Monday, December 8, 2008

ஆஸ்திரேலியா என் கனவு தேசம்......-1

வணக்கம் நண்பரகளே... கொஞ்ச நாளா என் தொல்லை இல்லாம இருந்திருப்பீங்க... ஆனா இப்போ மறுபடியும் ஆரம்பிச்சிட்டேன்... ரொம்ப நாளா வருண் மற்றும் கயல்விழி எழுதுவது (காதல் கல்வெட்டு) போல் ஒரு தொடர் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் அதிகமா flight தள்ளுறவேலை இருந்ததால(இது புரியாத்வர்கள் இந்த லிங்கில் போல் பார்க்கவும் - http://manathoodu.blogspot.com/2008/08/blog-post_26.html)) பதிவு எழுதவே முடியல வேலைவில இருக்க நேரம் இந்த பதிவு நினைப்பிலேயே போய் flightஐ மோதி அதன் indicator, மற்றும் propellerஐ உடைத்த சம்பவங்களும் உண்டு... அதைப்பற்றி பிறகு விபரமா இன்னொரு பதிவில சொல்லுறேன்.... இப்போ இந்த பதிவுக்கு வர்ரேன்....


இந்த பதிவில்(தொடரில்) நான் எழுதப்போவது இந்த ஆஸ்திரேலியா எனக்கு கனவு தேசமானது என்பதைப்பற்றியும் அதை நான் நிறைவேற்றிக்கொண்டேன் என்பதைப்பற்றியும்.... எல்லா மகன்கள் மாதிரியே எனக்கும் என் அப்பாதான் ஹீரோ என்றைக்கும் எப்பவும் அவர்தான் எனக்கு ஹீரோ... நான் 5ம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த போது நாங்கள் வசித்த ஊரின் பெயர் தலவாக்கொலை. எனது school vice principalஆக இருந்த அப்பாவுக்கு கல்விப்பணிப்பாளராக பதவி உயர்வு. இந்த பதவி உயர்வும் கயாஸ் தியரியாய் மாறி என் கனவுக்கு வித்திட்ட ஒன்றாக இருக்கலாம்... அந்த நேரத்தில் ரண்பிம றோயல் கல்லூரி என்ற schoolக்கு தேர்வு பரிட்சை எழுத என்னை அம்மா கண்டி நகருக்கு அழைத்து போனார். அது ஆண்கள் பாடசாலை என்பதால் நானும் எனது நண்பர்களும் பரிட்சை எழுதப்போய் எனது பாடசாலையில் நான் மட்டும் தெரிவானேன். அந்த நேரத்தில் நான் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் ஏற்கனவே மாவட்ட ரீதியில் முதல் மாணவனாக வந்திருந்த காரணத்தால் அம்மாவுக்கு என்னை வேறு ஒரு பாடசாலையில் சேர்த்து நான் படிப்பில் இன்னும் அதிகமாக முன்னேற வேண்டுமென ஆசை, அப்பாவுக்கும்தான் ஆனாலும் அவருக்கு என்னை வேறு பாடசாலைக்கு அனுப்புவதில் விருப்பமில்லை.

1996 மார்ச் மாதம் புது பாடசாலை புது நண்பர்கள் hostel வாழ்க்கை என புது வாழ்க்கை ஆரம்பம். முதல் நாள் அப்பா என்னை கூட்டி வந்து hostelலில் விட்டு திரும்ப வீட்டுக்கு அதாவது தலவாக்கொலை செல்லும் போது என் அப்பா என்னை விட்டு அதிக தூரம் விலகிப்போவது போல் இருந்தாலும் மனதளவில் அருகில் மிக அருகிலேயே இருந்தார். வாரத்தில் 5 நாள் வேலை இருந்தாலும் சனிக்கிழமையானால் அதிகாலை 3 மணிக்கு எழுந்து hostelக்கு வந்து எனது உடைகளை துவைத்து தருவது போன்று ஒவ்வொரு சிறு சிறு விடயங்களையும் பார்த்து பார்த்து செய்தவர் என் அப்பா. 
 அது ‘96 செப்டெம்பர் மாத ஆரம்பம் என் அப்பா எங்கள் எல்லோரையும் விட்டு முதன்முதலில் கடல் கடந்து வேறு வழியின்றி பிரிந்து செல்லப்போகும் மாதம். ஆஸ்திரேலியா என்னுடன் கிரிக்கட் தாண்டி உறவினை வலுப்படுத்திக்கொள்ள இந்த முதல் பிரிவு வழி அமைத்துக்கொடுத்தது.....


