Monday, July 14, 2008

கதவைத்தட்டிய கெட்ட காலம்

வணக்கம் மக்களே... இன்னைக்கு என் கெட்ட காலம் கதவத்தட்டிக்கிட்டே வந்திச்சு. என்னன்னே தெரியல எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்னு மட்டும் எனக்கு புரியல... நான் இருக்கது ஆஸ்திரேலியாங்க இங்க ஒரு 3 பசங்க ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கோம். நாங்க 3 பேரும் ஒருத்தனுக்கு ஒருநாள் என்னு turn வைச்சு சமைக்கிறதுண்டு இன்னைக்கு வேற ஒருத்தன்ட turn அவனும் சமைக்கிறேன் என்னு சொல்லீட்டு காலையிலேயே புறப்பட்டு இன்னொரு நண்பன்கூட வெளிய போயிட்டான். நானும் சரி evening வந்து சமைப்பான் என்னு நானும் சமைக்காம இருந்திட்டேன் சமைக்கிறதென்னாலும் நம்மளுக்கு வெந்நீர் வைக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியாது... அதப்பற்றித்தான் சமையல் குறிப்பு என்னு ஒரு பதிவா ஏற்கனவே ஒரு பதிவா போட்டு இருக்கிறேன். அதனால நானும் அவன் வரும் வரைக்கும் காத்திருக்க ஆரம்பித்தேன். அவனும் சதீஸ் எங்குற மற்ற ஒரு நண்பனும் வந்தானுங்க... வந்து காரை பார்க் செஞ்சிட்டு உள்ள வந்து படம் ஒண்ண போட்டு பார்க்க தொடங்கீட்டனுங்க.. அப்பத்தான் என் கெட்டகாலம் கதவைத்தட்டிக்கிட்டே வந்திச்சு அவன் பேரு சுரேஷ் வந்து அவனும் படம் பார்க்கத்தொடங்கினான்.... நானும் எவ்வளவு நேரம்தான் பசிக்காத மாதிரியே நடிக்கிறது?? இருந்த பசில சதீஷ்கிட்ட நான் சொன்னேன்

மச்சி பசிக்குதுடா வா Mcdonalds போயிட்டு சாப்பிட்டு வருவோம்

என்னேன் அப்பவாவது அடடா பய இன்னும் சாப்பிடலயே இப்பவாவது போய் சமைப்போம் எங்கிற எண்ணம் என் வீட்டு நண்பனுக்கு வரக்கூடதா எங்கிற ஒரு நப்பாசைதான்... அவனும் கண்டுக்கிற மாதிரி இல்ல.... அப்ப சதீஷ் சொன்னான்

மச்சி என்னால drive பண்ண முடியாது அதனால நீயே போயிட்டு வா

என்னான்... எனக்குத்தான் drive பண்ணவே தெரியாதே அப்ப நான் யோசிச்சிகிட்டு இருக்க சுரேஷ் சொன்னான்

மச்சி நான் வேணும் என்னா drive பண்ணுறேன்

என்னு நானும் இவன் என்ன இவ்வளவு பெருந்தன்மையா கேக்குறானே என்னு கொஞ்சம் யோசிச்சிட்டு கேட்டேன்

