Wednesday, July 2, 2008

இவனும் ஒரு சூப்பர் ஹீரோதான்

ஒவ்வொரு முறையும் என்ன எழுதிறது என்னு think பண்ணி பண்ணியே இந்த "இவன்" (என்னத்தான் சொன்னேன்) தலை வெடிச்சுடும் போல இருக்கே... சரி இன்னைக்கு என்ன எழுதிறது?? நேத்து ராத்திரியே(ராத்திரி என்னா விடிய காலையில 5 மணி) யோசிச்சிட்டு சரி நம்ம சின்ன வயசில அடிச்ச கூத்தப்பத்தியும் நம்ம வீர வரலாற்றப்பற்றியும் கொசுவர்த்தி சுத்தலாம் என்னு முடிவு பண்ணி தூங்கீட்டேன், காலையில எந்திரிச்சா எந்த கூத்தப்பற்றி எழுதிறது என்னு ஒரே குழப்பம்(1, 2 கூத்தா பண்ணி இருக்கிறோம் ஆயிரக்கணக்கில இல்ல செஞ்சிருக்கோம்). எதப்பத்தி எழுத? 5ம் class படிக்கும் போது ஒரு பொண்ணுகிட்ட love letter கொடுத்தத எழுதுவோமா? இல்ல சீனியர் பையங்களையே ராகிங் செஞ்சத எழுதுவோமா? எதைப்பற்றி எழுதிறது?? சரி என்னு கடைசீல கூரையப்பிரிச்சிக்கிட்டு நடு வீட்டில இறங்கி் supar hero ஆனதப்பற்றி எழுதுவோம் என்று முடிவு செஞ்சாச்சு எழுதவும் ஆரம்பிச்சாச்சு....


நான் சின்ன வயசில பயங்கர வால்... நம்ம வால்பையன் அளவுக்கு இல்லை என்னாலும் ஓரளவுக்கு வால், என் வீடு மட்டுமில்லாம பக்கத்து வீடுகளும் அதகளப்படும்.... அப்போ எனக்கு ஒரு 7 வயசு இருக்கும்... எனக்கு என்னா என்னா சின்ன வயசிலேயே நினைப்புங்க பெரிய இவன் என்னு(அதுதான் என் பேரு இவன்) அது மட்டுமில்லாம பெரிய cricket player brain lara என்னு நினைப்பு காரணம் நானும் கறுப்பு அவரும் கறுப்பு அப்படி ஒரு ஒற்றுமைங்க கலர்ல.... எங்கையாவது எங்க ஏரியாவில cricket விளையாண்டா நிச்சயமா இவன் அங்க இருப்பான் (ball பொறுக்கி போட) அப்படி ஒரு அன்பு cricket மேல... அன்னைக்கு அப்படித்தான் என் வயசு பசங்களோட cricket விளையாட போகலாம் என்னு இருந்தா, இவன் அங்க போய் ஏதாவது வம்பு சண்டை இழுத்திடுவான் இல்லாட்டி எவன் மண்டையாவது உடைச்சிட்டு வந்திடுவான் என்னு அம்மா வீட்டிலேயே இருக்க சொல்லீட்டாங்க...

நமக்குத்தான் கையும் காலும் சும்மா (வழிப்போக்கன் இது தமிழ் சும்மா) இருக்காதே அதனால வீட்டில இருக்கிறவங்கள பார்த்தேன்... யாருமே என்
கூட விளையாட வரமாட்டங்க... என்ன செய்ய என்னு யோசிச்சநேரம் அக்கா வந்தா.... நம்மகிட்ட ஒரு ஆள் மாட்டினா விட மாட்டமே... அக்காவ வீட்டுக்கு முன்னுக்கு cricket விளையாடலாம் வாரியா என்னு கேக்க அக்காவும் சரி என்னா... எப்பவுமே cricket விளையாண்டா நான்தான் 1st batting அது நானே வைச்சிக்கிட்ட rule யாரா இருந்தாலும் பின் பற்றித்தான் ஆகனும்... அன்னைக்கும் அப்படித்தான் நான்தான் முதல் batting ஒழுங்கா அடிச்சிக்கிட்டு இருந்தேன்... அப்போ லாரா மாதிரி அடி பார்ப்போம் என்னு பக்கத்தில பார்த்திக்கிடு இருந்த தங்கச்சி உசுப்பேத்த நாமலும் right hand version lara மாதிரி bat பண்ணத்தொடங்கினேன்... முதல் ballலே அடிச்சேன் பாருங்க அது போய் எதிர்வீட்டு கூரை மேல விழுந்திருச்சு... வேற ball எடுத்து விளையாடலாம் என்னா அம்மா தரமாட்டேன் என்னுட்டாங்க...

