Friday, October 17, 2008

சினிமாத்தொடர்

தெரியாத்தனமா என்னை இந்த தொடருக்கு அழைத்த வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தலைவி ராப் அவர்களுக்கு நன்றி

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

in 1956 சே சே நான் முதல் சினிமா பார்த்தது நான் நினைக்கிற மாதிரிக்கு 1987ல நான் முதல்முதல்ல பார்த்த படம் M.G.Rன் "ரிகஷா மாமா" என்னு நினைக்குறேன்...


1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா

நினைவு தெரிஞ்சு பார்த்த படம் எது என்னு கூட எனக்கு ஞாபகம் இல்ல... ஹி  ஹி ஹி என்ன செய்ய என் ஞாபகசக்தி அப்படி....

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

ஞாபகமே இல்ல எங்குறேன் இதில என்ன உணர இருக்குது??

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ஆஹா அந்த ஞாபகப்படுத்திர மாதிரி இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நான் அழுதிடுவேன்.... ஆமா அப்படி என்ன படம் என்னு கேக்குறீங்களா?? வேற என்ன "குருவி"தான் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அதுவும் கொடுமைதான் வேற என்ன "துரை, துரை" என்னு அர்ஜுன் நடிச்ச படம்தான் என்ன செய்ய என் நிலைமை அப்படி....


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

ஆங் அதுவா நம்ம தலைவரோட "பாபா" வேற ஒன்னும் இல்லைங்க "பாபா" படம் பார்க்க போன போது தலைவர் படமாச்சே என்னு சொல்லி முதல் showக்கேஒரு 20 பசங்க சேர்ந்து போய் பார்த்தோம்... 10.30 மணிக்கு showக்கு 8 மணிக்கே போய் லைன்ல நின்னுட்டோம்... கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் சேர  கொஞ்சம் கொஞ்சமா உற்சாகம் அதிகமாகி  நானும் ஒரு 10 மணி போல வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாம "பாபாவுக்கு ஒரு ஓ போடு" என்னு கத்த பசங்களும் "ஓ" கத்தி வைச்சானுங்க.... அதுவரைக்கும் சும்மா இருந்த போலிஸ்காரன் அதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாம வந்து எனக்கு விட்டான் பாருங்க ஒரு அடி அதுதான் என்னைத்தாக்கிய தமிழ்சினிமா


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க.... அரசியலுக்கும் எனக்கு சம்பந்தமே இல்லைங்க...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

அபூர்வசகோதரர்கள்தான்...வேற ஒன்னுமே ஞாபகமே வரலிங்க என்ன செய்ய ஹி ஹி ஹி

6-தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஆங் நிறைய வாசிக்கிறதுண்டு... தமிழ்சினிமா.com, tamil.cinesouth.com,thatstamil.com அப்பறம் விகடன் அவ்வளவுதான்

7. தமிழ்ச்சினிமா இசை?

அது கேட்க நல்லாத்தாங்க இருக்குது... ஆனா என்ன செய்ய முக்காவாசிப்பேர் வேற மொழிகளில் இருந்துதான் சுட்டு போடுறாங்க... அதப்பற்றி முதல்லயே ஒரு பதிவு போட்டிருக்கேன், இங்க பாருங்க


8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஆங் பார்க்கிறதுண்டு... தெலுகு படம் பார்ப்பேன்... ஆங்கிலப்படம் பார்ப்பேன்.... இருந்திட்டு இருந்திட்டு பதிவுலகத்தில நல்லா இருக்கு என்னு சொல்லுற வேற்று மொழிப்படங்களும் பார்ப்பதுண்டு...

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

city of god, பொம்மரிலு,My Sassy Girl, oldboy, தாரே ஸமீன் பர் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆஹா அப்படி எல்லாம் ஒரு சம்பந்தமும் இல்ல...


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கு என்ன நல்லாதான் இருக்கும்... இப்ப எல்லாம் அனேகமானவர்கள் யார் நடிகர்கள் என்னு பார்த்து படம் பார்க்கிறத விட்டு இப்பல்லாம் யார் டைரக்ட்ர் என்னு பார்த்து படம் பார்க்கிறாங்க... அதோட "பாலா, அமீர், சசி, வெற்றிமாறன், கெளதம் மேனன்" என்னு பலபேர் இருக்காங்க தமிழ்சினிமாவ காப்பாத்த...11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழன் திருந்திடுவான் என்னு நினைச்சா தப்பு... மறுபடியும் பக்கத்துவீட்டு சமாச்சாரம், மற்றும் வேற் பல கிசு கிசுல மூழ்கிடுவான். அப்படி பேசுறதில நானும் இருப்பேன்... அதாவது நானும் பேசிக்கிட்டு இருப்பேன் ஹி ஹி ஹி

நான் இதைத் தொடர அழைப்பது,
யாரைங்க அழைக்க பில்கேட்ஸ்யோ இல்ல, புஸ்ஸையோ அழைக்கலாம் என்னா அவங்களுக்கு தமிழ் தெரியாதே. அதனால

சரவண குமார் MSK
புனிதா கைலாஷ்
கிரி
திவ்யா
வருண் இல்லாட்டி கயல்விழி
தயா

அவ்வளவுதாங்க

37 பதிலகள்:

ஸ்ரீமதி said...

