இதுவரைக்கும் உங்க எல்லோரையும் மொக்கை போட்டு கொடுமைப்படுத்தி இருக்குறேன், கவுஜ எழுதி கொடுமைப்படுத்தி இருக்குறேன். இன்னைக்கு கொஞ்சம் கொலைவெறி அதிகமா இருக்கதால சிறுகதை எழுதி கொடுமைப்படுத்த போறேன். வாசிச்சா பிறகு நீங்க உயிரோட இருந்தாலோ இல்ல, உங்க computerஅ உடைக்காம வைச்சிருந்தாலோ பின்னுட்டம் போடுங்க.
ஒரு காதல்கதை
இன்று ஆதி ஆஸ்திரேலியா பறக்கத்தயாராகிறான். ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு விமானநிலையம் நோக்கி பெற்றோர் மற்று சகோதரியுடன் அவந்து அப்பா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் பயணம், அவன் மனமோ அவளின் சிந்தனையில் லயித்திருக்கிறது. அவள் அழகான ரோஜா, எரியாத தீ, பூமியின் தேவதை... "ப்ரியா" அவள் பெயரை அவன் மனம் ஓயாமல் உச்சரிக்கிறது. அவளின் பிரிவு கண்களில் கண்ணீராய் எட்டிப்பார்த்தது அவன் மனமோ கவிதை பாடியது
என்றும்
எனைப்பிரியாய்
என்பதால்-உன்
பெயர் ப்ரியாவோ??
அவன் கண்களில் கண்ணீர் கண்டு தங்கள் மேல் இவனுக்கு இவ்வளவு பாசமா என அவன் குடும்பமும் கண்ணீருடன் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.
விமானத்தினுள்ளே, மேக்கப்பால் அழகாய் சிரிக்கும் விமானபணிப்பெண்கள், அறியா வயதுடனே மகிழ்வாய்க்குதிக்கும் சிறு குழந்தைகள், அவன் தோளில் உலகம் மறந்து உறக்கம் அணைக்கும் காதலி, அவள் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா என கிறங்கிக்கிடக்கும் காதலன், என்றும் மாறா அன்புடன் இன்றும் அணைத்திருக்கும் உடலில் வயதாய் உள்ளத்தில் இளமையாய் ஒரு காதல் ஜோடி என பலவகை உவகைகள் நிறைந்திருக்க உணர்ச்சியற்ற ஜடமாய் தாய்நாடு பிரிவது, தாயைப்பிரிவது மறந்து காதலி நினைவில ஆதி, ஜன்னலூடே இருளை வெறித்தபடி பழையவைகளை அசை போட ஆரம்பித்தான்.
Smsல் நட்பு புதிதாய் அறிமுகப்படுத்தியது அந்த வார இதழ், நண்பன்தான் இதழின் ஆசிரியன் என்பதால் போட்டுத்தொலைத்தான் ஆதியின் விபரங்களை
Name-Aathi
Sex-Male
Phone # - **********
பெண்களுடன் அதிகம் பழகாத ஆதிக்கு அடுத்தடுத்து பெண்களிடம் இருந்து smsகள் பெரிதாய் எதற்குமே பதிலளிக்காமல் இருந்தவனை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்தது அந்த sms
"Hi aathi, this is Priya, Juz saw ur # on paper. Felt like smsing u , wanna be ma friend? -priya-"
ஏதோ ஒன்று அவனை ஈர்க்க நட்பானார்கள் இருவரும், காலம் செல்ல ஆதி காதல் சொன்னான், அவளோ தன் படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா செல்லப்போவதாக சொல்ல, தானும் வருவதாய் ஆதியும் சொல்ல காதல் ஆஸ்திரேலியாவினால் உறுதியானது.
படிப்பதாய் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை மறந்து காதலிக்காய் ஆஸ்திரேலிய வாக்கை காப்பாற்ற தயாரானான் ஆதி. "இப்போதெல்லாம் மகன் இரவெல்லாம் கண்விழித்து படிக்கிறான்" என அம்மா அப்பவிடம் சொன்னதை சுரணை கெட்ட ஜென்மமாய் இரவில் அலைபேசியில் மொழிந்தான் ஆதி. நிலவினாலும் புறாவினாலும் வளர்க்கப்பட்ட புராண காதல்களை விட அலைபேசிகளினால் வளர்க்கும் தன் காதல் உயர்ந்ததென்றான் ஆதி. பள்ளி முடியுமுன்பே யாரும் அறியாவண்ணம் மதிலேறி பாய்ந்து காதலி பள்ளி முன்பு தவம் கிடந்தான். 10 மணிவரை கண்கள் திறக்காதவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து walking போவதாய் காதலி வீட்டின் முன் கொக்காய் ஒற்றைக்காலில் நின்றான். அவன் பள்ளி வாழ்க்கை முடியும் வேளை நண்பர்கள் பிரிவை மறந்து காதலி எப்போழுதும் பார்க்கலாம் என பறந்தோடித்திரிந்தான்
பள்ளி வாழ்க்கையும் முடிந்தது, அவளுக்கு கொடுத்த வாக்கைக்காப்பற்ற பெற்றோரிடம் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா போக போவதாய் கூறி ஏற்பாடுகளும் செய்தான். அவளுக்கு அவள் பள்ளியிலே சில பாதுகாப்புக்காய் அவளது பள்ளியில் படிக்கும் தன் நண்பன் பாரத்தை அவளுக்கு அறிமுகப்படுத்து வைத்து அவர்களையும் நண்பர்கள் ஆக்கினான் ஆதி.