சரி இப்போ cricket விளையாடனுமே என்ன செய்ய யோசிச்சு எதிர் வீட்டுக்கு போனா அங்க யாருமே இல்லை சரி கூரைமேல ஏறி நாமே எடுக்கலாம் என்னு சொல்லி மேலே ஏறி மெதுவா மெதுவா போய் ballஅ தொட்டதுதான் அப்படியே கூரைய பிச்சுக்கிட்டு balloda உள்ள போய்ட்டேன் கீழே விழுந்த இடத்தில ஒண்ணுமே இல்ல என்னதால நேர நிலத்திலேயே land ஆகிட்டேன் எனக்கும் ஒரு சேதமும் இல்லை அங்க பொருட்களுக்கும் ஒரு சேதமும் இல்லை சரி இப்போ என்ன செய்ய என்னு யோசிச்சு ஒருதடவை வீட்ட சுத்தி வந்தேன் அப்படியே சமையலறைக்கு போய் என்ன இருக்கு என்னு பாத்திட்டு பிறகு அங்க இருந்த பிஸ்கட்ட எடுத்து கடிச்சுக்கிட்டே(என்ன ஒரு வில்லத்தனம்) மெதுவா வீட்ட சுத்தி சுத்தி வந்தேன்.... அப்பத்தாங்க பார்த்தேன் பின் கதவுக்கு உள்பக்கமா lock போட்டிருந்தாங்க அத அப்படியே திறந்திட்டு வெளியே வந்திட்டேன், வந்து கதவை மூடாம அப்பாகிட்ட போய் சொல்ல, அதுக்கு பிறகு அப்பா வந்து எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு... அவங்க போன நேரம் அவங்க வீட்டு kryய எங்க வீட்டில கொடுத்திட்டு போனதால அத use பண்ணி முன்கதவைத்திறந்து அப்படியே உள்ளுக்கு போய் பின் கதவை மூடி பிறகு கூரையையும் fix பண்ணீட்டு முன்கதவையும் மூடி வச்சிட்டு பிறகு அவங்களுக்கு call பண்ணி சொல்லீட்டார்.... அவரும் என் அப்பாட friend, அவர் கூட படிச்சவர் என்னதால பெருந்தன்மையா சரி பரவயில்லை freeயா விடு என்னு சொல்ல, எனக்கு நிம்மதி அதுக்கு பிறகாவது என் அப்பா பெருந்தனமையா விட்டிருக்கலாம்... வீட்டுக்கு வர்ர எல்லார்கிட்டையுமா இத சொல்லி என்னை அவமானப்படுத்தனும்?? ( மானம் என்கிறது இருந்தாத்தானே அவமானப்படுத்த எங்குறீங்களா?? அதுவும் சரிதான்)

19 பதிலகள்:

புதுகைத் தென்றல் said...

herovin pulambals super.

இவன் said...

//herovin pulambals super.//

வாங்க புதுகைத்தென்றல் வாங்க...
நன்றி நன்றி

rapp said...

ஆஹா மிஸ்டர் பிரயன் லாரா, இதே மாதிரி ஒன்னு நானும் போட்டிக்கு போட்டு தாக்கப்போறேன் பாருங்க.

இவன் said...

//ஆஹா மிஸ்டர் பிரயன் லாரா, இதே மாதிரி ஒன்னு நானும் போட்டிக்கு போட்டு தாக்கப்போறேன் பாருங்க.//
தெரியாத்தனமா பிரயன் லாரா என்னு போட்டுட்டமோ??

போடுங்க போட்டுத்தாக்குங்க கும்மி அடிக்க நாங்களும் காத்திக்கிட்டு இருக்கிறோம்

கிரி said...

உங்க அப்பா ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு போல இருக்கு :-))) அடி வாங்கறதுல இருந்து காப்பாத்திட்டாரு ..ஆனா :-)))))))))))

இவன் said...

//உங்க அப்பா ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு போல இருக்கு :-))) அடி வாங்கறதுல இருந்து காப்பாத்திட்டாரு ..ஆனா :-)))))))))))//

ஆமாங்க அவர் ரொம்ப நல்லவரு அதனால்தான் மத்தவங்க அடிக்கவேண்டிய அடி எல்லாத்தையுமே roomஅ பூட்டிட்டு தந்திட்டாரு அதெல்லாம் பெருந்தன்மையா நான் வெளில சொல்லிக்கிறதில்ல

கிரி said...

//ஆமாங்க அவர் ரொம்ப நல்லவரு அதனால்தான் மத்தவங்க அடிக்கவேண்டிய அடி எல்லாத்தையுமே roomஅ பூட்டிட்டு தந்திட்டாரு அதெல்லாம் பெருந்தன்மையா நான் வெளில சொல்லிக்கிறதில்ல//

ஹா ஹா ஹா

இவன் said...

////ஆமாங்க அவர் ரொம்ப நல்லவரு அதனால்தான் மத்தவங்க அடிக்கவேண்டிய அடி எல்லாத்தையுமே roomஅ பூட்டிட்டு தந்திட்டாரு அதெல்லாம் பெருந்தன்மையா நான் வெளில சொல்லிக்கிறதில்ல//

ஹா ஹா ஹா//


அப்பறம் விக்ரம்ட "சாமி" படம் பாத்தாப்பிறகுதான் தெரிஞ்சுது பூட்டி வைச்சி அடிச்சாத்தான் அடிதப்பாம விழும் என்றதாலதான் ரூம பூட்டி அடிச்சார் என்னு, பையன் அடி வாங்கிற அவமானம் வெளிய தெரியக்கூடாது என்னுதான் பூட்டி வைச்சு அடிக்கிறார் என்னுதான் அதுவரைக்கு நான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்...

