அண்மையில் நம்ம எந்தன் வானம், வழிப்போக்கன் ஹிந்தி சும்மா பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தாரு... அதப்படிச்சதில இருந்து நம்மலால சும்மா இருக்கவே முடியலைங்க அப்படி ஒரு வில்லத்தனம் மனசுல என்னங்க செய்யுறது?? manufacture defect, சரி அப்படி என்னு அந்த வில்லத்தனத்த செயல்ப்படுத்த ஆரம்பித்தேன்...
அது என்ன என்னா நம்ம friend ஒருத்தன் ஒரு ஹிந்திப்பொண்ண லவ்வுறாங்க... அவ இவன்கிட்ட நான் வேற ஒரு பையன லவ் பண்ணுறேன் என்னு சொல்லியும் இவன் கேக்குற மாதிரி தெரியல்ல... நாங்களும் எவ்வளவோ சொல்லியும் பார்த்திட்டோம் கேக்காம அவ பின்னுக்கே போய்க்கிட்டே இருந்தாங்க... இவனுக்கு சொன்னா சரி வராது அடிவாங்கினாத்தான் திருந்துவான் என்று அப்படியே நாங்களும் விட்டுட்டோம் நாங்களும் எவ்வளவு நாள்தான் கீறல் விழுந்த கஸட் மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கிறது வெறுத்துப்போச்சுதுங்க...
இவனுக்கு ஹிந்தி நஹி மாலும்...(நமக்கும்தான்) அவளுக்கு தமிழ் நஹி மாலும்... இவன் அவ பின்னுக்கே போய்க்கிட்டு இருந்தாங்க... இப்படி இருக்கிற சந்தர்ப்பத்திலதான் நான் வழிப்போக்கனின் ஹிந்தி சும்மா பற்றி வாசிச்சேன்....
வாசிச்ச உடனேயே என்ன செஞ்சேன் என்னா நம்ம friendகிட்ட போய் "மச்சி நான் உன் வாழ்க்கையில விளக்கு ஏற்றி வைக்கலாம் என்று இருக்கேன், நீ நான் சொல்லுற மாதிரி செஞ்சா உன் வாழ்க்கை வெளிச்சமா இருக்கும்டா" என்று சொன்ன நம்ம பயபுள்ள அடுத்து அவன் சொல்லப்போற வார்த்தை அவனுக்கு அவனே வெட்டிக்க போற குழி என்னு தெரிஞ்சுக்காம "மச்சி பிளீஸ்டா நீ மட்டும் அப்படி ஒரு வெளிச்சம் ஏற்றி வைச்சா வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்டா" என்னு சனியனைத்துக்கி பனியனுக்குள்ள போட்டுக்கிட்டான்.... உடனே நான் சொன்னேன் "மச்சி நீ நான் சொல்லுற மாதிரி போய் உன் பிகர்கிட்ட சொல்லு அதுக்கப்பறம் பாரு உன் வாழ்க்கை விளக்கே சும்மா ஜெக ஜோதியா எரியும்" அப்படி என்னேன்....எரியப்போறது அவன்தான் எங்குறது தெரியாம அவனும் "சரி மாமா" என்னான்.... எனக்கா பயங்கர கடுப்பு லவ்க்கு உதவி செய்ய வந்தா மாமா என்னா சொல்லுற இருடீ அப்படி மனசில கருவிக்கிட்டே அவன்கிட்ட சொன்னேன் மச்சி நீ போய் அந்த பொண்ணுகிட்ட "I Need a Chumma" அப்படி என்னு போய் சொல்லு அதுவும் அவளும் அவ friendsம் அவ ஒருத்தன லவ் பண்ணுறேன் என்னு சொல்லுறா இல்ல, அவனுமிருக்கிற நேரம் போய் சொல்லு அதோட அவனும் ஓடிருவான் அவளும் அவன விட்டுட்டு உன்கிட்ட ஓடி வந்திடுவா அப்படின்னேன்.... அதுக்கு அவன் என்கிட்ட அதுக்கு என்ன அர்த்தம் அது இது என்னு ஆயிரம் கேள்வி கேட்டான்.... நமக்கு சமாளிக்கவா தெரியாது.... ஒரு மாதிரி சமாளிச்சு அனுப்பி வைச்சேன்... ஏதோ நம்மளால முடிந்தது. பையனும் அந்த பொண்ணு தனிய இருக்கிற நேரம் போய் கேட்காம மத்த பொண்ணுங்களும் அவ boyfriendம் கூட இருக்கிற நேரம் பார்த்து போய் கேட்டு இருக்கிறான் (இந்த அளவுக்கா அவன் என்னை எல்லாம் நம்பி இருக்கிறான்) அவங்களும் பாரபட்சம் இல்லாம ஆளுக்கு ஒரு 10, 20 அடி என்னு ஒரு 5, 6 பேர் சும்மா சுத்தி சுத்தி அடிச்சு சும்மா பொரிச்சு எடுத்து இருக்காங்க
இப்போ பய என்னைத்தேடிக்கிட்டு இருக்கிறதா கேள்வி.... நானும் அவன் கண்ணுல மாட்டாம ஓடிக்கிட்டு இருக்கிறேன்.... என்னைக்கு மாட்டுறனோ அன்னைக்கு இவனுக்கு சங்குதானுங்கோ..... அவனுக்கு வைச்ச ஆப்பு மாறி எனக்கு வந்திடுமோ???
