Monday, July 7, 2008

5ம் classல் ஒரு லவ் லெட்டர்

நானும் நாலு நாளா யோசிக்கிறேன் யோசிக்கிறேன் sorry மூணு நாளா யோசிக்கிறேன் என்னத்த பத்தி எழுதுறது என்னே தெரியல்ல.... சரி ஏதாவது ரூம் போட்டு யோசிக்கலாம் என்னா அதுக்கும் கையில காசு இல்ல... சரி என்னதான் செய்யலாம் எதைப்பற்றி எழுதலாம் யோசிச்சு வெறுத்துப்போச்சுதுய்யா வெறுத்துப்போச்சு. கடைசீல நம்ம வழிப்போக்கன் நான் எழுதி இருந்த இவனும் ஒரு சூப்பர் ஹீரோதான் பதிவுக்கு போட்டிருந்த ஒரு பின்னுட்டத்தைப்பார்த்த போது அட இதப்பற்றி எழுதலாமே என்னு தோனிச்சு.. சரி என்னு அதப்பத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன்... மக்களே இதுவும் இவனின் வீர பிரதாபங்களில் ஒன்று... நம்ம வீர வாழ்க்கையில எவ்வளவோ இருக்கு அதில ஒன்னுதான் இன்னைக்கு நான் எழுதப்போறது.... சரி ஆரம்பிப்போமா
அதாவது அப்போ நான் 5ம் class படிச்சுக்கிட்டு இருந்தேன்... (இப்பவரைக்கும் அதுவரைக்கும்தானேடா படிச்சிருக்க என்னு மொக்கைக்கமெடி அடிக்க கூடாது ஆமா) அப்போ நான் படிச்சுக்கிட்டு இருந்தது ஒரு co-education school..... அந்த schoolக்கு என் அப்பாதான் principal, அம்மா அதே schoolல teacher, அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்கனும் இந்த "இவன்" எப்படி திமிரு பிடிச்சு அலைஞ்சிருப்பான் என்னு... அந்த நேரத்திலயே எனக்கு என்னு ஒரு செட் பசஙகங்கள சேர்த்துக்கிட்டு அலைஞ்சவன்தான் இந்த இவன்.... இப்படி இருக்குற நேரம் என் classல இருந்த ஒரு பையன் ஒருத்தன் அவன் எங்க classல படிச்ச ஒரு பொண்ண love பண்ணினான்ங்க... அந்த பொண்ணும் love பண்ணினா, அட ஆமாங்க சத்தியமா love பண்ணினாங்கப்பா.... ஆனா இன்னைக்கு இந்த பதிவ எழுதிறத்துக்கு முன்னுக்கு அவளுக்கு call பண்ணி அந்த பையன் பேர சொல்லி அதப்பற்றி எழுதட்டா என்னு கேட்டபோது அவ அவன் யாரு என்னு கேட்டா... என்ன ஒரு ஞாபக சக்தி... ஞாபகம் வந்தா பிறகு எனக்கு அவகிட்ட இருந்து கொலை மிரட்டல் வேற, இப்போ அந்த பையன் எங்க எப்படி இருக்குறானோ?? சரி அவங்க கதைய இன்னொரு பதிவா போடலாம் என்னு இருக்குறேன்.... சரி அந்த பையன்கிட்ட பேசினியா என்னு கேக்குறிங்களா?? பசங்களோட கடலை போடுற பழக்கம் எல்லாம் நம்மகிட்ட இல்லிங்கண்ணோவ்..... சரி கதைக்கு வாரேன்

