Showing posts with label பிறந்தநாள் பரிசு. Show all posts
Showing posts with label பிறந்தநாள் பரிசு. Show all posts

Saturday, August 9, 2008

பிறந்த நாள் பரிசு

வணக்கம் மக்களே,

கொஞ்ச நாள்ல நம்ம friend ஒருத்தனுக்கு பிறந்த நாள் வருது. இந்த பிறந்த நாளில் நான் அவனுக்கு கொடுக்குற பரிசில அவன் என்னை வாழ்க்கையில மறக்கவே கூடாது எங்கிறத்துக்காக ஏதாவது பரிசு வாங்கனும் என்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்... அவன் மேல லைட்டா கோபமும் இருக்கதால கொஞ்சம் பழிவாங்கிற விதமா சில பரிசுகளை கொடுக்க விரும்பினேன்..... சில ideas வந்திச்சு, இந்த பரிசெல்லாம் கொடுத்தா அவன் என்ன மறப்பானா இல்லையா நீங்களே பார்த்து சொல்லுங்க மக்களே



பரிசு நொ-1 - என் கையாலேயே அவனுக்கு அவன் பிறந்த நாளில் இருந்து ஒரு 10 நாட்களுக்கு சமைச்சு போடனும். என் சமையல் திறமையை அறிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்



பரிசு நொ-2 - நான் கவிதை எங்கிற பேரில எழுதின சில மொக்கை வரிகளை அவனை ஒரு நாட்காலியில் கட்டிப்போட்டுட்டு வாசித்துக்காட்டுதல். கவிதை சாம்பிளுக்கு இங்கே கிளிக் பண்ணவும்



பரிசு நொ-3 - அவனை நான் ஒரு manual supra carல ஏத்திக்கிட்டு நானே drive பண்ணி எங்கையாவது கொண்டுபோய் சேர்க்கனும். (எனக்கு manual drive பண்ணத்தெரியாது என்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச ரகசியமாச்சே. எனக்கு லைசன்ஸ் இல்ல என்கிறத மட்டும் அவன் கிட்ட சொல்லிடாதீங்க)



பரிசு நொ-4 - சாம் அண்டர்சனை சந்திக்க வைத்து அவரிடம் சில dance moves கற்றுக்கொள்ள ஒழுங்கு செய்து தரப்போகிறேன். அவரது dance movesஐ கீழே போய் பார்த்துக்கொள்ளுங்கள்



பரிசு நொ-5 - ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் சேர்த்து விடல்... (எனக்காக தலைவி ராப் அனுமதிப்பார் என எதிர்பார்க்கிறேன். மற்ற மன்ற உறுப்பினர்களும் அனுமதிப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன்) J.K.R பற்றிய மற்ற விபரங்கள் தெரிய வழிப்போக்கனை அணுகவும்



பரிசு நொ-6 - குசேலன் படத்துக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து birthday boy மட்டும் தனியாக இருந்து பார்த்த ஒழுங்கு படுத்திக்கொடுத்தல் (கிரி அதற்கான ஏற்பாடுகளை செய்வார்)




பரிசு நொ-7 - கடைசியாக லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் ஒரு பெரிய பழிவாங்கல் பரிசாக இளையதளபதி டாக்குத்தர் விஜய் படமான "அழகிய தமிழ்மகன்", "குருவி" தலைவர் ஜே.கே.ரித்திஷின் "காணல் நீர்", சாம் அண்டசனின் படம் மற்றும் விஜய T.Rன் "வீரசாமி" ஆகிய படங்களின் ஒரிஜினல் பட DVDக்களை கொடுத்தல்.
சாம்பிளுக்கு இந்த clip





என்ன மக்களே இன்னைக்கு இந்த மொக்கை போதுமா??