வணக்கம் மக்களே.... இவ்வளவு நாள் படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்லி ஊரை ஏமாற்றி உலகை ஏமாற்றி.... அப்பாவ ஏமாத்தி அம்மாவ ஏமாத்தி பொண்ணுங்க பின்னாடி போய்க்கீட்டு ப்லொக் எழுதி அப்பா காசில காலத்த தள்ளிக்கிட்டு இருந்தேன்... இப்படியே போனால் எனக்கு தம் தண்ணி வாங்க கூட கையில காசு இருக்காது எங்கிறது கண நேரத்தில் என் மனதில் தோன்றிய காரணத்தால் வேற வழி இல்லாம வேலை ஒன்றை தேடிக்கொள்ள வேண்டும் எங்கிற எண்ணம் மனதில் தோன்றியது. அதனால ஏதவது ஒரு part-time work தேடிக்கொள்ளுறது எங்கிற முடிவுக்கு வந்து சரி என்னு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்... முயற்சியின் முடிவில் ஒரு வேலைக்கு interviewக்கு கூப்பிட்டனுங்க நானும் நமக்கு இருக்க திறமைக்கு microsoftல வேலைக்கு கூப்பிடுவாங்க எங்கிற எண்ணம் இருந்தாலும் இப்போதைக்கு இந்த வேலைய பார்ப்போம் என்னு அந்த interviewக்கு போனேன். வேலையும் கிடைச்சிருச்சு அதுவும் melbourne airportல சரி நமக்கு வேற வழி இல்ல எங்கிறதாலயும் தம்மும் தண்ணியும் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நின்றதன் காரணத்தாலும் அந்த வேலைக்கு போகலாம் எங்கிற முடிவுக்கு வந்திருக்கேன்...

சரிடா லூசுப்பையலே அதில என்னடா ஆஸ்திரேலியா வர்ரவங்களுக்கு எச்சரிக்கை வேண்டி இருக்கு என்னு கேக்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க என் வேலைக்கு சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $20000..... அவ்வளவு சம்பளம் தர்ர அளவுக்கு என்னடா வேலை எங்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க melbourne airportல நிக்கிற flightக்கு பிக்கப் பிரச்சனை இருந்திச்சுன்னா நான்தான் flightஅ தள்ளி start பண்ணனும்... மற்றது flight இறங்கிற நேரம் ஏதாவது landing problems இருந்திச்சுன்னா நான்தான் flightஅ பிடிச்சு நிறுத்தனும். தப்பித்தவறியும் flight வானத்தில போகும் போது ஏதாவது எஞ்சின் பிரச்சனை வந்திச்சுன்னா நான்தான் இறங்கி தள்ளி விடனும்... இப்போ சொல்லுங்க இது ஒரு எச்சரிக்கைப்பதிவுதானே?? அதையும் பார்க்க முக்கியமான எச்சரிக்கை நீங்க வந்து ஆஸ்திரேலியா மெல்பொர்னில் இறங்கும் போது முதல்ல பார்க்கும் தமிழ் முகம் நானாக இருக்கவும் சாத்தியங்கள் இருக்கு அதனால நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கிறதும் நல்லது... ஏன்னா நீங்க அப்படி என்னைப்பார்த்தா பாக்கிற முதல் முகம் ஒரு நல்ல முகம் இல்ல நொள்ள முகம் ஞாபகம் இருக்கட்டும்... வேலைக்கு நேரமாகுது நான் வர்ட்டா...
Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Tuesday, August 26, 2008
ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
அன்புடன் இவன் @ 9:18 AM 42 பதிலகள்
வகைகள் எச்சரிக்கை, மொக்கை
Subscribe to:
Posts (Atom)


