Saturday, October 4, 2008

A.R.ரஹ்மான் copy அடித்தால் சரியா??

வணக்கம் நண்பர்களே....

இசைத்துறையில் பாடல்களை காப்பி அடிப்பது என்பது சகஜமாகிவிட்டது... நேற்று இந்த வார தமிழ்மண நட்ச்சத்திரம் அலெக்ஸ்சாண்டர் மனோகரன் அவர்கள் எழுதிய காதலில் விழுந்தேன் - "உனக்கென நான்" ஒரு டப்பிங் பாடல் எங்கிற பதிவைப்பார்த்தவுடன் இந்த பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியது.

அனைவருக்கும் தெரிந்தவரை "தேவா"தான் பாடல் டியூங்களை காப்பி அடிப்பதில் மன்னன். ஆசை படத்தில் இருக்கும் "புல்வெளி புல்வெளி தன்னில்" என்னும் பாட்டிடலிருந்து பஞ்சதந்திரம் படத்தில் இருக்கும் "மேரே ஜான்" பாடல்வரை ஏராளமான பாடல்களைச்சொல்லலாம்...

அடுத்து நம் இளையராஜாவின் புத்திரன் அவர் பெயருக்கு கொஞ்சம் களங்கம் வரும்படி செய்தவர் என்றுகூட சொல்லலாம்.... அவர் அடித்த காப்பி கீழே யூடியூபில் பாருங்கள்

பாலா படத்தில் உள்ள "தீண்டித்தீண்டி" பாடல் Rimjhim rimjhim எங்கிற படத்தின் காப்பி இப்படி பல பாடல்கள் காப்பி அடித்திருக்கிறார் இது ஒரு சின்ன உதாரணம் அவ்வளவுதான்....

அடுத்து நான் சொல்ல வருவது நம்ம A.R.ரஹ்மான் அடிச்ச காப்பி பற்றி முதல்ல Hello Mr. எதிர்க்கட்சி என்னும் பாடல் Memphis Stomp என்னும் ஒரு ஆங்கில பாடலின் தழுவல்... அண்மையில் வெளிவந்த சக்கரைக்கட்டி படத்தில் உள்ள Taxi Taxi பாடலும் DADDY YANKEEயின் GASOLINA என்னும் பாடலின் தழுவல் என்பதாக தெரிகிறது... கீழே சக்கரைக்கட்டி பாடலையும் DADDY YANKEEயின் GASOLINA பாடலையும் யூடியூபில் இருந்து எடுத்து போட்டிருக்கிறேன் நீங்களே கேட்டுப்பாருங்கள்... கேட்டுப்பார்த்திட்டு சொல்லுங்கள்

முதல் சக்கரைக்கட்டி பாடல்

அடுத்து DADDY YANKEEயின் GASOLINA

விஜய் அன்டனி காப்பி அடிச்சா தப்பு... A.R.ரஹ்மான் copy அடித்தால் சரியா??

47 பதிலகள்:

Nimal said...

இந்த கொப்பி அடித்தல் பட்டியலில் இல்லாமல் யாரும் இல்லை. ராஜாவும் இருக்கிறார், ரஹ்மானும் இருக்கிறார்.

இதை http://www.itwofs.com/ பார்க்கவும்.

Anonymous said...

ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை காப்பி அடிப்பது ஒன்றும் புதிது இல்லையே. "வராக நதிக்கரை ஓரம்" என்ற பாடல் "தமாதம் மஸ்த் கலந்தர்" என்ற பாடலின் அப்பட்ட நகல் தானே! கவுண்டமணி பாணியில் சொல்ல போனால், "சினிமாவில் இதெல்லாம் சகஜம்ப்பா!"

Subash said...

சக்கரகட்டி மருதாணி பாடலில் வரும் ஆரம்ப சாக்சபோன் இசை ஒரு ஆங்கில பாடலின் ஆரம்ப மெட்டு. கேண்டீனில் இருக்கும்போது வானொலியில் கசிந்தது!!!!

