வணக்கம் மக்களே.... நானும் கொஞ்ச நாளுக்கு உங்களை எல்லாம் கொடுமைப்படுத்தாம இருக்கலாம் என்னு பார்த்தா நம்ம வழிப்போக்கன் வந்து பதிவுலக இளவரசன் அது இது என்னு என் முதல் பதிவு பின்னுட்டத்தில போட்டு உசுப்பேத்தி விட்டுட்டாரு, நானும் யோசிச்சு யோசிச்சு பாத்துட்டேன் எதுவுமே தோணல என்னத்த பத்தி எழுத ஒண்ணூமே புரியல.... அப்போத்தான் பார்த்தே நம்ம விகடன்ல நம்ம இளைய தளபதி டாக்டர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த பேட்டிய பார்த்த உடனேயே நம்ம பதிவர் மூளை சும்மா இருக்குமா?? அதுதான் நம்ம கவுண்டமணி styleல அவர் பேட்டிக்கு நம்ம comments சில.... இனி பேட்டிய பார்ப்போமா??
''ஒரு காலத்தில் தொண்டர்களாக இருந்தவர்கள்தான் இன்று தலைவர்களாக இருக்கிறார்கள். இன்று நீங்கள் தொண்டர்களாக இருக்கிறீர்கள். நாளை..!?'' (பாடையாக இருப்பீர்கள்.... ஏண்டா இத்துப்போன மண்டையா டேய் நீங்க நாசமாப்போனது இல்லாம மத்தவங்களையும் நாசமாக்கிறது என்னு இருக்கிறீங்களா?? அவங்களாவது நல்லா இருக்கட்டும் விட்டுத்தொலையுங்கடா ) என நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் சின்ன இடைவெளிவிட, புரிந்தும் புரியாத (புரிஞ்சிருந்தா எப்பவோ உங்கள அடிச்சு கொன்னிருப்பானுங்க டேய் டேய் பாவம்டா மக்கள்) ரசிகர்கள் கூட்டம் அரங்கம் அதிரத் தடதடக்கிறது!
தனக்கெனத் தனிக் கொடி உயர்த்தி இருக்கிற விஜய், ''நான் எல்லாருக்கும் பொதுவானவனா இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனாலும், உங்க
வேண்டுகோளுக்கு இணங்க (டேய் தேங்காமூடி மண்டையா உன்னை கொடி அறிமுகப்படுத்த சொல்லி யார்ரா கேட்டது?? நீயெல்லாம் கொடி அறிமுகப்படுத்தி என்ன கொடுமை செய்யப்போற என்னு எல்லோருக்குமே தெரியும்டா மக்களே இந்த கொடுமை எல்லாம் கேக்கமாட்டீங்களா???) இப்போ மன்றக் கொடியை மட்டும் அறிமுகப்படுத்துறேன். மக்களுக்குச் சேவை செய்ய நல்ல எண்ணம் இருந்தாலே போதும்.(இருக்கனுமே , ஏண்டா மண்டையா டேய் நீ சேவை செய்யப்போறியா?? எப்படிடா இந்த டகாலடி வேலையெல்லாம் வருது) அந்த எண்ணம் எனக்கும் என் ரசிகர்களுக்கும் நிறையவே இருக்கு!'' என்று சூசகமாக முடிக்க, படபடக்கிறது விஜய் கொடி!
கோடம்பாக்கம் டு கோட்டை... விஜய் ராக்கெட் ரெடியா?
