Tuesday, June 17, 2008

நாங்களும் பார்த்துட்டமில்ல தசாவதரம்

கடந்த வெள்ளி மெல்போர்னில் Greater Unionல் தசாவதாரம் படமாம் சரி பார்க்கலாம் என்று ஒரு 7 பேர் சேர்ந்து புதன்கிழமையே முன் பதிவு செய்து வெள்ளிக்கிழமை போனோம்.... படம் பார்க்க ஒரு மக்கள் வெள்ளமே வந்திருந்தது. எதுக்கு வர்ராங்களோ இல்லையோ இதுக்கு மட்டும் எக்கச்சக்க கூட்டம். முடியல்லப்பா சாமி ஒரு பக்கம் மல்லூஸ் ஒரு பக்கம் தெலுகு இன்னொரு பக்கம் ஹிந்திக்காரங்க வேற தமிழ்படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பா ஒரு உலக ஒருமைப்பாட்டையே அங்க பார்த்தேன் இது போதாது என்னு ஒரு வெள்ளைக்கரன் வேற ஏதோ அவன்கிட்டத்தான் camara இருக்குது என்னு மேல இருந்து கிளிக்கிகிட்டே இருந்தாம்பா.... நாளைக்கு நம்ம படம் பேப்பர்ல வந்து நம்மல தேடி மெல்போர்ன் பிகருங்க வந்து நிக்கக்கூடாது என்ற பயத்திலேயே முகத்தை மறைச்சுக்கிட்டு நின்னோம்.... நின்னது கூட தமிழ் கலாச்சாரப்படி முண்டி அடிச்சுக்கிறே நின்னோமில்ல..... மெல்போர்ன் வந்தாலும் தமிழன் தமிழந்தான் இந்த விஷயத்தில நம்ம தமிழனை அடிச்சுக்க ஆளே இல்லையே..... உள்ள போய் உக்கர்ந்தா அங்க ஒருத்தன் சீட் பிடிக்குறத்துக்காக சீட்டை கழற்றிக்கிட்டே போய்ட்டான்.... இதில கூட தமிழன் எங்குறத நிரூபிக்க வேணுமா? அந்த கொடுமை போதது என்னு இன்னொரு OLD பிகரு [வயசான ஒரு பா(ர்)ட்டி] எங்களுக்கு முன் rawவில் இருந்து விசில் எல்லாம் அடிப்பீங்களா அப்படி அடிக்கிறதா இருந்தா இப்பவே சொல்லுங்க முன்னுக்கு போயிடுறேன் என்னு சொல்ல OLD பிகருக்கு ஒரு பேத்தி இருக்காதா என்ற ஒரு நப்பாசையில அடக்கி வாசிச்சோம்.....சரி மொக்கை போதும் படத்துக்கு வா என்னு நீங்க சொல்லுறது எனக்கு புரியுது. சரி படத்துக்கு வர்றேன்.

