என்னை சினிமாத்தொடருக்கு அழைத்த வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தலைவி ராப் அவர்களுக்கு மீண்டும் நன்றி ஏன் என்னா என்னோட பழைய ஞாபகம் ஒன்றையும் கிளறிவிட்டது... அதைப்பற்றித்தான் இந்த பதிவு....
நான் அப்போழுது இலங்கையில் இருந்த நேரம்... இலங்கையில் படித்த ஒரு சாதாரண மாணவன் 3 பெரும் பரிட்சைகளை முகம் கொடுத்தாகவேண்டும். முதலாவது 5ம் ஆண்டில் ஒரு பரிட்சை இது 5ம் ஆண்டு புலமைப்பரிசில் எனப்படும். 2வது 11ம் ஆண்டு முடிவில் G.C.E Ordinary level எனப்படுகிற கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரிட்சை, இந்த பரிட்சை செய்து இதில் சித்தி அடைந்தால் மட்டுமே G.C.E Advance Level எனப்படுகிற உயர்கல்விப்பொதுத்தராதரம் எனப்படுகிற அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்படுவர் அதன் பின் கல்விபொதுத்தராதர உயர்தரப்பரிட்சையில் சித்தி அடைந்து உயர் பெறுபேறு எடுத்தால் மட்டுமே பல்கலைகழக அனுமதி கிடைக்கும். அப்படிக்கிடைக்காதவர்கள் என்னைப்போல் வெளிநாட்டில் வந்துதான் பல்கலைக்கழகத்தில் படித்தாகவேண்டும். அதில் சிலர் போதிய பெறுபேறு பெற்றவர்களாகவும் இருக்கலாம் அல்லது அதி உயர் பெறுபேறு பெற்றவர்களாகவும் இருக்கலாம். இலங்கை மாணவர்கள் அநேகர் வெளிநாடுகளில் வந்து இளங்கலைப்பட்டப்படிப்பு கற்பதற்கும் இதுவே காரணம். இனி கதைக்கு வருவோம்
அப்படி நான் G.C.E A/L ஆரம்பித்து கொஞ்ச நாளின்பின்தான் "பாபா" எனப்படுகிற தலைவர் ரஜினியின் அழியாக்காவியம் வெளிவந்தது. "படையப்பா" வெற்றிக்குப்பின் வெளிவர்ர ரஜினியின் படம் சரியாக 3 ஆண்டுகள் இடைவெளியின் பின் வெளிவரும் படம் அதனால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால ஒரு 15 முதல் 20 நண்பர்கள் சேர்ந்து படம் பார்க்க school cut அடித்து படத்துக்கு போக முடிவெடுத்தோம்... ticket கிடைக்குமா என்கிற சந்தேகத்தில் முதல் நாள் இரவு ஒரு 12, 1 மணிபோல போய் வரிசையில நிக்கிற இடத்தில ஒரு பாயைப்போட்டு அதில ஒரு மனிதன் படுத்திருப்பதுபோல் தயார்செய்து வைத்துவிட்டு வந்திட்டோம். அடுத்தநாள் காலை எதுக்கும் என்று 10.30 காட்சிக்கு ஒரு 8 மணிக்கே எல்லோரும் போய் வரிசையில நிற்க ஆரம்பித்தோம் பார்த்தால் 9 மணிவரைக்கும் எங்கள் கூட்ட்த்தைதவிர ஒரு ஈ,காக்காவைக்கூட காணவில்லை... அட தியட்டர்க்காரனே 9 மணிபோலதான் வந்தான்.... பின் கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வர ஆரம்பித்தது.... அப்பத்தான் எங்களைப்போல எவ்வளவுபேர் வேலைவெட்டி இல்லாம இருக்கனுங்க எங்கிறதே புரிந்தது.... சரி வந்திட்டனுங்க என்னு அவனுங்களையும் ஜோதில சேர்த்துக்கிட்டோம். நாங்க பண்ணின அலப்பரை பஸ்ஸில போறவங்க எல்லாம் ஜன்னலால எட்டிப்பார்த்து ஏதாவது கட்சிக்கூட்டமா என்னு பார்க்கிற அளவுக்கு இருந்தது.