இப்படி இவங்க love பண்ணிக்கிட்டு இருக்கிற நேரம். அந்த செட் leader(என்னதான் gang leaderஆ இருந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்த முதல் ஆள escape ஆகுறது நான்தான் அப்பவே இந்த மாதிரி விஷயத்தில நாங்க எல்லாம் சிங்கய்யா) நான் lover இல்லாம இருக்கிறது என் கெளரவத்தை பாதிக்கிறதா இருந்திச்சு... சரி நாமளும் சும்மா இருக்க முடியாம சொல்லப்போனா அந்த நேரத்தில எல்லாம் லவ் பண்ணினா என்ன செய்வாங்க என்னு கூட தெரியாதுங்க அப்படி அப்பாவி ஆனா சொல்லிக்கீறது ஒரு gang leader என்னு.... இப்படி இருக்கிற நேரம் நம்ம பசங்களும் சும்மா இருக்க முடியாம அவனுங்களும் நம்மள ஏத்திவிட சரி நானும் யாரையாவது love பண்ணுறது என்னு முடிவு பண்ணி என் உயிர் நண்பர்கள் இருக்கானுங்க இல்ல அதுதானுங்க என்ன உசுப்பேத்தி வேடிக்கை பாத்தாணுங்களே அதே புண்ணியவானுங்கதான் அவனுங்கள கூப்பிட்டு பெரிய பாரதிராஜா மாதிரி என் இனிய நண்பர்க்ளே என்னு ஆரம்பிச்சி யாரை love பண்ணலாம் என்னு ஆலோசனை நடத்திப்பாத்தேன்.... அப்பத்தான் தெரிஞ்சுது நம்ம பசங்கள் எல்லாம் எவ்வளவு நல்லவனுங்கா என்னு... என்ன நடந்துது என்னு கேக்குறீங்களா?? நான் உள்ளதிலேயே அந்த நேரத்தில பாக்கிற மாதிரி இருந்த பொண்ணுங்கள்ல கொஞ்ச பேர செலெக்ட் பண்ணி அவனுங்களுட்ட சொல்ல செலெக்ட் பண்ணின 10 பொண்ணுங்கள்ல மூணே மூணு பொண்ணுங்கதான் மிச்சமா இருந்திச்சு... மத்த 7 பொண்ணுங்களும் ஒவ்வொருத்தனும் மச்சி நான் அவள லவ் பண்ணூறேன் என்னு சொல்லி சொல்லியே வெட்டிக்கிட்டு வந்த கடைசியா 3 பொண்ணுங்க இருந்தாங்க.. யரு என்னு பார்த்தா அவங்களும் நல்ல பொண்ணுங்கதான்..... சரி என்னு அதில ஒருத்திய நான் செலெட் பண்ணிக்கிட்டேன்ல்... (அவ பேரு ஏதாவது இப்போ வைக்கனுமே சரி அனு என்னு வைச்சுக்கலாமா எல்லாம் தசாவதாரம் பண்ணுற வேலை) சரி என்னு அன்னையில இருந்து நான் அனுவ love பண்ணத்தொடங்கினேங்க... இப்படி இருக்கிற நேரம் என் வீட்டுக்கிட்ட இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு friendஆனா (அவளுக்கு ஒரு பெயர் வைக்கனுமே சரி மேரி என்னு வைச்சிக்கலாம் "சரி, மேரி "ஆஹா என்ன ஒரு ரைமிங் இவன் நீ எங்கயோ போயிட்ட)அவ அறிமுகம் ஆனா பிறகு அவகூடதான் நான் school முடிஞ்சா பிறகு வீட்டுக்கு போனேன்... அவளும் நானும் மட்டும் இல்லிங்க அவ அண்ணனும் எங்க கூட வருவான்.... நாங்களும் பேசிக்கிட்டே போவோம்... இப்படியே ஒவ்வொரு நாளும் போகிற நேரம் ஒரு நான் அந்த பொண்ணு (ஆங் என்ன பேர் வைச்சோம்??) மேரி கேட்டா "டேய் இவனே நீ யாரையாவது லவ் பண்ணுறியா" என்னு நானும் "இல்ல" என்னு சொல்ல அவ "டேய் பொய் சொல்லாத" என்னு சொல்லி "நீ லவ் பண்ணுற என்னு தெரியும் ஆனா யார என்னுதான் தெரியல" என்னு சொல்ல நானும் ஏதோ இதில "நான் யார லவ் பண்ணுறேன் என்னு நீ நினைக்குற" என்னு கேட்க அவளும் நான் முதல்ல filter பண்ணி வச்சிருந்த பொண்ணுங்க மூனு பேர் முதல் எழுத்தையும் சொல்லி யார் என்னு கேட்டா நானும் அந்த பொண்ணு முதல் எழுத்த சொல்ல சரி என்னு போய்ட்டா..... நானும் வீட்டுக்கு போய்ட்டேன்... அடுத்த நாள்.............

அடுத்த நாள் என்ன ஆச்சுதுன்னா நான் school போக அங்க என் மேசையில "i love you இவன்" அது இது என்னு இருந்திடுச்சா எனக்கா பயங்கர கடுப்பு எல்லாத்தையும் கொண்டுபோய் principalகிட்ட கொடுக்கலாம் என்னா அதுதான் என் அப்பாவாச்சே அவரு என்னை அன்பா கவனிப்பாரு என்ன ஒரே பயத்தில vice principalகிட்ட கொண்டு போய் கொடுத்திட்டேன்... பிறகு ஏதோ தைரியத்தில நானும் "i love u அனு" என்னு எழுதி அதக்கொண்டு போய் நான் லவ் பண்ணின அந்த பொண்ணுகிட்ட கொடுக்க அவளுக்க்கு பயங்கரமா கடுப்பாயிடுச்சி... இதைப்போயி எவனோ ஒரு நல்லவன் எங்க அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் பத்தி வைக்க... அப்பா என்னை அன்பா கவனிச்சதோட இல்லாம அம்மா இவன் இப்படியே இந்த schoolல படிச்சா schoolல நாசமாக்கீடுவான் என்னு வேற school மாத்தீட்டாங்க... அதுக்கு பிறகு என்னுடய வரலாற்றில் 5ம் class படிக்கும் போது இருந்த அவ்வளவு பேரிலும் இரண்டே 2 பொண்ணுங்க மட்டும் contactல இருக்காங்க..... ஆங் சொல்ல மறந்திட்டேனே நான் அந்த schoolல விட்டு வந்தா பிறகு அந்த schoolல கண்ணடி உடைக்க, மேசை, நாட்காலி உடைக்க ஆளில்லாம அந்த எவ்வளவோ முன்னேறிட்டதா கேள்விப்பட்டேன்... ஆனாலும் ஒரு ஆசை மீண்டும் ஒரு தடவை அந்த schoolக்க்கு போய் பாக்கணும் என்னோடு படிச்ச நண்பர்கள(மேரி உட்பட) ஒரு தடவை பார்க்கனும் என்னு.... அதிலயும் என்ன உசுப்பேத்தி ரணகளப்படுத்தினானுங்களே அவனுங்களையும் ஒரு தடவை மிதிக்கனுய்யா.......

