நானும் நாலு நாளா யோசிக்கிறேன் யோசிக்கிறேன் sorry மூணு நாளா யோசிக்கிறேன் என்னத்த பத்தி எழுதுறது என்னே தெரியல்ல.... சரி ஏதாவது ரூம் போட்டு யோசிக்கலாம் என்னா அதுக்கும் கையில காசு இல்ல... சரி என்னதான் செய்யலாம் எதைப்பற்றி எழுதலாம் யோசிச்சு வெறுத்துப்போச்சுதுய்யா வெறுத்துப்போச்சு. கடைசீல நம்ம வழிப்போக்கன் நான் எழுதி இருந்த இவனும் ஒரு சூப்பர் ஹீரோதான் பதிவுக்கு போட்டிருந்த ஒரு பின்னுட்டத்தைப்பார்த்த போது அட இதப்பற்றி எழுதலாமே என்னு தோனிச்சு.. சரி என்னு அதப்பத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன்... மக்களே இதுவும் இவனின் வீர பிரதாபங்களில் ஒன்று... நம்ம வீர வாழ்க்கையில எவ்வளவோ இருக்கு அதில ஒன்னுதான் இன்னைக்கு நான் எழுதப்போறது.... சரி ஆரம்பிப்போமாஅதாவது அப்போ நான் 5ம் class படிச்சுக்கிட்டு இருந்தேன்... (இப்பவரைக்கும் அதுவரைக்கும்தானேடா படிச்சிருக்க என்னு மொக்கைக்கமெடி அடிக்க கூடாது ஆமா) அப்போ நான் படிச்சுக்கிட்டு இருந்தது ஒரு co-education school..... அந்த schoolக்கு என் அப்பாதான் principal, அம்மா அதே schoolல teacher, அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்கனும் இந்த "இவன்" எப்படி திமிரு பிடிச்சு அலைஞ்சிருப்பான் என்னு... அந்த நேரத்திலயே எனக்கு என்னு ஒரு செட் பசஙகங்கள சேர்த்துக்கிட்டு அலைஞ்சவன்தான் இந்த இவன்.... இப்படி இருக்குற நேரம் என் classல இருந்த ஒரு பையன் ஒருத்தன் அவன் எங்க classல படிச்ச ஒரு பொண்ண love பண்ணினான்ங்க... அந்த பொண்ணும் love பண்ணினா, அட ஆமாங்க சத்தியமா love பண்ணினாங்கப்பா.... ஆனா இன்னைக்கு இந்த பதிவ எழுதிறத்துக்கு முன்னுக்கு அவளுக்கு call பண்ணி அந்த பையன் பேர சொல்லி அதப்பற்றி எழுதட்டா என்னு கேட்டபோது அவ அவன் யாரு என்னு கேட்டா... என்ன ஒரு ஞாபக சக்தி... ஞாபகம் வந்தா பிறகு எனக்கு அவகிட்ட இருந்து கொலை மிரட்டல் வேற, இப்போ அந்த பையன் எங்க எப்படி இருக்குறானோ?? சரி அவங்க கதைய இன்னொரு பதிவா போடலாம் என்னு இருக்குறேன்.... சரி அந்த பையன்கிட்ட பேசினியா என்னு கேக்குறிங்களா?? பசங்களோட கடலை போடுற பழக்கம் எல்லாம் நம்மகிட்ட இல்லிங்கண்ணோவ்..... சரி கதைக்கு வாரேன்
இப்படி இவங்க love பண்ணிக்கிட்டு இருக்கிற நேரம். அந்த செட் leader(என்னதான் gang leaderஆ இருந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்த முதல் ஆள escape ஆகுறது நான்தான் அப்பவே இந்த மாதிரி விஷயத்தில நாங்க எல்லாம் சிங்கய்யா) நான் lover இல்லாம இருக்கிறது என் கெளரவத்தை பாதிக்கிறதா இருந்திச்சு... சரி நாமளும் சும்மா இருக்க முடியாம சொல்லப்போனா அந்த நேரத்தில எல்லாம் லவ் பண்ணினா என்ன செய்வாங்க என்னு கூட தெரியாதுங்க அப்படி அப்பாவி ஆனா சொல்லிக்கீறது ஒரு gang leader என்னு.... இப்படி இருக்கிற நேரம் நம்ம பசங்களும் சும்மா இருக்க முடியாம அவனுங்களும் நம்மள ஏத்திவிட சரி நானும் யாரையாவது love பண்ணுறது என்னு முடிவு பண்ணி என் உயிர் நண்பர்கள் இருக்கானுங்க இல்ல அதுதானுங்க என்ன உசுப்பேத்தி வேடிக்கை பாத்தாணுங்களே அதே புண்ணியவானுங்கதான் அவனுங்கள கூப்பிட்டு பெரிய பாரதிராஜா மாதிரி என் இனிய நண்பர்க்ளே என்னு ஆரம்பிச்சி யாரை love பண்ணலாம் என்னு ஆலோசனை நடத்திப்பாத்தேன்.... அப்பத்தான் தெரிஞ்சுது நம்ம பசங்கள் எல்லாம் எவ்வளவு நல்லவனுங்கா என்னு... என்ன நடந்துது என்னு கேக்குறீங்களா?? நான் உள்ளதிலேயே அந்த நேரத்தில பாக்கிற மாதிரி இருந்த பொண்ணுங்கள்ல கொஞ்ச பேர செலெக்ட் பண்ணி அவனுங்களுட்ட சொல்ல செலெக்ட் பண்ணின 10 பொண்ணுங்கள்ல