Friday, June 20, 2008

விஜய்யும் புதுக்கட்சியும்

இருக்குற கொடுமை போதாது என்னு புதுக்கொடுமை, என்ன கொடுமை என்னு பார்க்கிறீங்களா??? நான் இன்னைக்கு என் நண்பர் ஒருத்தர் கொடுமை ஒண்ணு அரங்கேறி இருக்குது சும்மா ஒருதடவை தமிழ்சினிமா.comக்கு போ என்னு சொல்ல உடனே தமிழ்சினிமா.comக்கு போனா அங்க அந்த கொடுமையான செய்தியை வாசிச்சு மண்டையில இடியை வாங்கி மயங்கி விழுந்துட்டேன்.... அதாவது அந்த செய்தி என்ன சொல்லுதின்னா நம்ம விஜய் இருக்காரில்ல அதுதாங்க நம்ம இளையதளபதி டாக்டரு விஜய் அட நம்ம தோனி கூட யார்ரா நீ என்னு IPLல கேட்டாரே அவரேதாங்க.... அவர் என்ன பண்றாருன்னா புதுசா freshஆ தன் மன்றத்துக்கு கொடி அறிமுகப்படுத்தப்போறாராம்... ஏன்யா விஜய் இப்பத்தானே 2 படம் சூப்பர் ப்ளொப் கொடுத்தீங்க அதுக்குள்ள கட்சி ஆரம்பிச்சு தொடர்ந்து வர்ற எல்லாப்படத்தையுமே விஜயகாந் மாதிரி ப்ளொப் ஆக்கனுமா?? முதல்ல ஒழுங்கா ஒரு படத்தில நடிங்க அய்யா..... வெறும் Dance ஆடிட்டு Fight பண்ணிட்டு போற மாதிரி உங்க கட்சியையும் அப்படியே ஒப்பேற்றி விடலாம் என்று பார்க்கிறீர்களா??மக்களே எல்லாமே உங்க கையில்தான் இருக்கு இப்படியே விஜய விட்டீங்க என்னா அவ்வளவுதான். ஏதோ நான் சொல்லுறத சொல்லீட்டேன் நீங்களே பாத்துக்குங்க.... நீங்களும் படிச்சு தெரிஞ்சுக்கனும் எங்குறத்துக்காக அந்த செய்தியை அப்படியே Copy-Paste செய்கிறேன்
"'வரவேண்டிய நேரத்தில் வருவேன்' என்று சொல்லியே வருடங்களை கடத்தி வரும் ரஜினிக்காக காத்திருக்காமல், விஜயகாந்த் கட்சியிலும், சரத்குமார் கட்சியிலும் தன்னை இணைத்து வருகிறார்கள் ரஜினி மன்றத்தை சேர்ந்த சில குட்டி தலைவர்கள். இந்த நேரத்தில், தனது மன்றத்துக்கும் ஒரு கொடியை உருவாக்கி, அதை அறிமுகம் செய்கிற விழாவையும் சென்னையில் நடத்த தீர்மானித்திருக்கிறார் விஜய்.

இவரது பிறந்த நாள் விழாவும் கொடி அறிமுக விழாவும் ஒரே தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் என்ற வாசங்களோடு உருவாக்கப்பட்டிருக்கும் அந்த கொடியில் விஜயின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. நீலம் வெள்ளை கலரில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த கொடி.

விஜய்க்கு தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மன்றங்கள் இருக்கிறதாம். ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தது 25 பேர் இருக்கிறார்கள். இவர்கள் பற்றிய விபரங்களை கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கிறது தலைமை மன்றம். இப்படியெல்லாம் முறையாக செயல்படும் இவர்களின் எதிர்கால நோக்கம் என்னவாக இருக்கும்?

கேள்விக்கு விளக்கம் சொல்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. இன்று சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இளைஞர்கள் நாளை ஒரு அமைப்பாக உருவாகி, அரசியலுக்கு வந்து சமூக அந்தஸ்தை பெற நினைத்தால் அதுவும் இயற்கையான வளர்ச்சியாக இருக்கும்! இந்த பதிலில் மேலோட்டமாக கூட அல்ல, தெளிவாகவே புரிகிறது உண்மை! இனியென்ன... வட்டம், மாவட்டம் என்ற நினைப்போடு நடைபோட வேண்டியதுதானே விஜய் ரசிகர்களே...! "


இப்பத்தான் குமரன் குடில இளையதளபதி ஜோக்குகள் கலாய்ச்சாரு அதையும் பார்க்க சூப்பர் ஜோக் இல்ல இது?? இதுக்கெல்லாம் காரணம் விஜய் அப்பாதன்யாம் "எவ்வளவோ பேர தூக்குல போடுறீங்க இந்தாள போடுங்கைய்யா தூக்குல"
எப்படிங்கண்ணா உங்க அழுகிய sorry அழகிய தமிழ்மகன் பஞ்ச் மாதிரியே இருக்குடுங்களாண்ணா?? பின்னுட்டம் இடும் மக்கள்ஸ் இனி உங்கள் கையில்......