படம் போட ஆரம்பிச்சா தொடக்கத்திலேயே பயங்கர கூச்சல் ஒன்னுமே கேக்கல போக போக கூச்சல் அடங்கி கொஞ்சம் கொஞ்சமா படம் எங்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது....ஆரம்பத்திலேயே வானத்தில் இருந்து ஒரு ஆங்கிள்ல கமரா இறங்கி கொஞ்சம் ஊரைச்சுத்தி காட்டி அப்படியே ஒரு உள்விளையாட்டரங்கத்தில இறங்கிச்சுது அங்க கமலின் கம்பீர குரலோடு ஆரம்பிக்கிறது தசாவதாரம்....! ஏற்கனவே பலபேர் தசாவதாரத்தை அக்குவேறா ஆணிவேறா எழுதி முடிச்சுட்டாங்க இருந்தாலும் நம்ம பங்குக்கு கொஞ்சம்..... அமெரிக்காவில் கோவிந்த் குழுவினரால் தயாரிக்கப்படும் ஒரு அந்திராக்ஸ் போன்ற BIO Weapon அக்குழுத்தலைவரினால் தவறனவர்களின் கைகளுக்கு போவதை தடுப்பதற்காக கோவிந் அந்த BIO Weaponனுடன் ஓட ஆரம்பிக்க வில்லன் கமல் துரத்த அது தமிழ்நாட்டில் போய் சுனாமியுடன் முடிவதே கதை இடையில் ஊறுகாயாய் கொஞ்சம் அசின் கொஞ்சம் ஜெயபிரதா கொஞ்சம் மல்லிகா செராவத் அப்படியே மற்ற 8 கமல்...! மற்றப்படி அப்படியே கொஞ்சம் மணல் கொள்ளையும் தொட்டுவிட்டு போயிருக்கிறார் கமல். கமல் உங்களுக்கு இந்த கதாசிரியர் வேடமும் நன்றாகத்தான் இருக்க்கிறது... ஆரம்பம் முதலே அசத்தல் என்றே சொல்லலாம் தசாவதாரம் என்று பெயர் வைத்ததுக்கு அசத்தல் என்றே வைத்திருக்கலாம். எங்கு பார்த்தாலும் கமல் எப்பவுமே கமல்.... அதில் மனதில் பதிந்தது என்னவோ பூவராகவனும் அந்த தெலுகு கமலும் மட்டுமே.... எனக்கு என்னவோ ஆரம்பத்தில் அந்த நதியில் படகு மூலம் நம்பியைக்கொண்டு சென்றது, சுனாமி மற்றும் High Wayல் வெள்ளைக்கார கமல் விஞ்ஞானி கமலை துரத்துவது போன்றவற்றில் வரும் கிரபிக்ஸ் மனதில் ஒட்டவே இல்லை அதிகமாக Hollywood படம் பார்த்ததின் விளைவுதான் இது....! இடையில் கோவிந்தை வெள்ளைக்கார வில்லன் பைக்கில் துரத்துவது என்னவோ ஆளவந்தானை ஞாபகப்படுத்தியது.... ஆனாலும் எமது மொழியில் வரும் மற்ற படங்களின் தரத்திற்கு இது எவ்வளவோ மேல் ( உதாரணம் - குருவி, அழகிய தமிழ்மகன்).....(குருவி, அழகிய தமிழ்மகன் ஏற்படுத்திய கொலைவெறி இன்னமும் அடங்கவில்லை)

அதிகமாக Technical அம்சங்களையும் கமலையும் மட்டுமே சார்ந்தே முழுப்படமும் உண்மையைச்சொல்வதென்றால் அசின் பேசிப்பேசி எங்களை எரிச்சல்படுத்தும்போது எமக்குள் எழும் கோபமே காட்டிக்கொடுக்கிறது நாம் படத்தோடு எவ்வளவு ஒன்றிப்போய் இருக்கிறோம் என்பது இதுவே கதையின் வெற்றி..... இந்த படத்துக்காக வழக்கு போட்டதென்னமோ ஓவராத்தான் தெரியுது என்னங்கண்ணா நான் சொல்லுறது....??? மொத்தத்தில் கமலுக்கு தசாவதாரத்தில் 10 வேடம் மட்டுமல்ல கதை, திரைக்கதை வசனம் எல்லாவற்றையும் சேர்த்து 13 வேடம் செய்துள்ளார் ஆனாலும் 13 அவதாரம் என்று சொல்ல முடியாது அல்லவா அதனால்தான் தசாவதாரம்.....

டிஸ்கி : ஒரு பதிவு எழுதவே மனுசனுக்கு வெறுத்துப்போகுது நீங்க எல்லாம் எப்படிங்கண்ணா இவ்வளவு பதிவு எழுதுறீங்க? இதுதான் நான் முதல் முதலில் எழுதின மிகப்பெரிய பதிவு தவறு ஏதாவது இருந்தா மன்னிப்பீர்களாக.....!!

6 பதிலகள்:

அருள் said...

"ஒரு வெள்ளைக்கரன் வேற ஏதோ அவன்கிட்டத்தான் camara இருக்குது என்னு மேல இருந்து கிளிக்கிகிட்டே இருந்தாம்பா.... நாளைக்கு நம்ம படம் பேப்பர்ல வந்து நம்மல தேடி மெல்போர்ன் பிகருங்க வந்து நிக்கக்கூடாது என்ற பயத்திலேயே முகத்தை மறைச்சுக்கிட்டு நின்னோம்"

இது சூப்பரு.

நாவலர் நெடுஞ்செழியன்கிட்ட ஒரு தொண்டரடி எப்பிடிண்னே இவ்வளவு அழகா பேசுறீங்கன்னு கேட்டாரு. அதுக்கு நெடுஞ்செழியன் மேடைக்கு முன்னாடி இருக்குறவன் எல்லாம் முட்டாப்பயன்னு நெனைச்சுக்கோ, பேச்சு தானா வரும்ன்னாரு.அதனால சும்மா கூச்சமில்லாம எழுதுங்க.தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

இவன் said...

