Showing posts with label தன்னிலை விளக்கம். Show all posts
Showing posts with label தன்னிலை விளக்கம். Show all posts

Friday, August 8, 2008

இது ஒரு தன்னிலை விளக்கம்

வணக்கம் வலையுலகமே, சில நாட்களில் என்னுள் ஏற்பட்ட குழப்பம், நண்பர்கள் சிலர் நான் எழுதுவது பற்றி என்னிடம் நேரில் கூறிய சில கருத்துக்கள் என்னை சற்றே பாதித்தமையால் இந்த பதிவு எழுதும் வம்பே வேண்டாம் என ஒதுங்கியே இருந்தேன். இருந்தாலும் அடிக்கடி தமிழ்மணம் வாசல்வரை வந்து பின் திரும்பிச்சொன்றதுமுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பதிவர் நண்பர் ஒருவருடன் ஜீ talkல் பேசியவேளை அவர் " இப்படி எல்லாம் நான் யோசித்திருந்தால் எப்போதோ நான் நிறுத்தியிருப்பேன்" எனக்கூறிய வேளை நடு மண்டையில் "நொங்" எனக்கொட்டியது போல் இருந்தது.

அதேவேளை இந்தப்பதிவின் மூலம் என் பதிவினை வாசித்து தன் கருத்துக்களைக்கூறிய அந்த நண்பர்களுக்கு என் நன்றியைக்கூறிக்கொண்டு என்னைப்பற்றி சிறு விளக்கமளிக்கவிழைகிறேன்.

நண்பரே, முதலாவதாக நான் உங்களைப்போல் எழுத்துக்களில் தேர்ந்த எழுத்தாளன் கிடையாது, எனக்கு எழுத்து நடை தெரியாது "Practice makes perfect" எனப்படுவது போல் நான் தொடர்ந்து எழுதினால் சற்றே ஒழுங்காக எழுதுவேன் என நினைக்குறேன். நான் எழுதுவது இலங்கைத்தமிழையும் சாராமல் இலங்கைத்தமிழையும் சாராமல் ஆங்காங்கே இந்தியத்தமிழும் இலங்கைத்தமிழும் பரவிக்கிடப்பதாக கூறி இருந்தீரகள். நண்பரே நம் தமிழை எத்தனை பேர் எத்தனை விதமாக பேசுவார்கள் தெரியுமா? இலங்கையிலேயே மட்டக்களப்புத்தமிழ், யாழ்ப்பாணத்தமிழ், கொழும்புத்தமிழ் என பலவிதமான accent எனப்படுகிற பேச்சுவழக்குகள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், கோவைத்தமிழ், திருநெல்வேலித்தமிழ் எனப்பல வகை உண்டு. மலேசியாவில் மலேசியத்தமிழ், சிங்கப்பூரில் சிங்கப்பூர்த்தமிழ் இப்படித்தமிழையே எத்தனையோ விதமான பேச்சுவழக்கு உள்ளது, எனக்கு பலதரப்பட்ட பகுதிகளில் இருந்தும் பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் என்னுடன் பேசும்போது அவர்களின் தாக்கம் என்னில் பிரதிபலிக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. முக்கியமான ஒன்று நான் என்னை இந்தியத்தமிழன் என்றோ இலங்கைத்தமிழன் என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் தமிழன் அவ்வளவே... எனக்குத்தெரியும் நான் உங்களோடு பேசி ஜெயிக்க முடியாது என்பது அதனால்தான் எனது விளக்கத்தை ஒரு பதிவின் மூலமே எழுதியிருக்கிறேன். நீங்கள் என்னிடம் கூறியதை ஒரு பதிவின் மூல வெளிப்படுத்தியது ஒரு அநாகரிகமான செயலாகவோ அல்லது தவறாகவோ உங்களுக்கு தெரிந்தால் அதற்காகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

நான் இந்தப்பதிவில் எழுதியதிலோ அல்லது இதற்கு முந்திய பதிவுகளில் எழுதியதிலோ தவறுகள் இருப்பின் நற்றமிழ் கூறும் எழுத்துலக பிரம்மாக்கள் என்னை மன்னிக்கட்டும்


அன்புடன்
இவன்