87 பதிலகள்:

வழிப்போக்கன் said...

//கடைசீல நம்ம வழிப்போக்கன் ஒரு சூப்பர் ஹீரோதான்

என்னய வெச்சு காமெடி பண்ணலயே ???
:-))

வழிப்போக்கன் said...

//அதாவது அப்போ நான் 5ம் class படிச்சுக்கிட்டு இருந்தேன்... //

5ம் கிளாஸ்லயேவா ???வெளங்குனாப்லதான் !!!!

வழிப்போக்கன் said...

//அந்த schoolக்கு என் அப்பாதான் principal, அம்மா அதே schoolல teacher,//

வாத்தியார் பேர காப்பாத்த வேண்டாமா ??

வழிப்போக்கன் said...

//பிறகு ஏதோ தைரியத்தில நானும் "i love u அனு" என்னு எழுதி அதக்கொண்டு போய் நான் லவ் பண்ணின அந்த பொண்ணுகிட்ட கொடுக்க அவளுக்க்கு பயங்கரமா கடுப்பாயிடுச்சி... //

வேற எதாய்ச்சும் ஆச்சா ???

கயல்விழி said...

//அதிலயும் என்ன உசுப்பேத்தி ரணகளப்படுத்தினானுங்களே அவனுங்களையும் ஒரு தடவை மிதிக்கனுய்யா....... //

ஆஹா என்ன நல்லெண்ணம்!

5ஆம் வகுப்பிலேயே ஆரம்பிச்சாச்சு போலிருக்கு.

கயல்விழி said...

//அதிலயும் என்ன உசுப்பேத்தி ரணகளப்படுத்தினானுங்களே அவனுங்களையும் ஒரு தடவை மிதிக்கனுய்யா....... //

ஆஹா என்ன நல்லெண்ணம்!

5ஆம் வகுப்பிலேயே ஆரம்பிச்சாச்சு போலிருக்கு.

இவன் said...

//என்னய வெச்சு காமெடி பண்ணலயே ???
:-))//


சா சா உங்கள எல்லாம் வைச்சு காமெடி பண்ணமுடியுமா?? வில்லத்தனம்தான் செய்யமுடியும்

இவன் said...

//5ம் கிளாஸ்லயேவா ???வெளங்குனாப்லதான் !!!!//

அதனாலதான்யா இன்னமும் நான் விளங்கல

இவன் said...

//வாத்தியார் பேர காப்பாத்த வேண்டாமா ??//

அதுக்காக என்கிட்டயுமா வாத்தியாரா இருக்கணும்

இவன் said...

//ஆஹா என்ன நல்லெண்ணம்!

5ஆம் வகுப்பிலேயே ஆரம்பிச்சாச்சு போலிருக்கு.//


பின்னே அவனுங்கள மட்டும் நல்லா இருக்க விடலாமா??
அப்பவே foundation போட்டு வைச்சிடமில்ல

இவன் said...

//வேற எதாய்ச்சும் ஆச்சா ???//

அடப்பாவிகளா எனக்கு அடிவிழல என்னு கூட உங்களுக்கு கவலையா இருக்கா........... என்ன ஒரு வில்லத்தனம்

கிரி said...

//நம்மள ஏத்திவிட சரி நானும் யாரையாவது love பண்ணுறது என்னு முடிவு பண்ணி //

அதுசரி

ஆரம்பத்துலையே வேலைய காட்ட ஆரம்பித்துட்டீங்க ....

உங்க டெம்ப்ளட் ல இருக்கிற படத்தை பார்த்த போதே சந்தேகம் வந்து இருக்கணும் :-))

இவன் said...

//அதுசரி

ஆரம்பத்துலையே வேலைய காட்ட ஆரம்பித்துட்டீங்க ....

உங்க டெம்ப்ளட் ல இருக்கிற படத்தை பார்த்த போதே சந்தேகம் வந்து இருக்கணும் :-))//


too late கிரி நாங்க எல்லாம் காரணம் இல்லாம temp போடுவோமா??
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா

குள்ளமணி said...

//அவகிட்ட இருந்து கொலை மிரட்டல் வேற, இப்போ அந்த பையன் எங்க எப்படி இருக்குறானோ?? சரி அவங்க கதைய இன்னொரு பதிவா போடலாம் என்னு இருக்குறேன்.... //

மிரட்டல் வேறயா அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்க

குள்ளமணி said...

//நான் lover இல்லாம இருக்கிறது என் கெளரவத்தை பாதிக்கிறதா இருந்திச்சு... //

இதில இது கெளரவம் வேற

குள்ளமணி said...

//நம்ம பசங்களும் சும்மா இருக்க முடியாம அவனுங்களும் நம்மள ஏத்திவிட சரி நானும் யாரையாவது love பண்ணுறது என்னு முடிவு பண்ணி //

சூனியம் வைச்சிட்டாங்களா??

குள்ளமணி said...

