Friday, July 11, 2008

நான் படம் பார்த்த கதை

கொஞ்ச நாள் பதிவு எழுதி நம்ம மக்கள மொக்கை போடாம இருக்கலாம் என்னு இருந்தேன்.... ஆனா இன்னைக்குத்தாங்க இந்த விதி இருகில்ல விதி அது எவ்வளவு வலியது என்னு புரிஞ்சுகிட்டேன்.... நம்ம ரிலாக்ஸ் பிளீஸ் கயல்விழி மற்றும் நம்ம எந்தன் வானம் வழிப்போக்கன் வந்து அடுத்த பதிவு எப்போ என்னு கேட்ட போது சரி நாம அனுபவிச்ச கொடுமையை நம்ம மக்கள்கிட்ட சொல்லி ஆறுதல் படலாம் என்னுதான் இந்தப்பதிவு

இன்னைக்கு ரொம்ப போர் அடிக்குது என்னு நம்ம நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு போவோமே என்னு முடிவு பண்ணி இன்னொருத்தன் கூட கடைக்கு போய் தெரியாத்தனமா ஒரு DVD வேற எடுத்துகிட்டு போனேன்.... நம்ம நண்பன் கூட படம் நல்ல படம்டா என்னு பரிந்துரை வேற.... சரி என்னு படதத எடுத்துகிட்டு போனா பார்ப்பியா இனி இப்படி படம் பார்ப்பியா என்னு என்னை நானே கேட்டு கேட்டு செருப்பால அடிச்சுக்கனும் போல இருந்திச்சு... அவன் வீட்டில போய் அந்த படத்த பார்த்ததன் விளைவுதான் இந்தப்பதிவு.... இன்னைக்கு "வேதா" என்னு ஒரு படம் அருண்குமார் நடிச்சது கடைசியா அருண்குமார் நடிச்சு நான் பார்த்த படம் எதுன்னா ஒரு படத்தில அந்த பொண்ணு முகத்த பார்க்காமலே லவ் பண்ணுவாரே அந்தப்படம்தான்.... (ஞாபகம் வரலயா வழிப்போக்கன் மற்றும் நமக்கல் சிபி) அட நம்ம ரம்பா கூட நடிச்சிருப்பங்களே(இப்போ ஞாபகம் வருமே) "கம்பன் எங்கே எங்கே" பாட்டுக்கூட இருக்கே அந்தப்படம்தாங்க.... அந்தப்படம் ஏதோ கொஞ்சம் நல்லா இருந்ததால(சில பல வருஷங்களுக்கு முன்னுக்கு பார்த்ததால அப்படித்தோணிச்சோ என்னவோ) நம்பி இந்தப்படத்தையும் பாத்தேங்க... சும்மா சொல்லக்கூடாது சும்மா ரத்தம் வர வர ஈவு இரக்கம் இல்லாம கொடுமைப்படுத்தினாங்கைய்யா... யாரவது இந்த படத்தை முழுசா பார்த்தவங்க இருக்காங்களா?? பார்த்து 2ND half சேது ஆகாம இருக்கவங்க வாங்கைய்யா உங்க காலைத்தொட்டு கும்பிடனும்( இன்னேரத்துக்கு கயல்விழி இல்லாட்டி ராப் நாங்க முழுப்படமும் பார்த்திடோம்ம் என்னு arrive ஆகி இருக்கனுமே நல்லா ஞாபகம் இருக்கட்டும் 2ND half சேது effectல இல்லாதவங்க கால்ல விழுவேன்) சர்ரி இனி என்ன நடந்திச்சு என்னு சொல்லுறேன்