//"ஒரு வெள்ளைக்கரன் வேற ஏதோ அவன்கிட்டத்தான் camara இருக்குது என்னு மேல இருந்து கிளிக்கிகிட்டே இருந்தாம்பா.... நாளைக்கு நம்ம படம் பேப்பர்ல வந்து நம்மல தேடி மெல்போர்ன் பிகருங்க வந்து நிக்கக்கூடாது என்ற பயத்திலேயே முகத்தை மறைச்சுக்கிட்டு நின்னோம்"

இது சூப்பரு.

நாவலர் நெடுஞ்செழியன்கிட்ட ஒரு தொண்டரடி எப்பிடிண்னே இவ்வளவு அழகா பேசுறீங்கன்னு கேட்டாரு. அதுக்கு நெடுஞ்செழியன் மேடைக்கு முன்னாடி இருக்குறவன் எல்லாம் முட்டாப்பயன்னு நெனைச்சுக்கோ, பேச்சு தானா வரும்ன்னாரு.அதனால சும்மா கூச்சமில்லாம எழுதுங்க.தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.//

நன்றி அருள்.... ஆஹா நாம எழுதினாக்கூட நல்லாத்தான் இருக்குமோ??

Jaffna Tamils said...

நாளைக்கு நம்ம படம் பேப்பர்ல வந்து நம்மல தேடி மெல்போர்ன் பிகருங்க வந்து நிக்கக்கூடாது என்ற பயத்திலேயே முகத்தை மறைச்சுக்கிட்டு நின்னோம்"
------------------------------
Bit over buddy lolll
but well try good on you....

குள்ளமணி said...

அந்த அபத்ததை நீங்அக்ளும் பார்த்தீர்களா??

//அதிகமாக Technical அம்சங்களையும் கமலையும் மட்டுமே சார்ந்தே முழுப்படமும் உண்மையைச்சொல்வதென்றால் அசின் பேசிப்பேசி எங்களை எரிச்சல்படுத்தும்போது எமக்குள் எழும் கோபமே காட்டிக்கொடுக்கிறது நாம் படத்தோடு எவ்வளவு ஒன்றிப்போய் இருக்கிறோம் என்பது இதுவே கதையின் வெற்றி..... இந்த படத்துக்காக வழக்கு போட்டதென்னமோ ஓவராத்தான் தெரியுது என்னங்கண்ணா நான் சொல்லுறது....??? மொத்தத்தில் கமலுக்கு தசாவதாரத்தில் 10 வேடம் மட்டுமல்ல கதை, திரைக்கதை வசனம் எல்லாவற்றையும் சேர்த்து 13 வேடம் செய்துள்ளார் ஆனாலும் 13 அவதாரம் என்று சொல்ல முடியாது அல்லவா அதனால்தான் தசாவதாரம்.....//

இதெல்லாம் கொஞ்சம் ஓவர் அந்தாளுக்கு வேற வேலையில்லாம அவ்வளவு ரோலையும் செஞ்சிருக்கான் அதப்போய் இப்படி புகழ்ந்து வேற 13 அவதாரம் என்று வேற சொல்லுறீங்களா?? இந்தாளப்பற்றி உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லையா??

இவன் said...

//இதெல்லாம் கொஞ்சம் ஓவர் அந்தாளுக்கு வேற வேலையில்லாம அவ்வளவு ரோலையும் செஞ்சிருக்கான் அதப்போய் இப்படி புகழ்ந்து வேற 13 அவதாரம் என்று வேற சொல்லுறீங்களா?? இந்தாளப்பற்றி உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லையா??//

என்னய்யா இப்படி சொல்லுறீங்க?? உங்களுக்கு எப்படியோ அக்மார்க் ரஜினி ரசிகன் எனக்கே கமலின் இந்த படம் பிடித்திருக்கு.... நீங்கள் என்ன அபத்தத்தை கண்டீங்க இந்த படத்தில??

இவன் said...

மாட்டிக்கிட்டீங்களே குள்ளமணி மருதநாயகத்தின் பதிவில உங்களுக்கு ஆப்பு காத்திருக்குது போய் jump பண்ணி இருந்துக்குங்க...