டிஸ்கி- ஹிந்தி தெரியாதவர்களுக்காகவும் வழிப்போக்கனின் பதிவு வாசிக்காதவர்களுக்காகவும் ஹிந்தியில் "Chumma" என்றால் முத்தம் என்று அர்த்தம்.... மேலே நான் எழுதின எதுவுமே இன்னமும் நடக்கவில்லை இனி நடக்கப்போகிறது.... எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் நாங்க பதிவு எழுதி பண்ணுவோம் இல்ல
Sunday, June 29, 2008
சும்மா (இது தமிழ் இல்லை ஹிந்தி சும்மா)
Subscribe to:
Post Comments (Atom)
32 பதிலகள்:
//manufacture defect, சரி அப்படி என்னு அந்த வில்லத்தனத்த செயல்ப்படுத்த ஆரம்பித்தேன்...//
சச்சின் வந்ததில் இருந்து இந்த manufacture defect என்கிற வார்த்தை மிகப்பிரபலம்தான் போலும்
//நாங்களும் எவ்வளவோ சொல்லியும் பார்த்திட்டோம் கேக்காம அவ பின்னுக்கே போய்க்கிட்டே இருந்தாங்க... இவனுக்கு சொன்னா சரி வராது அடிவாங்கினாத்தான் திருந்துவான்//
அடிவாங்கியும் திருந்தாதவர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறாங்கள் இவன்
// "மச்சி பிளீஸ்டா நீ மட்டும் அப்படி ஒரு வெளிச்சம் ஏற்றி வைச்சா வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்டா"//
நான் வேணும் எண்டால் நெருப்புபெட்டி கொண்டுவந்து தரட்டா??
// "I Need a Chumma" //
அப்படி எண்டால் என்ன இவன்??
//(இந்த அளவுக்கா அவன் என்னை எல்லாம் நம்பி இருக்கிறான்) //
இனி நாங்களும் உங்களை நம்ப மாட்டோம்
////பொரிச்சு எடுத்து இருக்காங்க//
பொரியல் நல்ல tasteஆ இருந்துதாமா??
//மேலே நான் எழுதின எதுவுமே இன்னமும் நடக்கவில்லை இனி நடக்கப்போகிறது.... //
அடப்பாவி இவ்வளவும் கற்பனையா??
//எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் நாங்க பதிவு எழுதி பண்ணுவோம் இல்ல//
இதுவும் நல்லாத்தான் இருக்குது
//சச்சின் வந்ததில் இருந்து இந்த manufacture defect என்கிற வார்த்தை மிகப்பிரபலம்தான் போலும்//
ங்ண்ணா என்னங்ண்ணா இப்படி சொல்லீட்டீங்க ஏதோ ஞாபகத்தில இருந்தத அடிச்சுவிட்டேன் அவ்வளவுதாண்ணா
//அடிவாங்கியும் திருந்தாதவர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறாங்கள் இவன்//
நீங்க என்ன சொல்லலியே??
//நான் வேணும் எண்டால் நெருப்புபெட்டி கொண்டுவந்து தரட்டா??//
பாத்தவைக்கப்பாக்கிறியே பிச்சை
//அப்படி எண்டால் என்ன இவன்??//
அதுதான் கடைசீல சொல்லி இருக்கிறனே பிச்சை
//இனி நாங்களும் உங்களை நம்ப மாட்டோம்//
ஆக மொத்தம் இவ்வளவு நாளா நீங்களும் என்னை நம்பிக்கிட்டுத்தான் இருக்கிறீங்களா??
//பொரியல் நல்ல tasteஆ இருந்துதாமா??//
அது இப்படி ஒன்று நடந்தாப்பிறகுதான் தெரியும்
//அடப்பாவி இவ்வளவும் கற்பனையா??//
யாவும் கற்பனையே
//இதுவும் நல்லாத்தான் இருக்குது//
ங்ண்ணா நன்றிங்ண்ணா
உங்கள நல்லா நொக்கி எடுத்தாங்களே இப்ப எப்படி இருக்கு..நிகழ்வு நடக்கும் முன்பே பின்னூட்டமும் போட்டு விட்டேன் உங்கள மாதிரி :-)))))))))))
//உங்கள நல்லா நொக்கி எடுத்தாங்களே இப்ப எப்படி இருக்கு..நிகழ்வு நடக்கும் முன்பே பின்னூட்டமும் போட்டு விட்டேன் உங்கள மாதிரி :-)))))))))))//
ஆஹா இவன் அடிவாங்குறதில கிரிக்கு எவ்வளவு சந்தோஷம் பாருங்க.... ஏன்யா இப்படி??
ஹாஹா... உங்கள் கற்பனை நிஜமாக வாழ்த்துக்கள்!!!
