வணக்கம் மக்களே.....
இன்னைக்கு நம்ம இளைய தலவலி sorry தளபதி விஜய்க்கு பிறந்த நாளாம்.... சரி அவருக்கு ஏதாவது பரிசு(ஆப்பு) கொடுக்கலாம் என்னு யோசிச்சு பார்த்ததில ஞாபகத்தில வந்ததுதான் இந்த குழுமம்...
நான் அடிக்கடி facebook என்ற நண்பர்கள் வலைப்பதிவுக்கு போறதுண்டு.... அப்படி போய் ஒருமுறை விஜய் என்னு தேடிப்பார்த்ததில வந்ததுதான் இந்த குழுமம் சும்மா சொல்லக்கூடாது சும்மா வைச்சு வாங்கி இருக்காங்க... இப்படி பல குழுமங்கள் உள்ளது
1.விஜய்க்கு வெடி வைப்போர் வலையமைப்பு [V.V.V.V]
2.கோமாளி நாயகன் விஜயின் சிரிப்புமன்றம்
3.ஏய்....! சைலன்ஸ்.....!! (by இளைய தளபதி)
4."வில்லு" பார்த்து நொந்தவர்கள் சங்கம்
5.Hate vijay
இப்படி நீண்டுகொண்டே போகுது... அதில உள்ள படங்களில் சில கீழே... பார்த்து நீங்களும் ஏதாவது சொல்ல இருந்தா சொல்லீட்டு போங்க.....
Monday, June 22, 2009
நடிகர் விஜய் ஒரு வலையறிமுகம்
அன்புடன் இவன் @ 3:32 PM 3 பதிலகள்
வகைகள் J.K.ரித்தீஷ், கலாய்த்தல், சாம் அண்டர்சன், மொக்கை, லைட்டான மொக்கைஸ், விஜய்
Friday, October 24, 2008
பாபாவுக்கு ஒரு "ஓ" பொலிஸ்காரருக்கு ஒரு "ஓ"
என்னை சினிமாத்தொடருக்கு அழைத்த வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தலைவி ராப் அவர்களுக்கு மீண்டும் நன்றி ஏன் என்னா என்னோட பழைய ஞாபகம் ஒன்றையும் கிளறிவிட்டது... அதைப்பற்றித்தான் இந்த பதிவு....
நான் அப்போழுது இலங்கையில் இருந்த நேரம்... இலங்கையில் படித்த ஒரு சாதாரண மாணவன் 3 பெரும் பரிட்சைகளை முகம் கொடுத்தாகவேண்டும். முதலாவது 5ம் ஆண்டில் ஒரு பரிட்சை இது 5ம் ஆண்டு புலமைப்பரிசில் எனப்படும். 2வது 11ம் ஆண்டு முடிவில் G.C.E Ordinary level எனப்படுகிற கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரிட்சை, இந்த பரிட்சை செய்து இதில் சித்தி அடைந்தால் மட்டுமே G.C.E Advance Level எனப்படுகிற உயர்கல்விப்பொதுத்தராதரம் எனப்படுகிற அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்படுவர் அதன் பின் கல்விபொதுத்தராதர உயர்தரப்பரிட்சையில் சித்தி அடைந்து உயர் பெறுபேறு எடுத்தால் மட்டுமே பல்கலைகழக அனுமதி கிடைக்கும். அப்படிக்கிடைக்காதவர்கள் என்னைப்போல் வெளிநாட்டில் வந்துதான் பல்கலைக்கழகத்தில் படித்தாகவேண்டும். அதில் சிலர் போதிய பெறுபேறு பெற்றவர்களாகவும் இருக்கலாம் அல்லது அதி உயர் பெறுபேறு பெற்றவர்களாகவும் இருக்கலாம். இலங்கை மாணவர்கள் அநேகர் வெளிநாடுகளில் வந்து இளங்கலைப்பட்டப்படிப்பு கற்பதற்கும் இதுவே காரணம். இனி கதைக்கு வருவோம்