டேய் நீ இன்னமும் Learner permitலயே இருக்கிற பிறகு எப்படி drive பண்ணுவ என்னேன்

ஏன்னா ஏதோ ஒன்னு அப்பவே என்னை எச்சரிச்சுகிட்டே இருந்திச்சு


அப்போ சதீஷ் சொன்னான்

மச்சி அவன் நல்லா drive பண்ணுவான்டா யோசிக்காத அவன் கூட போயிட்டு வா
என்னான் ஏதோ அவன் தந்த ஒரு நம்பிக்கையும் அந்த Mcdonalds Double Quarter Pounder மேல இருந்த ஆசையும் பசியும் சேர்ந்து சதி பண்ணீரிச்சுது.... நானும் போய் Double Quarter Pounder சாப்பிடுற ஆசையில எழும்பி அவன நம்பி போய் காரில ஏறினேன்... அவன் எங்க வீட்டு compoundல இருந்து காரை எடுக்கும் போதே எனக்கு புரிஞ்சிரிச்சு அவன் எவ்வளவு நல்ல driver என்னு இன்னையோட நான் சரி ஏனுதான் நினைச்சேன்..... அவன் drive பண்ணுற நேரமே எனக்கு பாதி உசுரு போயிடிச்சு.. நானும் சரி பரவாயில்லை Mcdonaldsல யாராவது பொண்ணு இருக்கும் எங்கிற ஒரே ஆசையில அங்க போனா என் turn வரும் வரைக்கும் ஒரு பொண்ணு இருந்திட்டு நான் வந்த உடனேயே shift மாறி ஒரு போண்டா பையன் வர்ரான் அப்பவே எனக்கு இருந்த பசி எல்லாமே பறந்து போயிடுச்சு ஒரு மாதிரி Mcdonalds double quarter pounderர வாங்கிகிட்டு போய் காரில ஏறினா அங்க சுரேஷ் காரை start பண்ணி குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கான்... அது ஒரு manual car அதில ஒழுங்கா கியர் போடாட்டி கார் குதிரை மாதிரி டொக்கு டொக்கு என்னு அடிக்கும்... எனக்கு பயத்திலயே உயிர் போயிடுச்சு அந்த நேரம் பார்த்தா அழகான பொண்ணூங்க எல்லாம் எங்க காரை கடந்து போகனும்?? எல்லாம் என் விதி சரி விடுங்க. அங்க இருந்து புறப்பட்டு நாங்களும் வீட்டுக்கு வந்தா வர்ர வழில ஒரு ambulance லைட்ட போட்டுகிட்டு வந்தா சுரேஷ் அதப்பார்த்து police என்னு நினைச்சு பயந்து காரை கன்னாபின்னா என்னு ஓட தொடங்கினான் எனக்கு உயிர் பயம் உச்சத்தில இருந்திச்சு... என்னா Learner permitல drive பண்ணி பிடி பட்டா லைசன்ஸ் அவ்வளவுதான்... ஒரு மாதிரி பிறகு எப்படியோ வீட்டுக்கு வந்து சேத்திட்டான்... பாருங்கைய்யா இப்படித்தான் நான் ஒவ்வொருமுறையும் போய் எதிலயாவது மாட்டிக்குவேன்... இன்னைக்கு ஒரு Double Quarter Pounder க்கு ஆசைப்பட்டி உசிர விடப்பார்த்தேன்... மக்களே இனி நீங்க யாராவது drive பண்ண போறேன் என்னு சொன்னா தயவு செய்து லைசன்ஸ் இருக்கா என்னு கேட்டு வாங்கி பாத்திட்டு காரில ஏறுங்க பிறகு என்ன மாதிரி ஒரு Double Quarter Pounderகோ இல்லாட்டி ஒரு Big Macக்கோ ஆசைப்பட்டு உசிர விட்டிடாதிங்க சொல்லீட்டேன்

20 பதிலகள்:

ஜோசப் பால்ராஜ் said...

இப்டியெல்லாம் சாப்பாட்டுக்காக வாழ்க்கையையேவா பணயம் வைக்கிறது?
ஒன்னு விரதம் இருந்துரனும், இல்லைனா, உங்களுக்கு சுடுதண்ணி சமைக்க தெரியும்ல? ( தெரியலனா, எனக்கு தனி மடல் அனுப்புங்க, நான் குறிப்பு அனுப்புறேன். அதை வைச்சு சமாளிச்சுடலாம்.)
நூடுல்ஸ் (இதுக்கு தமிழ் வார்த்தை என்னங்க??) செஞ்சு சாப்பிடுறதுக்கு சுடுதண்ணி உதவும் பாருங்க. சூத‌ன‌மா இருக்க‌ணுப்பு.

புதுகைத் தென்றல் said...

நல்லா இருக்கு கூத்து.

இதுக்கு வெறும் சோறை வடிச்சு ஊறுகா தொட்டு சாப்பிட்டிருக்கலாம்.

