ தவறுகள் இருப்பின் நற்றமிழ் கூறும் எழுத்துலக பிரம்மாக்கள் என்னை மன்னிக்கட்டும்


அன்புடன்
இவன்

37 பதிலகள்:

வழிப்போக்கன் said...

//இந்த பதிவு எழுதும் வம்பே வேண்டாம் என ஒதுங்கியே இருந்தேன். //

அடுத்தவங்க இஷ்ட்டத்துக்கு நாம ஏன் வருத்தப்படணும்..

Let us agree to disagree..

சரியா..no Hard feelings

வழிப்போக்கன் said...

//" இப்படி எல்லாம் நான் யோசித்திருந்தால் எப்போதோ நான் நிறுத்தியிருப்பேன்//

நான் ஆரம்பிச்சிருக்கவே மாட்டேன்..

செந்தழல் ரவி said...

பிலாக் எழுதறது என்னமோ வெகுஜனப்பத்திரிக்கையில எழுதற அளவுக்கு பெரிய விஷயம்னு நெனைச்சு நொந்துபோவாதீங்க...

மொத்தமா ஆயிரம் பேர் படிச்சா அதிகம்...

உங்கள் வலைப்பதிவு...

எதை வேண்டுமானாலும் எழுதுங்க சாமீ...

ப்ளாக் எழுதறதே ஒரு டைம்பாசுக்கு தான்...

இங்க எழுதி சமுதாயத்தை எல்லாம் திருத்திட முடியாது...

தொடர்ந்து மொக்கை பதிவாகவே போட்டுவாருங்கள்....

(அறிவுறை சொன்ன மூத்த பதிவர் யாரோ ??)

வழிப்போக்கன் said...

//நண்பரே, முதலாவதாக நான் உங்களைப்போல் எழுத்துக்களில் தேர்ந்த எழுத்தாளன் கிடையாது, எனக்கு எழுத்து நடை தெரியாது "Practice makes perfect" எனப்படுவது போல் நான் தொடர்ந்து எழுதினால் சற்றே ஒழுங்காக எழுதுவேன் என நினைக்குறேன். //

Blog is to relax yourself..

Happiness should be the motive.


Not the perfection. if possible we can improve day by day..but don't feel for that.

வழிப்போக்கன் said...

//முக்கியமான ஒன்று நான் என்னை இந்தியத்தமிழன் என்றோ இலங்கைத்தமிழன் என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை//

பாராட்டுகிறேன்..

வழிப்போக்கன் said...

//நடு மண்டையில் "நொங்" எனக்கொட்டியது போல் இருந்தது.
//

நானும் ஒரு கொட்டு கொட்டிக்கிறேன்...ப்ளீஸ்..

வழிப்போக்கன் said...

//நான் இந்தப்பதிவில் எழுதியதிலோ அல்லது இதற்கு முந்திய பதிவுகளில் எழுதியதிலோ தவறுகள் இருப்பின் நற்றமிழ் கூறும் எழுத்துலக பிரம்மாக்கள் என்னை மன்னிக்கட்டும்
//

யாருய்யா அந்த பிரம்மாக்கள்..

நீங்க எங்க மன்றத்துல மட்டும் சேருங்க மீதிய நாங்க பாத்துக்கிறோம்.

வழிப்போக்கன் said...

ஃஃநான் இந்தப்பதிவில் எழுதியதிலோ அல்லது இதற்கு முந்திய பதிவுகளில் எழுதியதிலோ தவறுகள் இருப்பின் நற்றமிழ் கூறும் எழுத்துலக பிரம்மாக்கள் என்னை மன்னிக்கட்டும்
ஃஃ

நாங்கெல்லாம் சிவன்...பரமசிவன்..

பிரம்மாவ ரெண்டுல ஒண்னு பாத்துரலாம்.

வழிப்போக்கன் said...

எல்லா பின்னூட்டமும் அப்படியே பதிவாகனும் இல்லனா இந்த பக்கமே வரமாட்டேன்..

இது கட்டளை...

புதுகைத் தென்றல் said...

ஆஹா உங்களையும் தாக்கிட்டாங்களா?

சேம் ப்ளட்.

பழுத்த மரத்துக்குத்தான் கல்லடின்னு சொல்லுவாங்கல்ல.

இதையெலலம் சட்டை செய்யாமல் நீங்க எழுதுங்க.


படிக்க நாங்க காத்துக்கினு இருக்கோம்.

இவன் said...

//அடுத்தவங்க இஷ்ட்டத்துக்கு நாம ஏன் வருத்தப்படணும்..

Let us agree to disagree..

சரியா..no Hard feelings//


சரிங்கண்ணா நீங்க சொன்னாப்பிறகு என்ன கேள்வி

இவன் said...