அப்படி நான் G.C.E A/L ஆரம்பித்து கொஞ்ச நாளின்பின்தான் "பாபா" எனப்படுகிற தலைவர் ரஜினியின் அழியாக்காவியம் வெளிவந்தது. "படையப்பா" வெற்றிக்குப்பின் வெளிவர்ர ரஜினியின் படம் சரியாக 3 ஆண்டுகள் இடைவெளியின் பின் வெளிவரும் படம் அதனால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால ஒரு 15 முதல் 20 நண்பர்கள் சேர்ந்து படம் பார்க்க school cut அடித்து படத்துக்கு போக முடிவெடுத்தோம்... ticket கிடைக்குமா என்கிற சந்தேகத்தில் முதல் நாள் இரவு ஒரு 12, 1 மணிபோல போய் வரிசையில நிக்கிற இடத்தில ஒரு பாயைப்போட்டு அதில ஒரு மனிதன் படுத்திருப்பதுபோல் தயார்செய்து வைத்துவிட்டு வந்திட்டோம். அடுத்தநாள் காலை எதுக்கும் என்று 10.30 காட்சிக்கு ஒரு 8 மணிக்கே எல்லோரும் போய் வரிசையில நிற்க ஆரம்பித்தோம் பார்த்தால் 9 மணிவரைக்கும் எங்கள் கூட்ட்த்தைதவிர ஒரு ஈ,காக்காவைக்கூட காணவில்லை... அட தியட்டர்க்காரனே 9 மணிபோலதான் வந்தான்.... பின் கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வர ஆரம்பித்தது.... அப்பத்தான் எங்களைப்போல எவ்வளவுபேர் வேலைவெட்டி இல்லாம இருக்கனுங்க எங்கிறதே புரிந்தது.... சரி வந்திட்டனுங்க என்னு அவனுங்களையும் ஜோதில சேர்த்துக்கிட்டோம். நாங்க பண்ணின அலப்பரை பஸ்ஸில போறவங்க எல்லாம் ஜன்னலால எட்டிப்பார்த்து ஏதாவது கட்சிக்கூட்டமா என்னு பார்க்கிற அளவுக்கு இருந்தது.
தியட்டர்க்காரனும் எவ்வளவு நேரம்தான் பொறுமை இருப்பான்... சரி வராம ஒரு ஒரு 10 மணி போல பொலிஸ்காரர்களை கூப்பிட்டான்.... பொலிஸகாரர்களும் வந்து இறங்க அனைவரும் கப்சிப் அவ்வளவு பேரும் அமைதியானோம்.... வந்து இறங்கின பொலிஸ் அப்படியே பேசாம வெளியவே இருந்திருந்தால் இந்த பதிவு எழுதவேண்டிய அவசியமே வந்து இருக்காது.வந்தவங்க நேரா தியட்டர் உள்ளவே போனார்கள். அட இவனுங்க ஒன்னும் செய்ய மாட்டானுங்க எங்கிற ஒரு தைரியத்தில மீண்டும் கத்த ஆரம்பித்தோம். சரியா 10.15க்கு எனக்கு அப்போதான் ராகு காலம் ஆரம்பித்தது என்னு நினைக்கிறேன். சனி வந்து நாக்கில குடியிருந்த நேரமும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். சும்மா இருக்க முடியாம எல்லோரும் அமைதியான நேரம் நான் பலமா "பாபாவுக்கு ஒரு ஓப்போடு" என்று கத்த அங்க இருந்து வந்த பொலிஸ்காரன் நேர என்கிட்டவே வந்து விட்டன் ஒரு அடி சும்மா கிண் என்னு ஒரு 10 பிரியாணி ஒன்னா சாப்பிட்ட மாதிரியே இருந்திச்சு... அதுக்கு பிறகுதான் மத்தவங்கள கவனிக்க ஆரம்பிச்சான். அதில ஒருத்தன் செருப்ப எடுக்க போக அவன அடிக்க வந்த பொலிஸிட்ட வீர வசனம் பேச அவனுக்கு அடி.... இப்படியெல்லாம் அடிவாங்கி கடைசியா படத்த பார்த்துவெறுத்துப்போய் வெளிய வந்தோம்
வந்த நேரம் எங்க கூட்டத்தில இருந்த ஒருத்தன்கிட்ட போய் தெரியாத்தனமா "படம் எப்படி இருந்திச்சு மச்சி??" என்னு கேட்டுட்ட்டேன்... அதுக்கு அவன் சொன்னான் ஒரு பதில் பாருங்க அதுதான் வாழ்க்கையில எனக்கு மறக்க முடியாதது... என்ன பதில் என்னு கேக்குறீங்களா??
எப்படி இருந்திருக்கும் எனக்கு???