எப்படியோ!!! நாம ரசிக்கற மாதிரி இருந்தா ரசிச்சு சந்தோஷப்பட்டுட்டு போவோமே!!!

இவன் said...

//நிமல்-NiMaL said...
இந்த கொப்பி அடித்தல் பட்டியலில் இல்லாமல் யாரும் இல்லை. ராஜாவும் இருக்கிறார், ரஹ்மானும் இருக்கிறார்.

இதை http://www.itwofs.com/ பார்க்கவும்.
//

ஒத்துகொள்கிறேன் நிமல்.... நீங்கள் றோயல் கல்லூரி நிமல்தானே??

இவன் said...

//Expatguru said...
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை காப்பி அடிப்பது ஒன்றும் புதிது இல்லையே. "வராக நதிக்கரை ஓரம்" என்ற பாடல் "தமாதம் மஸ்த் கலந்தர்" என்ற பாடலின் அப்பட்ட நகல் தானே! கவுண்டமணி பாணியில் சொல்ல போனால், "சினிமாவில் இதெல்லாம் சகஜம்ப்பா!"//

இது எனக்கு இப்பொழுதுதான் தெரியும் Expatguru...ஆஹா அது கவுண்டர் பாணில நக்கல் வேறயா??

இவன் said...

//Subash said...
சக்கரகட்டி மருதாணி பாடலில் வரும் ஆரம்ப சாக்சபோன் இசை ஒரு ஆங்கில பாடலின் ஆரம்ப மெட்டு. கேண்டீனில் இருக்கும்போது வானொலியில் கசிந்தது!!!!

எப்படியோ!!! நாம ரசிக்கற மாதிரி இருந்தா ரசிச்சு சந்தோஷப்பட்டுட்டு போவோமே!!!//

ஆஹா அதுவும் copyaa?? என்ன கொடுமை இது.... நீங்க சொல்லுறது சரிதான் சுபாஷ் ஆனா கஷ்டப்பட்டு இசை அமைத்த அந்த இசையமைப்பாளரப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி செய்வது எனக்கு என்னவோ நியாயமாக படவில்லை....

பொய்யன் said...

priya padathil ilyaraja pannathu ellam suttathuthan. inna panna avar gnani

இவன் said...

//பொய்யன் said...

priya padathil ilyaraja pannathu ellam suttathuthan. inna panna avar gnani//

அது சுட்டதுதான் என்பதற்கு ஏதாவது சான்றுகள் இருக்கிறதா பொய்யன்??

Anonymous said...

பொய்யனெ போதும் உங்கள் பொய்.

Anonymous said...

naakka mukka vaiyum....annathu adurar paadalaiyum ore nerathilkettu parungal

SurveySan said...

யாரு காப்பி அடிச்சாலும் தப்புதான். ஏ.ஆர் அடிச்சா இன்னும் பெரிய தப்பு.
இவ்ளோ பெரிய எடத்தை அடஞ்சப்பரமும், இது தொடர்ந்தா கேவலம்.

காப்பி அடித்த, அடுத்தவன் உழைப்பை திருடுவதுக்கு சமம்.

Anonymous said...

இப்படியெல்லாம் இன்னொருவருடைய இசையை சுகமாக கொப்பி அடிக்கிறார்களே.தகவலுக்கு நன்றி.

ISR Selvakumar said...

இரண்டு வீடியோக்களையும் பார்த்தேன். நிச்சயம் இரண்டும் வேறு வேறு.

கர்நாடக சங்கீதம் தெரியாதவர்கள் எப்படி எல்லா ராகத்தையும் ஒரே ராகம் என்பார்களோ, அதே போல இது ஒரு தவறான புரிதல் அவ்வளவுதான்.

http://www.itwofs.com ஒரு சீரியஸ் முயற்சி. ஆனால் அதிலும் இது போல இளையராஜா பற்றியும் பல தவறான புரிதல்கள் உள்ளன.

ஒரே நிறத்தில் இருவர் சட்டை அணிந்திருந்தால், இருவரும் ஒரே ஆள் அல்ல.

இவன் said...

//mani said...