''என்னதான் நடக்குது?'' என்று எஸ்.ஏ.சந்திரசேகர னிடம் கேட்டால்.. ''விஜய் சார் (அப்படித்தான் சொல் கிறார்!)(ஏண்டா S.A.மண்டையா நீ உன் மகன சார் போட்டு கூப்பிடுற அப்ப உங்க அப்பன் என்ன உன்ன S.A.சார் S.A.சார் என்னா கூப்பீட்டான்?? ஏண்டா மத்தவனுங்களும் இப்படித்தான் கூப்பிடனும் என்னா சொல்லித்தொலைடா ஏண்டா எப்படி சூசகமா சொல்லி எங்கள கொடுமைப்படுத்திற??) 'என் மகன்' என்கிற சின்னப் புள்ளியில் ஆரம்பிச்சு,( மண்டையா அப்படி ஆரம்பிச்சதுதான்டா பிரச்சனையே நீ அப்பவே இப்படி செய்யாம இருந்திருந்தா இந்த இன்னைக்கு இந்த பதிவுக்கு வேலை இல்லையேடா) இன்னிக்கு கோடானுகோடி ரசிகர்களின் தலைவன் என்கிற இடத்துக்கு வந்திருக்கார்.(இந்த நினைப்பு வேற இருக்காடா உனக்கு??) ஒரு நாள் அவர் 'நடிக்கணும்'னு(டேய் அப்பவே எங்களப்பத்தி யோசிச்சிருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமாடா மாங்கா மண்டையா??) சொன்னார். அந்த நிமிஷத்தில் இருந்தே நான்தான் அவரை டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். (தெரியும்டா நீதான் இந்த பிரச்சனைக்கேல்லாம் காரணம் என்னு) எங்க முதல் முயற்சி 'நாளைய தீர்ப்பு' எதிர்பார்த்த வெற்றியைத் தரலை.(மக்கள் கொஞ்சம் தெளிவா இருந்ததாலதான் அப்படி) விஜய் சோர்ந்து போனார். எல்லோருக்கும் விஜய் மேல இருந்த நம்பிக்கை போயிருச்சு.(திரும்ப நடிக்கிறன் எங்கிற பெயரில வந்து இந்தப்பாடு படுத்திறான்) ஆனா, நான் ஒருத்தன் முழு உறுதியோடு இருந்தேன்.(டேய் டேய் முக்கா மண்டையா இதுக்கெல்லாம் முழுக்காரணமும் நீயா) படிப்படியா அவரை மேலே, மேலே கொண்டு வந்தேன். 20 வருஷ உழைப்புக்குப் பிறகு இப்போ எல்லாமே நான் எதிர்பார்த்த திசையில் போகுது.(20 வருஷ உழைப்பால பாரு நாங்க படுற பாட்டா சரிடா மண்டையா நீ அந்த குருவி படம் பாத்தியா அதப்பத்தாபிறகும் நீயே சொல்லு நாங்க என்ன பாடுபடுறோம் என்னு)
இன்னிக்கு, அவர் பின்னாடி திரண்டு வர்ற ரசிகர் களை எப்படி ஒருங்கிணைப்பது என்பதில்தான் என் முழுக் கவனமும் இருக்கு. எங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு(தெரியுதுடா நீ என்ன சொல்ல வர்ரா என்னு) விமர்சனங்கள் பலமாக இருக்கும்னு தெரியும். இந்தியாவில் வக்கீல்கள், டாக்டர்கள், இன்ஜினீயர்கள், வாத்தியார்கள்னு எல்லோரும் அரசியலுக்கு வரலாம். நடிகர்களுக்கு மட்டும் ஏன் விமர்சனம்?''(மொத்தத்தில நீ இதுக்குத்தான் அடிபோடுறா என்னு புரியுதுடா மண்டையா)
''அப்போ விஜய்யின் அடுத்த இலக்கு அரசியல்தானா..?''
''விஜய்யின் இப்போதைய வளர்ச்சி ஒரே நாளில் வந்ததில்லை.(பின்ன கொஞ்ச நாளாவா கொடுமைப்படுத்திறான் அவன்?? அதுவும் அழகிய தமிழ் மகன், குருவி, திருப்பாச்சி என்னு விடாம அடிக்கிறானே... எவ்வளவு அடிச்சாலும் தாங்க நாங்க என்ன வடிவேலு என்னு நினைச்சியாடா) அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு இன்னும் அதிகக் கவனம் தேவைப்படுது. கடலில் இறங்குவதற்கு முன் அதன் ஆழத்தை அளந்து தெரிஞ்சுக்கணும்.(டேய் டேய் டுபாக்கூர் மண்டையா அதுக்கு முன்னுக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கனும்டா வெண்ணை) விஜய்யின் ரசிகர்களுக்கும் ஒரு நீண்ட பயணத்துக்கான ஆயத்தம் தேவைப்படுது.
