இதுவரைக்கும் உங்க எல்லோரையும் மொக்கை போட்டு கொடுமைப்படுத்தி இருக்குறேன், கவுஜ எழுதி கொடுமைப்படுத்தி இருக்குறேன். இன்னைக்கு கொஞ்சம் கொலைவெறி அதிகமா இருக்கதால சிறுகதை எழுதி கொடுமைப்படுத்த போறேன். வாசிச்சா பிறகு நீங்க உயிரோட இருந்தாலோ இல்ல, உங்க computerஅ உடைக்காம வைச்சிருந்தாலோ பின்னுட்டம் போடுங்க.
ஒரு காதல்கதை
இன்று ஆதி ஆஸ்திரேலியா பறக்கத்தயாராகிறான். ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு விமானநிலையம் நோக்கி பெற்றோர் மற்று சகோதரியுடன் அவந்து அப்பா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் பயணம், அவன் மனமோ அவளின் சிந்தனையில் லயித்திருக்கிறது. அவள் அழகான ரோஜா, எரியாத தீ, பூமியின் தேவதை... "ப்ரியா" அவள் பெயரை அவன் மனம் ஓயாமல் உச்சரிக்கிறது. அவளின் பிரிவு கண்களில் கண்ணீராய் எட்டிப்பார்த்தது அவன் மனமோ கவிதை பாடியது
என்றும்
எனைப்பிரியாய்
என்பதால்-உன்
பெயர் ப்ரியாவோ??
அவன் கண்களில் கண்ணீர் கண்டு தங்கள் மேல் இவனுக்கு இவ்வளவு பாசமா என அவன் குடும்பமும் கண்ணீருடன் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.
விமானத்தினுள்ளே, மேக்கப்பால் அழகாய் சிரிக்கும் விமானபணிப்பெண்கள், அறியா வயதுடனே மகிழ்வாய்க்குதிக்கும் சிறு குழந்தைகள், அவன் தோளில் உலகம் மறந்து உறக்கம் அணைக்கும் காதலி, அவள் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா என கிறங்கிக்கிடக்கும் காதலன், என்றும் மாறா அன்புடன் இன்றும் அணைத்திருக்கும் உடலில் வயதாய் உள்ளத்தில் இளமையாய் ஒரு காதல் ஜோடி என பலவகை உவகைகள் நிறைந்திருக்க உணர்ச்சியற்ற ஜடமாய் தாய்நாடு பிரிவது, தாயைப்பிரிவது மறந்து காதலி நினைவில ஆதி, ஜன்னலூடே இருளை வெறித்தபடி பழையவைகளை அசை போட ஆரம்பித்தான்.
Smsல் நட்பு புதிதாய் அறிமுகப்படுத்தியது அந்த வார இதழ், நண்பன்தான் இதழின் ஆசிரியன் என்பதால் போட்டுத்தொலைத்தான் ஆதியின் விபரங்களை
Name-Aathi
Sex-Male
Phone # - **********
பெண்களுடன் அதிகம் பழகாத ஆதிக்கு அடுத்தடுத்து பெண்களிடம் இருந்து smsகள் பெரிதாய் எதற்குமே பதிலளிக்காமல் இருந்தவனை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்தது அந்த sms
"Hi aathi, this is Priya, Juz saw ur # on paper. Felt like smsing u , wanna be ma friend? -priya-"
ஏதோ ஒன்று அவனை ஈர்க்க நட்பானார்கள் இருவரும், காலம் செல்ல ஆதி காதல் சொன்னான், அவளோ தன் படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா செல்லப்போவதாக சொல்ல, தானும் வருவதாய் ஆதியும் சொல்ல காதல் ஆஸ்திரேலியாவினால் உறுதியானது.
படிப்பதாய் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை மறந்து காதலிக்காய் ஆஸ்திரேலிய வாக்கை காப்பாற்ற தயாரானான் ஆதி. "இப்போதெல்லாம் மகன் இரவெல்லாம் கண்விழித்து படிக்கிறான்" என அம்மா அப்பவிடம் சொன்னதை சுரணை கெட்ட ஜென்மமாய் இரவில் அலைபேசியில் மொழிந்தான் ஆதி. நிலவினாலும் புறாவினாலும் வளர்க்கப்பட்ட புராண காதல்களை விட அலைபேசிகளினால் வளர்க்கும் தன் காதல் உயர்ந்ததென்றான் ஆதி. பள்ளி முடியுமுன்பே யாரும் அறியாவண்ணம் மதிலேறி பாய்ந்து காதலி பள்ளி முன்பு தவம் கிடந்தான். 10 மணிவரை கண்கள் திறக்காதவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து walking போவதாய் காதலி வீட்டின் முன் கொக்காய் ஒற்றைக்காலில் நின்றான். அவன் பள்ளி வாழ்க்கை முடியும் வேளை நண்பர்கள் பிரிவை மறந்து காதலி எப்போழுதும் பார்க்கலாம் என பறந்தோடித்திரிந்தான்
பள்ளி வாழ்க்கையும் முடிந்தது, அவளுக்கு கொடுத்த வாக்கைக்காப்பற்ற பெற்றோரிடம் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா போக போவதாய் கூறி ஏற்பாடுகளும் செய்தான். அவளுக்கு அவள் பள்ளியிலே சில பாதுகாப்புக்காய் அவளது பள்ளியில் படிக்கும் தன் நண்பன் பாரத்தை அவளுக்கு அறிமுகப்படுத்து வைத்து அவர்களையும் நண்பர்கள் ஆக்கினான் ஆதி.
"what whould u like to have sir?"
விமானப்பனிப்பெண்ணின் குரல் கேட்டு நினைவுகள் மீண்டும் உலகம் வந்தது.
"no thanks plz"
என்றவாறு வேறு பல நினைவுகளோடு ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தான். முதல் வேலையாய் part-time வேலை ஒன்றைத்தேடிக்கொண்டு ஆஸ்திரேலிய டாலர்களை அலைபேசியில் வீணடித்தான். ஆஸ்திரேலியாவில் அவனும் அவள் நாட்டில் அவளும் Sms மூலமும் அலைபேசி மூலமும் முத்தங்களையும், கண்ணீரையும், காதலையும் பரிமாறிக்கொண்டனர்
ஆதி ஆஸ்திரேலியா வந்து 6 மாதங்களின் பின் ஒருநாள் அலைபேசியில் அவளைத்தொடர்பு கொள்ள அவள் அலைபேசி off செய்யப்பட்டிருந்தது. Land Lineல் தொடர்பு கொண்டு அவளுடன் பேச முயன்றான். நீண்ட முயற்சியின் பின் அவள் தொலைபேசியில் சொல்கிறாள் " நான் பாரத்தைக்காதலிக்கிறேன். அவரும் என்னைக்காதலிக்கிறார்" இங்கு ஆதியின் இதயம் சுக்குநூறாய் உடையும் சத்தம் பெரிதாய் அவனுக்கு மட்டும் கேட்கிறது சிறிது நேரத்தில் சுக்குநூறான அலைபேசி போலவே
Showing posts with label ஒரு சிறுகதை முயற்சி. Show all posts
Showing posts with label ஒரு சிறுகதை முயற்சி. Show all posts
Monday, August 18, 2008
என் முதல் சிறுகதை முயற்சி
அன்புடன் இவன் @ 7:04 PM 31 பதிலகள்
வகைகள் ஒரு சிறுகதை முயற்சி
Subscribe to:
Posts (Atom)