தியட்டர்க்காரனும் எவ்வளவு நேரம்தான் பொறுமை இருப்பான்... சரி வராம ஒரு ஒரு 10 மணி போல பொலிஸ்காரர்களை கூப்பிட்டான்.... பொலிஸகாரர்களும் வந்து இறங்க அனைவரும் கப்சிப் அவ்வளவு பேரும் அமைதியானோம்.... வந்து இறங்கின பொலிஸ் அப்படியே பேசாம வெளியவே இருந்திருந்தால் இந்த பதிவு எழுதவேண்டிய அவசியமே வந்து இருக்காது.வந்தவங்க நேரா தியட்டர் உள்ளவே போனார்கள். அட இவனுங்க ஒன்னும் செய்ய மாட்டானுங்க எங்கிற ஒரு தைரியத்தில மீண்டும் கத்த ஆரம்பித்தோம். சரியா 10.15க்கு எனக்கு அப்போதான் ராகு காலம் ஆரம்பித்தது என்னு நினைக்கிறேன். சனி வந்து நாக்கில குடியிருந்த நேரமும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். சும்மா இருக்க முடியாம எல்லோரும் அமைதியான நேரம் நான் பலமா "பாபாவுக்கு ஒரு ஓப்போடு" என்று கத்த அங்க இருந்து வந்த பொலிஸ்காரன் நேர என்கிட்டவே வந்து விட்டன் ஒரு அடி சும்மா கிண் என்னு ஒரு 10 பிரியாணி ஒன்னா சாப்பிட்ட மாதிரியே இருந்திச்சு... அதுக்கு பிறகுதான் மத்தவங்கள கவனிக்க ஆரம்பிச்சான். அதில ஒருத்தன் செருப்ப எடுக்க போக அவன அடிக்க வந்த பொலிஸிட்ட வீர வசனம் பேச அவனுக்கு அடி.... இப்படியெல்லாம் அடிவாங்கி கடைசியா படத்த பார்த்துவெறுத்துப்போய் வெளிய வந்தோம்
வந்த நேரம் எங்க கூட்டத்தில இருந்த ஒருத்தன்கிட்ட போய் தெரியாத்தனமா "படம் எப்படி இருந்திச்சு மச்சி??" என்னு கேட்டுட்ட்டேன்... அதுக்கு அவன் சொன்னான் ஒரு பதில் பாருங்க அதுதான் வாழ்க்கையில எனக்கு மறக்க முடியாதது... என்ன பதில் என்னு கேக்குறீங்களா??
எப்படி இருந்திருக்கும் எனக்கு???
17 பதிலகள்:
//"படம் சூப்பர் மச்சி...படையப்பாவ விட நல்லா இருந்திச்சு..... "
எப்படி இருந்திருக்கும் எனக்கு???//
உச்ச கட்ட காமெடி..
:)))))))))))))))))
//Saravana Kumar MSK said...
உச்ச கட்ட காமெடி..
:)))))))))))))))))//
கேட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும் சரவண குமார்...?? வாழ்க்கையே வெறுத்து போச்சுது
:):):)
//"படம் சூப்பர் மச்சி...படையப்பாவ விட நல்லா இருந்திச்சு..... "
எப்படி இருந்திருக்கும் எனக்கு???//
இதுக்கு நீங்க போலீஸ்காரர்கிட்ட இன்னமும் 4 அடி வாங்கி இருந்திருக்கலாம்
-ராஜீவ்-
//வரிசையில நிக்கிற இடத்தில ஒரு பாயைப்போட்டு அதில ஒரு மனிதன் படுத்திருப்பதுபோல் தயார்செய்து வைத்துவிட்டு வந்திட்டோம். //
இதே மாதிரி நாங்களும் செய்திருக்கிறோம்
-ராஜிவ்-
//எங்களைப்போல எவ்வளவுபேர் வேலைவெட்டி இல்லாம இருக்கனுங்க எங்கிறதே புரிந்தது.... //
அப்போ எங்களையும் வேலை வெட்டி இல்லாதவங்கள் என்றீங்களா??