//"நான் யார லவ் பண்ணுறேன் என்னு நீ நினைக்குற" //

என்ன ஒரு கேள்வி நல்லா கேட்டீங்க love பண்ணுறவகிட்டயே

குள்ளமணி said...

//அதிலயும் என்ன உசுப்பேத்தி ரணகளப்படுத்தினானுங்களே அவனுங்களையும் ஒரு தடவை மிதிக்கனுய்யா....... //

என்ன ஒரு வில்லத்தனம்....

இவன் said...

//மிரட்டல் வேறயா அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்க//

அதுதானே மிரட்டலுக்கு பதிலடியா ஒரு பதிவு போடத்தாங்க போறேன்

இவன் said...

//இதில இது கெளரவம் வேற//

பின்ன எனக்கு கெளரவம் இருக்க கூடாதா... இப்ப இல்ல எங்குறது வேற அப்ப இருந்திச்சில்ல

இவன் said...

//சூனியம் வைச்சிட்டாங்களா??//

ஆமாங்க எனக்கு சூனியமே வைச்சிட்டாங்க

இவன் said...

//என்ன ஒரு கேள்வி நல்லா கேட்டீங்க love பண்ணுறவகிட்டயே//

எனக்குத்தெரியுமாங்க அவ love பண்ணுறாளா இல்லையா என்னு

இவன் said...

//என்ன ஒரு வில்லத்தனம்....//

இருக்காதா பின்ன?? பண்ணின அநியாயம் ஒன்னா ரெண்டா??

rapp said...

அதென்னங்க அனுன்னு பேர் வெச்சி சொல்லாமக் கொள்ளாம திடீர்னு மேரின்னு மாத்திட்டீங்க? உங்களுக்கு ரொம்ப தெனாவெட்டு தாங்க, அதெப்படித்தான் அந்தப் பொண்ணு கொடுத்ததஎல்லாம் வைஸ் பிரின்சிபல்கிட்ட கொடுத்திட்டு, மறுபடியும் ஒரு கடிதம் கொடுத்தீங்க:):):)

இவன் said...

//அதென்னங்க அனுன்னு பேர் வெச்சி சொல்லாமக் கொள்ளாம திடீர்னு மேரின்னு மாத்திட்டீங்க?//

அது வந்து அனு நான் லவ் பண்ணின பொண்ணு மேரி என்னை லவ் பண்ணின பொண்ணு....

//உங்களுக்கு ரொம்ப தெனாவெட்டு தாங்க, அதெப்படித்தான் அந்தப் பொண்ணு கொடுத்ததஎல்லாம் வைஸ் பிரின்சிபல்கிட்ட கொடுத்திட்டு, மறுபடியும் ஒரு கடிதம் கொடுத்தீங்க:):):)//

நாமதான் principal பையனாச்சே எதுவும் நடக்காது எங்குற ஒரு நம்பிக்கைதான் கடைசீல அதுவே எனக்கு நானே வைச்சிக்கிட்ட ஆப்பா போயிடுச்சு என்ன பண்ண??

rapp said...

ஹி ஹி நல்லாத்தான் சமாளிக்கறீங்க :):):)

இவன் said...

//ஹி ஹி நல்லாத்தான் சமாளிக்கறீங்க :):):)//

சமாளிக்க இது சினிமா கதை இல்லிங்க என் சொந்த கதை சோக கதை

வழிப்போக்கன் said...

//சா சா உங்கள எல்லாம் வைச்சு காமெடி பண்ணமுடியுமா?? வில்லத்தனம்தான் செய்யமுடியும்//

ங்ண்ணா நீங்க தாராளமா பண்ணுங்ணா...

வழிப்போக்கன் said...

//அடப்பாவிகளா எனக்கு அடிவிழல என்னு கூட உங்களுக்கு கவலையா இருக்கா........... என்ன ஒரு வில்லத்தனம்
//

Mr.இவன்..ஏன் இப்படி நெகடிவ்வா யோசிக்கறீங்க.. B +

நான் கேட்க வந்தது "பல்பு" எரிஞ்சுதா ??
மணி "அடி"ச்சுதானு ??

கயல்விழி said...

//சமாளிக்க இது சினிமா கதை இல்லிங்க என் சொந்த கதை சோக கதை//

அந்த வயசுல எப்படி இவனுக்கு லவ் வரும்? நம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு போங்க

இவன் said...

//ங்ண்ணா நீங்க தாராளமா பண்ணுங்ணா...//

நன்றிங்கண்ணோவ்

இவன் said...

//
Mr.இவன்..ஏன் இப்படி நெகடிவ்வா யோசிக்கறீங்க.. B +

நான் கேட்க வந்தது "பல்பு" எரிஞ்சுதா ??
மணி "அடி"ச்சுதானு ??//


நீங்க ஒண்ணு இங்க மட்டும் பல்பு எரிஞ்சு மணி அடிச்சா போதுமா?? அங்க எரிஞ்சு அடிக்கனுமே.... அங்க பல்பு எரியல்ல அவதான் எரிக்கிற மாதிரி பார்த்தா, மணி அடிக்கல அவதான் அடிக்க வந்தா.... என்னத்த செய்ய??

நாமக்கல் சிபி said...