அன்புடன் இவன் @ 8:16 PM 17 பதிலகள்
வகைகள் பாபா, ரஜினி, லைட்டான மொக்கைஸ்
Sunday, October 5, 2008
ஹே வந்திடுச்சு வந்திடுச்சு வந்திடுச்சு
ஆஹா இன்னைக்குத்தான் பிறவிப்பலனை அடைந்தமாதிரி இருக்குது... கடைசீல என் பதிவும் தமிழ்மணத்தின் சூடான இடுகையில வந்திடுச்சு.... ஹி ஹி ஹி ஹி
அதுக்குத்தான் இந்த மொக்கைஸ் வேற ஒண்ணும் இல்ல ஹி ஹி ஹி ஹி ஹி... அது சரி இந்த பதிவ எப்படி வகைப்படுத்திறது?? நக்கல் நையாண்டியா...?? பதிவர் வட்டமா?? பொதுவானவையா?? இல்ல அறிவியல் நுட்பம் அப்படி ஏதாவதா??
அன்புடன் இவன் @ 4:25 PM 14 பதிலகள்
வகைகள் சூடான இடுகை, மொக்கை, லைட்டான மொக்கைஸ்
Sunday, September 28, 2008
Freeway ஒரு திகில் அனுவம்
வணக்கம் வலையுலகமே...
கொஞ்ச நாளா இந்த flight தள்ளுற வேலையால என்னால பதிவே போட முடியல... அதனால நீங்களும் கொஞ்ச நாள் நிம்மதியா இருந்திருப்பீங்க... ஆனா என்ன செய்ய இன்னைக்கு உங்களுக்கு கெட்ட காலம் திரும்ப ஆரம்பிக்கிறது, ஏன்னா இன்னைக்கு ஒரு இந்த பதிவ போடுறேன் இல்ல அதுதான்...
அதாவது கொஞ்ச நாளா நானும் வேலைக்கு போறது... பிறகு Uni போறது என்னு கொஞ்சம் Busyஆ இருந்திட்டேன்... அன்னைக்கு ஒரு புதன்கிழமை நானும் Uni முடிஞ்சு அடுத்த நாள் Uni எனக்கு இல்லை எங்கிறதால Night shift வேலைக்கு போயிட்டேன்... அன்னைக்கு ராத்திரி ஒரு 10 மணி இருக்கும் என் நண்பன் ஒருத்தன் ரொம்ப நல்லவன்... அவன் சாக போறத்ன்னாலும் என்னையும் இழுத்துக்கிட்டு சாக போவான் அவ்வளவு நல்லவன்... போன் பண்ணி "டேய் அண்ணன் ஒருத்தருககு லைசன்ஸ் எடுக்கனும் நம்ம ஏரியா லைசன்ஸ் ஆபிஸ்ல November வரைக்கும் appointments இல்ல. அதனால நானும் அவரும் பக்கத்தில இருக்கிற(அங்க போக ஒரு 3 மணி நேரம் எடுக்கும் அது அவனுக்கு பக்கத்தில) Geelong வரைக்கும் போய் test எடுக்கலாம் என்னு இருக்கோம் நீயும் வாரியா எங்களுக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்" என்னான். அட நம்மலையும் ஒருத்தன் மதிச்சு கூப்பிடுறானே... என்கிறதாலயும் Geelong பார்க்கனும் எங்கிற ஆசையிலயும் நானும் கேட்க்காம கொள்ளாம சரி வாரேன் என்னுட்டேன்... காலையில வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்து நானும் போக போறத பற்றி நண்பி ஒருத்திக்கிட்ட சொன்ன போது அவ வேணாம் வேணாம்... அப்பவாவது நான் கேட்டு இருக்கனும்... கேக்கலையே "நாங்க எல்லாம் வேலு நாயகர் மாதிரி வாக்கு கொடுத்தா கொடுத்ததுதான்" என்னு வீர வசனம் எல்லாம் பேசி அவளே "சரி போய் தொலை" என்னு சொல்லுற அளவுக்கு கொண்டு வந்திட்டேன்....