தமிழ்சினிமா.comல் காண இங்கே கிளிக்குங்கள்

புகைப்படத்துக்கு நன்றி சினிமா நிருபரே.....

28 பதிலகள்:

ச்சின்னப் பையன் said...

எவ்வளவோ கட்சியைப் பாத்துட்டோம். இதை பாக்கவேணாமா?

இவன் said...

//எவ்வளவோ கட்சியைப் பாத்துட்டோம். இதை பாக்கவேணாமா?//
ஆஹா இந்த மேட்டர் சூப்பரா இல்ல இருக்குது....

rapp said...

கவலையே படாதீங்க, இவரெல்லாம் எங்க தல ஜே.கே.ரித்தீஷ் கட்சி ஆரம்பிச்சவுடன் அடங்கிடுவாரு

இவன் said...

//கவலையே படாதீங்க, இவரெல்லாம் எங்க தல ஜே.கே.ரித்தீஷ் கட்சி ஆரம்பிச்சவுடன் அடங்கிடுவாரு//

ஆஹா என்னய்யா சொல்லுறீங்க...?? அந்த சின்னிஜெயந் படத்தில வந்துச்சே ஒரு பூச்சாண்டி அந்தாளைய்யா சொல்லுறீங்க?? அது இத விட பெரிய கொடுமையாச்சே.......

Anonymous said...

//கவலையே படாதீங்க, இவரெல்லாம் எங்க தல ஜே.கே.ரித்தீஷ் கட்சி ஆரம்பிச்சவுடன் அடங்கிடுவாரு//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

இவன் said...

////கவலையே படாதீங்க, இவரெல்லாம் எங்க தல ஜே.கே.ரித்தீஷ் கட்சி ஆரம்பிச்சவுடன் அடங்கிடுவாரு//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
//

ஓ இதுதான் ரிப்பீட்டு போடுறதா... நம்ம விஜய் எல்லா படத்திலயும் செய்யுறது நீங்க பின்னுட்டத்தில.... கலக்கீட்டீங்க அனானி

துளசி கோபால் said...

மொதல்லே நம்ம டாக்குட்டரை 'ரீமேக்' செய்யாத ஒரு படத்துலே
நடிச்சுட்டு வந்தாத்தான் கட்சி ஆரம்பிக்கலாமுன்னு கண்டிஷன்
போட்டுவைச்சா என்ன? ;-)))

இவன் said...

//மொதல்லே நம்ம டாக்குட்டரை 'ரீமேக்' செய்யாத ஒரு படத்துலே
நடிச்சுட்டு வந்தாத்தான் கட்சி ஆரம்பிக்கலாமுன்னு கண்டிஷன்
போட்டுவைச்சா என்ன? ;-)))//

டீச்சர் நீங்க வேற... ஆந்திரா கட்சியத்தான் விஜய் "ரீமேக்" பண்ணப்போவதா கேள்வி..... செஞ்சாலும் செய்வாரு நம்ம டாக்குட்டர்

சினிமா நிருபர் said...

என்ன இவனே... இப்படி போட்டு தாக்குறீங்க...!

துளசி கோபால் said...

//ஆந்திரா கட்சியத்தான் விஜய் "ரீமேக்" பண்ணப்போவதா கேள்வி//

ஹா....... இதுலேயுமா????

இவன் said...

////ஆந்திரா கட்சியத்தான் விஜய் "ரீமேக்" பண்ணப்போவதா கேள்வி//

ஹா....... இதுலேயுமா????//

அப்படித்தான் கேள்விப்பட்டேன்... அய்யா இலைய sorry இளையதளபதி ரசிகர்களே மெல்போர்ன்ல ஆட்டோ கிடையாது என்னு புல்டோசர அனுப்பீராதிங்க.... நான் இருக்குறது வாடகை வீடு... அதோட 6 மணி நேரம்தான் வீட்டுல இருப்பேன்... மத்த நேரம் எல்லாம் uniலதான் உங்களால அந்த பெரிய uniய இடிக்கமுடியாதில்ல

இவன் said...

//என்ன இவனே... இப்படி போட்டு தாக்குறீங்க...!//
உண்மைய சொல்லுங்க நிருபரே இந்த செய்திய கேட்க்ககுள்ள உங்களுக்கே கொலைவெறியாகல???

pichchai said...

கொடுமை கொடுமை என்னு தமிழ்சினிமா.கொம் போனா அங்க ஒரு கொடுமை விஜய் மாதிரி இல்ல dance ஆடுதில்ல....

இவன் said...