:)

இண்ட்ரஸ்டிங்க்!

பழைய நினைவுகளை ஞாபகப் படுத்தி பாத்துகிட்டேன்!

நன்றி!

நாமக்கல் சிபி said...

//அந்த வயசுல எப்படி இவனுக்கு லவ் வரும்? நம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு போங்க//

கயல்விழி லவ்க்கு இப்போ எல்லாம் ஏஜ் லிமிட் கிடையாது!

அதுதான் சினிமாக்காரங்க செஞ்ச சாதனை!

நாமக்கல் சிபி said...

நமக்கு எல்லாம் மூணாம்பு படிக்குற காலத்துலயே

"காதல்" னா ஏதோ கெட்ட வார்த்தை(அதாவது வீட்டுல பெரியவங்க இருக்கிறப்போ பேச முடியாத வார்த்தை)

"ஐ லவ் யூ"ன்னா ஏதோ ஒரு சுகமான விஷயம்.. அப்படி இப்படின்னெல்லாம் தெரிஞ்சி வெச்சிகிட்டிருந்தோம்!

நன்றி : என் மூணாம் வகுப்பு கிளாஸ் மேட்ஸ்!

இவன் said...

//அந்த வயசுல எப்படி இவனுக்கு லவ் வரும்? நம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு போங்க//

அட இது லவ் இல்லிங்க அப்ப வந்த ஏதோ ஒரு எண்ணம் அதுக்கு லவ் என்னு பேர் வைச்சிட்டோம்... இப்பொ நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது.... நான் லவ் லெட்டர் கொடுத்த பொண்ணு இப்போ என் நல்ல நண்பி... இப்போ என் மனசுல அவளப்பத்தி அந்த மாதிரி ஒரு எண்ணமும் இல்ல... எனக்கு தெரியும் அப்போ நான் நடந்துகிட்டது சின்னப்பிள்ளத்தனமானது என்று.

நாமக்கல் சிபி said...

/ங்ண்ணா நீங்க தாராளமா பண்ணுங்ணா...//

வழிப்போக்கன் நீங்க இவ்ளோ நல்லவரா?

நாமக்கல் சிபி said...

/அட இது லவ் இல்லிங்க அப்ப வந்த ஏதோ ஒரு எண்ணம் அதுக்கு லவ் என்னு பேர் வைச்சிட்டோம்... இப்பொ நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது....//

ம்ஹூம்! அதெல்லாம் ஒரு பொற்காலம்தான் இல்லையா இவண்!

இவன் said...

//:)

இண்ட்ரஸ்டிங்க்!

பழைய நினைவுகளை ஞாபகப் படுத்தி பாத்துகிட்டேன்!

நன்றி!//


ஆஹா நான் மட்டும்தான் இப்படி என்னு நினைச்சேன் நீங்களுமா??

Ramya Ramani said...

ஆஹா பிஞ்சுலயே பழுத்ததுன்னா இது தானா???

இவன் said...

//
கயல்விழி லவ்க்கு இப்போ எல்லாம் ஏஜ் லிமிட் கிடையாது!

அதுதான் சினிமாக்காரங்க செஞ்ச சாதனை!//


அது உண்மைதான் சிபி

இவன் said...

//வழிப்போக்கன் நீங்க இவ்ளோ நல்லவரா?//

உங்களுக்கு தெரியாதா சிபி நம்ம வழிப்போக்கன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு

இவன் said...

//ம்ஹூம்! அதெல்லாம் ஒரு பொற்காலம்தான் இல்லையா இவண்!//

அத ஏன் கேக்குறீங்க அப்போ சிங்கம் மாதிரி இருந்தேன் இப்போ சொங்கி மாதிரி இருக்கிறேன் அவ்வளவுதான்

இவன் said...

//ஆஹா பிஞ்சுலயே பழுத்ததுன்னா இது தானா???//

அட ஆமாங்க இதேதான் என்ன செய்ய எல்லாம் விதி

நாமக்கல் சிபி said...

//உங்களுக்கு தெரியாதா சிபி நம்ம வழிப்போக்கன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இத்தினி நாளா தெரியாம போச்சே!

இவன் said...

//நமக்கு எல்லாம் மூணாம்பு படிக்குற காலத்துலயே

"காதல்" னா ஏதோ கெட்ட வார்த்தை(அதாவது வீட்டுல பெரியவங்க இருக்கிறப்போ பேச முடியாத வார்த்தை)

"ஐ லவ் யூ"ன்னா ஏதோ ஒரு சுகமான விஷயம்.. அப்படி இப்படின்னெல்லாம் தெரிஞ்சி வெச்சிகிட்டிருந்தோம்!

நன்றி : என் மூணாம் வகுப்பு கிளாஸ் மேட்ஸ்!//


அட கொக்கமக்கா நீங்க 3ம் வகுப்பிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா???

நாமக்கல் சிபி said...

/அத ஏன் கேக்குறீங்க அப்போ சிங்கம் மாதிரி இருந்தேன் இப்போ சொங்கி மாதிரி இருக்கிறேன் அவ்வளவுதான்/

ஹிஹி..சேம் பிளட்!

நாமக்கல் சிபி said...