அருண் (கயல்விழி இது வருண் இல்ல அருண்) அண்ணனாம் அவருக்கு ஒரு தம்பியாம் தம்பி ரேஸ்ல ஜெயிக்கனும் எங்குறத்துக்காக ரேஸ்ல ஓடுற மத்த எல்லாரையும் தோற்க சொல்லி அருண் கேட்டு எல்லோரு தோத்துப்போறாங்களாம்... இதில யாருய்யா கேணயன் விட்டு கொடுத்த அவங்களா இல்ல படம் பாக்கிற நாங்களா?? கஷ்டபட்டு practice கடைசீல தோத்துப்போறாங்க அந்த athletes அவ்வளவு கேவலமா போச்சு athletes என்னா இல்ல?? சரி திரும்பவும் கதைக்கு வருவோம் அந்த ஊரில பெரிய underground தாதாவாம் அவன் தம்பி college electionல நிற்க, அருண்குமார் தம்பியும் அந்த electionல நிக்கிராறாம்.. அப்போ தாதா தம்பி அருண் தம்பிய மிரட்ட, அருண் போலீஸ் வேஷம் போட்டு அந்த தாதாவ ஏமாத்தி தன் தம்பிய ஜெயிக்க வைக்க, வந்தது போலீஸ் இல்ல தன் தம்பி கூட படிக்கிறவன்ட அண்ணன் என்னு தெரிய வர அந்த வில்லன் ஒரு நடிப்பு நடிப்பாரு பாருங்க நம்ம சிவாஜி வந்து அவர்கிட்ட நடிப்பு கத்துக்கணும் அவ்வளவு கொடுமையா இருக்கும் i mean அப்படி ஒரு நடிப்பு.... சரி சரி அதசரி மன்னிச்சு விடுட்டுடலாம் சிவாஜிய விட நல்லா நடிச்சிருக்கார் இல்ல அதுக்காகவாவது விட்டுடலாம்.... ஆனா அதுக்கு பிறகு ஒரு கொடுமை வந்திச்சே அதுதான் பயங்கரம் ஒரு அப்பாவும் மகளும் அருண் வீட்டுக்கு வந்து அருண்கிட்ட அந்த பொண்ண யாரோ நக்கல் பசங்க நக்கல் பண்ணுறதா சொல்லி அவங்களுக்கு help பண்ண சொல்லி கேட்க அருண் தன் அம்மாக்கிட்ட நல்ல பேர் எடுக்க அவங்களை விரட்டி விட அவங்க திரும்பி போற வழியில அந்த பொண்ண அதே பசங்க நக்கல் பண்ண அப்ப வருவாரு பாருங்க நம்ம ஹீரோ வந்து அடிக்கவும் இல்ல வந்து வேணாம் என்னு சொல்ல அவரைத்தள்ளி விடுவாங்க டேய் டேய் எததனை படத்திலடா இப்படியே எடுப்பீங்க என்னு கொலைவெறிதான் வந்திச்சு கீழே விழுந்த ஹீரோ styleஆ எழும்பி பக்கத்தில சும்மா இருந்த பெஞ்ச வெறும் கையாலேயே அடிச்சு உடைப்பாரு பாருங்க சும்மா சூப்பரா இருக்கும் (யம்மே முடியல) அதுகூட பரவாயில்லை பெஞ்சை உடைச்ச கையோட பக்கத்தில எவனோ வீடு கட்ட வாங்கி வைச்சிருந்த செங்கட்டிய உடைப்பாரு பாருங்க எனக்கு T.Vய உடைக்கலாம் போல இருந்திச்சு friend வீட்டு T.V என்னதால விட்டு வைச்சேன்... அதுக்கு பிறகு அருண் பக்கத்தில இருந்த ஒரு இரும்பு பைப்ப காலால அடிச்சு உடைப்பாரு பாருங்க எனக்கு ஒரு தெலுகு படத்தில ஒரு comedian கையுலயும் காலிலயும் இரும்பு plate வச்சு இதே மாதிரி உடைச்சதுதான் ஞாபகம் வந்திச்சு