'கலர்கள்'கிட்டே போய் 'ச்சும்மா' கேட்டார்ன்றதுக்காக ஒரே கட்டுரையை இப்படி கலர்கலரா அடிச்சிட்டீங்களே...
இப்போ எங்கே பாத்தாலும் எனக்கு கலர்கலரா தெரியுது... (உண்மையான கலர்தாங்க...)...
//'கலர்கள்'கிட்டே போய் 'ச்சும்மா' கேட்டார்ன்றதுக்காக ஒரே கட்டுரையை இப்படி கலர்கலரா அடிச்சிட்டீங்களே...
இப்போ எங்கே பாத்தாலும் எனக்கு கலர்கலரா தெரியுது... (உண்மையான கலர்தாங்க...)...//
கலர் பின்னாடி போனவனும் கலர் பதிவு போடாதவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை
நீங்க எந்த கலர சொல்லுறீங்க??
//ஹாஹா... உங்கள் கற்பனை நிஜமாக வாழ்த்துக்கள்!!!//
ங்ண்ணா நன்றிங்ண்ணா
//ஆளுக்கு ஒரு 10, 20 அடி என்னு ஒரு 5, 6 பேர் சும்மா சுத்தி சுத்தி அடிச்சு சும்மா பொரிச்சு எடுத்து இருக்காங்க
//
இதுதான் Butterfly Effect" ஆ..
இளய தளபதி தம்பி பாத்து சூதானமா பண்ணுங்க..
தலைவர் அண்ண பேர காப்பாத்துங்க....
:-))
(அதென்ன onlyAathi, flop படம் மட்டுந்தா பாப்பீங்களா :-)))
அப்பவே பாத்துட்டேன்...பின்விளைவுனு Link கொடுத்துட்டேன்
எனக்கும் விஜய் பிடிக்காது...
"ங்ண்ணா என்னங்ண்ணா + OnlyAathi"
சேத்து நானே முடிவு பண்ணிட்டேண்..I am so sorry..
//அப்பவே பாத்துட்டேன்...பின்விளைவுனு Link கொடுத்துட்டேன்
எனக்கும் விஜய் பிடிக்காது...
"ங்ண்ணா என்னங்ண்ணா + OnlyAathi"
சேத்து நானே முடிவு பண்ணிட்டேண்..I am so sorry..// எனக்கு அந்த கோயம்புத்தூர் பேச்சு வழக்கு பிடிக்கும் அதனாலதான் அப்படி... மத்தது முதல்லயே சொன்னது போல என் பெயர் ஆதி
நானும் நீயும் சும்மா சும்மா ன்று பாட்டிருக்கே அதுவும் இதுதானா
இவன் நீங்கள் எந்த இடம்? ஈழமா?
//நானும் நீயும் சும்மா சும்மா ன்று பாட்டிருக்கே அதுவும் இதுதானா
//
அப்படித்தான் நினைக்கிறேன் அனானி
//இவன் நீங்கள் எந்த இடம்? ஈழமா?//
ஆம் அனானி நான் ஈழத்தைச்சேர்ந்தவந்தான்
////ஆளுக்கு ஒரு 10, 20 அடி என்னு ஒரு 5, 6 பேர் சும்மா சுத்தி சுத்தி அடிச்சு சும்மா பொரிச்சு எடுத்து இருக்காங்க
//
இதுதான் Butterfly Effect" ஆ..//
ஆஹா வழிப்போக்கன் ஒருவேளை அப்படியும் இருக்குமோ...
//டிஸ்கி- ஹிந்தி தெரியாதவர்களுக்காகவும் வழிப்போக்கனின் பதிவு வாசிக்காதவர்களுக்காகவும் ஹிந்தியில் "Chumma" என்றால் முத்தம் என்று அர்த்தம்.... //
chumma.. சூப்பர் தகவல் :)
//டிஸ்கி- ஹிந்தி தெரியாதவர்களுக்காகவும் வழிப்போக்கனின் பதிவு வாசிக்காதவர்களுக்காகவும் ஹிந்தியில் "Chumma" என்றால் முத்தம் என்று அர்த்தம்.... //
chumma.. சூப்பர் தகவல் :)//
இந்த மாதிரி நாட்டுக்கு முக்கியமான விடயங்களை எல்லாம் விட்டு வைக்கக்கூடாது சஞ்சய்
:)))))
vaazththukkal unga nanbarukkum ungalukkum :))))
//:)))))
vaazththukkal unga nanbarukkum ungalukkum :))))//
அடப்பாவி ஜி ஒருத்தனுக்கு அடி வாங்கி வைக்கிறதென்ன்னா எவ்வளவு சந்தோசம் உங்களுக்கெல்லாம்??
அடி வாங்கிக்கொடுத்து அடிவாங்க வாழ்த்துக்கள்
//அடி வாங்கிக்கொடுத்து அடிவாங்க வாழ்த்துக்கள்//
ஆஹா என்ன நல்லெண்ணம் என்ன நல்லெண்ணம்?? நன்றிங்கண்ணா
அழகழகான பதிவுகள்!!
நட்புடன்,
உங்கள் விசிறி!
mirthonprabhu.blogspot.com
Post a Comment