//கொடுமை கொடுமை என்னு தமிழ்சினிமா.கொம் போனா அங்க ஒரு கொடுமை விஜய் மாதிரி இல்ல dance ஆடுதில்ல....//

அடிடா அடிடா அடிடா இதுவல்லவோ வசனம் எனக்கு மட்டும்தான் அந்தாள் மேல கொலைவெறி என்னு நினைச்சா எல்லோருக்கும் அதே கொலைவெறிதானா??

Thamizhmaangani said...

//முதல்ல ஒழுங்கா ஒரு படத்தில நடிங்க அய்யா..//

நல்லதான்ப்பா நடிச்சாரு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களில். இப்பதான் தளபதி இப்படி... ஒரு நாள் சிங்கம் கண்டிப்பா சீறும்.

- உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்கம் செயலாளர்.

இவன் said...

//
நல்லதான்ப்பா நடிச்சாரு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களில். இப்பதான் தளபதி இப்படி... ஒரு நாள் சிங்கம் கண்டிப்பா சீறும்.

- உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்கம் செயலாளர்.//

அய்யோ உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்கம் செயலாளருங்களா மன்னிச்சுக்குங்க சிங்கம் ஒருநாள் நிச்சயமா சீறும்...
ஆனா விஜய் சீறினா அசிங்கமா இருக்குமே.... அதுதான் அவர சீற சொல்லாதிங்க அதிகம் வேணாம் ஒரு கொஞ்சம், ஒரு இத்துணூண்டு நடிக்க சொல்லுங்க அதுபோதும் கமல் போன்ற ஒரு நல்ல நடிகன் காலத்தில் இவரும் இருந்தார் என்கிறத்துக்காக இல்லாட்டிக்கும், சிவாஜி என்கிற நடிப்பு மாமேதையோடு இவர் நடிச்சார் என்பதற்காகவாவது... நடிக்கச்சொல்லுங்களேன்....

ஈரத்தீ said...

//ஒரு நாள் சிங்கம் கண்டிப்பா சீறும்.//

ஏன் புள்ளையள் சிங்கத்தை நாட்டில வைத்திருக்கிறியள் காட்டில கொண்டே விட்டால் மனிசர்க்ள் நாங்கள் நிம்மத்தியாய் இருக்கலாம்.

ஈரத்தீ said...

//6 மணி நேரம்தான் வீட்டுல இருப்பேன்... மத்த நேரம் எல்லாம் uniலதான் உங்களால அந்த பெரிய uniய இடிக்கமுடியாதில்ல//


இதைவிட குருவி படத்தில விஜயின்ர நடிப்பே பரவாயில்லைபோல தோணுது. கண்ணை கட்டுது ராசா

இவன் said...

//ஏன் புள்ளையள் சிங்கத்தை நாட்டில வைத்திருக்கிறியள் காட்டில கொண்டே விட்டால் மனிசர்க்ள் நாங்கள் நிம்மத்தியாய் இருக்கலாம்.//

என்ன தமிழ் மாங்கனி இதுக்கு என்ன சொல்லுறீங்க???

மொத்ததில் விஜய் எங்க இருக்கனும் என்னு சொல்லுறீங்க ஈரத்தீ??

இவன் said...

//இதைவிட குருவி படத்தில விஜயின்ர நடிப்பே பரவாயில்லைபோல தோணுது. கண்ணை கட்டுது ராசா//
குருவி படத்தில விஜய் நடிப்பா என்னய்யா சொல்லுறீங்க நீங்க???

ஜி said...

:))))

Vaazve Maayam!!!

Maaya Maaya.. ellaam maaya..

இவன் said...

//:))))

Vaazve Maayam!!!

Maaya Maaya.. ellaam maaya..//

ஆஹா எல்லோருமே கொலை வெறிலதான்யா அலையுறாங்க.... சரி விடுங்க ஜி வாழ்க்கையில இந்த மாதிரி கொடுமை எல்லாம் சகஜமப்பா....

Anonymous said...

என்னதான் இருந்தாலும் விஜய்க்கு இந்த கொலைவெறி கூடாது

இவன் said...

//என்னதான் இருந்தாலும் விஜய்க்கு இந்த கொலைவெறி கூடாது//
என்னத்த செய்ய அனானி இதத்தான் காலக்கொடிம்மைஇ என்று சொல்லுவாங்க

குள்ளமணி said...

இவனைப்பற்றி எல்லாம் எழுதி உங்க நேரத்தை வீணடிக்கனுமா இவனே??

இவன் said...

//இவனைப்பற்றி எல்லாம் எழுதி உங்க நேரத்தை வீணடிக்கனுமா இவனே??

ஏன்யா குள்ளமணி உங்களுக்கு யாரையுமே பிடிக்காதா??

இராம்/Raam said...

:))

இவன் said...

//Blogger இராம்/Raam said...

:))//


வாங்க ராம் முதல் முதலா என் பக்கத்துக்கு வந்திருக்கீங்க ஆனா ஒரே ஒரு சிரிப்பானோட போய்ட்டீங்களே??