Thursday, October 16, 2008

ஒரு புகைப்பிடிப்பாளனின் வயிற்றெரிச்சல் இது....

இவனே தம் அடிக்கிற மொள்ளமாரி இவனுக்கென்ன feelings என்னு பாக்குறீங்களா?? என்னங்க செய்ய என் நிலமை அப்படி....இவ்வளவு நாள் நான் உண்டு என் Dunhill blue உண்டு என்று நிம்மதியா இருந்தேன்.... கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு friend ஒருத்தி கிடைச்சா... ஏதோ ஒரு தடவை தம் அடிக்கிற் நேரம் அவ phoneல "என்ன செய்யுறா" என்னு யதார்த்தமா கேக்க நானும் தெரியாத்தனமா "தம்மடிச்சுகிட்டு இருக்கிறேன்" என்னு சொல்லிட்டேன்... அன்னையில இருந்து "நீ ஒரு தமிழ் பொண்ண தம் அடிக்க வைக்க பாக்கிறா... அதனால தம்மடிக்கிறத நிறுத்தீடு இல்லன்னா நானும் ஆரம்பிச்சிடுவேன்" என்னு சொல்லி மிரட்ட ஆரம்பிச்சா...வேற வழி இல்லாம நானும் சரி வர்ர October 12 அன்னைக்கு தம்மடிக்கிறத நிறுத்துறேன் என்னு சொல்லிட்டேன்... அது என்ன October 12th என்ன நல்ல நாளா என்னு கேக்குறீங்களா?? வேற ஒன்னும் இல்லைங்க என் அப்பாவோட பிறந்த நாள் அதுதான்... நாங்கல்லாம் யாரு வேலுநாயக்கர் மாதிரியாக்கும்... கொடுத்த வாக்க மீற மாட்டமாக்கும் அதனால வேற வழி இல்லாம October 12 வரைக்கு கொஞ்சம் கொஞ்சமா தம்மடிக்கிறத குறைச்சு குறைச்சு ஒரு மாதிரி October 12 அன்னைக்கு முழுசா நிறுத்தீட்டேன்... அதனால இனி யாருமே எனக்கு முன்னாடி தம்மடிச்சோ இல்ல என்கிட்ட தம்ம பத்தி பேசியோ என் வயித்தெரிச்சல கொட்டிகொள்ளக்கூடாது என்பதை 2 தம்மடிச்சு முடிச்ச சந்தோஷத்தோட சொல்லிக்கொள்கிறேன் அம்புட்டுத்தான்..

34 பதிலகள்:

தயா said...

எவ்வளவு நாள் கன்ட்ரோல் பண்றீங்கன்னு பார்ப்போம்... வாழ்த்துக்கள்.. ஒரு பொண்ணு சொன்ன உடனே கேட்கறீங்கன்னா ஆச்சர்யமா இருக்கு.. கண்டிப்பா லவ்வரா தான் இருக்கனும். கரெக்டா?

இவன் said...

//தயா said...

எவ்வளவு நாள் கன்ட்ரோல் பண்றீங்கன்னு பார்ப்போம்... வாழ்த்துக்கள்.. ஒரு பொண்ணு சொன்ன உடனே கேட்கறீங்கன்னா ஆச்சர்யமா இருக்கு.. கண்டிப்பா லவ்வரா தான் இருக்கனும். கரெக்டா?//


வாங்க தயா முதல் வரவு... வரவுக்கு நன்றி.. ஆஹா ஏங்க இப்படி?? என்னை வம்பில மாட்டி விட்டுடுவீங்க போல இருக்கே?? அந்த பொண்ணும் வலையுலகத்தில இருக்காங்க... அவங்க இந்த பின்னுட்டத்த பார்த்தா இவனுக்கு சங்குதான்... இருந்தாலும் இவ்வளவு வில்லத்தனம் இருக்க கூடாது...

rapp said...

உங்களை ஒரு தொடருக்கு அழைச்சிருக்கேன்

rapp said...

very good

இவன் said...

//rapp said...

உங்களை ஒரு தொடருக்கு அழைச்சிருக்கேன்//


ஆஹா இதத்தானே எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்... நாளைக்கே போட்டுடுறேன்

இவன் said...

//rapp said...

very good//


எதுக்கு இந்த very good...??

Anonymous said...

oh அதுக்குத்தான் இந்த கடி'தம்'

இவன் said...

