Monday, August 11, 2008

நம்ம தலைவர (J.K.ரித்தீஷ்) ஆடி ஜெயிக்க ஆள் உண்டா??

பாருங்க மக்களே நம்ம தலைவர் ரித்தீஷ் மன்னிக்கவும் J.K.ரித்தீஷ் ஆட்டத்துக்கு முன்னுக்கு யார் இருக்கது?? நாயகன் பட டிரெயிலர் இதுதான் சும்மா கலக்குறார் தலைவர் பாருங்க. J.K.ரித்தீஷ் ரசிகமணிகளே தலைவரின் ஆட்டத்தைப்பாரீர் ஜென்ம சபல்யம் அடைவீர்
நம்ம தலைவர் ஆட்டத்துக்கு முன்னுக்கு விஜய்யாவது சொஜய்யாவது... பாருங்கைய்யா தலைவர் ஜீன்ஸ் கலர எப்படி சும்மா கண்ண கூசுது சா சா எப்படி கண்ண கவருது என்னு... அந்த கண்ணாடி(என்ன பாவம் பண்ணிச்சோ) எப்படி நம்ம தலைவருக்கு பொருந்துது என்னு. என்ன ஒரு டான்ஸ் என்ன ஒரு மூவ்மெண்ட்?? மத்தவங்க இந்த மூவ்மன்ட் செஞ்சா "மூவ்" மூட்டு வலி தைலம் போட வேண்டியதுதான். பாருங்கைய்யா என்ன மாதிரி பாடல் வரிகள் என்னு இந்த பாட்ட சின்ன வயசில படிச்சா பிறகு எல்லோரும் மறந்திருப்போம். நமக்கு அந்த பாட்டை புதிய வடிவில் தந்ததுக்காகவே நம்ம தலைவருக்கு ஒரு சிலை வைக்கலாமய்யா... வாரீர் ரசிக மணிகளே வந்து இன்பம் பெறுவீர்

14 பதிலகள்:

ஜெகதீசன் said...

:)))))
கலக்குறாரு போங்க....

குசும்பன் said...

சின்ன புள்ளையா இருக்கும் பொழுது இந்த பொண்ணுங்க கூட சில்லு கோடு விளையாண்டது நினைவுக்கு வருது, அதோடு நொண்டி அடிச்சு பிடிச்சு விளையாடுவதும் நினைவுக்கு வருகிறது இவரது டான்ஸை பார்த்தா!!!

நல்லவேளை நான் ஆபிஸில் இருப்பதால் சவுண்டு வெச்சு கேட்கவில்லை:) அதான் காது தப்பிச்சது:)

SanJai said...

அட..அட..அட.. இந்த காட்சியை காண கண் கோடி வேண்டுமே... தலைவரை தரிசிக்கத் தந்த இவணாருக்கு கோடானு கோடி நன்றிகள்...

தசாவதார, சுப்ரமணியபுரம் போன்ற படு கேவலமான படங்களை பார்த்து நொந்து போன வேளையில் பழய சூபப்ர்ஸ்டாரின் அற்புதமான குசேலன் வரிசையில் அதை விட 1000 மடங்கு அதிக உலக்த் தரமான எங்கள் அகில உலக நிரந்தர சூபப்ர்ஸ்டார் ஜேகே ரித்திஷின் புதிய படத்தை காண தவமாய் தவம் இருக்கிறோம்... :)))

வழிப்போக்கன் said...

யாரைக்கேட்டு இந்த பதிவு போட்டீங்க மன்றத்துல உத்தரவு வாங்கணும் தெரியாதா ?

(ஐய்யய்யோ என்னோட அடுத்த பதிவுக்கான மேட்டர் போய்டுச்சே)

இவன் said...

//யாரைக்கேட்டு இந்த பதிவு போட்டீங்க மன்றத்துல உத்தரவு வாங்கணும் தெரியாதா ?

(ஐய்யய்யோ என்னோட அடுத்த பதிவுக்கான மேட்டர் போய்டுச்சே)//


இதெல்லாம் முதல்லயே சொல்லி இருக்க கூடாதா?? சொல்லி இருந்தா நான் போடாம இருந்திருப்பேனே.... நேத்து "நீங்கள் குழாயில்" அதுதாங்க youtube அதுக்கு "நீங்கள் குழாய்" தானே சரியான தமிழ்... அதில பார்த்தவுடனேயே இந்த பதிவு என் ப்லொக்ல ஏறிடுச்சு

இவன் said...

//:)))))
கலக்குறாரு போங்க....//


வாங்க ஜெகதீசன் முதல் முதல நம்ம தலைவர் படத்த பாக்கிறத்துக்காக வந்திருக்கீங்க.. நன்றி நன்றி

இவன் said...