இதுக்கு மேலயும் இந்தப்படத்த நான் பார்க்கணுமா என்னு நான் யோசிச்சுகிட்டே நான் திரும்பி பார்த்தா அங்க எனக்கு இது நல்ல படம் என்னு பரிந்துரைச்சானே ஒரு லூசுப்பய அவன் நான் இங்க இவ்வளவு பெரிய ஒரு தண்டனையை அனுபவிக்கிறது தெரியாம நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்தான் எனக்கா கொலைவெறி வந்த கடுப்புல எழும்பி போய் அந்த DVDய உடைச்சிட்டுத்தான் வந்து இருந்தேன்.... என்ன மாதிரி இந்த படத்த இன்னோரு மனிஷன் பாத்து சித்திரவதைப்படக்கூடாது பாருங்க அதுதான்..... இந்த புத்தி முதல்லயே இருந்திருக்கனும் எங்குறீங்களா அதுவும் சரிதான்...

47 பதிலகள்:

rapp said...

ஆஹா, எப்படிங்க இப்படி? நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்னு நினைக்கிறேன். நானெல்லாம் உங்களவுக்கு நல்லவ இல்லைங்க, நீங்க எவ்வளவு கொடுமையையும் தாங்கிப்பீங்க போலருக்கே. எங்க மன்றத்துல நாங்க இப்ப தீவிரமா ஆலோசிச்சிக்கிட்டு இருக்கோம், உங்களோட இந்தத் தியாகத்தை போற்றி, ஊக்கப்பரிசா கானல்நீர் டிவிடி அனுப்பலாமான்னு

இவன் said...

//ஆஹா, எப்படிங்க இப்படி? நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்னு நினைக்கிறேன். நானெல்லாம் உங்களவுக்கு நல்லவ இல்லைங்க, நீங்க எவ்வளவு கொடுமையையும் தாங்கிப்பீங்க போலருக்கே. எங்க மன்றத்துல நாங்க இப்ப தீவிரமா ஆலோசிச்சிக்கிட்டு இருக்கோம், உங்களோட இந்தத் தியாகத்தை போற்றி, ஊக்கப்பரிசா கானல்நீர் டிவிடி அனுப்பலாமான்னு//

நான் இன்னமும் அந்த கானல்நீர் படம் பாக்கல, பாக்கிற் தைரியம் இல்லை, வேதா படம் சரி அந்த ஹீரோயினால இவ்வளவுக்கு பார்த்தேன், கானல்நீர் என்ன நிலைமையோ தெரியல

இவன் said...

எதுக்கும் அனுப்பி வைங்க எனக்கு நானே தண்டனை குடுத்துக்க தோனுற நேரம் அந்த படத்தப்பாக்கிறேன்

வழிப்போக்கன் said...

//இப்படி படம் பார்ப்பியா என்னு என்னை நானே கேட்டு கேட்டு செருப்பால அடிச்சுக்கனும் போல இருந்திச்சு... ///

என்னேட பீலிங்ஸ்..
மேல உள்ள அதே வரிகள்..
பட் சின்ன திருத்தம்..


Do Replace all

படம் with பதிவு..
பார்ப்பியா with எழுத சொல்லுவியா ??

வழிப்போக்கன் said...

//ஞாபகம் வரலயா வழிப்போக்கன் //

அருண்னு நடிகர் பேர பாத்தாலே எனக்கு அலர்ஜி...

ஞாபகம் வரல..ஞாபகம் வரல..
ஞாபகம் வரல..

வழிப்போக்கன் said...

//ஆனா இன்னைக்குத்தாங்க இந்த விதி இருகில்ல விதி அது எவ்வளவு வலியது என்னு புரிஞ்சுகிட்டேன்...//

Same blood...

வழிப்போக்கன் said...

// ஒரு நடிப்பு நடிப்பாரு பாருங்க நம்ம சிவாஜி வந்து அவர்கிட்ட நடிப்பு கத்துக்கணும் //

இது எந்த சிவாஜி ???

சிவாஜி கணேசனா இல்ல சிவாஜி ராவா ??

எனக்கென்னமோ நீங்க சிவாஜி ராவ கிண்டல் பண்ற மாதிரி தோணுது..

rapp said...

//எதுக்கும் அனுப்பி வைங்க எனக்கு நானே தண்டனை குடுத்துக்க தோனுற நேரம் அந்த படத்தப்பாக்கிறேன்//
:):):)

வழிப்போக்கன் said...

நீங்க உண்மையிலயே படம் பாத்தீங்களா இல்லையா ?

Hero பேரு அருண்குமார் இல்லைங்கோ..அருண்விஜய்...

வழிப்போக்கன் said...

kollywoodtoday விற்கும் உங்க பதிவிற்கும் என்ன சம்பந்தம்..

வழிப்போக்கன் said...

//எனக்கு T.Vய உடைக்கலாம் போல இருந்திச்சு friend வீட்டு T.V என்னதால விட்டு வைச்சேன்... அதுக்கு பிறகு அருண் பக்கத்தில இருந்த ஒரு இரும்பு பைப்ப காலால அடிச்சு உடைப்பாரு பாருங்க எனக்கு ஒரு தெலுகு படத்தில ஒரு comedian கையுலயும் காலிலயும் இரும்பு plate வச்சு இதே மாதிரி உடைச்சதுதான் ஞாபகம் வந்திச்சு
//

இந்த பதிவ படிச்சதுக்கப்றம்..