-ராஜீவ்-
//எங்க கூட்டத்தில இருந்த ஒருத்தன்கிட்ட போய் தெரியாத்தனமா "படம் எப்படி இருந்திச்சு மச்சி??" //
உங்களுக்கே தெரியும்தானே படம் எப்படி இருந்தது என்று
-ராஜீவ்-
// Anonymous said...
இதுக்கு நீங்க போலீஸ்காரர்கிட்ட இன்னமும் 4 அடி வாங்கி இருந்திருக்கலாம்
-ராஜீவ்-//
அதுவும் சரிதான் ராஜீவ் இப்படி எண்டு தெரிஞ்சி இருந்தா அடி வாங்கியே இருப்பேன்
// Anonymous said...
இதே மாதிரி நாங்களும் செய்திருக்கிறோம்
-ராஜிவ்-//
ஆஹா நீங்களும் எங்கள மாதிரிதானா??
// Anonymous said...
அப்போ எங்களையும் வேலை வெட்டி இல்லாதவங்கள் என்றீங்களா??
-ராஜீவ்-//
சீ சீ நான் அப்படி சொல்லவே இல்லையே உங்களுக்கு வேலை இருந்தால் நல்லா இருக்கும் என்னு சொல்ல வந்தேன் :P
// Anonymous said...
உங்களுக்கே தெரியும்தானே படம் எப்படி இருந்தது என்று
-ராஜீவ்-//
தெரியாத்தனமா கேட்டுட்டேன் ராஜீவ் என்ன செய்ய?? விதி வலியது
அண்ணா இது தேவையா??? கொஞ்ச நாள் வெயிட் பண்ணிருந்தா அத ஏதாவது ஒரு டிவில போட்ருப்பான்...;)) ஆனா பாவம் தான் நீங்க...!!:))))
// ஸ்ரீமதி said...
அண்ணா இது தேவையா??? கொஞ்ச நாள் வெயிட் பண்ணிருந்தா அத ஏதாவது ஒரு டிவில போட்ருப்பான்...;)) ஆனா பாவம் தான் நீங்க...!!:))))//
என்ன செய்ய என் விதி அப்படி.....
பாபா படத்த முழுசா பார்த்தீங்களா? பெரிய தியாகிண்ணே நீங்க :))))
// புதுகை.அப்துல்லா said...
பாபா படத்த முழுசா பார்த்தீங்களா? பெரிய தியாகிண்ணே நீங்க :))))//
அட என்னண்ணே நீங்க நான் குருவி, நாயகன்(புதியது) படங்களையே முழுசா பார்த்தவன்..... பாபா எல்லாம் சாதாரணம்... இதில நான் குருவி படத்த $15 கொடுத்து பார்த்தேன்... பாபா பார்த்ததுக்கு தியாகி பட்டம் என்னா இந்த படம் எல்லாம் பார்த்ததுக்கு என்ன சொல்லுறீங்க?? ஆனா என்ன கொடுமை என்னா குஷேலன் படத்ததான் முழுசா பார்க்க முடியல...
ஆனா என்ன கொடுமை என்னா குஷேலன் படத்ததான் முழுசா பார்க்க முடியல...
//
haa...haa,,,,haa....
//புதுகை.அப்துல்லா said...
/ஆனா என்ன கொடுமை என்னா குஷேலன் படத்ததான் முழுசா பார்க்க முடியல...
/
haa...haa,,,,haa....//
:))
Post a Comment