அவர்களுக்கு அரசியல் உணர்வை இப்போ இருந்தே ஊட்டிப் பக்குவப்படுத்தணும். விஜய் சாரிடம் இருக்கிற சமூக உணர்வுதான் என்னைக் கவர்ந்திருக்கு.(ஏன்டா டேய் குருவி, அழகிய தமிழ்மகன் என்னு படம் பன்னுறது, மத்தது ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறது, நடிப்பு என்ன பேரில ஏதேதோ செய்யுறது எல்லாம் சமூக சேவையாடா) மற்றவர்கள் கஷ்டப்படுவதை அவரால் தாங்கிக்க முடியாது.(டேய் அப்போ முதல்ல படம் பன்னுறத நிறுத்தச்சொல்லுடா அதுதான் எங்களுக்கிருக்கிற பெரிய கஷ்டமே... ஒரு வேளை அதுதான் நடிச்சு கொடுமைப்படுத்த வேணாம் என்னு அரசியலுக்கு அனுப்பிறியா) தன்னை நேசிக்கிற ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்கிற எண்ணம் அவரிடம் இருக்கு.
ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டு இருந்த விஜயகாந்த்தை நான்தான் பெரிய அளவில் கொண்டு வந்தேன். விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன்...(டேய் டேய் கொஞ்சம் இரு கொஞ்சம் இரு அந்தக்க்கொடுமைக்கும் காரணம் நீதானாடா.... ஏண்டா டேய் கோழிக்கூட்டு மண்டையா ஏண்டா இப்படி மக்கள தொடர்ந்து கொடுமைப்படுத்தனும் என்னே இருக்கியா??) அதே மாதிரி சினிமாவில் விஜய்யையும் பெரிய அளவுக்குக் கொண்டு வந்திருக்கேன். இனி அடுத்தடுத்த எல்லைகளுக்கான பயணங்களில்தான் எங்கள் முழுக் கவனமும். விஜய்யும் அரசியலுக்கு வருவார்!''(அடங்கொக்கமக்கா நீ இப்படியெல்லாம் plan வைச்சிருப்ப என்னு தெரிஞ்சுதாண்டா மக்கள் அவன் முதல் படத்தையே தோற்க வைச்சாங்க அதுக்கு பிறகு நீங்க ஓட வைச்சதுதான்டா மத்த படம் எல்லாம்)
''விஜய்க்கு அரசியல் பிடிக்குமா..?''
''விஜய் அரசியலைக் கவனிப்பார். இப்போ அவருக்கு இருக்கிறது சமூக அக்கறைதான்.(எதுடா சமூக அக்கறை?? ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறதா?? அப்படி அக்கறை இருக்கவன் நடிக்கவே அவன அனுப்பி இருக்கக்கூடாது) இப்பதான் ரசிகர்களிடம் விதை விதைச்சிருக்கோம். அது சிறு செடியாகி, மரமாகி, காய் காய்க்கணும். பொறுமையாகக் காத்திருந்தவர்கள்தானே அரசியலில் பலன் அடைந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் விஜய் அரசியலுக்கு வருவார். எப்ப வருவார்னு தெரியாது.. (இப்படி ச்சொல்லிச்சொல்லித்தாண்டா ஒருத்தர் இவ்வளவு நாளா ஓட்டிக்கிட்டு இருக்காரு) ஆனா, நிச்சயம் வருவார். அப்படி ஒரு கட்டம் அவர் வாழ்க்கையில் வரும். இதை விஜய் சொல்லலை. நான்தான் சொல்றேன். பெரிய எழுத்தில் போடுங்க. விஜய் அரசியலுக்கு வருவார்!''(டேய் டேய் வேணாம் நாங்க பாவம் இப்படி இன்னொரு கொடுமை செய்யாத சரியா) - நிச்சயமான குரலில் முடிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
மக்களே இந்த விஜய் அரசியலுக்கு வர்ரதப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க??
Sunday, July 20, 2008
கவுண்டர் styleல் S.A.சந்திரசேகருடன்
Subscribe to:
Post Comments (Atom)
30 பதிலகள்:
வருங்கால முதல் அமைச்சரை யாராலையும் தடுக்க முடியாது...
-விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவர்
அவன் மொதல்ல உருப்படியா நடிக்கட்டும்.
//வருங்கால முதல் அமைச்சரை யாராலையும் தடுக்க முடியாது...
-விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவர்//
பாருங்கைய்யா நம்ம தமிழ்மாங்கனிட நம்பிக்கைய ஏன் தமிழ்மாங்கனி நாங்க நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா??
//அவன் மொதல்ல உருப்படியா நடிக்கட்டும்.//
வாங்க அனானி நீங்க சொன்னதத்தான் நான் இவ்வளவு பெரிசா நீட்டி முழக்கி ஒரு பதிவா போட்டுட்டேன்
இவன்...
அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..
(விரிவான பின்னூட்டம் மாலை தருகிறேன்..ஆப்பிசுக்கு லேட் ஆச்சு)
,
//இவன்...
அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..
(விரிவான பின்னூட்டம் மாலை தருகிறேன்..ஆப்பிசுக்கு லேட் ஆச்சு)//
வாங்க வழிப்போக்கன் நீங்க கேட்டதுக்காகத்தான் இந்தப்பதிவு....
//,//
என்ன இது வழிப்போக்கன்??
//கடலில் இறங்குவதற்கு முன் அதன் ஆழத்தை அளந்து தெரிஞ்சுக்கணும்.(டேய் டேய் டுபாக்கூர் மண்டையா அதுக்கு முன்னுக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கனும்டா வெண்ணை)//
//ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டு இருந்த விஜயகாந்த்தை நான்தான் பெரிய அளவில் கொண்டு வந்தேன். விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன்...(டேய் டேய் கொஞ்சம் இரு கொஞ்சம் இரு அந்தக்க்கொடுமைக்கும் காரணம் நீதானாடா.... ஏண்டா டேய் கோழிக்கூட்டு மண்டையா ஏண்டா இப்படி மக்கள தொடர்ந்து கொடுமைப்படுத்தனும் என்னே இருக்கியா??) //
இந்த ரெண்டும் டாப்போ டாப்.
விஜய் இவர் டைரக்ஷன்ல படம் பண்ண மாட்டேன்னு சொல்றதால, வித்தியாசமா பழிவாங்கிட்டார் போல. இதுக்கு உபயோகப்படுத்தற மூளைய ஒழுங்கா கத பண்ண உபயோகிக்கலாம்
இதுக்கு பழிவாங்கும் விதமா, விஜய் அவங்கப்பாவ வீட்ல கட்டிப்போட்டு அழகிய தமிழ்மகன்ல வர்ற ரெண்டு விஜய்க்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்க சொன்னதா ஒரு சேதி கேள்விப்பட்டேன், இப்படி செஞ்சே ஆகணும், இல்லைனா ஒரு நாள் முழுக்க அவர் பேசுன பன்ச் டயலாக்க கேட்டுக்கிட்டே இருக்கணும்னு சொல்லிருக்காராம்
//நம்ம பதிவர் மூளை சும்மா இருக்குமா??//
மூளை எப்படி 'சும்மா' ?
புரியலயே..:))
முக்கியமான வரிகளை விட்டுவிட்டீர்கள் இளவரசே..
தமிழா உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்.
//மூளை எப்படி 'சும்மா' ?
புரியலயே..:))//
பாருங்கைய்யா சும்மா என்ன உடனேயே வழிப்போக்கன் வந்திட்டாரு...
//முக்கியமான வரிகளை விட்டுவிட்டீர்கள் இளவரசே..