//நான் ஆரம்பிச்சிருக்கவே மாட்டேன்..//

ஆஹா ஏன்யா இப்படி?? இப்படியே போயிருந்தா நமக்கு நம்ம தலைவர் ஜே.கே.ரித்தீஷின் மன்றத்துக்கு ஒரு உறுப்பினர் கிடைச்சிருப்பாரா??

இவன் said...

//பிலாக் எழுதறது என்னமோ வெகுஜனப்பத்திரிக்கையில எழுதற அளவுக்கு பெரிய விஷயம்னு நெனைச்சு நொந்துபோவாதீங்க...

மொத்தமா ஆயிரம் பேர் படிச்சா அதிகம்...

உங்கள் வலைப்பதிவு...

எதை வேண்டுமானாலும் எழுதுங்க சாமீ...

ப்ளாக் எழுதறதே ஒரு டைம்பாசுக்கு தான்...

இங்க எழுதி சமுதாயத்தை எல்லாம் திருத்திட முடியாது...

தொடர்ந்து மொக்கை பதிவாகவே போட்டுவாருங்கள்....


இதுவரைக்கும் அப்படித்தானே போட்டு வந்தேன் ரவி... அதுக்கே இப்படி என்னா இனிப்போடப்போற மொக்கைக்கு என்ன சொல்ல போறாங்களோ??

//(அறிவுறை சொன்ன மூத்த பதிவர் யாரோ ??)//

வேற யாரு நம்ம "ஜி"தான்

இவன் said...

//
Blog is to relax yourself..

Happiness should be the motive.


Not the perfection. if possible we can improve day by day..but don't feel for that.//


சார் இங்கிலிபிஸ் எல்லாம் பேசுது.... நமக்கு ஒன்னுமே பிரியல

இவன் said...

//பாராட்டுகிறேன்..//

நன்றி நன்றி

இவன் said...

//நானும் ஒரு கொட்டு கொட்டிக்கிறேன்...ப்ளீஸ்..//

அடப்பாவிகளா நான் ரொம்ப நல்லவன் என்னு உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?? கொட்டுங்கைய்யா கொட்டுங்க இந்த பதிவர்களே இப்படித்தான்

இவன் said...

//யாருய்யா அந்த பிரம்மாக்கள்..

நீங்க எங்க மன்றத்துல மட்டும் சேருங்க மீதிய நாங்க பாத்துக்கிறோம்.//


அடப்பாவிகளா அப்போ நான் உங்க மன்றத்தில இவ்வளவு நாள் இல்லையா?? நான் இருக்கேன் என்னு இல்ல நினைச்சுக்கிட்டு இல்ல இருந்தேன்

இவன் said...

//
நாங்கெல்லாம் சிவன்...பரமசிவன்..

பிரம்மாவ ரெண்டுல ஒண்னு பாத்துரலாம்.//


பார்த்திட்டா போச்சுது

இவன் said...

//எல்லா பின்னூட்டமும் அப்படியே பதிவாகனும் இல்லனா இந்த பக்கமே வரமாட்டேன்..

இது கட்டளை...//


போட்டாச்சு போட்டாச்சு

இவன் said...

//ஆஹா உங்களையும் தாக்கிட்டாங்களா?

சேம் ப்ளட்.//

அட உங்களுக்குமா?? என்ன கொடுமை இது??

//பழுத்த மரத்துக்குத்தான் கல்லடின்னு சொல்லுவாங்கல்ல.//
அட அது பழுத்த மரங்க இது இத்துப்போன மரம்.


//இதையெலலம் சட்டை செய்யாமல் நீங்க எழுதுங்க.


படிக்க நாங்க காத்துக்கினு இருக்கோம்.//


பின்ன எழுதாம விடுறதா நான் உங்கள எல்லாம் விடுறதா இல்ல தொடர்ந்து கொடுமைப்படுத்திறதாத்தான் இருக்கேன்

கிரி said...

இவன் என்ன இதுக்கெல்லாம் போய் தளர்ந்து போறதா.. போற்றுகிறவர்கள் போற்றட்டும் தூற்றுகிறவர்கள் தூற்றட்டும் ..நம் பணி மொக்கை போட்டு கிடப்பதே ...:-)))

எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டா எழுதுகிறோம், அனுபவத்தில் தெரிந்து கொள்வது தானே.

அவர் உங்களுக்கு தவறை சுட்டி காட்டியதாக எடுத்துக்கொண்டு மேலும் எழுதுங்கள்.

இவன் said...

//இவன் என்ன இதுக்கெல்லாம் போய் தளர்ந்து போறதா.. போற்றுகிறவர்கள் போற்றட்டும் தூற்றுகிறவர்கள் தூற்றட்டும் ..நம் பணி மொக்கை போட்டு கிடப்பதே ...:-)))//

அட நல்ல கொள்கைங்கண்ணா இதை இனிமேல் நான் follow பண்ணிக்கிறேன்...

//எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டா எழுதுகிறோம், அனுபவத்தில் தெரிந்து கொள்வது தானே.

அவர் உங்களுக்கு தவறை சுட்டி காட்டியதாக எடுத்துக்கொண்டு மேலும் எழுதுங்கள்.//


நன்றி கிரி...

வடகரை வேலன் said...

என்னங்க இதுக்கெல்லமா மனசத் தளர விடுறது?

நம்ம டைரியில சில பக்கங்கள மத்தவங்க பார்க்க அனுமதிக்கற மாதிரித்தான் இது. உங்களுக்குப் புடிச்சது என்னவோ அதச் செய்யுங்க.

”if you start pleasing everyone you will go mad" -னு வடகரைவேலன்னு ஒர் பெரிய அறிஞர் சொல்லியிருக்கார்.

இவன் said...

//என்னங்க இதுக்கெல்லமா மனசத் தளர விடுறது?

நம்ம டைரியில சில பக்கங்கள மத்தவங்க பார்க்க அனுமதிக்கற மாதிரித்தான் இது. உங்களுக்குப் புடிச்சது என்னவோ அதச் செய்யுங்க.//


சரிங்கண்ணா

//”if you start pleasing everyone you will go mad" -னு வடகரைவேலன்னு ஒர் பெரிய அறிஞர் சொல்லியிருக்கார்.//

இது வேற சொல்லி இருக்காரா அவரு?? அவர் சொன்னதும் ஒரு விதத்தில சரியாத்தான் இருக்கு

செந்தழல் ரவி said...

நாங்க போட்ட பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் சொல்லமாட்டீங்களாங்னா ?

இவன் said...

//நாங்க போட்ட பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் சொல்லமாட்டீங்களாங்னா ?//

ங்ண்ணா செந்தழல்ண்ணா பதில் போட்டிருக்கனே பாக்கலியா?? இருந்தாலும் மறுபடியும் அடுத்த பின்னுட்டமா போடுறேன் பாருங்க

இவன் said...

//செந்தழல் ரவி said...

பிலாக் எழுதறது என்னமோ வெகுஜனப்பத்திரிக்கையில எழுதற அளவுக்கு பெரிய விஷயம்னு நெனைச்சு நொந்துபோவாதீங்க...//


நன்றிங்கண்ணா

//மொத்தமா ஆயிரம் பேர் படிச்சா அதிகம்...

உங்கள் வலைப்பதிவு...

எதை வேண்டுமானாலும் எழுதுங்க சாமீ...//


என்னோட ப்லொக்க மொத்தம் படிக்கிறவங்களே ஒரு 10ப்பேர் இருப்பாங்களா எங்குறதே சந்தேகம்தான்

//ப்ளாக் எழுதறதே ஒரு டைம்பாசுக்கு தான்...

இங்க எழுதி சமுதாயத்தை எல்லாம் திருத்திட முடியாது...

தொடர்ந்து மொக்கை பதிவாகவே போட்டுவாருங்கள்....//


இதுவரைக்கும் அப்படித்தானே போட்டு வந்தேன் ரவி... அதுக்கே இப்படி என்னா இனிப்போடப்போற மொக்கைக்கு என்ன சொல்ல போறாங்களோ??

//(அறிவுறை சொன்ன மூத்த பதிவர் யாரோ ??)//

வேற யாரு நம்ம "ஜி"தான்

ஜி said...

பதிவென்பதை ஏதோ பெரிய பத்திரிக்கையில் எழுதுவதுபோல் நீங்களும், உங்கள் நண்பர்களும் நினைத்துக் கொள்வதால் ஏற்படுகின்ற கருத்து வேறுபாட்டு மோதல்கள். இதற்காக நீங்கள் தன்னிலை விளக்கம், மன்னிப்பு போன்று வகைப்படுத்தி இப்பதிவிட்டதே தேவையற்ற ஒன்று.

எழுதுவது உங்கள் விருப்பம். அதை வாசிப்பதும் வாசிக்காததும் அவரவர் விருப்பம். ஆனால், உங்களின் எழுத்தை இன்னும் மேம்படுத்தவே அத்தகைய விமர்சனங்களை உங்கள் நண்பர்கள் முன்னிறுத்தி இருப்பார்கள். அதனை நீங்கள் ஒரு ஊக்கமாகவே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிற தளர்ந்து விட கூடாது.

இன்னும் பல‌வ‌கை ப‌திவை காண‌ வாழ்த்துக்க‌ள். :)))

ஆனாலும், இந்த‌ மூத்த‌ ப‌திவ‌ர்லாம் நெம்ப‌ ஓவ‌ரு.... ;)))

இவன் said...