//அட கொக்கமக்கா நீங்க 3ம் வகுப்பிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா???//

அட ஆமாங்க! அதனாலதான் அஞ்சாம்புக்கு மேல என்னை கோ-எஜுகேஷன் ஸ்கூல்லயே படிக்க விடலை!

இவன் said...

அவசரமா வெளிய போறேன் வந்து reply பண்ணூறேன்

நாமக்கல் சிபி said...

சேம் ஏஜ் குரூப்! சேம் பிளாஷ் பேக் ஸ்டோரி!

:)

நாமக்கல் சிபி said...

/அவசரமா வெளிய போறேன் வந்து reply பண்ணூறேன்//

போங்க! போங்க! நானொரு வெளங்காதவன்! இப்ப போயி உங்களை தடுத்துகிட்டு!

வழக்கமா காலைலயே போயிட்டு வந்துடணும்! இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது!

நாமக்கல் சிபி said...

//அவசரமா வெளிய போறேன் வந்து reply பண்ணூறேன்//

ஹிஹி! நானும் போயிட்டு வந்துடறேன்!

வழிப்போக்கன் said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இத்தினி நாளா தெரியாம போச்சே!
//

தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க சிபி ????.....

நான் ரொம்ப நல்லவன்...
நான் ரொம்ப ரொம்ப நல்லவன்...
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன்...

வழிப்போக்கன் said...

//அவசரமா வெளிய போறேன் வந்து reply பண்ணூறேன்//

நீங்க என்ன பெரிய்ய பிரைம் மினிஸ்டரா ???

என்னவோ ஒரு ஆயிரம் பேரு உங்க பதிலுக்காக வெய்ட் பண்ற மாதிரி ஒரு பில்ட் அப்....

வெளில போறேன் உள்ளார போறன்ட்டு....

வழிப்போக்கன் said...

//ம்ஹூம்! அதெல்லாம் ஒரு பொற்காலம்தான் இல்லையா இவண்!//

இதுல பீலிங்ஸ் வேறயா ????

அது ஒரு உருப்படாத காலம்னு சொல்லுங்க......

இவன் said...

//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இத்தினி நாளா தெரியாம போச்சே!//


சரி இன்னைக்குத்தான் தெரிஞ்சு போச்சே இனி ஆரம்பிங்க சிபி

இவன் said...

//ஹிஹி..சேம் பிளட்!//

அடடா அடடா நான் மட்டும்தான் என்னு நினைச்சேன் எல்லோருமே இப்படித்தானா??

இவன் said...

//அட ஆமாங்க! அதனாலதான் அஞ்சாம்புக்கு மேல என்னை கோ-எஜுகேஷன் ஸ்கூல்லயே படிக்க விடலை!//

பின்ன எப்படி படிக்க விடுவாங்க... படிக்கிற பொண்ணுங்க எதிர்காலம் என்னாவது??

இவன் said...

//சேம் ஏஜ் குரூப்! சேம் பிளாஷ் பேக் ஸ்டோரி!//

அடடா உங்க வயசு 92 என் வயசு 22 எப்படிங்க சேம் ஏஜ் குரூப் ஆகமுடியும்??

இவன் said...

//போங்க! போங்க! நானொரு வெளங்காதவன்! இப்ப போயி உங்களை தடுத்துகிட்டு!

வழக்கமா காலைலயே போயிட்டு வந்துடணும்! இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது!//


அடப்பாவிகளா இது அந்த வெளிய இல்லையா கடைக்கு போறேன் அதத்தான் சொன்னேன்.... என்ன ஒரு வில்லத்தனம்??

இவன் said...

//ஹிஹி! நானும் போயிட்டு வந்துடறேன்!//

அடடா போங்க போங்க லேசா கப்பு வரக்குள்ளயே நான் சொல்ல நினைச்சேன்.... போங்கய்யா போங்க

இவன் said...

//
இதுல பீலிங்ஸ் வேறயா ????

அது ஒரு உருப்படாத காலம்னு சொல்லுங்க......//


இதப்பற்றி பீல் பண்ணாம வேற் எதப்பத்தித்தான் feel பண்ணுறது??
உங்களுக்கு உருப்படாத காலம் எங்களுக்கு அது பொற்காலம்

இவன் said...

//
தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க சிபி ????.....

நான் ரொம்ப நல்லவன்...
நான் ரொம்ப ரொம்ப நல்லவன்...
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன்...//


பாருங்க சிபி நம்ம வழிப்போக்கனே statment தந்துட்டாரு...

இவன் said...

//
நீங்க என்ன பெரிய்ய பிரைம் மினிஸ்டரா ???

என்னவோ ஒரு ஆயிரம் பேரு உங்க பதிலுக்காக வெய்ட் பண்ற மாதிரி ஒரு பில்ட் அப்....

வெளில போறேன் உள்ளார போறன்ட்டு....//


1000பேர் இல்லாட்டியும் ஒரு 2 பேர் காத்திருக்காங்க இல்ல அவங்களுக்காகத்தான் இந்த build-up ஹி ஹி ஹி ஹி ஹி

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

வடகரை வேலன் said...

கடவுளே இந்தப் பதிவ பாரதிராஜா படிக்காம இருக்கனும்.