மூணே மூணு பொண்ணுங்கதான் மிச்சமா இருந்திச்சு... மத்த 7 பொண்ணுங்களும் ஒவ்வொருத்தனும் மச்சி நான் அவள லவ் பண்ணூறேன் என்னு சொல்லி சொல்லியே வெட்டிக்கிட்டு வந்த கடைசியா 3 பொண்ணுங்க இருந்தாங்க.. யரு என்னு பார்த்தா அவங்களும் நல்ல பொண்ணுங்கதான்..... சரி என்னு அதில ஒருத்திய நான் செலெட் பண்ணிக்கிட்டேன்ல்... (அவ பேரு ஏதாவது இப்போ வைக்கனுமே சரி அனு என்னு வைச்சுக்கலாமா எல்லாம் தசாவதாரம் பண்ணுற வேலை) சரி என்னு அன்னையில இருந்து நான் அனுவ love பண்ணத்தொடங்கினேங்க... இப்படி இருக்கிற நேரம் என் வீட்டுக்கிட்ட இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு friendஆனா (அவளுக்கு ஒரு பெயர் வைக்கனுமே சரி மேரி என்னு வைச்சிக்கலாம் "சரி, மேரி "ஆஹா என்ன ஒரு ரைமிங் இவன் நீ எங்கயோ போயிட்ட)அவ அறிமுகம் ஆனா பிறகு அவகூடதான் நான் school முடிஞ்சா பிறகு வீட்டுக்கு போனேன்... அவளும் நானும் மட்டும் இல்லிங்க அவ அண்ணனும் எங்க கூட வருவான்.... நாங்களும் பேசிக்கிட்டே போவோம்... இப்படியே ஒவ்வொரு நாளும் போகிற நேரம் ஒரு நான் அந்த பொண்ணு (ஆங் என்ன பேர் வைச்சோம்??) மேரி கேட்டா "டேய் இவனே நீ யாரையாவது லவ் பண்ணுறியா" என்னு நானும் "இல்ல" என்னு சொல்ல அவ "டேய் பொய் சொல்லாத" என்னு சொல்லி "நீ லவ் பண்ணுற என்னு தெரியும் ஆனா யார என்னுதான் தெரியல" என்னு சொல்ல நானும் ஏதோ இதில "நான் யார லவ் பண்ணுறேன் என்னு நீ நினைக்குற" என்னு கேட்க அவளும் நான் முதல்ல filter பண்ணி வச்சிருந்த பொண்ணுங்க மூனு பேர் முதல் எழுத்தையும் சொல்லி யார் என்னு கேட்டா நானும் அந்த பொண்ணு முதல் எழுத்த சொல்ல சரி என்னு போய்ட்டா..... நானும் வீட்டுக்கு போய்ட்டேன்... அடுத்த நாள்.............
அடுத்த நாள் என்ன ஆச்சுதுன்னா நான் school போக அங்க என் மேசையில "i love you இவன்" அது இது என்னு இருந்திடுச்சா எனக்கா பயங்கர கடுப்பு எல்லாத்தையும் கொண்டுபோய் principalகிட்ட கொடுக்கலாம் என்னா அதுதான் என் அப்பாவாச்சே அவரு என்னை அன்பா கவனிப்பாரு என்ன ஒரே பயத்தில vice principalகிட்ட கொண்டு போய் கொடுத்திட்டேன்... பிறகு ஏதோ தைரியத்தில நானும் "i love u அனு" என்னு எழுதி அதக்கொண்டு போய் நான் லவ் பண்ணின அந்த பொண்ணுகிட்ட கொடுக்க அவளுக்க்கு பயங்கரமா கடுப்பாயிடுச்சி... இதைப்போயி எவனோ ஒரு நல்லவன் எங்க அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் பத்தி வைக்க... அப்பா என்னை அன்பா கவனிச்சதோட இல்லாம அம்மா இவன் இப்படியே இந்த schoolல படிச்சா schoolல நாசமாக்கீடுவான் என்னு வேற school மாத்தீட்டாங்க... அதுக்கு பிறகு என்னுடய வரலாற்றில் 5ம் class படிக்கும் போது இருந்த அவ்வளவு பேரிலும் இரண்டே 2 பொண்ணுங்க மட்டும் contactல இருக்காங்க..... ஆங் சொல்ல மறந்திட்டேனே நான் அந்த schoolல விட்டு வந்தா பிறகு அந்த schoolல கண்ணடி உடைக்க, மேசை, நாட்காலி உடைக்க ஆளில்லாம அந்த எவ்வளவோ முன்னேறிட்டதா கேள்விப்பட்டேன்... ஆனாலும் ஒரு ஆசை மீண்டும் ஒரு தடவை அந்த schoolக்க்கு போய் பாக்கணும் என்னோடு படிச்ச நண்பர்கள(மேரி உட்பட) ஒரு தடவை பார்க்கனும் என்னு.... அதிலயும் என்ன உசுப்பேத்தி ரணகளப்படுத்தினானுங்களே அவனுங்களையும் ஒரு தடவை மிதிக்கனுய்யா.......
Showing posts with label முதல் கடிதம். Show all posts
Showing posts with label முதல் கடிதம். Show all posts
Monday, July 7, 2008
5ம் classல் ஒரு லவ் லெட்டர்
அன்புடன் இவன் @ 3:02 PM 87 பதிலகள்
வகைகள் 5ம் class, ஆசையில் ஓர் கடிதம், காதல் கடிதம், முதல் கடிதம்
Subscribe to:
Posts (Atom)