தேசக்கனவுகள் தொடரும்

18 பதிலகள்:

புதுகை.அப்துல்லா said...

மறக்காம ஆஸ்திரேலியாவுல நீங்க சைட் அடிச்ச ஃபிகர்களப் பற்றியும் எழுதனும் :))

இவன் said...

// புதுகை.அப்துல்லா said...

மறக்காம ஆஸ்திரேலியாவுல நீங்க சைட் அடிச்ச ஃபிகர்களப் பற்றியும் எழுதனும் :))//


வரும் எல்லாமே தொடர்ந்து வரும் அப்துல்லா....

மெல்போர்ன் கமல் said...

உங்க எங்கயாவது பிளைட் தள்ளுற வேலை இருக்கே?? நானும் கூட வரட்டுமே???? அது சரி இவளவு நாளும் தண்ணில பிளேன் (அதாங்க கடலில பிளேன் ) ஓட்டிட்டு இப்போ வந்துட்டாங்க ஒஸ்ரேலியா பற்றிப் புகழுரைக்க. என்னப்பா மெல்போர்னில மெல்லிய மலரெல்லாம் (மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா??) இருக்கென்று வைரமுத்து சொன்னவர். உண்மையாமோ???

இவன் said...

//மெல்போர்ன் கமல் said...

உங்க எங்கயாவது பிளைட் தள்ளுற வேலை இருக்கே?? நானும் கூட வரட்டுமே???? அது சரி இவளவு நாளும் தண்ணில பிளேன் (அதாங்க கடலில பிளேன் ) ஓட்டிட்டு இப்போ வந்துட்டாங்க ஒஸ்ரேலியா பற்றிப் புகழுரைக்க. என்னப்பா மெல்போர்னில மெல்லிய மலரெல்லாம் (மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா??) இருக்கென்று வைரமுத்து சொன்னவர். உண்மையாமோ???//


தம்பி கமல் இதில ஏதோ உள்குத்து இருக்குது எண்டு விளங்குது ஆனால் அது என்ன உள்குத்து எண்டுதான் விளங்கேல்ல... அதோட “கமல்” எண்டு பேர் உள்ளவங்களுக்கெல்லாம் flight தள்ளுற வேலை கொடுக்கிறது இல்லை எண்டு Melbourne AIRPORT தீர்மானிச்சு இருக்குது....

வெளிச்சத்தை நோக்கி said...

vanakkam ,
ungal pathivai padithane nanragairunthathu. nanum tamilmanathula ezuthanum. enna seiyya vandum .

வெளிச்சத்தை நோக்கி said...

hi nan puthu blog start pannnanum. help pannuvingala.

துளசி கோபால் said...

என்ன இவனே, நலமா?

ரொம்ப நாளா ஆளைக் காணொமே?

நேரம் கிடைக்கும்போது அப்படியே ஃப்ளைட்டைத் தள்ளிக்கிட்டு அடுத்த வீட்டுக்கும் வாங்க.

இவன் said...

// வெளிச்சத்தை நோக்கி said...

hi nan puthu blog start pannnanum. help pannuvingala.//

நண்பரே... என்னுடைய கைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்... நான் நிச்சயமாக உதவி செய்கிறேன்....

என் கைபேசி இலக்கம் 0430141206

இவன் said...

// துளசி கோபால் said...

என்ன இவனே, நலமா?

ரொம்ப நாளா ஆளைக் காணொமே?

நேரம் கிடைக்கும்போது அப்படியே ஃப்ளைட்டைத் தள்ளிக்கிட்டு அடுத்த வீட்டுக்கும் வாங்க.//


டீச்சர் வணக்கம்.. கொஞ்சம் busyஆ இருந்துட்டேன்... அதுதான் நிச்சயமாக ஒருமுறை அந்தபக்கம் வருவேன்

VIKNESHWARAN said...

நன்றாக இருக்கு தொடருங்கள்...

Saravana Kumar MSK said...

என்னங்கணா.. ரொம்ப நாளா ஆளையே காணோம்???

Saravana Kumar MSK said...

//Blogger புதுகை.அப்துல்லா said...

மறக்காம ஆஸ்திரேலியாவுல நீங்க சைட் அடிச்ச ஃபிகர்களப் பற்றியும் எழுதனும் :))//

கனவு தேசத்தின் கனவு கண்மணிகளை பற்றியும் எழுத கேட்டு கொண்டே அண்ணன் அப்துல்லாவை வழிமொழிகிறேன்.. ;)

மெல்போர்ன் கமல் said...