பொய்யனெ போதும் உங்கள் பொய்.
//

ங்ண்ணா என்னங்கண்ணா சொல்லவாரீங்க??

இவன் said...

//Anonymous said...

naakka mukka vaiyum....annathu adurar paadalaiyum ore nerathilkettu parungal
//

ஆஹா அதுவேறாயா??

இவன் said...

//SurveySan said...

யாரு காப்பி அடிச்சாலும் தப்புதான். ஏ.ஆர் அடிச்சா இன்னும் பெரிய தப்பு.
இவ்ளோ பெரிய எடத்தை அடஞ்சப்பரமும், இது தொடர்ந்தா கேவலம்.//

ஹும்ம் என்ன செய்ய சர்வேசன் சிலருக்கு இப்படி ஒரு நிலமை.....

இவன் said...

//Anonymous said...

இப்படியெல்லாம் இன்னொருவருடைய இசையை சுகமாக கொப்பி அடிக்கிறார்களே.தகவலுக்கு நன்றி.
//

என்ன செய்ய அனானி... அந்த பாட்ட தமிழாக்கம் செய்ய A.R.ரஹ்மான் முயற்சித்தாரோ தெரியலையே

இவன் said...

//r.selvakkumar said...

இரண்டு வீடியோக்களையும் பார்த்தேன். நிச்சயம் இரண்டும் வேறு வேறு.

கர்நாடக சங்கீதம் தெரியாதவர்கள் எப்படி எல்லா ராகத்தையும் ஒரே ராகம் என்பார்களோ, அதே போல இது ஒரு தவறான புரிதல் அவ்வளவுதான்.

http://www.itwofs.com ஒரு சீரியஸ் முயற்சி. ஆனால் அதிலும் இது போல இளையராஜா பற்றியும் பல தவறான புரிதல்கள் உள்ளன.

ஒரே நிறத்தில் இருவர் சட்டை அணிந்திருந்தால், இருவரும் ஒரே ஆள் அல்ல.//

எனக்கு சங்கீதம் தெரியாதுதான் செல்வகுமார் ஆனால் கொஞ்சம் அந்த beatsஐ உற்றுக்கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே புரியும்....

Anonymous said...

taxi taxi பாடல் காப்பி அடித்தார் என்று சொல்ல முடியாது. beats ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் மெட்டு வேறு தான்.

அந்த காலத்தில் நம்ம msv கூட நிறைய ஆங்கில பாடல்களை காப்பி அடித்தவர் தான். தமிழுக்கு புதுசாக தெரிந்தால் தவறில்லை.... ஆனா அச்சு அப்படியே காப்பி செய்வது தான் சற்று வேதனைக்குரிய விஷயம். சமீபத்தில் வந்த காதலில் விழுந்தேன் 'உனக்கென்ன நான்' பாடல் போன்று. rihana-unfaithful ஆங்கில பாடலின் அச்சு!

Anonymous said...

இரண்டு வீடியோக்களையும் பார்த்தேன். நிச்சயம் இரண்டும் வேறு வேறு.

yes,there are different beats...

PRABHU RAJADURAI said...

ஆனா, காஸலினோவுக்கு டாக்ஸி நன்றாக இருக்கிறது...

அதுதான் இந்தியப்படுத்தலோ...பாரதியார் அன்றே சொல்லிருயிருக்கிறாரே...சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்று:-)

இவன் said...

//தமிழ்மாங்கனி said...

taxi taxi பாடல் காப்பி அடித்தார் என்று சொல்ல முடியாது. beats ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் மெட்டு வேறு தான்.

அந்த காலத்தில் நம்ம msv கூட நிறைய ஆங்கில பாடல்களை காப்பி அடித்தவர் தான். தமிழுக்கு புதுசாக தெரிந்தால் தவறில்லை.... ஆனா அச்சு அப்படியே காப்பி செய்வது தான் சற்று வேதனைக்குரிய விஷயம். சமீபத்தில் வந்த காதலில் விழுந்தேன் 'உனக்கென்ன நான்' பாடல் போன்று. rihana-unfaithful ஆங்கில பாடலின் அச்சு!
//

அப்போ அப்படியே copy அடிக்காம பிட்டு பிட்டா copy அடிச்சா பரவாயில்லை எங்கிறீங்களா தமிழ்மாங்கனி??