இவன் said...

இந்த மாதிரி துன்பம் பற்றி எனக்கு நினைவு வரும்போது நான் இந்த clipஅ பார்ப்பேன் அப்போ எல்லாம் சரியாப்போயிடும்.... வேணும் என்னா நீங்களும் try பண்ணிப்பாருங்களேன்

http://www.youtube.com/watch?v=AXFTuBP5st4

என்ன தத்துவம் பாருங்க "ஈரமாச்சினா காய வையுங்க, காயாப்போனா பழுக்கவைங்க
கிழிஞ்சு போனா தச்சு பாருங்க
காணாம போனா தேடிப்பாருங்க"

வாழ்க்கையின் தத்துவமே இதுதான்யா...

அடுத்து இதப்பற்றித்தான் ஒரு பதிவு போடுறதா இருக்கிறேன்

வழிப்போக்கன் said...

எதப்பத்தி எழுத? 5ம் class படிக்கும் போது ஒரு பொண்ணுகிட்ட love letter கொடுத்தத எழுதுவோமா? இல்ல சீனியர் பையங்களையே ராகிங் செஞ்சத எழுதுவோமா? எதைப்பற்றி எழுதிறது?? சரி என்னு கடைசீல கூரையப்பிரிச்சிக்கிட்டு நடு வீட்டில இறங்கி் supar hero ஆனதப்பற்றி எழுதுவோம் என்று முடிவு செஞ்சாச்சு எழுதவும் ஆரம்பிச்சாச்சு....


இதுலே பர்ஸ்ட மேட்டர் பத்தி கொஞ்சம் விரிவா எழுதுங்க...

வழிப்போக்கன் said...

//http://www.youtube.com/watch?v=AXFTuBP5st4

என்ன தத்துவம் பாருங்க "ஈரமாச்சினா காய வையுங்க, காயாப்போனா பழுக்கவைங்க
கிழிஞ்சு போனா தச்சு பாருங்க
காணாம போனா தேடிப்பாருங்க"
///


ங்கண்ணா சூப்பருங்கண்ணா

வழிப்போக்கன் said...

//அடுத்து இதப்பற்றித்தான் ஒரு பதிவு போடுறதா இருக்கிறேன்
///

போடுங்ண்ணா....இந்த மாதிரி பல பாட்டு கலந்து போடுங்ணா....

இவன் பதிவுனா சும்மாவா ???

இவன் said...

//இதுலே பர்ஸ்ட மேட்டர் பத்தி கொஞ்சம் விரிவா எழுதுங்க...//

என்ன வழிப்போக்கன் இப்படி சொல்லீட்டீங்க நீங்க சொன்னாப்பிறகு எழுதாம விடுறதா.... எழுதீடுவோம்

இவன் said...

//ங்கண்ணா சூப்பருங்கண்ணா //

பாருங்க உங்களுக்கு தெரியுது.... இதெல்லாம் உலகத்துக்கு தெரிய வேண்டிய ஒரு பாட்டுங்க இதப்பத்தி தெளிவான பொழிப்புரையுடன் கூடிய சீச்கிரமே போடுறேன் வழிப்போக்கன்

இவன் said...

//போடுங்ண்ணா....இந்த மாதிரி பல பாட்டு கலந்து போடுங்ணா....

இவன் பதிவுனா சும்மாவா ???//


ங்ண்ணா நிச்சயமா போடுறேங்கண்ணா... அதுசரி இவன் பதிவு என்னா சும்மாவா??

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனிஷன ரணகளப்படுத்துங்க

ஜி said...

:))) aaha!!! naanlaam ithu maathiri ethavathu panniruntha enga appa benda kalattirupaanga.. Unga appa avamaana paduthurathoda vituttaangale... athaan konjam varuththamaa irukku :(((

இவன் said...

//:))) aaha!!! naanlaam ithu maathiri ethavathu panniruntha enga appa benda kalattirupaanga.. Unga appa avamaana paduthurathoda vituttaangale... athaan konjam varuththamaa irukku :(((//

ஆஹா ஜீ என்ன ஒரு நல்லெண்ணம்... எனக்கும் benda கழற்றினாரு அப்பா அதப்பற்றி நான் பின்னுட்டத்தில "கிரி"க்கு சொல்லி இருக்கிறேன் பாருங்க..........

கவிநயா said...

//1, 2 கூத்தா பண்ணி இருக்கிறோம் ஆயிரக்கணக்கில இல்ல செஞ்சிருக்கோம்). எதப்பத்தி எழுத?//

ஆயிரக் கணக்கையும் ஒண்ணு ஒண்ணா எழுதுங்க இவன் :) நல்லா எழுதியிருக்கீங்க.

இவன் said...

//ஆயிரக் கணக்கையும் ஒண்ணு ஒண்ணா எழுதுங்க இவன் :) நல்லா எழுதியிருக்கீங்க.//

யக்கோவ் யக்கோவ் எழுதீருவோம்......
நன்றி யக்கோவ்....