Me the first??

ஸ்ரீமதி said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

What is this chinna pulla thanamaa indha padhivukku kooda moderation vechikittu??????? ;))

ஸ்ரீமதி said...

Padhivu nallaarukku..!! :)))))

ஸ்ரீமதி said...

Police kitta adivaangaama padam paarkka vaazththugal..!! ;))

ஸ்ரீமதி said...

Neenga comment pottiya ippadi maaththinapparam naan ippa dhaan comment podaren.. adhaan ippadi..!! ;))))))

ஸ்ரீமதி said...

Paravalla en syatem romba fast-ah irukku..!! ;))

rapp said...

me the first:):):)

rapp said...

//M.G.Rன் "ரிகஷா மாமா" என்னு நினைக்குறேன்//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எம்ஜிஆர் நடிச்சது ரிக்ஷாக்காரன். சத்யராஜ் நடிச்சது, ரிக்ஷாமாமா, ஆனா இது தொன்னூறுகளில் வெளிவந்தது:):):)

rapp said...

//வேற என்ன "குருவி"தான் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//

தியாகி இவன் அவர்களேன்னு கூப்பிடனுமா உங்களை?

//அதுவரைக்கும் சும்மா இருந்த போலிஸ்காரன் அதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாம வந்து எனக்கு விட்டான் பாருங்க ஒரு அடி அதுதான் என்னைத்தாக்கிய தமிழ்சினிமா
//

:):):)

rapp said...

//தமிழ்சினிமா.com, tamil.cinesouth.com,thatstamil.com அப்பறம் விகடன் அவ்வளவுதான்
//


குமுதம் படிக்கறதில்லை??????????

rapp said...

//வெற்றிமாறன்//

அட ஆமாம் எனக்கும் இவர ரொம்பப் பிடிக்கும்:):):)

இவன் said...

//ஸ்ரீமதி said...

Me the first??/


ஆமா ஸ்ரீமதி நீங்கதான் first

இவன் said...

//ஸ்ரீமதி said...

What is this chinna pulla thanamaa indha padhivukku kooda moderation vechikittu??????? ;))//


சரிம்மா இனி என் ப்லொக்க்கே comment moderation இருக்காது போதுமா??

இவன் said...

// ஸ்ரீமதி said...

Padhivu nallaarukku..!! :)))))//


நன்றி நன்றி

இவன் said...

// ஸ்ரீமதி said...

Police kitta adivaangaama padam paarkka vaazththugal..!! ;))//


நீங்க வேற நானே எப்படா ஆஸ்திரேலியன் பொலிஸிட்ட அடிவாங்கலாம் என்னு இருக்கேன்... அப்படியே உள்ள தூக்கி போட்டாம் ஆஸ்திரேலியன் ஜெயில் பார்த்தேன் என்னு சொல்லலாம் இல்லையா??

இவன் said...

//ஸ்ரீமதி said...

Neenga comment pottiya ippadi maaththinapparam naan ippa dhaan comment podaren.. adhaan ippadi..!! ;))))))//


ஆஹா அதுக்காக இப்படியா?? பழைய comment box work ஆகுதில்ல என்ன என்னு தெரியல

இவன் said...

// ஸ்ரீமதி said...

Paravalla en syatem romba fast-ah irukku..!! ;))//


ஆஹா system check பண்ண என் பதிவுதான் கிடைச்சுதா?? ரொம்ப நல்லவங்க நீங்க

இவன் said...

//rapp said...

me the first:):):)//


இல்ல rapp ஸ்ரீஇமதி முந்திக்கிட்டாங்க என்ன செய்ய

இவன் said...

//rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எம்ஜிஆர் நடிச்சது ரிக்ஷாக்காரன். சத்யராஜ் நடிச்சது, ரிக்ஷாமாமா, ஆனா இது தொன்னூறுகளில் வெளிவந்தது:):):)//


ஆஹா நான் பார்த்தது ரிக்ஷாக்காரன்தாங்க... கன்பியூஸ் ஆகீட்டேன்.. M.G.R நடிச்சது எங்கிறது மட்டும் ஞாபகம் இருக்குது

இவன் said...

// rapp said...

தியாகி இவன் அவர்களேன்னு கூப்பிடனுமா உங்களை?//


ஹும்ம் அப்படியும் சொல்லலாம் என்ன செய்ய அந்த படம் ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் போகல... அது போதாது என்னு குஷேலன் வேற என்ன கொடுமை இது??