"what whould u like to have sir?"
விமானப்பனிப்பெண்ணின் குரல் கேட்டு நினைவுகள் மீண்டும் உலகம் வந்தது.
"no thanks plz"
என்றவாறு வேறு பல நினைவுகளோடு ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தான். முதல் வேலையாய் part-time வேலை ஒன்றைத்தேடிக்கொண்டு ஆஸ்திரேலிய டாலர்களை அலைபேசியில் வீணடித்தான். ஆஸ்திரேலியாவில் அவனும் அவள் நாட்டில் அவளும் Sms மூலமும் அலைபேசி மூலமும் முத்தங்களையும், கண்ணீரையும், காதலையும் பரிமாறிக்கொண்டனர்
ஆதி ஆஸ்திரேலியா வந்து 6 மாதங்களின் பின் ஒருநாள் அலைபேசியில் அவளைத்தொடர்பு கொள்ள அவள் அலைபேசி off செய்யப்பட்டிருந்தது. Land Lineல் தொடர்பு கொண்டு அவளுடன் பேச முயன்றான். நீண்ட முயற்சியின் பின் அவள் தொலைபேசியில் சொல்கிறாள் " நான் பாரத்தைக்காதலிக்கிறேன். அவரும் என்னைக்காதலிக்கிறார்" இங்கு ஆதியின் இதயம் சுக்குநூறாய் உடையும் சத்தம் பெரிதாய் அவனுக்கு மட்டும் கேட்கிறது சிறிது நேரத்தில் சுக்குநூறான அலைபேசி போலவே
Monday, August 18, 2008
என் முதல் சிறுகதை முயற்சி
அன்புடன் இவன் @ 7:04 PM
வகைகள் ஒரு சிறுகதை முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)
31 பதிலகள்:
இங்க பாருங்க, என் கிட்ட மட்டும் சொல்லுங்க, இது உண்மை கதை தானே? சிறுகதை ன்னு சொல்லி என்னை ஏமாற்றி விட்டிங்களே!
அது சரி, எந்த பெண்ணிடமும் பேசாத ஆதி ஏன் ப்ரியாவிடம் பேசினார்?
புனித்
அது ஏதோ ஒரு ஈர்ப்பில பேசிட்டான் விடுங்க விடுங்க
அருமையாக இருக்கிறது!
//அருமையாக இருக்கிறது!//
குசும்பன் எங்கிற உங்க பேர இப்படித்தான் நிறுபிக்கனுமா??
:))
Ivan - Aathi.. etho connection irukkum polaiye... ;)))
//:))
Ivan - Aathi.. etho connection irukkum polaiye... ;)))//
ஏன்யா ஏன் ஏன் இந்த கொலைவெறி?? சும்மா கதை என்ன பேரில மொக்கைப்பதிவு ஒன்னு போடலாம் என்னா ஏன் இப்படி கொலை வெறியோட அலையுறீங்க??
நீங்க எப்படி வேணுனாலும் எழுதுங்க. நாங்க ஓன்னும் சொல்லமாட்டோம்.
ஏன்னாஆஆஆஆ...நாங்கள்லாம் ரொம்ப நல்லவங்க!!!!!!!!
சொந்த கதை மாதிரி இருக்கு ;-)
//நீங்க எப்படி வேணுனாலும் எழுதுங்க. நாங்க ஓன்னும் சொல்லமாட்டோம்.
ஏன்னாஆஆஆஆ...நாங்கள்லாம் ரொம்ப நல்லவங்க!!!!!!!!//
பார்க்க நல்லாவே தெரியுது நீங்க எல்லாம் எவ்வளவு நல்லவங்க என்னு...
//சொந்த கதை மாதிரி இருக்கு ;-)//
இல்லை கிரி சும்மா எழுதினதுதான்
நானும் சில சமயம் சிறுகதை எழுத முயன்று முடியல.. என்முயற்சியில் ஆரம்பமெல்லாம் நல்லா ஆரம்பிச்சு முடிவுல சொதப்பிடும் ..
ஓகே முயற்சி திருவினையாக்கும்.. தொடருங்கள்..:)
// ஜி said...
:))
Ivan - Aathi.. etho connection irukkum polaiye... ;)))
//
ஜி சொன்னா சரியாதான் இருக்கும்..
so.. ரிப்பீட்டேய்...
நீங்களும் கதை எழுத ஆரம்பிச்சிட்டீங்களா???
//நானும் சில சமயம் சிறுகதை எழுத முயன்று முடியல.. என்முயற்சியில் ஆரம்பமெல்லாம் நல்லா ஆரம்பிச்சு முடிவுல சொதப்பிடும் ..
