Thursday, July 24, 2008

விஜய் பற்றி சில,விஜயகாந் styleல் ஒரு புள்ளிவிபரம்

வணக்கம் மக்களே நானும் கொஞ்ச நாளுக்கு இளைய தளபதி டாக்டர் விஜய் பத்தி எழுதாம இருக்கலாம் என்னு பார்க்கிறேன் ஆனா அந்தாள் எனக்கு போன ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சானோ தெரியல.. அவனப்பத்தியே இன்னைக்கும் பதிவு எழுத வேண்டியதாப்போச்சுது... சரி என்னு ஒரு சின்ன புள்ளி விபரம் நம்ம விஜய் பத்தி நம்ம விஜயகாந் ஸ்டைலில

விஜய் மொத்தம் நடிச்ச படம் 47


அதில ரீமேக் 20 படம்


அதில 5 படம் தெலுகு படம் 5 copy paste


கதை மட்டுமே copy பண்ணினது 8 படம்


பேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy(இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ??)


மலையாளம் ரீமேக் 5 படம்


39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில


வெறும் 8 படம்தான் ஒரிஜினல் scriptடோட வந்திருக்குது அதில 5 படம் சூப்பர் FLOP


அவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் ,


இதில இவனுக்கு டாக்டர் பட்டம் வேற....


இளைய தலவலி சாரி இளைய தளபதி விஜய்....


மக்களே தமிழ் சினிமாபவ காப்பத்த உங்களாலயும் முடியும் இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ்சினிமா பொளச்சிக்கும் ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??


பின்குறிப்பு- இதுவும் ஒரு ரீமேக்தான் இது இங்கிலிசுபிஸில வந்திச்சு அத அப்படியே தமிழ ரீமேக் செஞ்சிட்டேன்... ஹி ஹி ஹி ஹி ஹி
விடுங்க விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

15 பதிலகள்:

சினிமா நிருபர் said...

ஐயயோ... எனக்கு போட்டியா இவனும் கிளம்பிட்டாரே... ஐயயோ...! ஏற்கனவே கிரி வேற... மர்மயோகி ஸ்டில்ஸ்னு போட்டு பட்டைய கிளப்பிட்டார். இப்ப நீங்களுமா? ஹிஹிஹி..!


புள்ளி விவரங்களை நன்றாகவே கொடுத்திருக்கிறீர்கள் இவன்.

கிரி said...

//இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ??//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

//காப்பிஸ்டார்//

ஹா ஹா ஹா

"இவனே" உங்களுக்கு விஜய் மேல ஏன் இப்படி ஒரு காண்டு :-))))))

ச்சின்னப் பையன் said...

haha... :-))))))

rapp said...

கலக்கல் இவன். இதை எப்படி நீங்க பொறுமையா டைப்பினீங்க? இவர் கட்சி ஆரம்பிச்சி நாட்ட யார பார்த்து காப்பி அடிச்சி ஆளப்போறாரோ?

இவன் said...

//ஐயயோ... எனக்கு போட்டியா இவனும் கிளம்பிட்டாரே... ஐயயோ...! ஏற்கனவே கிரி வேற... மர்மயோகி ஸ்டில்ஸ்னு போட்டு பட்டைய கிளப்பிட்டார். இப்ப நீங்களுமா? ஹிஹிஹி..!


புள்ளி விவரங்களை நன்றாகவே கொடுத்திருக்கிறீர்கள் இவன்.//


இதில இருந்து என்ன் தெரியுதுன்னா நான் விஜய விட நல்லாவே காப்பி அடிக்கிறேன்... ங்ண்ணா இது எனக்கு வந்த FWD mailங்ண்ணா

இவன் said...

//
ஹா ஹா ஹா

"இவனே" உங்களுக்கு விஜய் மேல ஏன் இப்படி ஒரு காண்டு :-))))))//


பின்ன என்ன கிரி இப்படி ரீமேக் பண்ணீட்டு... 5 பாட்டு 4 பைட்டு என்னு போக்கிட்டு இருந்தவன் அரசியல் அது இது என்னா கடுப்பாகுமா இல்லையா??

இவன் said...

//haha... :-))))))//வாங்க சின்னப்பையன்

இவன் said...