இனிமே இப்படி ஆகம பாத்துக்கோங்க இவன்.

இவன் said...

//இப்டியெல்லாம் சாப்பாட்டுக்காக வாழ்க்கையையேவா பணயம் வைக்கிறது?
ஒன்னு விரதம் இருந்துரனும், இல்லைனா, உங்களுக்கு சுடுதண்ணி சமைக்க தெரியும்ல? ( தெரியலனா, எனக்கு தனி மடல் அனுப்புங்க, நான் குறிப்பு அனுப்புறேன். அதை வைச்சு சமாளிச்சுடலாம்.)
நூடுல்ஸ் (இதுக்கு தமிழ் வார்த்தை என்னங்க??) செஞ்சு சாப்பிடுறதுக்கு சுடுதண்ணி உதவும் பாருங்க. சூத‌ன‌மா இருக்க‌ணுப்பு.//


என்னங்க செய்யுறது என்ன சுத்தி இத்தன வில்லப்பசங்க இருப்பாங்க என்னு தெரியாமலே இவ்வளவு நாள் இருந்திட்டேன்.... நீங்க வேற நான் all ready வெந்நீர் வைப்பது எப்படி என்னு ஒரு சமையல் குறிப்பே போட்டிருக்கேன் போய் பாருங்க....

\http://manathoodu.blogspot.com/2008/06/blog-post_27.html

இவன் said...

//நல்லா இருக்கு கூத்து.

இதுக்கு வெறும் சோறை வடிச்சு ஊறுகா தொட்டு சாப்பிட்டிருக்கலாம்.

இனிமே இப்படி ஆகம பாத்துக்கோங்க இவன்.//


வெறும் சோறும் ஊறுகாயும் சாப்பிடுறத்துக்கு இப்படி 4 இல்லாட்டி 5 தடவை உயிரைப்பணயம் வைக்கலாம்... அதுசரி சோறு சமைக்கிறது எப்படி அதுக்கு யாராவது பதிவு ஒண்ணு போடுங்களேன்

ஜி said...

:))))

//இப்டியெல்லாம் சாப்பாட்டுக்காக வாழ்க்கையையேவா பணயம் வைக்கிறது?//

Repeatu... Naangellaam pattini kedanthaalum kedapoame thavira ippadi Risklaam edukka maatoamla ;))

இவன் said...

//Repeatu... Naangellaam pattini kedanthaalum kedapoame thavira ippadi Risklaam edukka maatoamla ;))//

நம்மளுக்கு பசியத்தாங்குற சக்தி எல்லாம் இல்லிங்கண்ணா அதுதான் பிரச்சனையே

Anonymous said...

//இப்டியெல்லாம் சாப்பாட்டுக்காக வாழ்க்கையையேவா பணயம் வைக்கிறது?//

ரிப்பீட்டே

வழிப்போக்கன் said...

நானும் எவ்வளவு நேரம்தான் பசிக்காத மாதிரியே நடிக்கிறது?? //

நாங்ககெல்லாம் இந்த பதிவ படிச்ச மாதிரி நடிக்கறோம் இல்ல..

வழிப்போக்கன் said...

//டேய் நீ இன்னமும் Learner permitலயே இருக்கிற பிறகு எப்படி drive பண்ணுவ என்னேன்
//

இவனுக்கு அது கூட இல்லை, உதவி பண்ண வந்தா கிண்டல் வேற பண்ணுவீங்களா ??

rapp said...

ஹா ஹா ஹா, அப்புறம் என்ன செஞ்சீங்க அவரை? இனிமேயாவது அவரு சமைப்பரா இல்லை நீங்க உங்க உயிரை பணயம் வெக்கணுமா

Ramya Ramani said...

அட பாவமே அறை நண்பன் சமைக்கலேன்னா இவ்ளோ கஷ்டமா??நம்ம நேஷ்னல் டிபன் உப்புமா பண்ணலாமே?? இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்காதீங்க

இவன் said...

