Tuesday, July 1, 2008

மனதோரம் சில கீறல்கள்

வணக்கம் வலையுலகமே...!! கடந்த சில பதிவுகளில் இருந்த மொக்கை, லொள்ளு, கிண்டல் என்பன் இந்த பதிவில் இருக்காது... இன்று நான் எழுதும் இந்தப்பதிவு என்னுள் எழுந்த சில கேள்விகளுக்கு நண்பர்களாகிய நீங்கள் சற்றேனும் விளக்கமாக பதிலளிப்பீர்கள் என்பதற்காய், எனக்கு வந்த இந்த சந்தேகம் உங்களில் பலருக்கும் இருக்கலாம்.



இன்று, 01 july 2008, இந்த வருடம் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 7 மரணங்களை சந்தித்துவிட்டேன்... அதில் 5 மரணங்கள் cancer நோயினால் சம்பவித்தவை. இது போன்ற மரணங்கள் சாதாரணம் என்றாலும் என்னுள் சில கேள்விகள் தோன்றத்தான் செய்கின்றன. கேள்விகளுக்கு முன் இவ்வுலகைப்பிரிந்தவர்களில் இந்த கேள்விகள் தோன்றக்காரணமானவர்கள் பற்றி சில விடயங்கள் சொல்லிவிட்டு கேள்விகளுக்கு போகலாம் என்று இருக்கிறேன்...

முதலில் என் நண்பனின் சித்தி 34 வயதான இவருக்கு 2 குழந்தைகள் ஒரு குழந்தைக்கு வயது 2, இவர் cancer நோயினால் காலமானார். அடுத்து என் அக்கா வயது 35 இவருக்கு மணமாகவில்லை, சற்றே abnormal ஆனவர் அதாவது சிறுவயது முதலே இவருக்கு சரியாக பேச வராது.இவரும் cancer நோய் காரணமாக காலமானார். அடுத்து என் நண்பர் ஒருவர் வயது 30 இவருக்கும் 2 குழந்தைகள் ஒரு குழந்தைக்கு வயது 1. அடுத்து என் உற்ற நண்பர்களில் ஒருவனெனக்கு தெரிந்து எல்லா வசதிகளும் எந்த வித குறைகளும் இல்லாத ஒருவன் இந்த மரணம் திடீரென நடந்தது. அடுத்து என் இன்னொரு நண்பன் இவனுக்கும் cancer நோயே. அவன் தந்தைக்கும் இந்த நோய் இருந்துதான் அவரும் காலமானார். கடைசியாய் சொன்ன இருவருக்கும் வயது 22 மட்டுமே.

இனி என் கேள்விகள்

இவர்களது மரணத்தை தீர்மானித்தது யார்??

தீர்மானித்தது கடவுள் எனில் இந்த சிறுவயதில் இவர்களை இறக்கச்செய்ய காரணம் என்ன??

நோய் எனில் இந்த நோய் உருவாக காரணம் என்ன??

அந்த சிறு குழந்தைகளின் எதிர்காலம் பற்றி உங்கள் கடவுளின் நிலைப்பாடு என்ன??

நல்லவர்களை கடவுள் சீக்கிரமே அழைத்துக்கொள்வார் எனில் எதற்காக இவர்களாய் படைத்தார்??



என்னய்யா system இது எனக்கு சிறிது புரியவில்லை புரிந்தவர்கள் தயவுசெய்து விளக்குவீர்களா??


7 பதிலகள்:

Anonymous said...

Concentrate to the things that could give information to the people.

ஜி said...

:((

கல்லூரியில் நண்பனின் சொந்தக்காரங்க ஒருத்தங்களுக்கு ரத்தம் குடுக்க போனதுதான் ஞாபகம் வந்தது. அங்கேயும் ரத்த புற்றுநோயால பாதிக்கப்பட்ட அவுங்களுக்கு தினமும் ரத்தம் கொடுத்தாதான் உயிர்வாழ முடியும்னு தினமும் யாரையாவது தேரி அலைஞ்சாங்க. ஆனா, கொஞ்ச நாளுலையே அவங்களும் மரணிச்சிட்டாங்க....

நீங்க கேக்குற கேளிவிகளெல்லாம் விடை காண முடியாத வினாக்கள்...

இவன் said...

//:((

கல்லூரியில் நண்பனின் சொந்தக்காரங்க ஒருத்தங்களுக்கு ரத்தம் குடுக்க போனதுதான் ஞாபகம் வந்தது. அங்கேயும் ரத்த புற்றுநோயால பாதிக்கப்பட்ட அவுங்களுக்கு தினமும் ரத்தம் கொடுத்தாதான் உயிர்வாழ முடியும்னு தினமும் யாரையாவது தேரி அலைஞ்சாங்க. ஆனா, கொஞ்ச நாளுலையே அவங்களும் மரணிச்சிட்டாங்க....

நீங்க கேக்குற கேளிவிகளெல்லாம் விடை காண முடியாத வினாக்கள்...//


உண்மைதான் ஜி ஆனாலும் மனசு ஏற்றுக்கொள்ளுதில்லையே என்ன செய்ய

rapp said...

ரொம்ப வருத்தமான விஷயங்கள் இவன் சார். ஆனா நம்ம பாட்டி காலத்தில் காசநோய் இப்படி இருந்தது. இப்போ ஓரளவுக்குக் கட்டுப் பட்டு இருக்கில்ல, அதுப்போலத்தான் இதுவும். இன்னும் சில வருடங்களில் அந்த நோயின் கொடூரத் தாக்கத்தை கட்டுப்படுத்தவேனும் மருந்துகள் கண்டுப்பிடிக்கபடும். என் கணவர் இது சம்பந்தமான ஆராய்ச்சியில் தான் உள்ளார். நான் இதே கேள்வியை பல முறை அவரிடம் கேட்டதுண்டு. ஆனால் இவர்களின் பதில்கள் ரொம்ப philosophical ஆக இருக்கும்.

இவன் said...

//ரொம்ப வருத்தமான விஷயங்கள் இவன் சார். ஆனா நம்ம பாட்டி காலத்தில் காசநோய் இப்படி இருந்தது. இப்போ ஓரளவுக்குக் கட்டுப் பட்டு இருக்கில்ல, அதுப்போலத்தான் இதுவும். இன்னும் சில வருடங்களில் அந்த நோயின் கொடூரத் தாக்கத்தை கட்டுப்படுத்தவேனும் மருந்துகள் கண்டுப்பிடிக்கபடும். என் கணவர் இது சம்பந்தமான ஆராய்ச்சியில் தான் உள்ளார். நான் இதே கேள்வியை பல முறை அவரிடம் கேட்டதுண்டு. ஆனால் இவர்களின் பதில்கள் ரொம்ப philosophical ஆக இருக்கும்.//

முடிந்தால் அந்தப்பதில்களை வாங்கி ஒரு பதிவாக போடமுடியுமா rapp?? அப்படி போட்டால் பலருக்கு அதைப்பற்றி தெரிந்து கொள்ள முடியுமே...

rapp said...

கண்டிப்பா ஒருமுறை போடறேன் இவன் சார்.

இவன் said...

//கண்டிப்பா ஒருமுறை போடறேன் இவன் சார்.//

நன்றி rapp
தயவு செய்து இப்படி "சார்" என்னு கூப்பிடாதீங்க..... நான் சின்னப்பையன்
என்ன எல்லாம் சார் என்னு கூப்பிடலாமா??