இவன் said...

//Tamil said...

இரண்டு வீடியோக்களையும் பார்த்தேன். நிச்சயம் இரண்டும் வேறு வேறு.

yes,there are different beats...
//

இல்லையே தமிழ்.... சரியா கேட்டுப்பாருங்க ஆரம்பத்தில் வரும் beats அப்படியே இருக்கும்

இவன் said...

//பிரபு ராஜதுரை said...

ஆனா, காஸலினோவுக்கு டாக்ஸி நன்றாக இருக்கிறது...

அதுதான் இந்தியப்படுத்தலோ...பாரதியார் அன்றே சொல்லிருயிருக்கிறாரே...சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்று:-)
//

ஆஹா இதுதான் அந்த இந்தியப்படுத்தலா?? என்னதான் A.R.ரஹ்மான் பாரதி சொன்னத இப்படி follow பண்ணக்கூடாது... :))

Anonymous said...

thamilbest இல் இணையுங்கள்

இவன் said...

//Anonymous said...

thamilbest இல் இணையுங்கள்//

நிச்சயமா அனானி...

ஜியா said...

Inspired வேறு... copy வேறு... அப்பட்டமாக அப்படியே காப்பியடிப்பதுதான் தவறு, அந்த இசையில் மயங்கி அதிலிருந்து புது இசையை உருவாக்குவது காப்பியில் வராது என்பது என்னுடைய கருத்து... :)))

இவன் said...

//ஜி said...

Inspired வேறு... copy வேறு... அப்பட்டமாக அப்படியே காப்பியடிப்பதுதான் தவறு, அந்த இசையில் மயங்கி அதிலிருந்து புது இசையை உருவாக்குவது காப்பியில் வராது என்பது என்னுடைய கருத்து... :)))
//

நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன் ஜி.

Anonymous said...

Hari hara krishnan

அட போங்கய்யா? வேறு வேலை இல்லையா உங்களுக்கு! காப்பி அடிப்ப‌து த‌வ‌று இல்லை!. அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியாத‌ அளவுக்கு காப்பி அடிப்ப‌து தான்
புத்திசாலித்த‌ன‌ம்.

முன்பு இது போல் ஊட‌க‌ங்க‌ள் இல்லை அத‌னால் எவ‌ன் காப்பி அடித்தாலும் தெரியாது.
இப்போது குப்ப‌னுக்கும் சுப்ப‌னுக்கும் கூட‌ தெரிந்து விடுகிற‌து. அவ்வ‌ள‌வுதான் வித்தியாச‌ம்.

Anonymous said...

kutham sollravan sollitu than irupan..... atha ellam partha velaikagathu... nee sollramathiri partha avan en instrument la vasichanu kooda news varum... itha pathi sollu..... ivalavu pesuriye ne yethavathu puthusa eduthu poda vendiyathu thana... ipa nee matum ena seinga youtube la irunthu copy adichu thana potirukka.... ithuku oru blog..... dai parathesi odi poidu vanthuratha inime sariya.........

இவன் said...

//Anonymous said...

Hari hara krishnan

அட போங்கய்யா? வேறு வேலை இல்லையா உங்களுக்கு! காப்பி அடிப்ப‌து த‌வ‌று இல்லை!. அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியாத‌ அளவுக்கு காப்பி அடிப்ப‌து தான்
புத்திசாலித்த‌ன‌ம்.

முன்பு இது போல் ஊட‌க‌ங்க‌ள் இல்லை அத‌னால் எவ‌ன் காப்பி அடித்தாலும் தெரியாது.
இப்போது குப்ப‌னுக்கும் சுப்ப‌னுக்கும் கூட‌ தெரிந்து விடுகிற‌து. அவ்வ‌ள‌வுதான் வித்தியாச‌ம்.
//

உண்மைதான் அனானியாய் வந்த ஹரிஹரகிருஷ்ணன்... ஆனால் நான் சொல்லவந்தது... உரிமையில்லாமல் மற்றவர்களின் டியூனை காப்பி அடிப்பது திருடுவதற்கு சமன்தானே?? அதைத்தான்...