////இப்டியெல்லாம் சாப்பாட்டுக்காக வாழ்க்கையையேவா பணயம் வைக்கிறது?//

ரிப்பீட்டே//


வாங்க அனானி வாங்க நீங்க போட்ட பின்னுட்டத்துக்கு எப்படித்தான் பதில் போடுறது அதுனால ஜீக்கு போட்ட பதிலுக்கு ஒரு ரிப்பீட்டே போட்டுன்க்கிறேன்

இவன் said...

//நாங்ககெல்லாம் இந்த பதிவ படிச்ச மாதிரி நடிக்கறோம் இல்ல..//

அடப்பாவி இவ்வளவு நாள் என் பதிவ படிக்காமத்தான் பின்னுட்டம் போட்டீங்களா??

இவன் said...

//இவனுக்கு அது கூட இல்லை, உதவி பண்ண வந்தா கிண்டல் வேற பண்ணுவீங்களா ??//

உதவி பண்ண வந்ததா?? அவன் driving பழக பக்கத்தில நான் துணை அதுக்குத்தான் என்னைக்கூட்டிக்கிட்டு போனான்... இப்படி தப்பா புரிஞ்சுகிட்டு கடுப்பெல்லாம் ஏத்தக்கூடாது....

எனக்கு Automatic Gear உள்ள கார் ஓடத்தெரியும் manual கார்தான் ஓடத்தெரியாது புரிஞ்சுதாஅ??

இவன் said...

//ஹா ஹா ஹா, அப்புறம் என்ன செஞ்சீங்க அவரை? இனிமேயாவது அவரு சமைப்பரா இல்லை நீங்க உங்க உயிரை பணயம் வெக்கணுமா//

வாங்க கவுஜாயினி உங்களுக்கு போட்டியா யாரோ பாட்டு எழுத்தி வெளியிட்டிருக்காங்களே அதப்பற்றி முதல் பதிவில போட்டிருக்கேன் போய் படிச்சு பாருங்க....
இனிமே அவன் சமைக்கிறேன் என்னு சொல்லிட்டான் அப்படி சமைக்காட்டி அவனே எனக்கு Mcdonalds double quarter pounder இல்லாட்டி ஒரு Big Mac வாங்கீட்டு வந்து தர்ரேன் என்னு சொல்லி இருக்கான் அதனால பிரச்சனை இல்லை

இவன் said...

//அட பாவமே அறை நண்பன் சமைக்கலேன்னா இவ்ளோ கஷ்டமா??நம்ம நேஷ்னல் டிபன் உப்புமா பண்ணலாமே?? இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்காதீங்க//

நீங்க வேற நான் சாதம் சமைக்கவே சமையல் குறிப்பு தேடுறவன் இதில உப்புமா வேறயா?? கடுப்புகள கெளப்பிக்கிட்டு

கயல்விழி said...

பாவம் நீங்க.

சீக்கிரம் சமையல் கத்துகோங்களேன், பிரச்சினை இல்லாமல் இருக்கும்.

இவன் said...

//பாவம் நீங்க.

சீக்கிரம் சமையல் கத்துகோங்களேன், பிரச்சினை இல்லாமல் இருக்கும்.//


இனி நான் எல்லாம் சமைக்க கத்துகிட்டு அதெல்லாம் சரி வராது.... கூடிய சீக்கிரமே ஒருத்திய கூட்டிட்டு வந்து சமைக்க சொல்லீட வேண்டையதுதான்..... ஆனா அதையும் பார்க்க இப்படி risk எடுக்கிறதே மேல் என்னு தோணுது

வழிப்போக்கன் said...

யாரங்கே ??

எங்கே எங்கள் பதிவுலக இளவரசன் ஆதி ??

சீக்கிரம் கண்டுபிடித்து தரவும்..

இவன் said...

//யாரங்கே ??

எங்கே எங்கள் பதிவுலக இளவரசன் ஆதி ??

சீக்கிரம் கண்டுபிடித்து தரவும்..//


ங்ண்ணா கூடிய சீக்கிரம் ஒரு பதிவு போட்டுடுறேங்கண்ணா