சேம் பீலிங்ஸ்...Replace T.V with Laptop..

:-))))

கயல்விழி said...

நாங்க கேட்டதற்க்காக ஒரு பதிவா? ஆஹா, ரொம்ப நன்றி. பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்.

Ramya Ramani said...

அட பாவமே..ரொம்ம்ம்ம்ப நொந்து பேசரீங்க...எதோ ராப் அனுப்பற DVD பார்த்து அடுத்த பதிவும் ரெடி பண்ணுங்க..

இவன் said...

//என்னேட பீலிங்ஸ்..
மேல உள்ள அதே வரிகள்..
பட் சின்ன திருத்தம்..


Do Replace all

படம் with பதிவு..
பார்ப்பியா with எழுத சொல்லுவியா ??//


இதத்தான் அப்பவே நான் சொன்னேன் பேசாம பழைய லவ் லெட்டர் பதிவ வச்சே கொஞ்ச நாள் ஓட்டி இருக்கலாமோ??

இவன் said...

//அருண்னு நடிகர் பேர பாத்தாலே எனக்கு அலர்ஜி...

ஞாபகம் வரல..ஞாபகம் வரல..
ஞாபகம் வரல..//


தலைவிதி sorry தலைவி ரம்பா படத்தில இருக்காங்க என்னு சொல்ல்லியும் உங்களுக்கு ஞாபகம் வரலிய?? என்ன கொடுமை வழிப்போக்கன் இது??
எனக்கும் சரியா ஞாபகம் இல்ல... அதில ரம்பாவும் அந்தப்பாட்டும் மட்டும்தான் ஞாபகம் இருக்கு

இவன் said...

//
Same blood...//

அட எனக்கு முன்னுக்கே அந்த கொடுமைய நீங்க அனுபவிச்சிட்டீங்களா??

இவன் said...

//இது எந்த சிவாஜி ???

சிவாஜி கணேசனா இல்ல சிவாஜி ராவா ??

எனக்கென்னமோ நீங்க சிவாஜி ராவ கிண்டல் பண்ற மாதிரி தோணுது..//


ங்ண்ணா என்ன வம்பில மாட்டி விடாதீங்க நான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலலலலலவன் என்ன விட்டுடுங்க..... அதோட நான் அக்மார்க் ரஜினி ரசிகன்... அதுக்காக நான் சிவாஜி நடிப்ப கிண்டல் அடிக்கிறேன் என்னும் இல்ல ஏன் என்னா ஜோ சண்டைக்கு வந்திடுவாங்க அதனால எனக்கு சிவாஜியையும் பிடிக்குமுங்கோ

இவன் said...

////எதுக்கும் அனுப்பி வைங்க எனக்கு நானே தண்டனை குடுத்துக்க தோனுற நேரம் அந்த படத்தப்பாக்கிறேன்//
:):):)//


என்ன ராப் வெறும் ஸ்மைலியோட எஸ் ஆகுறீங்க.... கயல்விழி உங்ககிட்ட எப்படி மொக்கை போடுறது என்னு கேட்டுக்க சொன்னாங்க.... எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்க

இவன் said...

//நீங்க உண்மையிலயே படம் பாத்தீங்களா இல்லையா ?

Hero பேரு அருண்குமார் இல்லைங்கோ..அருண்விஜய்...//


அட ஆமாய்யா அவன் அவன் நினைச்சு நினைச்சு பேர மாத்திக்கிட்டு இருப்பான் அதெல்லாம் நாங்க ஞாபகம் வச்சு இருக்கனும் நீங்க வேற, அதுதான் ஒரு இடத்தில மட்டும் அருண்குமார் என்னு சொல்லீட்டு பிறகு அருண் என்னு சொல்லிக்கிட்டே வந்தேன்.... இதுதான் எஸ் ஆகுறது எங்குறது

இவன் said...

//kollywoodtoday விற்கும் உங்க பதிவிற்கும் என்ன சம்பந்தம்..//

ஒரு சம்பந்தமுமே இல்லியே ஏன் கேற்குறீங்க?? இதில ஏதாவது வில்லங்கம் வைச்சிருக்கீங்களா?? என்னை மாட்டி விடுறதில நம்ம வழிப்போக்கனுக்கு எவ்வளவு சந்தோஷம் பாருங்க

இவன் said...