//அட..அட..அட.. இந்த காட்சியை காண கண் கோடி வேண்டுமே... தலைவரை தரிசிக்கத் தந்த இவணாருக்கு கோடானு கோடி நன்றிகள்...

தலைவருக்காக இது கூட செய்யலன்ன எப்படி சஞ்சய்>> இதெல்லாம் சாதாரணம்

//தசாவதார, சுப்ரமணியபுரம் போன்ற படு கேவலமான படங்களை பார்த்து நொந்து போன வேளையில் பழய சூபப்ர்ஸ்டாரின் அற்புதமான குசேலன் வரிசையில் அதை விட 1000 மடங்கு அதிக உலக்த் தரமான எங்கள் அகில உலக நிரந்தர சூபப்ர்ஸ்டார் ஜேகே ரித்திஷின் புதிய படத்தை காண தவமாய் தவம் இருக்கிறோம்... :)))//

யப்பா நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே குஷேலன் நல்ல படம் என்னு

இவன் said...

//சின்ன புள்ளையா இருக்கும் பொழுது இந்த பொண்ணுங்க கூட சில்லு கோடு விளையாண்டது நினைவுக்கு வருது, அதோடு நொண்டி அடிச்சு பிடிச்சு விளையாடுவதும் நினைவுக்கு வருகிறது இவரது டான்ஸை பார்த்தா!!!

இப்படியெல்லாம் தலைவரப்பத்தி பேசக்கூடாது ஆமா. அவர் ஸ்டைலப்பருங்கைய்யா அதப்பார்க்கவே கோடி கண்கள் வேணும்

//நல்லவேளை நான் ஆபிஸில் இருப்பதால் சவுண்டு வெச்சு கேட்கவில்லை:) அதான் காது தப்பிச்சது:)//

அந்தப்பாட்டுத்தான் ஹைலைட்டே அதக்கேட்காம போறீங்களே அதக்கேளுங்க முதல்ல

கயல்விழி said...

என் கஷ்டகாலம், இந்த மூஞ்சை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு :(

இவன் said...

//என் கஷ்டகாலம், இந்த மூஞ்சை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு :(//

இப்படி எல்லாம் தலைவரை தப்பாக சொல்லக்கூடாது ஆமா

Thamizhmaangani said...

கருத்துள்ள பாடல்களை மிஞ்சம் அளவுக்கு அருமையான நடனக்காரர் ரித்தீஷ்!:)))))))

இவன் said...

//கருத்துள்ள பாடல்களை மிஞ்சம் அளவுக்கு அருமையான நடனக்காரர் ரித்தீஷ்!:)))))))//

அப்போ விஜய விட தலைவர ஆட்டத்தில் சிறந்தவர் எங்கிறத ஒத்துக்கிறீங்களா தமிழ்மாங்கனி??

அதிஷா said...

சந்திர மண்டல ஜனாதிபதி அண்ணன் ரித்திஷ் அவர்களின் புகழ்பரப்பும் இந்த பதிவை அகில பிரபஞ்ச இளம்புயல் ரித்திஷ் ரசிகர் மன்ன்றம் சார்பாக வரவேற்கிறோம் .

விரைவில் உங்கள் வீட்டுக்கு 50 ரூபாயும் ஒரு பொட்டலம் தலைப்பாக்கட்டு பிரியாணியும் , ஒரு குசேலன் டிக்கெட்டும் அனுப்புகிறோம்

இவன் said...

//சந்திர மண்டல ஜனாதிபதி அண்ணன் ரித்திஷ் அவர்களின் புகழ்பரப்பும் இந்த பதிவை அகில பிரபஞ்ச இளம்புயல் ரித்திஷ் ரசிகர் மன்ன்றம் சார்பாக வரவேற்கிறோம் .//

நன்றி நன்றி :)

//விரைவில் உங்கள் வீட்டுக்கு 50 ரூபாயும் ஒரு பொட்டலம் தலைப்பாக்கட்டு பிரியாணியும் , ஒரு குசேலன் டிக்கெட்டும் அனுப்புகிறோம்//

50 ரூபாயும் ஒரு பொட்டலம் தலைப்பாக்கட்டு பிரியாணியும் ok

சந்தோசமா ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனா அந்த குசேலன் பட டிக்கேட் மட்டும் வேணாம் இவ்வளவு விமர்சனத்தையும் படிச்சாப்பிறகும் நான் அந்த படத்த பார்ப்பேன் என்னு எப்படி நினைக்கிறீங்க?? என்ன இருந்தாலும் இவ்வளவு வில்லத்தனம் கூடாது