//Anonymous said...

oh அதுக்குத்தான் இந்த கடி'தம்'//


நான் தம் அடிக்கிறத நிறுத்தீட்டேன் எங்கிறத officialஅ அறிவிக்கத்தான் இந்த பதிவு

Raghavan said...

கொடுத்து வைத்தவர் நீங்கள். எப்படியோ, யாராலேயோ.. நிறுத்தி விட்டீர்களே.. அதுவே பெரிய சாதனைத்தான். எக்காரணம் கொண்டும் அதை தொடாதீர்கள். முதல் 4 முதல் 6 மாதம் வரை ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். பின் சரியாகிவிடும். இராகவன், நைஜிரியா

புதுகை.அப்துல்லா said...

அப்பாடி எனக்கு ஓரு கம்பெனி கிடைச்சாச்சு

உருப்புடாதது_அணிமா said...

சார் ஒரு தம்மு இருந்தா குடுங்க

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அய்யோ அய்யோ?!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஹஹா!
இதெல்லாம் ஒரு பெரிய
மேட்டரா?
நானெல்லாம்
ஒரு 100 -200 முறை
தம்மடிக்கிறத விட்டுருக்கேன் தெரியுமா?

Saravana Kumar MSK said...

பொண்ணுங்க சொன்னா மட்டும், உடனே மாறிவிடுகிறீர்கள்!!??

ஜி said...

//2 தம்மடிச்சு முடிச்ச சந்தோஷத்தோட சொல்லிக்கொள்கிறேன் அம்புட்டுத்தான்..//

appo innum niruthalaiyaa?? Ithukkuththaan enna maathiri aaraappulaiye thamma adichu mudichi ettavathulaiye nirithirukanum... ippa entha ponnu pechaiyum kekka venaamla ;))

புனித் கைலாஷ் said...

ஹாய் இவன்!

வாழ்த்துக்கள்... உங்களுக்கு எதிர் காலத்துல நெஞ்சுஎரிச்சல் வராம இருக்க ஒரு பெண் உங்களுக்கு உதவி செஞ்சு இருக்காங்க. இதுல ஏன் வயிறெரிச்சல்? தயா, நீங்க சொல்ற மாதிரி லவ் ஆக இருக்காது... தங்கச்சி சொல்ற வார்த்தைக்கு தான் இத்துணை மதிப்பு எல்லாம் இவன் கொடுப்பாரு.. என்னங்க இவன்? :)

அன்புடன்,
புனித்

இவன் said...

//Raghavan said...

கொடுத்து வைத்தவர் நீங்கள். எப்படியோ, யாராலேயோ.. நிறுத்தி விட்டீர்களே.. அதுவே பெரிய சாதனைத்தான். எக்காரணம் கொண்டும் அதை தொடாதீர்கள். முதல் 4 முதல் 6 மாதம் வரை ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். பின் சரியாகிவிடும். இராகவன், நைஜிரியா//


இது என்ன ராகவன் பெரிய விஷயம் இப்படி எத்த்னையோ தடவ நிறுத்தி இருக்கிறேன்...4 முதல் 6 மாதம் என்ன இப்பவே கஷ்டமாத்தான் இருக்குது ஆனாலும் பரவாயில்லை... ஹி ஹி ஹி

இவன் said...

//புதுகை.அப்துல்லா said...

அப்பாடி எனக்கு ஓரு கம்பெனி கிடைச்சாச்சு//


எதுக்கு கம்பனி அப்துல்லா??

இவன் said...

//உருப்புடாதது_அணிமா said...

சார் ஒரு தம்மு இருந்தா குடுங்க//


ங்ண்ணா என்ன brandங்ண்ணா உங்களோடது??

இவன் said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அய்யோ அய்யோ?!//


ஆஹா எதுக்கு இந்த அய்யோ அய்யோ?!

இவன் said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஹஹா!
இதெல்லாம் ஒரு பெரிய
மேட்டரா?
நானெல்லாம்
ஒரு 100 -200 முறை
தம்மடிக்கிறத விட்டுருக்கேன் தெரியுமா?//


ஆஹா நீங்களும் என்னை மாதிரிதானோ??

இவன் said...

//Saravana Kumar MSK said...

பொண்ணுங்க சொன்னா மட்டும், உடனே மாறிவிடுகிறீர்கள்!!??//என்ன செய்ய சரவணகுமார்... ஏன் நீங்களும் சொல்லுங்க சரவணகுமார்... ஒரு 2 நாள் நிறுத்தி வைக்குறேன்... ஹி ஹி ஹி

இவன் said...