//
இந்த பதிவ படிச்சதுக்கப்றம்..

சேம் பீலிங்ஸ்...Replace T.V with Laptop..

:-))))//


நான் அந்த T.V என்னோடது இல்ல எங்கிறதாலதான் உடைக்காமலே விட்டேன் இல்ல உடைச்சே இருப்பேன்.... அந்த ஆத்திரம்தான் DVDயை உடைக்கும் வரைக்கும் என்னைக்கொண்டு போச்சுது

இவன் said...

//நாங்க கேட்டதற்க்காக ஒரு பதிவா? ஆஹா, ரொம்ப நன்றி. பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்.//

பதிவு போடாம நம்ம ப்லொக் பக்கம் நீங்கள் எல்லாம் வரல என்னா பின்னுட்டம் கிடைக்காதில்ல அதுதான் ஹி ஹி ஹி ஹி ஹி அரசியல்ல இதெல்லாம் சகஜம் கயல்விழி

இவன் said...

//அட பாவமே..ரொம்ம்ம்ம்ப நொந்து பேசரீங்க...எதோ ராப் அனுப்பற DVD பார்த்து அடுத்த பதிவும் ரெடி பண்ணுங்க..//

அடப்பாருங்கைய்யா எனக்கு தண்டனை கொடுக்கிறதில எவ்வளவு பேர் முன்னுக்கு நிக்கிறாங்க என்னு..... இனி நான் படம் பாக்கிறதே இல்ல என்னு முடிவு செஞ்சிட்டேன்.... ஆனா இதில நம்ம sorry என் நயந்தாரா, பிரியாமணி, தம்ன்னா படங்கள் சேர்த்தி இல்ல அதே மாதிரி நம்ம ரஜினி , கமல், அஜித்இருந்திட்டு கிரீடம் மாதிரி ஒரு படம் நடிச்சா என்ன செய்ய பாக்கணும் இல்ல அதுவும் விமர்சனம் படிச்சாப்பிறகுதான்), சூரியா, விக்ரம் படங்க்களும் சேர்த்தி இல்ல.... திரும்பவும் அதே கொடுமையை அனுபவிக்க நான் தயார் இல்லிங்கோ... நான் அவ்வளவு கல்நெஞ்சம் படைச்சவன் இல்ல

வழிப்போக்கன் said...

//ஆனா இதில நம்ம sorry என் நயந்தாரா, பிரியாமணி, தம்ன்னா படங்கள் சேர்த்தி இல்ல //

This is 3 much..:-))

வழிப்போக்கன் said...

//விக்ரம் படங்க்களும் சேர்த்தி இல்ல.... //

முடிஞ்சா பீமா பார்க்கவும்.....பாதி படம் பாத்ததுக்கே ஜன்டு பாம் 50கிராம் தேவைப்பட்டது..

வழிப்போக்கன் said...

//பதிவு போடாம நம்ம ப்லொக் பக்கம் நீங்கள் எல்லாம் வரல என்னா பின்னுட்டம் கிடைக்காதில்ல //

இதெல்லாம் ஒரு பொழப்பா ????

வழிப்போக்கன் said...

//எதுக்கும் அனுப்பி வைங்க எனக்கு நானே தண்டனை குடுத்துக்க தோனுற நேரம் அந்த படத்தப்பாக்கிறேன்//

அப்ப ஒவ்வொரு பதிவு போட்டதுக்கப்புறம் பாக்க போறீங்களா ??

இவன் said...

//
முடிஞ்சா பீமா பார்க்கவும்.....பாதி படம் பாத்ததுக்கே ஜன்டு பாம் 50கிராம் தேவைப்பட்டது..//

ங்ண்ணா கிரீடம் படத்துக்காக அஜித்ட வரப்போற எல்லாப்படத்தையுமே பாக்கபோறேன்... இதில பீமா எல்லாம் சாதாரணம்

இவன் said...