இவன் said...

//Anonymous said...

குத்தம் சொல்லுறவன் குத்தம் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான். அத எல்லாம் பார்த்தா வேலைக்காகாது.. நீ சொல்லுறதைப்பார்த்தா அவன் என் instrumentல வாசிச்சான் என்னு கூட news வரும்... இத பத்த்கி சொல்லு... இவ்வளவு பேசுறியே நீ ஏதாவது புதுசா எடுத்துப்போட வேண்டியதுதானே... இப்போ நீ மட்டும் என்ன செஞ்சா யூடியூப்ல இருந்து copy அடிச்சுத்தானே போட்டிருக்க... இதுக்கு ஒரு ப்லொக்... டேய் பரதேசி ஓடிப்போயிடு வந்திராத இனிமே சரியா....//

அனானியாய் வந்த நண்பரே முதல்ல உங்களை முழுதாக காட்டிக்கொண்டு விவாதிக்க வாருங்கள்... உண்மைதான் இதையெல்லாம் பார்த்தா வேலைக்காகாதுதான்... என்னங்க செய்ய உங்க அளவுக்கு எனக்கு வேலையில்லை.... சரி நீங்க இப்போ கேட்ட அந்த யூடியூப் கேள்விக்கு வருகிறேன்... யூடியூப்ல ஒவ்வொரு videoக்கும் பக்கத்தில "Embed" என்று ஒன்று போட்டிருக்கிறார்களே தெரியுமா?? அது சரி என்னைப்போல வேலையில்லாமல் இருந்திருந்தால் நீங்கள் அது என்ன என்று பார்த்திருப்பீர்கள்... உங்களுக்குத்தான் நிறைய வேலையிருக்குமே... அது இருப்பது தேவையானவர்கள் இந்த videoவினை எடுத்துக்கொள்ளலாம் என்பதற்காகத்தான்.. அப்படி மற்றவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள் அந்த வசதியை disable செய்திருப்பார்கள்... ஆகவே அந்த நபருக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் அந்த வசதியை disable செய்திருப்பார் அல்லவா?? உங்களுக்கான பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்... மற்றும் படி என்னை வாழ்த்தியதற்கு நன்றி... அடுத்தமுறை வரும்போது தைரியமாக உங்கள் பெயரோடு வாருங்கள்... மீண்டும் சந்திப்போம்...

அன்புடன்
ஆதவன்(இவன்)

Anonymous said...

முன்தினம் பார்தேனே எனும் வாணரம் ஆயிரம் பாடல் george michealலின் faith பாடலின் காப்பி

Anonymous said...

http://in.youtube.com/watch?v=viPWb3ieH6o - faith

http://in.youtube.com/watch?v=rxV0A0xnw1o - munthinam

Alexander said...

நன்றி!!!

ஏ.ஆர்.ரஹ்மான் காப்பி அடித்தால் சரி என்று யாரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. யார் காப்பி அடித்தாலும் அது தவறு தான்.

கயல்விழி said...

ஏ.ஆர்.ஆர் செய்வதும் நிச்சயம் தவறு தான்

இவன் said...

//Anonymous said...

முன்தினம் பார்தேனே எனும் வாணரம் ஆயிரம் பாடல் george michealலின் faith பாடலின் காப்பி
//

ஆஹா இது வேறயா?? என்ன கொடுமைய்யா இது?? ஒன்னுமே சொந்தமா செய்ய மாட்டானுங்களா??

இவன் said...

//Anonymous said...

http://in.youtube.com/watch?v=viPWb3ieH6o - faith

http://in.youtube.com/watch?v=rxV0A0xnw1o - munthinam
//

நன்றி அனானி... நல்லாத்தான் இருக்குது கூத்து... ஆனா இது ஹரிஷ் ஜெயராஜ் வழக்கமாக செய்வதுதானே??