//ஜி said...
appo innum niruthalaiyaa?? Ithukkuththaan enna maathiri aaraappulaiye thamma adichu mudichi ettavathulaiye nirithirukanum... ippa entha ponnu pechaiyum kekka venaamla ;))//என்ன செய்ய ஜி நானும் ஒரு 4ம் வகுப்பில ஒரு தடவ தம்மடிச்சு இருமல் வந்து அப்பவே நிறுத்தீட்டேன்.. திரும்ப ஆரம்பிச்சதத்தான் நிறுத்த முடியல

இவன் said...

//புனித் கைலாஷ் said...

ஹாய் இவன்!

வாழ்த்துக்கள்... உங்களுக்கு எதிர் காலத்துல நெஞ்சுஎரிச்சல் வராம இருக்க ஒரு பெண் உங்களுக்கு உதவி செஞ்சு இருக்காங்க. இதுல ஏன் வயிறெரிச்சல்? தயா, நீங்க சொல்ற மாதிரி லவ் ஆக இருக்காது... தங்கச்சி சொல்ற வார்த்தைக்கு தான் இத்துணை மதிப்பு எல்லாம் இவன் கொடுப்பாரு.. என்னங்க இவன்? :)

அன்புடன்,
புனித்//


ஆஹா இது ஒரு நல்ல கேள்வி....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டம் போடலாம்னு ஆரம்பிச்சேன்...

இருங்க ஒரு தம் போட்டுட்டு வந்துடறேன் :)

Aruna said...

நிஜம்மாவா???நான் இதெல்லாம் சினிமால மட்டும்தான் நடக்கும்னு நினைச்சுட்டு இருக்கேன்...
அன்புடன் அருணா

Anonymous said...

அடப்பாவி இராகவா!
நீ நைஜீரியாவிலயோ இருக்கிறாய்?

இவன் said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டம் போடலாம்னு ஆரம்பிச்சேன்...

இருங்க ஒரு தம் போட்டுட்டு வந்துடறேன் :)//


ஆஹா என் வயித்தெரிச்சல கெளப்பாதீங்க சுந்தர்... எல்லாம் ஒரு வில்லத்தனத்தோடத்தான் அலையுறீங்க இல்ல??

இவன் said...

// Aruna said...

நிஜம்மாவா???நான் இதெல்லாம் சினிமால மட்டும்தான் நடக்கும்னு நினைச்சுட்டு இருக்கேன்...
அன்புடன் அருணா//


எது சினிமால மட்டும்தான் நடக்கும் என்னு நினைச்சீங்க அருணா தம்மடிக்கிறதா??

இவன் said...

//Anonymous said...

அடப்பாவி இராகவா!
நீ நைஜீரியாவிலயோ இருக்கிறாய்?//


அனானி உங்க பேர சொல்லிக்கேட்டாத்தானே ராகவனுக்குத்தெரியும்??

புதுகை.அப்துல்லா said...

நானும் தம்ம விட்டு ஓரு மாசம் ஆச்சுண்ணே :)

இவன் said...

//புதுகை.அப்துல்லா said...

நானும் தம்ம விட்டு ஓரு மாசம் ஆச்சுண்ணே :)//


ஆஹா... என்ன இப்படி திடிரென்னு கெட்டுப்போயிட்டீங்க??

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வயிற்றெரிச்சல் சரியாப் போயிடும்.. நல்லபடியா வாக்க காப்பாத்துங்க..
ஆனா கொஞ்சம் எங்க கண்ணெரிச்சலை கவனத்தில் கொண்டு.. இந்த கருப்பு பேக்ரவுண்ட் மாத்துங்க..எப்படி இத்தனை பேர் படிச்சு பின்னூட்டமெல்லாம் போட்டாங்க..:(

இவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

வயிற்றெரிச்சல் சரியாப் போயிடும்.. நல்லபடியா வாக்க காப்பாத்துங்க..
ஆனா கொஞ்சம் எங்க கண்ணெரிச்சலை கவனத்தில் கொண்டு.. இந்த கருப்பு பேக்ரவுண்ட் மாத்துங்க..எப்படி இத்தனை பேர் படிச்சு பின்னூட்டமெல்லாம் போட்டாங்க..:(//


காப்பாத்த முயற்சி செய்யுறேன்...
ஆஹா அப்படி மாத்த போனா எழுத்துரு நிறம் எல்லாம் மாற்றனுமே... கொஞ்ச நாள் எடுத்து பின் மாற்றுகிறேன்