////பதிவு போடாம நம்ம ப்லொக் பக்கம் நீங்கள் எல்லாம் வரல என்னா பின்னுட்டம் கிடைக்காதில்ல //

இதெல்லாம் ஒரு பொழப்பா ????//


ங்ண்ணா இதுதாங்கண்ணா பொழைப்பே ஹி ஹி ஹி ஹி இதுக்கெல்லாம் வெக்கம், மானம், ரோஷம் எல்லாம் பார்க்கவே கூடாது....

பத்து பின்னுட்டம் கிடைக்குதுன்னா ஒரு மொக்கைப்பதிவு போடுறதில தப்பே இல்ல
-இவன் அடிகளார்-

இவன் said...

//அப்ப ஒவ்வொரு பதிவு போட்டதுக்கப்புறம் பாக்க போறீங்களா ??//

அடடா public public இதெல்லாம் publicல சொல்லக்கூடதுங்கண்ணா

இவன் said...

////ஆனா இதில நம்ம sorry என் நயந்தாரா, பிரியாமணி, தம்ன்னா படங்கள் சேர்த்தி இல்ல //

This is 3 much..:-))//


ங்ண்ணா உண்மைய சொன்னா ஒத்துக்கணும்..... இப்படி வயித்தெரிச்சல்ல பேசக்கூடாது... நான் சொல்லுறது பொய் என்ன வேனும் என்னா சிம்புகிட்ட கேட்டு பாருங்க

வழிப்போக்கன் said...

நான் நேத்து கடசியா போட்ட காமென்ட் பப்ளிஸ் ஆகலயே ???

இவன் said...

//நான் நேத்து கடசியா போட்ட காமென்ட் பப்ளிஸ் ஆகலயே ???//

இல்லையே வழிப்போக்கன் எல்லா commentsசும் publish ஆகி இருக்கே

வெண்பூ said...

ஒரே ஒரு சந்தேகம். நீங்க எல்லாம் இப்படி ஒரு மொக்கப்பதிவு போடறதுக்குன்னே மொக்கப்படம் பாப்பீங்களா? இல்லை தெரியாம போய் பாக்குற எல்லாப் படமுமே மொக்கையா இருக்கா?

Anonymous said...

இன்னும் நீங்க பார்க்க சில படங்கள்

தமிழக அரசு தரமானவை என்று பட்டியலிட்டுள்ளவை


பொன்மேகலை
மண்ணின் மைந்தன்,
மந்திரன்
அறிவுமணி
பவர் ஆப் உமன்
ஆயுள்ரேகை
வணக்கம் தலைவா
ஆதிக்கம்
கலையாத நினைவுகள்
ப்ளஸ் கூட்டணி
சூப்பர்டா
றெக்கை
வரப்போகும் சூரியனே
உள்ளக்கடத்தல்
ரைட்டா தப்பா,
இலக்கணம்,
மறந்தேன் மெய் மறந்தேன்,
செங்காத்து,
ஆட்டம்,
நாகரீக கோமாளி,
காசு
ஒரு காதல் செய்வீர்,
பிரதி ஞாயிறு 9 முதல் 10.30 வரை,
கைவந்த கலை,

ஒவ்வொரு படமும் ரூபய் 7.00 லட்சம் அரசு மானியம் பெற்றுள்ளது.

நன்றி இட்லி வடை


பிழச்சுக்கிடந்தா பாக்கலாம்

இவன் said...

//ஒரே ஒரு சந்தேகம். நீங்க எல்லாம் இப்படி ஒரு மொக்கப்பதிவு போடறதுக்குன்னே மொக்கப்படம் பாப்பீங்களா? இல்லை தெரியாம போய் பாக்குற எல்லாப் படமுமே மொக்கையா இருக்கா?//

நான் நினைக்கிறேன் பதிவர் ஆனதால படங்கள் எல்லாமே மொக்கையாத்தெரியுதென்னு.... இன்னும் ஒரு நாலைஞ்சு படம் பார்த்திட்டு சொல்லுறேன் அப்பத்தான் தெளிவாத்தெரியும்..... மொத்தத்தில நாலைஞ்சு பதிவு இருக்கும் என்னு நினைக்கிறேன்

இவன் said...

//இன்னும் நீங்க பார்க்க சில படங்கள்

தமிழக அரசு தரமானவை என்று பட்டியலிட்டுள்ளவை

ஒவ்வொரு படமும் ரூபய் 7.00 லட்சம் அரசு மானியம் பெற்றுள்ளது.