நன்றி ஜி

//ஆனாலும், இந்த‌ மூத்த‌ ப‌திவ‌ர்லாம் நெம்ப‌ ஓவ‌ரு.... ;)))//

இல்ல ஜி உண்மைய சொன்னா ஒத்துக்கனும் no cross questions

கயல்விழி said...

நீங்கள் விளக்கமாக எழுதாததால் எனக்கு சரியாக புரியவில்லை இவன். நாங்கள் முதலில் ப்ளாக் எழுத துவங்கிய போது வந்த விமர்சனங்கள் நினைவிருக்கா? ரொம்ப மோசமான விமர்சனங்கள், அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து எழுதுகிறோம்.

வேலை இல்லாதவர்கள் இப்படி எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள், நீங்கள் கவலையே படாமல் தொடர்ந்து எழுதவும்

கயல்விழி said...

நீங்க ஏன் மன்னிப்பு கேட்கனும்? உங்களிடம் உளறிய அவர்கள் தான் மன்னிப்பு கேட்கனும்.

இவன் said...

//நீங்கள் விளக்கமாக எழுதாததால் எனக்கு சரியாக புரியவில்லை இவன். நாங்கள் முதலில் ப்ளாக் எழுத துவங்கிய போது வந்த விமர்சனங்கள் நினைவிருக்கா? ரொம்ப மோசமான விமர்சனங்கள், அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து எழுதுகிறோம்.

வேலை இல்லாதவர்கள் இப்படி எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள், நீங்கள் கவலையே படாமல் தொடர்ந்து எழுதவும்//


அதுதான் மூத்த பதிவர் "ஜி"ன் அறிவுரைப்படி மறுபடி எழுத ஆரம்பித்து விட்டேன்

இவன் said...

//நீங்க ஏன் மன்னிப்பு கேட்கனும்? உங்களிடம் உளறிய அவர்கள் தான் மன்னிப்பு கேட்கனும்.//

சரி சரி விடுங்க இனி உளற மாட்டாங்க என்னு நினைக்குறேன். நன்றி நன்றி

Divya said...

ஜி...said
\எழுதுவது உங்கள் விருப்பம். அதை வாசிப்பதும் வாசிக்காததும் அவரவர் விருப்பம். ஆனால், உங்களின் எழுத்தை இன்னும் மேம்படுத்தவே அத்தகைய விமர்சனங்களை உங்கள் நண்பர்கள் முன்னிறுத்தி இருப்பார்கள். அதனை நீங்கள் ஒரு ஊக்கமாகவே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிற தளர்ந்து விட கூடாது.\

வழிமொழிகிறேன்,


விமர்சனங்களை... உங்கள் எழுத்தினை மேம்படுத்தும் ஊன்றுகோளாக எடுத்துக்கொள்ளூங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் இவன்:)

இவன் said...

//வழிமொழிகிறேன்,

விமர்சனங்களை... உங்கள் எழுத்தினை மேம்படுத்தும் ஊன்றுகோளாக எடுத்துக்கொள்ளூங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் இவன்:)//

நன்றி திவ்யா... இனியும் தொடர்ந்து மொக்கை போடுவதாகத்தான் இருக்கிறேன்... இப்போதைக்கு உங்கள் யாரையும் நான் விடுவதாக இல்லை

வழிப்போக்கன் said...

யாருய்யா அது உங்கள திட்டுனது??


அவங்கிட்ட கிட்ட சொல்லி என்னோட பதிவச்சொல்லி என்னையும் திட்ட சொல்லுங்க பாப்போம்..

(உண்மையான பெயரில் வரவேண்டும்..அனானியாக அல்ல)


இதுவரைக்கும் என்ளை யாருமே திட்டலனு வருத்தமா இருக்கு.. :((

இவன் said...

//யாருய்யா அது உங்கள திட்டுனது??//

அத எப்படி வழிப்போக்கன் சொல்ல முடியும். அது அநாகரிகம் ஆச்சே


//அவங்கிட்ட கிட்ட சொல்லி என்னோட பதிவச்சொல்லி என்னையும் திட்ட சொல்லுங்க பாப்போம்..//

நான் வேணும் என்னா வந்து திட்டட்டுமா??

//(உண்மையான பெயரில் வரவேண்டும்..அனானியாக அல்ல)//

உண்மைப்பெயரிலேயே வந்து திட்டுறேன்


//இதுவரைக்கும் என்ளை யாருமே திட்டலனு வருத்தமா இருக்கு.. :((//

அதுதான் நான் வந்து திட்டுறேன் என்னு சொல்லுறேன் இல்ல இதுக்கேல்லாமா போய் கவலைப்படுவாங்க??