Showing posts with label நண்பனுக்காக. Show all posts
Showing posts with label நண்பனுக்காக. Show all posts

Friday, August 29, 2008

நண்பனுக்காக

கொஞ்சநாட்களுக்கு முன் என்னைப்பிரிந்த என் நண்பன் ராகவனுக்காக மனம்போன போக்கில் எழுதியது.....


தொலைந்து போன நாட்கள்
தொலையாத நினைவுகள்
மரணத்தைத்தேடிக்கொண்டு
வலிகளை எமக்குத்தந்தவனே
மரணம் கண்டு மரத்துப்போன
எங்களையும் கலங்க வைத்தவன் நீ
வளர்த்த பெரியதாயின்
மரணம் கூட கலங்கவைத்ததில்லை
என்னை-கண்ணீர் விட்டழுகிறேன்
உந்தன் பிரிவு கண்டு
ஜீரணம் அடையவில்லையடா-நீ
நேற்று ஊட்டிய உணவுகூட
எப்படி உன் பிரிவு ஜீரணித்து
கொள்ளப்போகிறேன்-கொஞ்சமாவது நினைத்தாயா?
நான் உனக்காக அழுவேன் என்று
எத்தனை சண்டைகள் பிடித்திருப்போம்
நானும் நீயும்
உங்கள் மகனுக்கு நான்
பொறுப்பு-அவன் உங்கள் மகனல்ல
என் நண்பன் என நான் கூறிய
நம் தாய்க்கு என்னடா
பதில் சொல்வேன் நான்...??
நாட்கள் தொலையட்டும்
நம் நினைவுகள் நிலைக்கட்டும்
நானும் இறந்து வருவேன் -ஒருநாள்
உனைக்காண-அன்று சொல்கிறேன்
உன்னால் உடைந்த இதயங்கள்
எத்தனை எத்தனை என்பதை


அதுவரை நினைவுடன்
ஆதவன்