தம்பி கமல் இதில ஏதோ உள்குத்து இருக்குது எண்டு விளங்குது ஆனால் அது என்ன உள்குத்து எண்டுதான் விளங்கேல்ல... அதோட “கமல்” எண்டு பேர் உள்ளவங்களுக்கெல்லாம் flight தள்ளுற வேலை கொடுக்கிறது இல்லை எண்டு Melbourne AIRPORT தீர்மானிச்சு இருக்குது....//

அது சரி தண்ணில பிளேன் ஓட்டுறவங்கள் உள் கூத்துப் பற்றிக் கதைக்க வந்திட்டாங்களாம்??? ம்.......... நீங்கள் சரியான டியூப் லைட்டாக இருபீங்கள் போல......... ஏனாம் ''கமல்' என்ற பேருக்கு வேலை இல்லை என்றாங்க??? அப்போ பெயரை மாத்திடுவோமா????
என்ன நான் நினைச்சன் நீங்கள் சொன்னதாக. ம்... பரவாயில்லை அது மெல்போர்ன் ஏயார் போர்ட் சொன்னதா சொல்லிட்டீங்கள்!//

//மறக்காம ஆஸ்திரேலியாவுல நீங்க சைட் அடிச்ச ஃபிகர்களப் பற்றியும் எழுதனும் :))//

கனவு தேசத்தின் கனவு கண்மணிகளை பற்றியும் எழுத கேட்டு கொண்டே அண்ணன் அப்துல்லாவை வழிமொழிகிறேன்.. ;)//


யோவ் உதென்ன புலுடா??? நாங்களும் இங்க மெல்போர்னில தான் இருக்கிறோம். நாங்களே இங்க பிகருங்களைக் காணா நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்...ம்...உவர் வந்திட்டார் நல்லா கதையளக்க?? எங்கப்பு இங்க கண்மணிகள் எல்லாம் இருக்கு??? உமக்கு மட்டும் எப்பிடி உந்தப் பொண்ணுகளைப் பார்க்க நேரம் கிடைக்குது??? நீங்கள் கனவில ஏதும் பதிவெழுதிறனீங்களா?? ஒருக்கால் உந்த 'பிறஸ்ரன்' டொக்டரிட்டைப் போய்ச் செக் பண்ணும்??? இங்க ஒஸ்ரேலியாவில எல்லாம் காய்ஞ்சு போய்க் கிடக்கப்பா??? அதுக்குள்ள கனவு தேசத்தில அவருக்குக் கண்மணிகளாம்?????? ஏதோ நடக்கட்டும்................நடக்கட்டும்??????????????

மெல்போர்ன் கமல் said...

//மறக்காம ஆஸ்திரேலியாவுல நீங்க சைட் அடிச்ச ஃபிகர்களப் பற்றியும் எழுதனும் :))//

கனவு தேசத்தின் கனவு கண்மணிகளை பற்றியும் எழுத கேட்டு கொண்டே அண்ணன் அப்துல்லாவை வழிமொழிகிறேன்.. ;)//


யோவ் உதென்ன புலுடா??? நாங்களும் இங்க மெல்போர்னில தான் இருக்கிறோம். நாங்களே இங்க பிகருங்களைக் காண நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்...ம்...உவர் வந்திட்டார் நல்லா கதையளக்க?? எங்கப்பு இங்க கண்மணிகள் எல்லாம் இருக்கு???

உமக்கு மட்டும் எப்பிடி உந்தப் பொண்ணுகளைப் பார்க்க நேரம் கிடைக்குது??? நீங்கள் கனவில ஏதும் பதிவெழுதிறனீங்களா?? ஒருக்கால் உந்த 'பிறஸ்ரன்' டொக்டரிட்டைப் போய்ச் செக் பண்ணும்??? இங்க ஒஸ்ரேலியாவில எல்லாம் காய்ஞ்சு போய்க் கிடக்கப்பா??? அதுக்குள்ள கனவு தேசத்தில அவருக்குக் கண்மணிகளாம்?????? ஏதோ நடக்கட்டும்................நடக்கட்டும்??????????????

ஸ்ரீமதி said...

:)))))))))

காண்டீபன் said...

நல்ல தொடர்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே.

காண்டீபன் said...

உங்கள் கனவுகளின் ஆரம்பத்தையும் சொல்லி இருப்பது ... Interesting.

Saravana Kumar MSK said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இவன்..