நன்றி இட்லி வடை


பிழச்சுக்கிடந்தா பாக்கலாம்//


இவன் பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருந்து பதிவு போடனும் என்னு ஆசைப்படுறாரு நம்ம வாகரை வேலன்... இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்னை விட்டுடுங்க..... என்ன ஒரு வில்லத்தனம் :-))))

கயல்விழி said...

//இதுக்கெல்லாம் வெக்கம், மானம், ரோஷம் எல்லாம் பார்க்கவே கூடாது....
//

எப்படியோ ஒத்துகிட்டா சரி.

இவன் said...

////இதுக்கெல்லாம் வெக்கம், மானம், ரோஷம் எல்லாம் பார்க்கவே கூடாது....
//

எப்படியோ ஒத்துகிட்டா சரி.//


உண்மையை ஒத்துக்கிற பழக்கம் என்கிட்ட இருக்குது கயல்விழி உங்ககிட்ட இருக்கா??

வழிப்போக்கன் said...

ஙண்ணா புது பதிவு போட்டாச்சுங்க..

நீங்க பழைய பதிவ பாத்துட்டு comment அடிச்சுட்டு வந்திருக்கீங்கண்ணா..

வழிப்போக்கன் said...

//மொத்தத்தில நாலைஞ்சு பதிவு இருக்கும் என்னு நினைக்கிறேன்//

என்ன கொடுமை சார் இது ??

நீங்க பேசாம Love Story கன்டினியூ பண்ணலாமே...

வழிப்போக்கன் said...

//உண்மையை ஒத்துக்கிற பழக்கம் என்கிட்ட இருக்குது கயல்விழி உங்ககிட்ட இருக்கா??//

அப்ப கயல் பேசறதெல்லாம் பொய்யா ?

கயல் என்ன இப்படி இவன் சொல்லீட்டாரு...

இதுக்கு மேல இவன் பதிவெல்லாம்..சாரி..மொக்கையெல்லாம் நீங்க படிப்பீங்களா ??

இவன் said...

//ஙண்ணா புது பதிவு போட்டாச்சுங்க..

நீங்க பழைய பதிவ பாத்துட்டு comment அடிச்சுட்டு வந்திருக்கீங்கண்ணா..//


ங்ண்ணா இதோ வாரேன் வந்து ஒரு கும்மிய அங்க போடுறேன்.... வந்துக்கிட்டே இருக்கேன்

இவன் said...

//என்ன கொடுமை சார் இது ??

நீங்க பேசாம Love Story கன்டினியூ பண்ணலாமே...//


ங்ண்ணா என்னங்ண்ணா இப்படி சொல்லீட்டீங்க சரி பழையபடி லவ் storyயயே எழுதுறேன் ஒண்ணு ரெண்டு லெட்டரா கொடுத்திருக்கேன்... எக்கச்சக்க லெட்டர் கொடுத்து அடிவாங்கி இருக்கேனில்ல

இவன் said...

//அப்ப கயல் பேசறதெல்லாம் பொய்யா ?

கயல் என்ன இப்படி இவன் சொல்லீட்டாரு...

இதுக்கு மேல இவன் பதிவெல்லாம்..சாரி..மொக்கையெல்லாம் நீங்க படிப்பீங்களா ??//


பத்தவச்சிட்டியே வழிப்போக்கா.....

இதில மொக்கையெல்லாம் எங்குறது மற்ற மூத்த பதிவர்கள இல்லியே....

ஜி said...

அடடா... இப்படிப்பட்ட படத்தயெல்லாம் பாத்ததுக்கப்புறம், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு சூப்பரா இருக்குன்னு ஒரு பிட்ட போடனும் ;)))))

இவன் said...

//அடடா... இப்படிப்பட்ட படத்தயெல்லாம் பாத்ததுக்கப்புறம், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு சூப்பரா இருக்குன்னு ஒரு பிட்ட போடனும் ;)))))//

அப்படிப்போட்டா படம் பாத்தாபிறகு இங்க ஆஸ்திரேலியாவில ஆட்டோ இல்ல என்னு புல்டோசர் அனுப்பி என்ன கொன்னுடுவாங்க.... நான் அடிவாங்கனும் எங்குறதில "ஜீ"க்கு எவ்வளவு ஆசை பாருங்க மக்களே