9 மணிக்கு பசங்க 2 பேரும் வர்ரேன் என்னானுங்க நானும் 9.15 வரக்கு பார்த்துக்கிட்டே இருக்கேன் அவனுங்க வர்ர மாதிரி தெரியல... என்னடா என்னு போன் செஞ்சு பார்த்தா நாரப்பயலுங்க அப்பத்தான் எழுந்தானுங்களாம்.... நம்ம த்மிழன்களின் Punctuality அப்படி "ஏண்டா ராத்திரில இருந்து ஒருத்தன் தூங்காம இருந்து இப்போ உங்களுக்காக வர்ரேன் என்னு காத்துக்கிடக்குறான் என்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களாடா" என்னு கேட்டாப்பிறகு 10 மணிக்கு வந்திடுறோம் என்னானுங்க சரி சரி என்னாப்பிறகு ஒருமாதிரி 10.30க்கு வந்து சேர்ந்தானுங்க... என் கோவம் அறிஞ்சு நல்ல பயலுக ஒரு சிகரட் பெட்டி ஒன்னும் வாங்கி வந்திருந்தானுங்க... சொன்னேன் இல்ல நல்ல பசங்க என்னு... சரி என்னு நாங்க மூனு பேர் நல்லாத்தான் புறப்பட்டோம். போற வழியில சும்மா இருக்கமுடியாம ஊரில உள்ள மத்தவனுங்க பத்தியே புரளி பேசிக்கிடே வந்தோம் தமிழன் இல்லையா அதுதான்... அப்போ freewayல 100km/hல போய்க்கிட்டு இருந்த நேரம் பக்கத்தில கார்ல இருந்த ஒரு curry aunty (நாங்கள் இங்கே உள்ள இந்திய, இலங்கை மக்களை curries என்றுதான் அழைப்போம்) Lane change செய்வதற்காக சிக்னல் எல்லாம் சரியாத்தான் போட்டாங்க ஆனா என்ன உடனையே திருப்பினதால எங்க கார்ல மோதிற மாதிரி வந்திட்டாங்க எங்க கார் வேற Front weel drive அவங்க கார்ல மோதக்கூடாது என்கிறத்துக்காக கார் ஓடின நண்பன் அதுதான் ரொம்ப நல்லவன் என்னு சொன்னனே அவனேதான் பிரேக் அடிச்சு லைட்டா கார திருப்பினான்... கார் ஒரேடியா ஒரு 90 டிகிரி திரிம்பிச்சுது திரும்பினா அங்க எங்களுக்கு எமன் மாதிரி ஒரு பெரிய container சரி நாங்க சரி இன்னைக்கு என்னு நான் நினக்கிற நேரம் நண்பன் கார திரும்ப மற்றபக்கம் திருப்பினான் கார் அப்படியே ஒரு 180 டிகிரி திரும்பிச்சுது. அப்போ அந்தப்பக்கம் இன்னொரு container சட்னிதாண்டா இவனே நீ எங்கிற மாதிரி நின்னிச்சுது.... அடப்பாவிகளா என்னு நண்பன் மறுபடி கார திருப்பினான் அப்போ கொஞ்சம் திரும்பி பின்னுக்கு பார்த்தேன்.. அங்க வேற ஒரு container பிரேக் அடிச்சுக்கிட்டே வந்தான். அந்த நேரத்தில நண்பன் ஒருமாதிரி கார நிறுத்தீட்டான் பார்த்தான் கார் first laneல முன்பகுதி நடுப்பகுதி 2nd laneல பின் பகுதி last laneல திரும்பிப்பார்த்தா பின்னுக்கு வந்த container வந்துக்கிட்டே இருந்து ஒரு 2 அல்லது 3 மீட்டர் தூரத்தில நிறுத்தீட்டான்... அப்பத்தான் எனக்கு மூச்சே வந்திச்சு.... பக்கத்தில லைசன்ஸ் testக்கு போக இருந்தவனுக்கு மூச்சாவே வந்திடுச்சு உடனே காரை ஓட்டின நண்பன் திரும்ப அந்த curry ladyய துரத்தப்பார்க்க மற்றவன் உடனேயே காரை emergency laneல போட சொல்லி உடனேயே freewayல freeயா போக ஆரம்பித்தான்...
இப்போ சொல்லுங்க மக்களே இது எனக்கு தேவைதான்... வேலை முடிஞ்சா வலை(அதுதாங்க net, internet நல்ல ரைமிங்கா வருது இல்ல?) இல்லாட்டி தூக்கம் என்னு இருக்காம வாக்கு கொடுத்தேன் அது கொடுத்தேன் இது கொடுத்தேன் என்னு புறப்பட்டேன் பாருங்க என்னை எந்த செருப்பாலங்க அடிக்கிறது??
அன்புடன் இவன் @ 1:19 AM 18 பதிலகள்
வகைகள் அனுபவம், லைட்டான மொக்கைஸ்