தமிழா உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்.//
மறந்துவிட்டேன் அடுத்தமுறை சேர்த்துக்கொள்கிறேன் வழிப்போக்கரே
//இதுக்கு பழிவாங்கும் விதமா, விஜய் அவங்கப்பாவ வீட்ல கட்டிப்போட்டு அழகிய தமிழ்மகன்ல வர்ற ரெண்டு விஜய்க்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்க சொன்னதா ஒரு சேதி கேள்விப்பட்டேன், இப்படி செஞ்சே ஆகணும், இல்லைனா ஒரு நாள் முழுக்க அவர் பேசுன பன்ச் டயலாக்க கேட்டுக்கிட்டே இருக்கணும்னு சொல்லிருக்காராம்//
அந்தாளுக்கு அப்பவே இப்படி நடக்கும் என்னு தெரிஞ்சு இருந்தா அறிமுகப்படுத்தி இருப்பார??? பாக்கும்போது தெரிஞ்சிருக்குமே நாங்க என்ன பாடு பட்டிருப்போம் என்னு
//விஜய் இவர் டைரக்ஷன்ல படம் பண்ண மாட்டேன்னு சொல்றதால, வித்தியாசமா பழிவாங்கிட்டார் போல. இதுக்கு உபயோகப்படுத்தற மூளைய ஒழுங்கா கத பண்ண உபயோகிக்கலாம்//
சரியாச்சொன்னீங்க ராப்
////கடலில் இறங்குவதற்கு முன் அதன் ஆழத்தை அளந்து தெரிஞ்சுக்கணும்.(டேய் டேய் டுபாக்கூர் மண்டையா அதுக்கு முன்னுக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கனும்டா வெண்ணை)//
//ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டு இருந்த விஜயகாந்த்தை நான்தான் பெரிய அளவில் கொண்டு வந்தேன். விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன்...(டேய் டேய் கொஞ்சம் இரு கொஞ்சம் இரு அந்தக்க்கொடுமைக்கும் காரணம் நீதானாடா.... ஏண்டா டேய் கோழிக்கூட்டு மண்டையா ஏண்டா இப்படி மக்கள தொடர்ந்து கொடுமைப்படுத்தனும் என்னே இருக்கியா??) //
இந்த ரெண்டும் டாப்போ டாப்.//
அப்போ மத்ததெல்லாம் விஜய் படம் மாதிரி பிளப் எங்குறீங்களா ராப்??
:)))) kalakareenga Ivane...
:) :)
நீங்க கவுண்டமணி ஸ்டைலில் எப்படி திட்டினாலும் ஆட்டு மந்தை மக்களுக்கு உறைக்கவே போவதில்லை. திரும்பத்திரும்ப மார்கெட் போன சினிமா நடிகர்களை அரசியல்வியாதிகளாக்குவதே இவர்களின் வேலை.
குருவி ஊற்றிக்கொண்டதால் பிஸ்னஸ் மாற்றலாம் என்று பார்க்கிறார்கள் போல.
அப்போ முதல்ல படம் பன்னுறத நிறுத்தச்சொல்லுடா அதுதான் எங்களுக்கிருக்கிற பெரிய கஷ்டமே... ஒரு வேளை அதுதான் நடிச்சு கொடுமைப்படுத்த வேணாம் என்னு அரசியலுக்கு அனுப்பிறியா//
எவ்வளவு தான் நான் சிரிக்கிறது இவன்??? சூப்பர்
//:)))) kalakareenga Ivane...//
நன்றி ஜீ
//:) :)
நீங்க கவுண்டமணி ஸ்டைலில் எப்படி திட்டினாலும் ஆட்டு மந்தை மக்களுக்கு உறைக்கவே போவதில்லை. திரும்பத்திரும்ப மார்கெட் போன சினிமா நடிகர்களை அரசியல்வியாதிகளாக்குவதே இவர்களின் வேலை.
குருவி ஊற்றிக்கொண்டதால் பிஸ்னஸ் மாற்றலாம் என்று பார்க்கிறார்கள் போல.//
ஒருநாள் எல்லாம் சரியா வரும் அன்னைக்கு இருக்குங்க எல்லோருக்கும் பாத்துக்கிட்டே இருங்க அப்படி ஒன்னும் இன்னும் சில நூற்றாண்டுகளில் நடக்கும்
//அப்போ முதல்ல படம் பன்னுறத நிறுத்தச்சொல்லுடா அதுதான் எங்களுக்கிருக்கிற பெரிய கஷ்டமே... ஒரு வேளை அதுதான் நடிச்சு கொடுமைப்படுத்த வேணாம் என்னு அரசியலுக்கு அனுப்பிறியா//
எவ்வளவு தான் நான் சிரிக்கிறது இவன்??? சூப்பர்//
ஆஹா நன்றிங்கண்ணோவ்
// Thamizhmaangani said...