//:):):)//


நான் அடிவாங்கினத சொன்னா உங்களுக்கு சிரிப்பா இருக்கா?? என்ன ஒரு வில்லத்தனம்??

இவன் said...

//
rapp said...
குமுதம் படிக்கறதில்லை??????????//


ஆங் படிப்பதுண்டு ஆனா எப்பவாவது இருந்திட்டுதான்...

இவன் said...

//rapp said...

அட ஆமாம் எனக்கும் இவர ரொம்பப் பிடிக்கும்:):):)//


எனக்கு என்னவோ தெரியலை இவரது style of making பிடிச்சு இருந்திச்சு

ஸ்ரீமதி said...

test

ஸ்ரீமதி said...

Oh appa nijamaave comment moderation eduthaachaa?? :))))))

Saravana Kumar MSK said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க இவன்..

//மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
ஆங் அதுவா நம்ம தலைவரோட "பாபா" வேற ஒன்னும் இல்லைங்க "பாபா" படம் பார்க்க போன போது தலைவர் படமாச்சே என்னு சொல்லி முதல் showக்கேஒரு 20 பசங்க சேர்ந்து போய் பார்த்தோம்... 10.30 மணிக்கு showக்கு 8 மணிக்கே போய் லைன்ல நின்னுட்டோம்... கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் சேர கொஞ்சம் கொஞ்சமா உற்சாகம் அதிகமாகி நானும் ஒரு 10 மணி போல வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாம "பாபாவுக்கு ஒரு ஓ போடு" என்னு கத்த பசங்களும் "ஓ" கத்தி வைச்சானுங்க.... அதுவரைக்கும் சும்மா இருந்த போலிஸ்காரன் அதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாம வந்து எனக்கு விட்டான் பாருங்க ஒரு அடி அதுதான் என்னைத்தாக்கிய தமிழ்சினிமா//

Same Blood.. :))

Saravana Kumar MSK said...

நானும் எழுதனுமா.. எழுதிருவோம்.. :))

இவன் said...

//ஸ்ரீமதி said...

Oh appa nijamaave comment moderation eduthaachaa?? :))))))//

தூக்கியாச்சுது

இவன் said...

// Saravana Kumar MSK said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க இவன்..//


ஆஹா நன்றி நன்றி

// Same Blood.. :))//

நீங்களும் அப்படி அடிவாங்கி இருக்கீங்களா?? என்ன கொடுமை இது??

இவன் said...

// Saravana Kumar MSK said...

நானும் எழுதனுமா.. எழுதிருவோம்.. :))//


எழுதுங்க எழுதுங்க நாங்களும் வாசிப்பமில்ல

கிரி said...

//ஆமா அப்படி என்ன படம் என்னு கேக்குறீங்களா?? வேற என்ன "குருவி"தான் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

உங்களுக்கு அநியாத்துக்கு விஜய் மேல கொலை வெறி

//அதுவும் கொடுமைதான் வேற என்ன "துரை, துரை" என்னு அர்ஜுன் நடிச்ச படம்தான் //

அடடா படம் நல்லா இல்லையா!!

உங்களோட சேர்த்து மூன்று பேர் அழைத்து விட்டார்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்

கயல்விழி said...

அழைப்புக்கு நன்றி இவன் :)

புனித் கைலாஷ் said...

தொடருக்கு கூப்பிட்டு இருக்கீங்க?? அப்படியே என்ன செய்யணும் னு சொல்லிடுங்க இவன்!

இவன் said...

//கிரி said...

உங்களுக்கு அநியாத்துக்கு விஜய் மேல கொலை வெறி//


அட போங்க நீங்க நான் என்ன அநியாயம் செஞ்சேன்... விஜய் அந்த படத்தில செஞ்சதையும் பார்க்க??


//அடடா படம் நல்லா இல்லையா!!

உங்களோட சேர்த்து மூன்று பேர் அழைத்து விட்டார்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்


படம் நல்லா இல்லையாவா?? ரொம்பபபபபபபபபபபப நல்லா அறுத்தானுங்க கழுத்தில பண்டேஜ் போடாததுதான் குறை....
மூன்று பேர் அழைத்ததும் பதிவு போடாதது கண்டிக்கத்தக்க குற்றம்...

இவன் said...

// கயல்விழி said...

அழைப்புக்கு நன்றி இவன் :)//


:)

இவன் said...

// புனித் கைலாஷ் said...

தொடருக்கு கூப்பிட்டு இருக்கீங்க?? அப்படியே என்ன செய்யணும் னு சொல்லிடுங்க இவன்!//


சொல்லீட்டேன் என்னு நினைக்குறேன்...

புனித் கைலாஷ் said...

இவன்!!
கேள்விகளுக்கு பதில் போட்டாச்சு!

புதுகை.அப்துல்லா said...

:)