ஓகே முயற்சி திருவினையாக்கும்.. தொடருங்கள்..:)//
நானும் அப்படித்தான் நினைத்துதான் இதை எழுத ஆரம்பித்தது. இங்க ஆரம்பத்தில சொதப்பி இருக்கனா?? இல்ல கடைசீல சொதப்பி இருக்கனா?? இல்ல கதை fullஆவே சொதப்பி இருக்கனா?? என்னுதான் புரியல
//ஜி சொன்னா சரியாதான் இருக்கும்..
so.. ரிப்பீட்டேய்...//
ஏன் ஏன் சரவணகுமார்... உங்களுக்கு ஏதாவது கோவம் இருந்தா நேராவே சொல்லீடுங்க நான் எல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன். அதுக்காக இப்படி எல்லாம் சொன்னா மனசு தாங்காது....
//நீங்களும் கதை எழுத ஆரம்பிச்சிட்டீங்களா???//
லைட்டா ஒரு கொலைவெறிதான்
இவன் இயல்பா எழுதறீங்களே!சூப்பர்..தொடர்ந்து பல கதைகளை எழுதுங்க :)
நிஜக்கதையா?
//10 மணிவரை கண்கள் திறக்காதவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து walking போவதாய் காதலி வீட்டின் முன் கொக்காய் ஒற்றைக்காலில் நின்றான். //
இது நல்ல காமெடி
//இவன் இயல்பா எழுதறீங்களே!சூப்பர்..தொடர்ந்து பல கதைகளை எழுதுங்க :)//
ரம்யா ரமணிஇது நீங்க உண்மையாத்தான் சொல்லுறீங்களா?? இல்ல நக்கலுக்கு சொல்லுறீங்களா?? உண்மைய சொல்லுங்க இது நல்லாவா இருக்குது??
//நிஜக்கதையா?//
இது நிஜக்கதை மாதிரித்தான்
//இது நல்ல காமெடி//
அவன் வாழ்க்கையைப்பார்த்தா உங்களுக்கு காமெடி மாதிரி இருக்கா?
அட உங்கள போயி நக்கலடிப்பேனா? முதல் முயற்சி நல்ல முயற்சி..
நாங்க எல்லாம் தைரியமா எழுதலே?அதே மாதிரித்தான்..
எழுத எழுத நல்லா வரும்னு தல ஜியே சொல்லிருக்காரு !
//அட உங்கள போயி நக்கலடிப்பேனா? முதல் முயற்சி நல்ல முயற்சி..
நாங்க எல்லாம் தைரியமா எழுதலே?அதே மாதிரித்தான்..
எழுத எழுத நல்லா வரும்னு தல ஜியே சொல்லிருக்காரு !//
நன்றி ரம்யா ரமணி திரும்பவும் இன்னஒருமுறை முயற்சி செய்து பார்க்கிறேன். கொடுமை அனுபவிக்க தயாரா இருங்கள்
Ramya Ramani said...
அட உங்கள போயி நக்கலடிப்பேனா? முதல் முயற்சி நல்ல முயற்சி..
நாங்க எல்லாம் தைரியமா எழுதலே?அதே மாதிரித்தான்..
எழுத எழுத நல்லா வரும்னு தல ஜியே சொல்லிருக்காரு !
//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டு
திரும்பவும் இன்னஒருமுறை முயற்சி செய்து பார்க்கிறேன். கொடுமை அனுபவிக்க தயாரா இருங்கள்
//
நான் ரெடியாயிட்டேன்.நீங்க சீக்கிரம் எழுதுங்கண்ணே
பாருங்க இவன் உங்களுக்கு எவ்ளோ சப்போர்ட்ன்னு.. Go Ahead Rock :)
//நான் ரெடியாயிட்டேன்.நீங்க சீக்கிரம் எழுதுங்கண்ணே//
சரிங்கண்ணா கூடிய சீக்கிரமே எழுதிடுவோம்
//பாருங்க இவன் உங்களுக்கு எவ்ளோ சப்போர்ட்ன்னு.. Go Ahead Rock :)//
நன்றி ரம்யா ரமணி கூடிய சீக்கிரம் எழுதுகிறேன்
ஹை நிஜமாவே நல்லாருக்கு உங்க (உண்மைக்) கதை..!! :)
//ஹை நிஜமாவே நல்லாருக்கு உங்க (உண்மைக்) கதை..!! :)//
எனக்கிருக்க கொலைவெறிய தீர்த்துக்க நான் கதை எழுதினா வீங்க எல்லோரும் ரொம்ப கொலை வெறியாத்தான் அலையுறீங்க...
இவன்
தலைப்பை திருத்தி சொல்லுங்க
என் முதல் காதல்கதை
சரியா
//இவன்
தலைப்பை திருத்தி சொல்லுங்க
என் முதல் காதல்கதை
சரியா//
ங்ண்ணா ஏங்கண்ணா ஏன் இந்த கொலைவெறி??
Post a Comment