வருங்கால முதல் அமைச்சரை யாராலையும் தடுக்க முடியாது...
-விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவர் //
ஆமா மகேஷ் பாபு அரசியலுக்கு வர்றதா சொல்லலியே...
ஏன்னா அப்பறம் அதையும் ரீமேக் பண்ணக் கூடாது இல்ல...
இவனுங்கள என்ன பன்றதுன்னு தெரியலப்பா...
பேசாம விசா வாங்கிகிட்டு ஏதாவது மன்னர் ஆட்சி நடக்குற இடமா பத்து நாம போயிறவேண்டியதுதான்....
//
ஆமா மகேஷ் பாபு அரசியலுக்கு வர்றதா சொல்லலியே...
ஏன்னா அப்பறம் அதையும் ரீமேக் பண்ணக் கூடாது இல்ல...
இவனுங்கள என்ன பன்றதுன்னு தெரியலப்பா...
பேசாம விசா வாங்கிகிட்டு ஏதாவது மன்னர் ஆட்சி நடக்குற இடமா பத்து நாம போயிறவேண்டியதுதான்....//
என்னங்க பண்ண இதயாவது விஜய் மகேஷ்பாபுவ பார்த்து ரீமேக் பண்ணாம விஜயகாந்த பார்த்து ரீமேக் பண்ணுறாரே...
சந்தோஷப்படுங்க
// இவன் said...
என்னங்க பண்ண இதயாவது விஜய் மகேஷ்பாபுவ பார்த்து ரீமேக் பண்ணாம விஜயகாந்த பார்த்து ரீமேக் பண்ணுறாரே...
சந்தோஷப்படுங்க //
அவ்வ்வ்வ்வ்வ்வ்... புரியுது.....
விஜயகாந்த் வந்து ரேசன் அரிசிய வீட்டுக்கே கொண்டு வந்து தரேனு சொன்னாரு....
இவரு எப்பிடி சோறாக்கி ஊட்டிவிடுவார....
ஏங்க .... ங்கனா...
இவன் அருமையாக எழுதி இருக்கீங்க.. செம காமெடியா இருக்கு. என்ன விஜய் ரசிகர்கள் தான் டென்ஷன் ஆகி இருப்பாங்க :-)))
பதிவு என்ன எழுதறதுன்னு தெரியல்லேன்னு சொல்லி சொல்லியே பல கலக்கல் பதிவுகளை எழுதி விட்டீங்க. தொடர்ந்து அடித்த ஆட என் வாழ்த்துக்கள்.
//அவ்வ்வ்வ்வ்வ்வ்... புரியுது.....
விஜயகாந்த் வந்து ரேசன் அரிசிய வீட்டுக்கே கொண்டு வந்து தரேனு சொன்னாரு....
இவரு எப்பிடி சோறாக்கி ஊட்டிவிடுவார....
ஏங்க .... ங்கனா...//
சத்தமா சொல்லீடாதீங்க அதத்தான் செய்யப்போறேன் என்னு சொல்லீடப்போறாரு
//இவன் அருமையாக எழுதி இருக்கீங்க.. செம காமெடியா இருக்கு. என்ன விஜய் ரசிகர்கள் தான் டென்ஷன் ஆகி இருப்பாங்க :-)))//
அதுவவந்து கிரி எனக்கு கொஞ்ச விஜய் ரசிக நண்பர்கள் இருக்காங்க அதுதான் அவனுங்கள கடுப்பேத்தத்தான் இப்படிப்பதிவு போடுறது...
//பதிவு என்ன எழுதறதுன்னு தெரியல்லேன்னு சொல்லி சொல்லியே பல கலக்கல் பதிவுகளை எழுதி விட்டீங்க. தொடர்ந்து அடித்த ஆட என் வாழ்த்துக்கள்.//
ஆஹா இது நல்லாவாங்க இருக்கு இப்ப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனிஷன ரணகளம் ஆக்குங்க
Post a Comment