இவன் said...

//Alexander said...

நன்றி!!!

ஏ.ஆர்.ரஹ்மான் காப்பி அடித்தால் சரி என்று யாரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. யார் காப்பி அடித்தாலும் அது தவறு தான்.
//

கருத்துக்கு நன்றி அலெஸ்சாண்டர்

இவன் said...

//கயல்விழி said...

ஏ.ஆர்.ஆர் செய்வதும் நிச்சயம் தவறு தான்//

ஹும்ம் நன்றி கயல்விழி

PK said...

இவன்!!
இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு நன்றி...! நல்ல ஆராய்ச்சி... உங்க கமெண்ட் பகுதியில் இருந்து ஒண்ணு தெரியுது..உண்மை சொன்னா நெறைய பேருக்கு கோபம் வருது.... காப்பி அடிச்சே வளர்த்தவங்க போல..
அன்புடன்,
புனித்.

இவன் said...

//புனித் கைலாஷ் said...

இவன்!!
இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு நன்றி...! நல்ல ஆராய்ச்சி... உங்க கமெண்ட் பகுதியில் இருந்து ஒண்ணு தெரியுது..உண்மை சொன்னா நெறைய பேருக்கு கோபம் வருது.... காப்பி அடிச்சே வளர்த்தவங்க போல..
அன்புடன்,
புனித்.
//

ஆஹா நன்றி புனித் நன்றி... ஆனா இப்படி பத்தவைப்பீங்க என்னு நான் எதிர்பார்க்கல... ஹி ஹி ஹி

குடுகுடுப்பை said...

தவறு பண்ணலன்னா தமிழ் படமெல்லாம் இசையே இல்லாமதான் வரனும். இன்னும் சொல்லப்போனா படமே வராது:)

Anonymous said...

//SurveySan-யாரு காப்பி அடிச்சாலும் தப்புதான். ஏ.ஆர் அடிச்சா இன்னும் பெரிய தப்பு.
இவ்ளோ பெரிய எடத்தை அடஞ்சப்பரமும், இது தொடர்ந்தா கேவலம்.காப்பி அடித்த, அடுத்தவன் உழைப்பை திருடுவதுக்கு சமம்.//
வழிமொழிகிறேன்.

இவன் said...

//குடுகுடுப்பை said...

தவறு பண்ணலன்னா தமிழ் படமெல்லாம் இசையே இல்லாமதான் வரனும். இன்னும் சொல்லப்போனா படமே வராது:)
//

குடுகுடுப்பை நீங்க என்ன சொல்ல வாறீங்க?? தமிழ்சினிமா உலகில சொந்த சரக்குள்ளவங்க யாரும் இல்ல என்னு சொல்ல வாறீங்களா??

இவன் said...

//Anonymous said...

//SurveySan-யாரு காப்பி அடிச்சாலும் தப்புதான். ஏ.ஆர் அடிச்சா இன்னும் பெரிய தப்பு.
இவ்ளோ பெரிய எடத்தை அடஞ்சப்பரமும், இது தொடர்ந்தா கேவலம்.காப்பி அடித்த, அடுத்தவன் உழைப்பை திருடுவதுக்கு சமம்.//
வழிமொழிகிறேன்.
//

கருத்துக்கு நன்றி அனானி

Kalaivann said...

There are many more inspirations from ARR..I am shocked to see these blog posts

A part of the prelude from "Chinna Chinna Aasai" is composed by Michael Kamen..

http://www.musicquencher.com/blog/2009/10/09/highlanderthe-quickening-chinna-chinna-aasai/

"Pennalla Pennalla" song a xerox from an old MSV song.

http://www.musicquencher.com/blog/2009/10/05/a-r-rahman-influenced-by-msv/

"Vennila Vennila" from Iruvar seems to be inspired from movie "all that Jazz" soundtrack

http://www.musicquencher.com/blog/2009/09/25/all-that-jazz-vennila-vennila/

and many more listed there..

Inspiration is very common in music industry...