கஸ்தூரிராஜா கண்லருந்தும் தப்பிச்சரனும்.

இவன் said...

//கடவுளே இந்தப் பதிவ பாரதிராஜா படிக்காம இருக்கனும்.

கஸ்தூரிராஜா கண்லருந்தும் தப்பிச்சரனும்.//


அப்படி அவங்க படிச்சாலும் என்னையே ஹீரோவா போட சொல்லுங்க... நான் சாம் அண்டசன்கிட்ட நடிப்பு கத்துகிட்டு இருக்கிறேன்

கயல்விழி said...

//அப்படி அவங்க படிச்சாலும் என்னையே ஹீரோவா போட சொல்லுங்க... நான் சாம் அண்டசன்கிட்ட நடிப்பு கத்துகிட்டு இருக்கிறேன்//

அடங்கமாட்டீங்களா? நீங்க நடிச்சா யார் பாக்கிறது?

கயல்விழி said...

//அட இது லவ் இல்லிங்க அப்ப வந்த ஏதோ ஒரு எண்ணம் அதுக்கு லவ் என்னு பேர் வைச்சிட்டோம்... இப்பொ நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது.... நான் லவ் லெட்டர் கொடுத்த பொண்ணு இப்போ என் நல்ல நண்பி... இப்போ என் மனசுல அவளப்பத்தி அந்த மாதிரி ஒரு எண்ணமும் இல்ல... எனக்கு தெரியும் அப்போ நான் நடந்துகிட்டது சின்னப்பிள்ளத்தனமானது என்று.
//

சரி சரி ரொம்ப கஷ்டப்படாதீங்க.

நீங்க சொன்னதை எல்லாம் அப்படியே நம்பிட்டோம்.

இவன் said...

//சரி சரி ரொம்ப கஷ்டப்படாதீங்க.

நீங்க சொன்னதை எல்லாம் அப்படியே நம்பிட்டோம்.//


நன்றி நன்றி யப்பா இவங்களை எல்லாம் நம்ப வைக்க நான் என்ன பாடுபடவேண்டி இருக்குது...... முடியல

இவன் said...

//அடங்கமாட்டீங்களா? நீங்க நடிச்சா யார் பாக்கிறது?//

நீங்க நடிச்சா வருண் அந்த படத்த பார்ப்பேன் என்னு சொல்லி இருக்காரில்ல... அதே மாதிரி நான் நடிச்சா எப்படியும் இப்ப இருக்குற கணக்குப்படி ஒரு 7 இல்லாட்டி 8 பொண்ணுங்களாவது பார்க்கும்..... இல்லாட் சிம்பு மாதிரி படத்த ஓடவைப்போமில்ல....ஹி ஹி ஹி ஹி
அட இந்த உலகம் தல J.K.ரித்தீஷ் நடிச்சத பாக்குது நான் நடிச்சா பார்க்காதா??

கயல்விழி said...

//நீங்க நடிச்சா வருண் அந்த படத்த பார்ப்பேன் என்னு சொல்லி இருக்காரில்ல... அதே மாதிரி நான் நடிச்சா எப்படியும் இப்ப இருக்குற கணக்குப்படி ஒரு 7 இல்லாட்டி 8 பொண்ணுங்களாவது பார்க்கும்..... இல்லாட் சிம்பு மாதிரி படத்த ஓடவைப்போமில்ல....ஹி ஹி ஹி ஹி
அட இந்த உலகம் தல J.K.ரித்தீஷ் நடிச்சத பாக்குது நான் நடிச்சா பார்க்காதா??//

அட்லீஸ்ட் நான் நடிச்சா பார்க்க ஒரு ஆளாவது இருக்கு, அது உறுதியாயாச்சு. நீங்க நடிச்சா உங்கள் கேர்ள்ப்ரெண்டுகள் எல்லாம் எனிமீஸ் ஆகிடும். விஷப்பரீட்சை வேண்டாம், முன்பே எச்சரித்துவிட்டேன்.

கயல்விழி said...

ஒரு பதிவில் ஒரு வாரம் ஓட்டலாம் என்ற நினைப்பா? எப்போ அடுத்த பதிவு வரும்?

இவன் said...

//அட்லீஸ்ட் நான் நடிச்சா பார்க்க ஒரு ஆளாவது இருக்கு, அது உறுதியாயாச்சு. நீங்க நடிச்சா உங்கள் கேர்ள்ப்ரெண்டுகள் எல்லாம் எனிமீஸ் ஆகிடும். விஷப்பரீட்சை வேண்டாம், முன்பே எச்சரித்துவிட்டேன்.//

அட அந்த எண்ணிக்கையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்கா நாளைக்கே கோடம்பாக்கத்தில ஒரு படத்துக்கு பூஜை.... படம் வந்தாபிறகு இந்த கட்அவுட், பாலபிஷேகம் எல்லாம் வேணாம் இப்பவே சொல்லீட்டேன்

இவன் said...