//கலக்கல் இவன். இதை எப்படி நீங்க பொறுமையா டைப்பினீங்க? இவர் கட்சி ஆரம்பிச்சி நாட்ட யார பார்த்து காப்பி அடிச்சி ஆளப்போறாரோ?//

ராப் இதுவும் ஒரு ரீமேக்தான் இது இங்கிலிசுபிஸில வவ்திச்சு அத அப்படியே தமிழ ரீமேக் செஞ்சிட்டேன்...
விடுங்க விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜம் ராப்

Thamizhmaangani said...

ஹாஹா.. எனக்கு சிரிப்பு தான் வருது. கலாய்க்குறோம்னு சொல்லி சொல்லியே, அவர பத்தி freeயா publicity பண்ணிக்கிட்டு இருக்குறோம்.

//இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ??//

கண்டிப்பா!

//பேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

//ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ்சினிமா பொளச்சிக்கும் ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??//

யாரைய்யா நிறுத்த சொல்லுறே...

ரித்தீஷ் நடிக்குறத்த நிறுத்த சொல்லு.. நாங்க நிறுத்துறோம்.

சுந்தர் C டான்ஸ் ஆடுறேன்னு பயம்காட்டுறாரே அத நிறுத்த சொல்லு, நாங்க நிறுத்துறோம்.

அப்பாவுக்கு அடங்காத புள்ளையா தொடர்ந்து நடிக்குறாரே தனஷ் அவர நிறுத்த சொல்லு,நாங்க நிறுத்துறோம்.

இன்னும் ஹீரோவாக தான் நடிப்பேன்னு ஒத்த காலுல நிக்குறாரே டி ஆர், அவர நிறுத்த சொல்லு, நாங்க நிறுத்துறோம்.

புது படத்துக்கெல்லாம் பழைய படம் அதுவும் ரஜினி பட டைட்டில வைக்கும் இயக்குனர நிறுத்த சொல்லு, நாங்க நிறுத்துறோம்.

இன்னும் என்னென்னமோ கொடுமையெல்லாம் பண்றாங்க... எங்க வருங்கால முதலமைச்சரா தமிழ் சினிமாவுக்கு கேடு விளைவிச்சுகிட்டு இருக்காரு!

- அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி.

இவன் said...

//ஹாஹா.. எனக்கு சிரிப்பு தான் வருது. கலாய்க்குறோம்னு சொல்லி சொல்லியே, அவர பத்தி freeயா publicity பண்ணிக்கிட்டு இருக்குறோம்.//

சிரிப்புத்தான் வரணும் அவர நினைச்சா சிரிப்பு வராம வாமிட்டா வரும்?? புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு எங்கிறது சிகரட்டுக்கு publicityஆ?? அதுபோலத்தான் இதுவும் புரிஞ்சிதா தமிழ்மாங்கனி???

இவன் said...

யக்கோவ் தமிழ்மாங்கனியக்கோவ் அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி!! அவங்க எல்லாம் விஜய முதல்ல நிறுத்தச்சொல்லுறாங்கோவ் எங்கிறாங்க நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும்??

LOSHAN said...

தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர்,இந்தியாவின் விடிவெள்ளி ,இலங்கையின் இனப்பிரச்சினையை எதிர்காலத்தில் தீர்த்துவைக்கவுள்ள நம்ம இளிச்ச ..ஸாரி.. இளைய தளபதியை இப்படிக் கேவலப் படுத்தியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.. ;)

சரவணகுமரன் said...

:-)))

இவன் said...

//LOSHAN said...

தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர்,இந்தியாவின் விடிவெள்ளி ,இலங்கையின் இனப்பிரச்சினையை எதிர்காலத்தில் தீர்த்துவைக்கவுள்ள நம்ம இளிச்ச ..ஸாரி.. இளைய தளபதியை இப்படிக் கேவலப் படுத்தியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.. ;)
//


ஆஹா இப்படியெல்லாம் கண்டிக்ககூடாது... விடுங்க விடுங்க உண்மைய சொன்னா ஒத்துக்கனும்

இவன் said...

//சரவணகுமரன் said...

:-)))
//


வாங்க சரவணகுமரன்... என்ன வெறும் சிரிப்பானோட போயிட்டீங்க....