//ஒரு பதிவில் ஒரு வாரம் ஓட்டலாம் என்ற நினைப்பா? எப்போ அடுத்த பதிவு வரும்?//

நான் லவ்லெட்டர் கொடுத்த பொண்ணு இந்த பதிவ வாசிக்கனும் அதுவரைக்கும்தான் waiting... அவ வந்து படிக்கிறேன் என்னு சொல்லி இருக்குறா..... அவ வந்து படிச்சிட்டு என்னை கொஞ்சம் திட்டினாத்தான் எனக்கு நிம்மதி

வழிப்போக்கன் said...

//அவ வந்து படிச்சிட்டு என்னை கொஞ்சம் திட்டினாத்தான் எனக்கு நிம்மதி
//Mr.இவன் -- உங்கள இந்த பதிவ அவங்க டெலீட் பண்ண சொல்லல..

எப்ப வேணும்னாலும் யார் வேணும்னாலும் இதப்படிச்சுக்கலாம்..

ஒழுங்கா அடுத்த பதிவுக்கான வேலயப் பாருங்க....:-)))

இவன் said...

//Mr.இவன் -- உங்கள இந்த பதிவ அவங்க டெலீட் பண்ண சொல்லல..

எப்ப வேணும்னாலும் யார் வேணும்னாலும் இதப்படிச்சுக்கலாம்..

ஒழுங்கா அடுத்த பதிவுக்கான வேலயப் பாருங்க....:-)))//


என்ன இன்னமும் இந்த உலகம் நம்புதா??

இல்ல வழிப்போக்கன் இதில அவ பெயர் இல்ல அதோட அவ அனுமதியோடதான் இந்த பதிவே போட்டேன்.... now she is one of ma good friend... அதனால பிரச்சனை இல்லை... நாங்கல்லாம் கொஞ்சம் தெளிவாத்தான் இருப்போம்... இப்போ அடுத்த பதிவு எழுதிக்கிட்டு இருக்கிறேன்....

வழிப்போக்கன் said...

உங்கள மாதிரி திறமையான..அருமையான எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்..

:-))))

கயல்விழி said...

//நான் லவ்லெட்டர் கொடுத்த பொண்ணு இந்த பதிவ வாசிக்கனும் அதுவரைக்கும்தான் waiting... அவ வந்து படிக்கிறேன் என்னு சொல்லி இருக்குறா..... அவ வந்து படிச்சிட்டு என்னை கொஞ்சம் திட்டினாத்தான் எனக்கு நிம்மதி//

சரியாப்போச்சு!

இவன் said...

//உங்கள மாதிரி திறமையான..அருமையான எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்..

:-))))//

என்ன ஒரு வில்லத்தனம்.... மக்களே அடுத்த பதிவுல ஏதாவது ரணகளம் ஆச்சுன்னா அதுக்கு நம்ம வழிப்போக்கன்தான் பொறுப்பு பாத்துக்குங்க சொல்லீட்டேன்

இவன் said...

//சரியாப்போச்சு!//

ஹி ஹி ஹி ஹி ஹி

ஜி said...

//அப்போ நான் படிச்சுக்கிட்டு இருந்தது ஒரு co-education school..... //

ரொம்ப கொடுத்து வச்ச பையன்யா நீ... எங்களுக்கெல்லாம் பொட்டி தட்ட பெங்களூரு வந்ததுக்கப்புறம்தான் இந்த கொடுப்பினையெல்லாம் :((((

ஆனாலும் அஞ்சாப்புலையே இதெல்லாம் நெம்ப டூ மச்சு....

ஜி said...

ஆமாம்... டீச்சர் பசங்கயெல்லாம் சரியா படிக்க மாட்டாங்க.. பொறுக்கி பசங்களா இருப்பாங்கன்னு சொல்றாங்களே.... அது உண்மையா??? ;)))

இவன் said...

//ரொம்ப கொடுத்து வச்ச பையன்யா நீ... எங்களுக்கெல்லாம் பொட்டி தட்ட பெங்களூரு வந்ததுக்கப்புறம்தான் இந்த கொடுப்பினையெல்லாம் :((((//

அதுதான் கொடுத்து வைச்சிருக்கேன் என்னு சொல்லீட்டீங்களே ஹி ஹி ஹி அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா

இவன் said...

//ஆனாலும் அஞ்சாப்புலையே இதெல்லாம் நெம்ப டூ மச்சு....//

ஐஞ்சாம் வகுப்பிலயே இப்படி என்னா இப்போ என்ன செஞ்சிட்டு இருப்பேன் என்னு யோசிச்சுக்குங்க

இவன் said...

//ஆமாம்... டீச்சர் பசங்கயெல்லாம் சரியா படிக்க மாட்டாங்க.. பொறுக்கி பசங்களா இருப்பாங்கன்னு சொல்றாங்களே.... அது உண்மையா??? ;)))//

cha cha அதெல்லாம் உண்மையே இல்ல ஜீ என்னைப்பாத்தா எல்லாம் பொறுக்கிப்பய மாதிரியா இருக்குது??

pappu said...

நம்ப முடியலையே! 5ம் வகுப்பிலயேவா லவ் பண்ணுவாங்க?

இவன் said...

//pappu said...
நம்ப முடியலையே! 5ம் வகுப்பிலயேவா லவ் பண்ணுவாங்க?//


ஏன் 5ம் வகுப்பில லவ் பண்ணக்கூடாது என்னு ஏதாவது சட்டம் இருக்கா pappu